Monday, December 27, 2010

திருப்பி எடுத்து விடலாம் இனி தைரியமாக பைல்களை டிலீட் செய்யலாம்.

தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி? தாங்கள் அழித்த பைல் Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை மீட்பது அதாவது மீண்டும் பெறுவது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.



நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva.


இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!




நான் தற்போது தாங்களுக்கு இந்த மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என விளக்குகிறேன்...முதலில் இந்த மென்பொருளை தங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். பின்னர் இதை இயக்குங்கள்...தற்போது தாங்களுக்கு பைலின் வகை படுத்த ஓர் விண்டோ தோன்றும். இதில் தாங்கள் தேடயிருக்கும் பைலின் வகையை தேர்வு செய்யவும்..


பின்னர் NEXT என்பதை அழுத்தவும்...தற்போது தாங்கள் தேட இருக்கும் பைலின் இருப்பிடத்தை தேர்வுசெய்யவு. உதரணமாக நான் எனது பென்டிரைபில் அழிந்த பைல்களை தேட எண்ணுகிறேன் என்றால். On my video card or ipod என்பதை தேர்வு செய்ய வேண்டும்...இல்லை எனக்கு அனைத்து டிரைவுகளிலும் தேட வேண்டும் என்றால் I'am not sure என்பதை தேர்வு செய்யவும்...


பின்னர் Next என்பதை தேர்வு செய்ய வேண்டும்...தற்போது தோன்றும் திரையில் கீழே Enable Deep Scan என இருக்கிறதா! இது எதற்கு என்றால் நன்கு ஆழமாக தேட வேண்டும் என்றால் இதன் அருகில் இருக்கும் பெட்டியில் டிக் குறியீட்டை இடவும்...

பின்னர் Start என்பதை அழுத்துங்கள். சிறிது நேரம் காத்துயிருக்கவும்...தற்போது தேடப்பட்ட பைல்கள் அனைத்தும் காட்டப்படும்...
இதில் தாங்களுக்கு தேவைப்படும் படங்கள் தேர்வு செய்து. பின்னர் கடைசியாக Recover என்பதை தரவும்....அவ்வளவு தான்...வேலை முடிந்தது...

மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்:
Download this Software Click Down:
Download Link(1)
Download Link (2)
Download Link(3)

என்ன இந்த பதிவு, பயனுள்ளதாக இருந்ததா! தாங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தயவு செய்து தங்கள் வாக்குகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்கவும்....

ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை தடை செய்வது எப்படி?

தற்போதைய இணைய உலகில் மின்னஞ்சல் சேவை என்பது பலருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார்கள். மின்னஞ்சல் வைத்திருப்போருக்கு இருக்கும் பெரிய தொல்லை தங்களது நண்பர்களிடமிருந்து வருவதை விட விளம்பரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள், Spam என்று சொல்லக்கூடிய குப்பை மின்னஞ்சல்களும் வருவதே. இந்த மாதிரி குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பும் நிறுவனங்கள் இணையத்தில் அங்கங்கே வெளியிடப்பட்டிருக்கும் நமது மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து மொத்தமாக அனுப்புகின்றன.

மேலும் நமது மின்னஞ்சல் முகவரிகளை புதியவர்களுக்கு தெரியாத்தனமாக கொடுத்திருப்போம். தொல்லை செய்வதற்கு என இருக்கும் சிலர், பழகிய நண்பர்கள் கூட தேவையில்லாத ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பர். ஜிமெயில் கணக்கில் (Gmail Account ) குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலையும் குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களையும் எப்படி தடை செய்வது என்று பார்ப்போம்.


1. ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் ஒரத்தில் Create a Filter என்று இருக்கிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால் Settings -> Filters செல்லவும்.


2. பின்னர் From என்ற பெட்டியில் உங்களுக்கு வேண்டாத நபரின் மின்னஞ்சலை அடிக்கவும்.குறிப்பிட்ட தளத்திலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தடுக்க “@amazon.com” இந்த மாதிரி கொடுக்கவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களைத்தடுக்க ஒவ்வொன்றுக்கும் இடையில் | குறியீடைக்கொடுக்கவும்.
(எ.கா) mail1@example.com | mail2@example.com

3. பின்னர் Next step என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் எனக்குறிப்பிட வேண்டும்.


இதில் Delete it என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். மேலும் வலது ஒரத்தில் உள்ள Also apply Filter to _ conversations below என்பதையும் டிக் செய்யவும். இதனால் ஏற்கனவே வந்த மின்னஞ்சல்களும் தானாகவே அழிந்துவிடும். பின்னர் Create Filter என்பதை கிளிக் செய்து உறுதிசெய்யவும்.

4. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவென்றால் குறிப்பிட்டவரின் மின்னஞ்சல்களை அழிக்க வேண்டாம்; அவற்றை ஒரு தொகுப்பாக போட்டு அதற்கு பெயரிட்டுக்கொள்ள Skip the inbox( Archive it) என்பதை தேர்வு செய்து Apply the label பகுதியில் வேண்டிய பெயரை கொடுத்துக்கொள்ளவும். இவை மொத்தமாக குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்பப்பட்டிருக்கும்.


5. இன்னும் சில மின்னஞ்சல்களை இதே மாதிரி தடை செய்ய
“ | “ குறியீடைக்கொடுக்கலாம். அல்லது மீண்டும் Create a Filter கிளிக் செய்து
தடை செய்யலாம்.

நன்றி : பொன்மலர் பக்கம்

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய

இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.


இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி : http://www.tineye.com/

மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல் செய்ய

கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.

ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து (password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும்.


இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்துவிட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த
மென்பொருளை தடை செய்கிறிர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால் (Drag and drop) கூட போதும். இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை.(No installation) அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி : Download AppAdmin

இணைய யுகத்திற்கு ஏற்ற இணைய அலாரம் இது.

எத்தனை காலம் தான் அதே பழைய கால கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப்பட வேண்டாமா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?




அமெரிக்காவை சேர்ந்த ரயான் பான் என்பவர் இப்படி யோசித்ததோடு தன்னை போலவே பலருக்கும் இந்த ஏக்கம் இருக்கும் என உணர்ந்து கால மாற்றத்திற்கு ஈடு கொடுக்க கூடிய இணைய‌ அலாரத்தை உருவாக்கியுள்ளார்.

இணையத்தின் மூலம் செய‌ல்படக்கூடிய இந்த அலாரத்திற்கு சோஷியல் அலாரம் என அவர் பெயர் சூட்டியுள்ளார்.இதன் சமுக பண்பை குறிக்கும் வகையிலும் இந்த பெயர் அமைந்துள்ளது.அதாவது உங்களின் ச‌மூக தொடர்பாகவும் இந்த அலாரம் விளங்கும்.


எல்லாமே இணையமயமாக வரும் காலத்தில் காலையில் குறித்த நேரத்தில் கண் விழிக்க எச்சரிக்கை செய்யும் அலாரமும் இணையமயமாவது தானே ச‌ரியாக இருக்கும் என்னும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அலாரத்தை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்லீப்.எஃப் எம் இணையதளத்தின் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.அப்படியே பழைய கடிகாரத்தை தூக்கி எறிந்து விடலாம்.

காரணம் உங்கள் கம்பயூட்டர் மூலமே இந்த இணைய அலாரம் செயல்பட்டு காலையில் நீங்கள் சொல்லும் நேரத்திற்கு உங்களை துயிலெழ‌ச்செய்யும்.இணைய ஒலி எழுப்புவது மட்டும் வியப்பல்ல;பழைய அப்பாவி கடிகாரம் போல அலறி திடுக்கிட்டு விழிக்க செய்வதோடு நின்று விடாமல் அன்றைய தினத்தின் வானிலை அறிக்கையை உங்களுக்கு வாசித்து காட்டும்.

ஒரு சில எதிர்கால‌வியல் வகையை சேர்ந்த ஹாலிவுட் படங்களில் வருவது போல கதாநாயகர்கள் காலையில் வானிலை அறிக்கை உள்ளிட்ட அன்றைய தின குறித்த முக்கிய விவரங்களை கேட்டபடி எழுவது போல இந்த வானிலை அறிக்கை வாசிப்பு தான் இணைய அலாரத்தின் தனிச்சிறப்பு.தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தகவலோடு விழிப்பது பொருத்தமானது தானே.

இந்த இணைய ஒலியை உங்கள் நண்பர்கள் அல்லது அன்பிற்குறியவ‌ர்களின் குரலாகவும் மாற்றிக்கொள்ளலாம்.வெளியூர்களில் தங்கும் போது இப்படி மனைவி அல்லது மகன் குரல் கேட்டு விழிப்பது உற்சாகம் கொள்ளச்செய்யும் தானே.

வெறும் வானிலை அறிக்கையை வாசிப்பது மட்டும் அல்ல; பிறந்த நாள் வாழ்த்து கூறுவது,விஷேச தினங்களின் போது வாழ்த்து சொல்வது போன்றவற்றையும் இந்த அலாரம் செய்ய வல்லது.அதே போல எழுந்திரு நண்பா ,இன்றைய தினம் இனிய தினமாக இருக்கும் என்று உற்சாகம் கொள்ளவும் வைக்கும்.

எதிர்காலத்தில் மேலும் புத்திசாலித்தனமாக இந்த அலாரம் மாறக்கூடும் என்கிறார் ரயான்.

அதிக மழை பெய்கிற‌து என்று வைத்து கொள்ளுங்கள்,அபோது இந்த அலாரம் கண்விழ்க்க செய்வதோடு,மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனவே இழுத்து போர்த்திக்கொண்டு இன்னும் சற்று நேரம் ஜாலியாக தூங்குங்கள் என்று சொல்வதோ அல்லது இன்றைய தினம் முக்கிய சந்திப்பு உள்ளது அதற்காக சிக்கிரம் குளித்து தாயராகுங்கள் என்றே எச்சரிக்கும் ஆற்றல் பெறும் என்கிறார் அவர்.

அதே போல அன்றைய தினம் வந்துள்ள முக்கிய இமெயிலை வாசித்து காட்டும் ஆற்றலையும் பெறச்செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

தகவல்களை கிரகித்து கொண்டு செய்லபாடும் திறன் கொண்ட ஐபி 6 போன்ற இணைய வசதி நடைமுறைக்கு வரும் போது பயனாளியின் இணைய செயல்பாடு மற்றும் நிகழ்ச்சி நிரல்களை பார்த்தே தேவையான தகவல்களை இந்த அலாரம் வழங்கும் என்கிறார் அவர்.

பெரும் சூறாவளி வீச இருப்பதையோ அல்லது பூகம்பம் உலுக்க இருப்பதையோ கூட இந்த அலாரம் சொல்லி எச்ச‌ரிக்கும் என்கிறார் அவர்.

டெனிஸி பல்கலையில் பட்டம் பெற்ற அவர் சாப்ட்வேர் பின்னணி இல்லாத நிலையிலும் காலங்காலமாக மாறமலே இருக்கும் கடிகார அலாரத்தை மாற்றி இணைய யுகத்திற்கு கொண்டு வரும் குறிக்கோளோடு தனது நண்பர்களோடு சேர்ந்து இதனை உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து இதனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இணையததில் செயல்படகூடியதோடு ஐப்பொன் போன்ற நவீன செல்போன்களிலும் செயல்படும் வசதியை அளித்துள்ளார்.

இணையதள முகவரி;http://sleep.fm/

என்னுடைய பென் டிரைவில் இருந்த கோப்புகள் எங்கே?

நீங்கள் வைரஸ்கள் நிறைய உள்ள பென்ரைவினை சுத்தமாக்கும் போது அல்லது உங்கள் பென் டிரைவினை கணினியில் செலுத்தியதும் சில வேளைகளில் ஒன்றும் இல்லாத ஐகான்களாகவெ காணப்படும் .அல்லது பென் டிரை வடிவிலான ஐகான்கள் காணப்படும் இப்படி இந்த ஐகான்களை திறந்து பார்த்தால் உள்ளெ ஒன்றும் இருக்காது.
பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் ஐகான்களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?

1. Start - > Run செல்லவும்
2. அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3. பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
அடித்து எண்டர் தட்டவும்.

attrib -h -r -s /s /d X:\*.*இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.
4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.

இறுதியாக உங்கள் கணிணியை சிறந்த Malware மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்

G-MAIL - இல் டெலீட் செய்த CONTACTS - ஐ RECOVER செய்ய

களை மீட்டெடுக்க
ஈமெயில் சேவையில் ஜிமெயில் தற்போது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, ஈ-மெயில் அனுப்பும் போதும் சரி மற்றப்படி அனைத்துவிதமான முகவரி (Contact) -கள் அனைத்தையுமே நம்முடைய ஈ-மெயிலில் தான் சேமித்து வைப்போம். குறிப்பாக இணைய நண்பர்களின் ஈ-மெயில் முகவரிகள் அனைத்துமே ஈ-மெயிலில் தான் இருக்கும், ஒரு சிலரே தனியாக குறித்து வைத்திருப்பார்கள். இந்த ஈ-மெயில் முகவரியை நாமே அறியாமலேயே டெலிட் செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால் ஈ-மெயில் முகவரிகள் டெலிட் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட ஈ-மெயில் முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.

முதலில் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்குள் நுழைந்து கொள்ளவும், பின் Contacts என்பதை தேர்வு செய்து More Actions என்னும் பட்டியை தேர்வு செய்து அதில் Restore Contacts என்பதை தேர்வு செய்து எத்தனை நாள் என்பதை குறிப்பிட்டுவிட்டு, இழந்த Contact-களை ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.






அதிகபட்சமாக ஒருமாதத்திற்கு உள்ளாக டெலிட் செய்த முகவரிகளை மட்டுமே மீட்டெடுக்க முடியும். அந்த குறிப்பிட்ட நாளில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியில் இருந்த Contact-ள் மட்டுமே ரீஸ்டோர் செய்த பின்பு இருக்கும். மற்ற முகவரிகள் இருக்காது, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் மற்றவர்களின் முகவரியை அறிந்து கொள்ள

எவ்வளவோ இணையதளங்கள் இருப்பினும், ஒரிரு தளம் மட்டுமே பரவலாக தெரியும். குறிப்பாக Google, Yahoo போன்றவை, இந்த தளங்களை விட சிறப்பான தளங்கள் இருப்பினும் அவை வெளியே தெரிவதில்லை. இதுபோன்ற தளங்களின் ஒன்றுதான் Indiatrace.com இந்த தளத்தின் மூலம் நாம் பல்வேறு வித வசதிகளை பெற முடியும் உதாரணமாக மொபைல் நம்பர் Trace-ல் தொடங்கி பின் கோடு, IP அட்ரஸ் வரை நீண்டுகொண்டே செல்கிறது இந்த தளத்தின் வசதி, மேலும் நாம் தேடும் பல முகவரிகளை இந்த ஒரே தளத்தில் இருந்தப்படியே பெற முடியும். வேறு வேறு தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.



தளத்தின் முகவரி: http://www.indiatrace.com/index.php





இந்த தளத்தில் இருந்தப்டியே நாம் மொபைல் ட்ராகிங்கில் தொடங்கி ஐபி, லேன்ட்லைன், பின் கோடு, STD கோடு, SMS சென்டர் வரை பல முகவரிகளை நம்மால் பெற முடியும். இந்த தளத்தின் உதவியுடன் இந்தியாவின் எந்த ஒரு முகவரியையும் (போன், ஐபி) எளிதாக பெற முடியும்.ஆன்லைனில் இருந்தப்படியே நீங்கள் மற்றவர்களின் முகவரிகளை பெற இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனேகமான முகவரியை பெறாவிட்டாலும் ஒரளவிற்கு குறிப்பிட்ட அளவு நீங்கள் மற்றவர்களின் முகவரியை அறிந்து கொள்ள இந்ததளம் வழிவகை செய்கிறது.

கடைசி வாய்ப்பு

அவன் எழுந்து நின்றான்...


இனிமேல் தாமதித்து பயனில்லை...


அவளா நானா... யாராவது ஒருவர் இறக்க வேண்டும்... அது அவளாக இருக்கட்டும்...


அவளை எப்படிக் கொல்வது?


யோசிக்க ஆரம்பித்தான்......


கடைசி வாய்ப்பு - 01

ஜான் மணலில் நடந்துகொண்டிருந்தான்...

இரண்டாம் முறையாக அவளை கொல்ல முடியவில்லை என்ன ஒரு அவமானம்,.. இந்த கொலையைக் கூட செய்ய முடியாவிடாத நான் தலைவன் பதவிக்கு ஆசைப்படலாமா?

திடீரென இரண்டு பேர் அவருகே வந்து நின்றனர்.


”எங்கள் கூட வா”
”முடியாது வேணு கிட்ட போ சொல்” என்றான் அவன்.
”ஹிஹி ரொம்ப தைரியம் உனக்கு” ”இப்ப எங்க கூட வரலன்னா துப்பாக்கி பதில் சொல்லும்”
அவன் அமைதியாக அவர்களுடன் நடந்தான்.

வேணு கம்பீரமாக உட்கார்ந்திருந்தான்.

”வா ஜான்”
”உன் வரவேற்பொன்றும் தேவையில்லை”
“நானும் உன்னை சந்தோசமாக வரவேற்கவில்லை”
ஜான் முகத்தில் பயங்கரமான கோபம் இருந்தது.

”உன் இடத்தில் நான் இருந்திருக்க வேண்டும். நீ நேற்று முளைத்த காளான்”
சிரித்தான் வேணு, ”நான் நேற்று முளைத்த காளானாய் இருக்கலாம். ஆனால் நீ வாய்ப்பை தவற விட்டவன்”
”ஜான் வாழ்க்கையில் வாய்ப்பு கதவை தட்டும்போது அதை பயன்படுத்திக்காதவன் முட்டாள். நீ ஒரு முட்டாள்.”

”வேணு” கத்தினான் ஜான்.
”ஷ். அமைதியா இரு. இங்கே நான் உன்னை கூப்பிட்டது எதுக்குன்னு உனக்கே தெரியும்”
”நீ இரண்டாவது முறையும் கோட்டை விட்டுட்ட. இனி உனக்கு வாய்ப்புகளே இல்லை தோற்றவர்களுக்கு இப்பூமியில் இடமில்லை.”

”வேணு விளையாடாடதே. தலைவர் இருந்திருந்தா நீ இப்படி பேசமாட்டே.”
:”அட! தலைவர் இறந்ததே உன்னாலதானேப்பா!”
”நீ நன்றி மறந்தவன். நீ இந்த இடத்துக்கு இந்த கூட்டத்துக்கு வருவதற்கே நான்தான் காரணம்.”

”இருக்கலாம். ஆனால் இப்போ நீ இங்கே குற்றவாளி. உனக்காக நான் இன்னும் ஒரு வாய்ப்பை தரேன். ஆனால் இதை நீ தவற விட்டேனா, ஒண்ணு நீயா செத்துடனும் இல்ல என் கையால சாக வேண்டியிருக்கும்.”

”ஜான்.. இது நீ இந்த கூட்டத்தில இருக்க மட்டுமில்ல நீ வாழறதுக்கே கடைசி வாய்ப்பு.”

நடுநிசி.

ஜான் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜான்.
தன் இளமைக்காலங்களை வீணாக்கிய ஒரு இளைஞன். சிறு சிறு திருட்டுகளை செய்துவந்தவன். தனக்கென்று யாரும் இல்லாததாலோ என்னவோ மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அவன் வாழ்க்கை ஒரு நாளில் மாறுமென அவனுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை.



அன்று....

வழக்கம்போல் பஸ்ஸில் ஏறினான். அன்றைய இலக்கு நான்கு பர்ஸ்கள்.

முதலில் யாருடையதை எடுக்கலாம்?

ஒருவர் வெள்ளை உடையில் பின்பக்கமாக நின்று கொண்டிருந்தார். வெள்ளை அவனுக்கு பிடித்த நிறம். அழுக்கில்லாத நிறம்.

அவரின் பர்ஸை அவருக்கு தெரியாமல் எடுத்தான்.

நகர்ந்தபோது ஒருவர் சத்தம்போட்டார், “திருடன், திருடன் அவன் பிக்பாக்கெட் அடிச்சிட்டான் பாருங்க”.

ஜானுக்கு இதுபோல் பலமுறை ஆகியுள்ளது. சிலமுறை மாட்டிக்கொண்டும் இருக்கிறான். போலீசிலும் பிடிபட்டிருக்கிறான்.

அதனால் எப்படி தப்பிப்பது என யோசிக்கும்போது இரண்டுபேர் அவனை நன்றாக பிடித்துக் கொண்டனர். ”ஏய், தப்பிச்சு போலாம்னு பாத்தியா!” என அடிக்க தொடங்கும்போது....

”நிறுத்துங்க”

ஜான் அவரை பார்த்தான், அவருடைய பர்சைதானே திருடினோம் அவர் ஏன் நிறுத்த சொல்றார் என புரியாமல் அவர் முகத்தை பார்த்தான். அவரின் கண்கள் பிரகாசமாக ஏதோ ஒருவித காந்த சக்தியோடு இருப்பதுபோல் அவனுக்கு தோன்றியது இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர் சில நொடிகள் அவனைப் பார்த்து விட்டு, ”ஓ! தம்பி நீயா! எல்லாரும் விடுங்க இவன் எனக்கு தெரிஞ்ச பையன்தான். எப்பவுமே இப்படிதான் எதையாவது எடுத்து வெச்சுக்கிட்டு விளையாடுவான்” அவர் மெலிதான் புன்னகையோடு பேசினார்.

அனைவரும் அரைமனதோடு கலைந்து சென்றனர்.

ஜான் அவர் ஏன் தன்னை காப்பாற்றினார் என புரியாமல் விழித்தான். அவர் ஒரு நிறுத்தத்தில் இறங்கினார். அவனிடம் கண்ணசைத்தார். அவனும் இறங்கினான்.

”பேரென்ன” என்றார்.

”ஜா..ஜான்” என்றான் தடுமாற்றமாக.

அவர் மெலிதாக புன்னகைத்தார். அந்த புன்னகையே அவனை வசீகரித்தது.
அவரை பார்த்தால் கம்பீரமாக பெரிய இடத்து ஆள் போலத்தான் இருந்தார்.

”என்னோடு வருகிறாயா”

”....”
அவன் மவுனமாக தலையசைத்தான். அவர் மீண்டும் புன்னகைத்தார்.

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Illustrator, InDesign/Adobe CS

அடோப் கிரியேடிவ் சூட் (Adobe Creative Suite) எனப்படும் மென்பொருள் தொகுப்பில் 10க்கும் மேற்பட்ட மென்பொருள்களை ஒன்றாக இணைத்து வழங்குகிறது அடோப் நிறுவனம். சமீபத்தில் வெளியான பதிப்பு Adobe Creative Suite 5 (CS5). அடோப் கொடுக்கும் இந்த மென்பொருள்களை மூன்று வகையாக பிடிக்கலாம்.

1. கிராஃபிக்ஸ் டிசைன் மென்பொருள்கள் (Design Premiun)
Photoshop
Illustrator
InDesign
Flash Catalyst
Flash Professional
Dreamweaver
Fireworks
Acrobat
Bridge
Device Central
2. இணைய பயன்பாட்டு மென்பொருள்கள் (Web Premium)
Dreamweaver
Flash Catalyst
Flash Professional
Flash Builder
Photoshop
Illustrator
Acrobat
Fireworks
Contribute
Bridge
Device Central
3. ஒளிப்பட தொகுப்பு மென்பொருள்கள். (Production Premium)

Adobe Premiere
After Effects
Photoshop
Illustrator
Flash Catalyst
Flash Professional
Soundbooth
Adobe OnLocation
Encore
Bridge
Device Central
Dynamic Link
ஒவ்வொன்றின் உபயோகம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம். சிலவற்றிற்கு லிங்க்-ம் கிடைக்கும்.


1. அடோப் ஃபோட்டோஷாப்:
ஃபோட்டோஷாப் பற்றிய பல பிளாக்குகள் உள்ளன. அவற்றை கற்றாலே ஓரளவுக்கு அடிப்படை அறிவு வந்துவிடும். படங்களை கையாளுதல், படம் வரைதல், கிராபிக்ஸ் டிசைனிங், பேஜ் லே அவுட், அச்சுக்கலை, வெப் ப்டங்கள், அனிமேஷன் gifs போன்ற பல விசயங்களை கற்க ஃபோட்டோஷாப் பயன்படுகிறது. ms-office தெரிந்து கொள்வது அவசியம் என்பது போல ஃபோட்டோஷாப்பை அறிவது அவசியமாகும். 2டி, 3டி அனிமேஷன், அச்சுக்கலை, ஒளிப்படக்கலை போன்ற எல்லா துறைகளுக்கும் ஃபோட்டோஷாப் பயன்படுகிறது. Photoshop, Photoshop extended என இரண்டு வெர்சன்கள் வருகின்றன. இரண்டாவதில் வசதிகள் அதிகமாக இருக்கும். போட்டோஷாப்புடன் Image ready என்னும் மென்பொருளும் கிடைக்கும். இதுவும் போட்டோஷாப் போன்றதே பெரிதாக வித்தியாசமில்லை. (இது gif, slicing போன்றதற்கு சிறந்தது)

டவுன்லோட்: அடோப் cs 5 portable 123 mb

இங்கே சில ஃபோட்டோஷாப் தொடர்பான சில டூல்களை தந்துள்ளேன்.
3700 fonts (torrent) 74 mb
Rare photoshop brushes (rapidshare) 61 mb
Rare photoshop actions 105 mb

2. அடோப் இல்லஸ்ட்ரேட்டர்
இது ஒரு vector graphics editor. (vector graphics என்பது points, lines, curves, மற்றும் shapes ஆகியவற்றை பயன்படுத்தி வரையப்படும் படங்கள் ஆகும்.) அடோப் ஃபோட்டோஷாப்பை விட பல கடினமான அழகிய படங்கள் டிசைன்களை இதில் உருவாக்குவது எளிது. மற்றபடி ஃபோட்டோஷாப்பில் செய்யக் கூடியவற்றை இங்கேயும் செய்யலாம். இது கிட்டதட்ட போன பதிவில் பார்த்த Visioவை போன்றது.

டவுன்லோட்: adobe illustrator portable 200mb part 1 part 2

3. அடோப் இண்டிசைன்
இது போஸ்டர்கள், லெட்டர்பேட், துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் போன்ற பலவற்றை வடிவமைக்க ஏற்ற மென்பொருள். பொதுவாக புத்தகங்கள் தயாரிக்க சிறந்த மென்பொருள். இது சென்ற பதிவில் பார்த்த Publisher மற்றும் coreldraw போன்றது. ஆனால் இது போட்டி மென்பொருள் QuarkXPress ஆகும். அடோப் சிஸ்-ல் இல்லாத அடோபின் ஒரு மென்பொருளான page maker-க்கு பதிலாக அடோப் வடிவமைத்த மென்பொருள் இதுவாகும்.

டவுன்லோட்: Adobe InDesign CS5 Portable 171 mb


மீதி அடுத்த பதிவில்....

உங்களை நீங்களே அழகுபடுத்த:
பல படங்களில் (நம் புகைப்படத்தையும் சேர்த்து) அழகுபடுத்த நினைப்போம். குறிப்பாக முகங்களை. போதுமான ஃபோட்டோஷாப் அறிவு இருந்தால் இது சாத்தியம். ஆனால் சாதாரணமானவர்களுக்கு? அதற்காகவே இந்த மென்பொருள். மேக்கப் மென்பொருள் (பவுடர், லிப்ஸ்டிக், ஐ ஷேடோ என எல்லாமே இருக்கும்)
AMS_Photo_Makeup_Editor (6.5 mb)

இன்னொன்று ஹேர் ஸ்டைலை மாற்ற:
Maggi.Hair.and.Cosmetics.v6.0 (3.5 mb)
Virtual Hairstyle Fab (19.7 mb)

EXTRA BIT:
பயமுறுத்தும் ஃபிளாஷ் கேம்:
NIGHTMARE

மாற்றங்களை தரும் இணையதளங்கள்!

நாம் இந்த கணிணி உலகில் பல விதமான கோப்புகளை பயன்படுத்துகிறோம். சில சமயம் ஒரு வகை கோப்பை மற்றொரு வகை கோப்பாக மாற்ற வேண்டியிருக்கும். இந்த வசதியை சில இணையதளங்கள் ஆன்லைனில் இலவசமாக அளிக்கின்றன.

அவற்றில் ஒன்று. http://www.youconvertit.com/
இந்த இணைய தளத்தில் நாம் இலவசமாக பதிவுசெய்து கொண்ட பிறகு நமக்கு 1GB இடம் அளிப்பார்கள், அந்த இடத்திற்குள் நாம் கோப்புகளை மாற்ற அப்லோட் செய்யலாம். மாற்றப்பட்ட கோப்புகளுக்கான லிங்க் நம் மின்னஞ்சலுக்கு வரும். மேலும் இந்த லிங்க் மேற்கண்ட இணையதளத்தில் நம் கணக்கிலும் இருக்கும்.

1GB இடம் வரை நாம் கோப்புகளை மாற்றிக் கொள்ளலாம் இடம் நிரம்பி விட்டால். ஏற்கனவே உள்ளவைகளை அழித்து விடலாம். எனவே அந்த 1GB ஸ்பேஸ் அப்படியே இருக்கும்.

இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பு pdf to wordக்கு ஒரு இணையதளம் விடியோ பைல்களுக்கு ஒரு இணையதளம், இமேஜ் பைல்களுக்கு ஒரு இணையதளம் என்றில்லாமல் எல்லாவித ஃபைல்களையும் ஒரே இடத்தில் கன்வர்ட் செய்ய முடிகிறது.


இங்கே கன்வர்ட் செய்யக்கூடிய பைல் பார்மட்டுகள்:
Document file formats: Csv, Doc, html, ods, odt, pdf, rtf, sdc, sdw, stc, stw, sxc, sxw, vor, xhtml, xls, xlt
Audio file formats: Aac, aif, aiff, mp3, ra, wav, wma
Video file formats: asf, flv, mov, mp4, mpeg, mpg, rm, swf, wmv
Image file formats: Bmp, dpx, gif, jpeg, pam, pbm, pcx, pgm, png, ppm, ras, sgi, tga, tif, tiff, yuv
Archive file formats: 7z, bz2, bzip2, gz, gzip, tar, tbz, tbz2, tgz, zip

நாம் சில சமயங்கள் வேலை செய்யும் போது இன்ச் அளவுகளை செண்டிமீட்டர்களில் எவ்வளவு என தெரிந்துகொள்ள விரும்பலாம். அதற்கு எப்படி அதை செய்வது என குழம்பி கொண்டிருக்கலாம். இவ்வளவு ஏன் நாம் சமையல் செய்யும்போது ஒரு கப் சர்க்கரை, இரண்டு மேஜைகரண்டி எண்ணெய் என அளவுகளை பார்த்திருப்போம். இவற்றிற்க்கான லிட்டர் மில்லிலிட்டர் அளவுகள் நமக்கு தெரியுமா! இது போன்று அளவுகளை மாற்ற நாம் விரும்பினால் அனைத்தையும் ஒரே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

http://www.convert-me.com

நிறை மற்றும் எடை(Mass and Weight),
தூரம் மற்றும் நீளம்(Distance and Length),
கொள்ளளவு மற்றும் கனஅளவு(Capacity and Volume),
பரப்பு(Area),
வேகம்(Speed),
முடுக்கம்(Acceleration),
வெப்பநிலை(Temperature),
நேரம்(Time),
அழுத்தம்(Stress and Pressure),
ஆற்றல்(Energy and Work),
திறன்(Power),
விசை(Torque),
பாய்ம வீதம்(Flow rate by volume, Flow rate by mass),
வட்ட அளவு(Circular measure),
கணிப்பொறி(Computer storage),
தகவல் பரிமாற்றம்(Data transfer rate),
எரிபொருள் சிக்கனம்(Fuel Economy),
சமையல்(Cooking),
பின்னம் மற்றும் சதவீதம்(Fractions and Percent)
பண மாற்று வீதம்(Currency Rates)

இலவச SMS அனுப்ப.

இணையம் வழியாகவும் SMS எனப்படும் குறுஞ்செய்திகளை மொபைல் போன்களுக்கு இலவசமாக அனுப்பலாம். ஆனால் இவற்றில் பதிவு செய்வது முக்கியமாகும். மேலும் இவற்றில் நாம் அனுப்பும் எழுத்துக்களின் எண்ணிக்கை (குறியீடுகள், எழுத்துக்கள், எண்கள்) ஒரு வரம்பிற்குட்பட்டதே!
இவற்றின் ஒரு குறைபாடு நாம் அனுப்பு குறுஞ்செய்திகளுடன் அவர்கள் ஒரு விளம்பரத்தை சேர்த்து அனுப்புகிறார்கள் என்பதே. ஆனால் இவற்றை நாம் மொபைலில் பேலன்ஸ், சார்ஜ் இல்லாதபோது அவசரமாக மற்றவர்களின் மொபைலுக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்படி சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

http://www.indyarocks.com/send/free-sms எழுத்துக்களின் எண்ணிக்கை: 140 http://www.160by2.com எழுத்துக்களின் எண்ணிக்கை: 145
http://wwwe.way2sms.com/content/index.html எழுத்துக்களின் எண்ணிக்கை: 140
http://www.sms7.in எழுத்துக்களின் எண்ணிக்கை: 440
http://www.sendsmsnow.com எழுத்துக்களின் எண்ணிக்கை: 130
http://www.smsez.com/ எழுத்துக்களின் எண்ணிக்கை: 160


இந்த இணையதளம் இணையம் வழியாக நண்பர்களின் மொபைல் போனுடன் சாட் செய்யலாம். அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு நண்பர்களுடன் சாட் செய்யலாம்

http://www.smsgupshup.com/apps_chat

இவை அனைத்திலும் முதலில் இலவசமாக பதிவு செய்த பிறகே அவற்றின் சேவையை பயன்படுத்த முடியும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியதால் வேலைவாய்ப்பு மறுப்பு : போராட்டத்தில் இளைஞர்


ராமநாதபுரம் : தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியதால், தட்டிப்பறிக்கப்பட்ட வேலையை பெற ராமநாதபுரம் இளைஞர் போராடி வருகிறார்.


ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளிந்திக்கோட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் முத்து. ராமமூர்த்தி இளங்கலை பட்டம் பெற்ற நிலையில், கர்நாடகாவில் உடற்கல்வி ஆசிரியர்(சி.பி.இ.டி.,)படித்தார். 2005 ஜன., 6ல் ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழை பதிவு செய்தார். முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்றதால், முன்னுரிமை சான்றிதழும் பதிவானது. வெளிமாநிலத்தில் படித்ததால், தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை வழங்கிய மதிப்பீடு சான்றிதழை சமர்ப்பித்து, அடையாள அட்டையில் வேலைவாய்ப்பு அலுவலரின் கையெழுத்திடப்பட்டது. இதற்கிடையில் அரசு அறிவித்த உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான 853 பணியிடங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பங்கேற்றார்.



இதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த மே 26ல் நடந்தது. இதில் தேர்வு குழு கேட்ட அனைத்து சான்றிதழையும் ராமமூர்த்தி ஒப்படைத்தார். பின் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வு முடிவில், ராமமூர்த்தி பெயர் மட்டும் விடுபட்டிருந்தது. அவருக்கு பின்னால் பதிவு செய்த வேறு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். "மதிப்பீடு பெறாததே, ராமமூர்த்தி தேர்வாகாமல் போனதற்கு காரணம்,' எனவும் தெரிவிக்கப்பட்டது. அழைப்பு கடிதத்தில் மதிப்பீடு சான்றிதழ் கேட்கப்படாத நிலையில், அதை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது ராமமூர்த்திக்கு ஏமாற்றத்தை தந்தது. இது குறித்து அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடினார். இதை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் அவரை கைவிட்டது. தேர்வான அனைவரும் பணியில் சேர்ந்த நிலையில், தனது வாய்ப்புக்காக பல்வேறு வழியில் தொடர்ந்து போராடி வருகிறார்.


ராமமூர்த்தி கூறியதாவது: அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட சான்றிதழ்களை முறையாக கொடுத்திருந்தேன். நான் மதிப்பீடு சான்றிதழ் பெற்றது குறித்து அடையாள அட்டையில் வேலைவாய்ப்பு அலுவலர் சான்று அளித்துள்ளார். இதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியதால், காழ்ப்புணர்ச்சியுடன் என்னை பழிவாங்குகின்றனர், என்றார்.

ஆன் லைனில் சன் டைரக்ட் ரீசார்ஜ் செய்ய

ஆன்  லைனில் சன் டைரக்ட்  ரீசார்ஜ் செய்ய




http://www.sundirect.in/customer-login.php

அவசியமான இணைய தளங்கள் ஒரு தொகுப்பு

01. screenr.com – record movies of your desktop and send them straight to YouTube.
02. bounceapp.com – for capturing full length screenshots of web pages.
03. goo.gl – shorten long URLs and convert URLs into QR codes.
04. untiny.me – find the original URLs that’s hiding behind a short URLs.
05. localti.me – know more than just the local time of a city
06. copypastecharacter.com – copy special characters that aren’t on your keyboard.
07. topsy.com – a better search engine for twitter.
08. fb.me/AppStore – search iOS app without launching iTunes.
09. iconfinder.com – the best place to find icons of all sizes.
10. office.com – download templates, clipart and images for your Office documents.
11. woorank.com – everything you wanted to know about a website.
12. virustotal.com – scan any suspicious file or email attachment for viruses.
13. wolframalpha.com – gets answers directly without searching – see more wolfram tips.
14. printwhatyoulike.com – print web pages without the clutter.
15. joliprint.com – reformats news articles and blog content as a newspaper.
16. isnsfw.com – when you wish to share a NSFW page but with a warning.
17. e.ggtimer.com – a simple online timer for your daily needs.
18. coralcdn.org – if a site is down due to heavy traffic, try accessing it through coral CDN.
19. random.org – pick random numbers, flip coins, and more.

20. mywot.com – check the trust level of any website – example.
21. viewer.zoho.com – Preview PDFs and Presentations directly in the browser.
22. tubemogul.com – simultaneously upload videos to YouTube and other video sites.
23. truveo.com – the best place for searching web videos.
24. scr.im – share you email address online without worrying about spam.
25. spypig.com – now get read receipts for your email.
26. sizeasy.com – visualize and compare the size of any product.
27. whatfontis.com – quickly determine the font name from an image.
28. fontsquirrel.com – a good collection of fonts – free for personal and commercial use.
29. regex.info – find data hidden in your photographs – see more EXIF tools.
30. tineye.com – this is like an online version of Google Googles.
31. iwantmyname.com – helps you search domains across all TLDs.
32. tabbloid.com – your favorite blogs delivered as PDFs.
33. join.me – share you screen with anyone over the web.
34. onlineocr.net – recognize text from scanned PDFs and images – see other OCR tools.
35. flightstats.com – Track flight status at airports worldwide.
36. wetransfer.com – for sharing really big files online.
37. pastebin.com – a temporary online clipboard for your text and code snippets.
38. polishmywriting.com – check your writing for spelling or grammatical errors.
39. awesomehighlighter.com – easily highlight the important parts of a web page.
40. typewith.me – work on the same document with multiple people.
41. whichdateworks.com – planning an event? find a date that works for all.
42. everytimezone.com – a less confusing view of the world time zones.
43. warrick.cs.odu.edu – you’ll need this when your bookmarked web pages are deleted.
44. gtmetrix.com – the perfect tool for measuring your site performance online.
45. imo.im – chat with your buddies on Skype, Facebook, Google Talk, etc. from one place.
46. translate.google.com – translate web pages, PDFs and Office documents.
47. youtube.com/leanback – enjoy a never ending stream of YouTube videos in full-screen.
48. similarsites.com – discover new sites that are similar to what you like already.
49. wordle.net – quick summarize long pieces of text with tag clouds.
50. bubbl.us – create mind-maps, brainstorm ideas in the browser.
51. kuler.adobe.com – get color ideas, also extract colors from photographs.
52. followupthen.com – setup quick reminders via email itself.
53. lmgtfy.com – when your friends are too lazy to use Google on their own.
54. tempalias.com – generate temporary email aliases, better than disposable email.
55. pdfescape.com – lets you can quickly edit PDFs in the browser itself.
56. faxzero.com – send an online fax for free – see more fax services.
57. feedmyinbox.com – get RSS feeds as an email newsletter.
58. isendr.com – transfer files without uploading to a server.
59. tinychat.com – setup a private chat room in micro-seconds.
60. privnote.com – create text notes that will self-destruct after being read.
61. flightaware.com – live flight tracking service for airports worldwide.
62. boxoh.com – track the status of any shipment on Google Maps – alternative.
63. chipin.com – when you need to raise funds online for an event or a cause.
64. downforeveryoneorjustme.com – find if your favorite website is offline or not?
65. example.com – this website can be used as an example in documentation.
66. whoishostingthis.com – find the web host of any website.
67. google.com/history – found something on Google but can’t remember it now?
68. errorlevelanalysis.com – find whether a photo is real or a photoshopped one.
69. google.com/dictionary – get word meanings, pronunciations and usage examples.
70. urbandictionary.com – find definitions of slangs and informal words.
71. seatguru.com – consult this site before choosing a seat for your next flight.
72. sxc.hu – download stock images absolutely free.
73. imo.im – chat with your buddies on Skype, Facebook, Google Talk, etc. from one place.
74. wobzip.org – unzip your compressed files online.
75. vocaroo.com – record your voice with a click.
76. scribblemaps.com – create custom Google Maps easily.
77. buzzfeed.com – never miss another Internet meme or viral video.
78. alertful.com – quickly setup email reminders for important events.
79. encrypted.google.com – prevent your ISP and boss from reading your search queries.
80. formspring.me – you can ask or answer personal questions here.
81. snopes.com – find if that email offer you received is real or just another scam.
82. typingweb.com – master touch-typing with these practice sessions.
83. mailvu.com – send video emails to anyone using your web cam.
84. ge.tt – quickly send a file to someone, they can even preview it before downloading.
85. timerime.com – create timelines with audio, video and images.
86. stupeflix.com – make a movie out of your images, audio and video clips.
87. aviary.com/myna – an online audio editor that lets record, and remix audio clips online.
88. noteflight.com – print music sheets, write your own music online (review).
89. disposablewebpage.com – create a temporary web page that self-destruct.
90. namemytune.com – when you need to find the name of a song.
91. homestyler.com – design from scratch or re-model your home in 3d.
92. snapask.com – use email on your phone to find sports scores, read Wikipedia, etc.
93. teuxdeux.com – a beautiful to-do app that looks like your paper dairy.
94. livestream.com – broadcast events live over the web, including your desktop screen.
95. bing.com/images – automatically find perfectly-sized wallpapers for mobiles.
96. historio.us – preserve complete web pages with all the formatting.
97. dabbleboard.com – your virtual whiteboard.
98. whisperbot.com – send an email without using your own account.
99. sumopaint.com – an excellent layer-based online image editor.
100. lovelycharts.com – create flowcharts, network diagrams, sitemaps, etc.
101. nutshellmail.com – Get your Facebook and Twitter streams in your inbox.

இளைமையை மீட்டெடுக்க எளிய வழி!(40+)

நாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


கல்லூரியில் படித்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரியை எனது ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, மற்ற நண்பர்களின் முகவரியை மட்டும் எழுதி வைத்துக் கொண்டேன். காலப்போக்கில், வாழ்க்கைப் போராட்டத்தில் ஞாபகத்திலிருந்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரிகள் மறந்து போய்விட்டது. இப்பொழுது அவர்களைக் கண்டறிய பல வழிகளில் முயற்சி செய்தேன். என் ஞாபகத்தில் உள்ள ஊர் பெயரைக் கொண்டு, சிலருக்கு கடிதம் எழுதினேன். அதன் படி ஒரு நண்பரை கண்டறிந்தேன். அவர் மூலம் மற்றவரைப் பிடிக்கலாம் என்றால், அவரும் மற்றவர்களின் பெயரை மட்டும் சொல்கிறார். மற்றபடி ஒரு முன்னேற்றமும் இல்லை.



அண்மையில் தமிழக அரசு, என்னுடன் படித்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க உள்ளதை அறிந்தேன். இணையத்தில் பதிவு மூப்பு பட்டியலில் நண்பர்களின் பெயரைத்தேடினேன். அவர்களின் பெயர் இருந்ததும், அவர்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் பணி நியமன ஆணை வாங்க வரும் தேதியறிந்து, அங்கு சென்று நண்பர்களை மீட்டெடுத்தேன். அவர்கள் நான் அங்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தகவல் தொடர்பும் இல்லாமல், திடிரென்று நண்பர்களைச் சந்தித்ததில் என்னுடைய கல்லூரி நாட்களின்
நினைவுகளும், அந்த மனநிலையும் எனக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது.


இப்பொழுது எனக்குள் ஓர் இருபது வயது இளைஞன் இருப்பதாக உணர்கிறேன்.
நீங்களும், நீண்டநாள் சந்திக்காத உங்களுடைய 'நெருங்கிய' கல்லூரி தோழர்கள்/தோழிகளை சந்தித்து, புத்துணர்ச்சிப் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

காய்கறிகள் விலை உயர்வது, எதனால்?

 நேற்று காய்கறி வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது, கடைக்காரர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்...! அதனால், விலை கேட்க்காமல் எடுத்து வைத்துவிட்டேன். பிறகு, மொத்த தொகையைக் கேட்டவுடன் எனக்குத் தலைசுற்றியது. வேறொன்றுமில்லை வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை எடுக்காமல். சவ்சவ்(பெங்களூர் கத்தரிக்காய்), புடலங்காய், போன்ற யாரும் விரும்பாத, விலை குறைந்தவைகளாக எடுத்திருந்தேன். "என்ன இவ்வளவு சொல்கிறீர்கள்?" என்றுக் கேட்டேன். உடனே அவர், "புடலங்காய் கிலோ 80 ரூபாய்" என்றார். புடலங்காயயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, மற்றவைகளை வாங்கிவந்தேன்.



எனக்கு எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு. விலை அதிகாமான காய்கறிகளை வாங்குவதை தவிர்த்துவிடுவேன். விலைக் குறைந்தவைகளை அதிகமாக வாங்குவேன்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால், எனக்கு புடலங்காய், முருங்கைக்காய் போன்றைவைகள் எப்பொழுதும் சாதாரணமாகப்படும். கிராமத்தில் அவைகளை யாரும் வாங்க மாட்டார்கள்/விரும்பமாட்டார்கள். மற்றவரை திட்டுவதற்கு கூட 'புடலங்காய்' என்று சொல்வார்கள். அவ்வளவு மதிப்பு அந்த புடலங்காய்க்கு! முருங்கைக்காய் பறிப்பார் யாருமின்றி மரத்தில் முற்றித் தொங்கும். இது சில வருடங்களுக்கு முந்தைய நிலை.

இப்பொழுதும், அதே நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரிக்க மக்களிடம் மனமுமில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் விவசாயத்தின் மீது மக்களுக்கும் அரசுக்கும் அக்கறை இல்லாமல் போனதுதான்.

கிலோ 50 ரூபாய் விற்கப்படும் தக்காளி திடிரென்று ஒருநாள் கிலோ 50 காசுக்கு விற்கப்படும். அன்று விவசாயிகள் அதை ரோட்டில் கொட்டி அழிப்பார்கள். இது மாதிரி உற்பத்தியாகின்ற பொருட்களை விற்க முடியாமல் அவதிப்படும் விவசாயி, எதை நம்பி மீண்டும் தக்காளி பயிரிடுவார்?

எதிர்காலத்தில், "கையில் பணமிருக்கும், வாங்க பொருட்கள் இருக்காது" என்று சிலர் அடிக்கடி சொல்வார்கள். அது இப்பொழுதே உண்மையாகி வருவது, நிச்சயம் வேதனைதான்.

இதைப் படிப்பவர்கள், உங்களுடைய எண்ணங்களையும், தீர்வுகளையும் பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ எழுதினால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். அதனால்தான், இந்தப் பதிவை மிக விரிவாக எழுதவில்லை. எல்லோரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ராஜாவிடம் விசாரணை கிடைத்தது என்ன?



"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் குடும்பத்தினர் கோடிக்கணக்கில் பயனடைந்துள்ள தகவல், சி.பி.ஐ., விசாரணையில் தெரிந்துள்ளது.



"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பான விசாரணையை சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் பெறப்பட்ட கணிசமான தொகை, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் பெயரில் நடந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., சந்தேகித்தது.இதையடுத்து தான் ராஜா, அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனையில் சிக்கிய ஆவணம் ஒன்றில், ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குனராக உள்ள யூக்கஸ் எஸ்டேட் என்ற நிறுவனத்தின் வரவு செலவுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு லட்சமாக இருந்த அந்த நிறுவனத்தின் வர்த்தகம், ஒரே ஆண்டில் 700 கோடியாக உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நிறுவனத்தின் ஆவணங்களில், தனது கணவர் ராஜாவின் அலுவலக இல்ல முகவரியையே பரமேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் அவரது ஆடிட்டர் கணபதி சுப்ரமணியன் மற்றும் நண்பர் சாதிக் பாட்சா ஆகியோர் பெயரிலும் ஸ்பெக்ட்ரம் மூலம் பெறப்பட்ட தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்தியர்களுக்கு தொப்பை விழுவது ஏன்?

வேலூரில் சமீபத்தில் அக சுரப்பியல் மாநாடு நடந்தது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். உடல் ஆரோக்கியத்திற்கும், சுரப்பிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் பாதி விவாதங்கள், நீரிழிவு நோய் குறித்தே நடந்தன. உலகளவில் பரவி கிடக்கும் இந்நோய் குறித்து பேசப்பட்டது ஆச்சரியமளிக்கவில்லை.
புதிய பிரச்னைகள், நவீன முன்னேற்றங்கள், கணைய செல் மாற்றுச் சிகிச்சையும், அதனால் நீரிழிவு நோய் நிரந்தரமாக குணமாகும் வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒரு மருத்துவர், இன்சுலினை மாதம் ஒருமுறை போடும் விதமாக மாற்றியமைப்பது பற்றி விவரித்தார். இதுவரை, எலியை வைத்தே இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, மனிதர்களிடம் ஆய்வு நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்தியாவில், 15 வயதுக்கு மேற்பட்ட, நகரங்களில் வாழ்வோர் 11 சதவீதத்தினரும், கிராமங்களில் 3 சதவீதத்தினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தோராய மதிப்பீடு தான். 30 முதல் 40 சதவீதத்தினர், உடலில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பது தெரியாமல் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு நாம் ஏன் அடிமையானோம்?

இந்தியா பலமுறை, பஞ்சத்தை பார்த்து விட்டது. அதன் விளைவாக, சிக்கனத்தை கடைபிடிக்கும் மனநிலையை கொடுக்கும் மரபணுக்கள் நம் உடலில் தோன்றி விட்டன. இவை, உடலில் சேரும் கலோரி சத்தை, அதிகம் செலவழிக்காமல், கொழுப்பாய் மாற்றி, அதை உடல் முழுவதும் பரவச் செய்து விடுகின்றன. இதனால் தான், ஒல்லியான உடல் கொண்ட இந்தியனுக்குக் கூட, தொப்பை விழுந்து விடுகிறது. நம் உடலில், முதன்முதலில் அதிக எடை கூடும் இடம், வயிறு தான்.
இத்தகைய வளர்சிதை மாற்றக் குறைபாடு, நீரிழிவு நோய் கொண்ட பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இந்தக் குறைபாடு கொண்ட பெண்கள், கர்ப்பப் பை கட்டி, கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படுவது ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோய் உருவாகுமா என்பதை அறிய, சில பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். வெறும் வயிற்றில் இருக்கும் போது, நம் உடலில் சர்க்கரையின் அளவு 125 மி.லி., / டி.எல்., என்பதற்கு அதிகமாகவோ, தோராயமாக எடுக்கப்படும் அளவு 250 மி.லி., / டி.எல்., என்பதற்கு அதிகமாகவோ இருந்தால், சர்க்கரை நோய் உள்ளதற்கான அறிகுறியாக கொள்ளலாம்.
சர்க்கரையை வெளியேற்றும் திறன் இவர்களிடையே குறைந்து காணப்படும். டிரைகிளிசரைடு அளவும் 150 மி.லி., / டி.எல்., என்பதற்கு மேலாகவும், எச்.டி.எல்., கொழுப்பு, ஆண்களுக்கு 40 மி.லி., / டி.எல்., என்பதற்கும், பெண்களுக்கு 50 மி.லி., / டி.எல்., என்பதற்கு குறைவாகவும் காணப்படும். ரத்த அழுத்தமும் 135/85 என்ற அளவுக்கு மேல் காணப்படும். இந்த அசாதாரண கணக்கீட்டை கொண்டவர்கள், வளர்சிதை மாற்றக் குறைபாடு அல்லது "எக்ஸ் சிண்ட்ரோம்' என்ற பாதிப்புக்கு உள்ளாகி இருப்பர் என கொள்ளலாம். உங்கள் உடல் கணக்கீடுகளை நீங்களாகவே பரிசோதித்து கொள்ளலாம். உடல் எடை அளக்கும் கருவியும், இடுப்பளவைக் கணக்கிடும் நாடாவும் இருந்தால் போதும். உடல் எடை குறியீட்டெண் (பாடி மாஸ் இன்டெக்ஸ்) முதலில் எடுக்க வேண்டும். உடல் எடையை கிலோ கணக்கில் அளந்து, அதை, உங்கள் உயரத்தின் (மீட்டர்) இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் எண்ணிக்கை தான், உங்கள் எடை குறியீட்டெண். இது, 23 என்ற அளவில் இருக்க வேண்டும். 30ஐ தாண்டினால், ஆபத்து கட்டத்தை நீங்கள் நெருங்குகின்றீர் எனக் கொள்ளலாம். இடுப்பின் மேல் பாகம் மற்றும் கீழ் பாகங்களுக்கு இடையேயான விகிதம் ஆண்களுக்கு ஒன்று என்றும், பெண்களுக்கு 0.8 என்றும் இருக்க வேண்டும். கீழ் பாக அளவை, மேல் பாக அளவால் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கை இது. இடுப்பில் மேல் பாகம், ஆண்களுக்கு 102 செ.மீ., என்பதாகவும், பெண்களுக்கு 88 செ.மீ., என்பதாகவும் இருந்தால், ஆபத்தின் துவக்கம். இந்த உடல் அளவீடுகளுக்கென, தனியாக மருத்துவரை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலே சொன்ன அறிகுறிகளில் மூன்றுக்கு மேற்பட்டவை தென்பட்டால், வளர்சிதை மாற்றக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கொள்ளலாம். மக்களிடையே நடத்தப்பட்ட பொதுவான ஆய்வில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், 40 சதவீதத்தினர், வளர்சிதை மாற்றக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்படி எனில், நாம் நீரிழிவு நோயாளிகளாக இருக்க வேண்டும் என, சபிக்கப்பட்டவர்களா? வளர்சிதை மாற்றக் குறைபாட்டை தவிர்க்க, அது, நீரிழிவு நோயாக மாறுவதைத் தடுக்க, உடலில் தோன்றக் கூடிய உயிரி ரசாயன மாறுபாடுகளை சரிசெய்ய வேண்டும். உடல், இன்சுலினை எதிர்ப்பதால் தான், இந்த மாறுபாடுகள் தோன்றுகின்றன. நாம் உண்ணும் உணவு, குளூக்கோசாக மாறி, செல்களுக்கு சென்று, உடலுக்கு சக்தி கொடுக்கிறது. "எக்ஸ் சிண்ட்ரோம்' கொண்டவர்களின் உடல், இன்சுலின் செயல்படுவதை எதிர்க்கிறது. எனவே, செல்களுக்கு குளூக்கோஸ் சென்றடையும் பணியைச் சீராக்க, அதிகளவு இன்சுலின் சுரக்க நேரிடுகிறது. இந்த அளவு இன்சுலினைச் சுரக்க, உடலால் இயலவில்லை. எனவே, நீரிழிவு நோய் உண்டாகி விடுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க மிகச்சிறந்த வழி, உடல் எடை குறியீட்டெண்ணை 23லேயே வைத்து கொள்வது தான். தினமும் 30 நிமிட நடை, இன்சுலினை எதிர்க்கும் திறனை குறைக்கும். வேகமான நடையாக இருக்க வேண்டும். இடையிடையே சற்று நின்று செல்லலாம். உடல் சக்தியைச் சேமிக்கும் வகையில், ஆசுவாசமாக நடப்பது பலன் தராது.
ஒரு மணி நேரத்திற்கு நான்கு கி.மீ., நடக்கும் வகையில் உங்கள் வேகம் அமைய வேண்டும். இந்தப் பயிற்சியே போதுமானதாக இருந்தாலும், நாள் ஒன்றுக்கு 1,500 கலோரிச் சத்து மட்டுமே உட்கொள்ளும் வகையிலான உணவு முறையையும் கடைபிடிக்க வேண்டும். இது முடியவில்லை எனில், சைக்கிளிங், நீச்சல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம். இதற்கும் நேரம் இல்லையெனில், தினமும் 20 நிமிடம், மாடிப்படி ஏறி இறங்கலாம். பளு தூக்குதல், உடல் வடிவமைப்பை சீராக்குதல் போன்ற பயிற்சிகள் உடலுக்கு வலு சேர்த்து, வளைந்து கொடுக்கும் தன்மை ஏற்படுமே தவிர, வளர்சிதை மாற்றக் குறைபாட்டை நீக்காது. நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றையும் உடனுக்குடன் செய்தால் மட்டுமே, குறைபாடு நீங்கும். முழு உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யாமல், தொப்பையை மட்டும் குறைக்கும் பயிற்சியும் பலன் தராது. கலோரி அளவைக் குறைக்கும் முயற்சியாக, நீங்கள் உண்ணும் உணவில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுங்கள். "டிவி' பார்த்து கொண்டே அல்லது மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்தபடியே சாப்பிட்டால், உடலுக்குள் செல்லும் கலோரி அளவு அதிகரித்து விடும். நொறுக்கு தீனி உண்பதை தவிர்க்க, பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். எண்ணெய் பதார்த்தங்கள், கலோரி அளவை மறைமுகமாக அதிகரிக்கும். ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 500 மி.லி., எண்ணெயே போதுமானது. குழந்தை பருவம் முதலே இந்த பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

கர்ப்பம் தரிக்கும் காலம் எது தெரியுமா ?

சிறு குடும்பத் திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்துகிறது. "நாம் இருவர், நமக்கு மூவர்' போய், "நாம் இருவர், நமக்கிருவர்' வந்து, இப்போது, "நாம் இருவர், நமக்கொருவர்' என்பது, கொள்கை முடிவாகி விட்டது. கருத்தடைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்து விட்டது. எனினும், கருத்தடை குறித்து, பெரும்பாலான பெண்கள் அறிந்து கொள்ளவே இல்லை. மூட நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் தான் பரவலாகக் காணப்படுகின்றன.



* தாய்ப்பால் கொடுக்கும் பெண், கர்ப்படைய மாட்டார்...
* மாதத்திற்கு ஒரு முறை செக்ஸ் வைத்து கொண்டால், குழந்தை உருவாகாது...
* தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டால் தான், குழந்தை உருவாகும்...
* கருத்தடை செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல...
இதுபோன்ற நம்பிக்கைகளில் உழல்வதால், 23 சதவீதப் பெண்களுக்கு, திட்டமிடா கருவுறுதல் ஏற்படுகிறது.
கருத்தரிப்பு காலம் மற்றும் மகப்பேறு ஆகியவை ஏற்படும் நேரங்களில், நம் உடல் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்; கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். கருத்தடைக்கு, பெண்களுக்கென பாதுகாப்பு வழிமுறைகள் நிறைய உள்ளன. மாதத்தில், குறிப்பிட்ட சில தினங்களில் மட்டுமே பெண்கள் கருத்தரிக்க முடியும். ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்குவதற்கு, 14 நாட்கள் முன்னதாக, சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும். அது 12 முதல் 24 மணி நேரமே உயிருடன் இருக்கும். ஆணின் விந்து 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். இந்த நாட்களில் உடலுறவை தவிர்த்தால், கர்ப்பம் தரிக்காமல் தவிர்க்கலாம்.
ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு, மிகச்
சரியாக மாத விடாய் ஏற்படுவதில்லை என்பதால், இந்த நடைமுறை சாத்தியப்படுவதில்லை. பெண்களின் பிறப்புறுப்பில் தடவிக் கொள்ளும் நோநோக்சினால் - 9 என்ற களிம்பு, கருத்தடைக்கு ஏற்ற மருந்து. உடலுறவின் போது இதை தடவிக் கொள்ளலாம். ஒரு மணி நேரம் வரை பயன் தரும். எனினும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மருத்துவச் சீட்டு இல்லாமலேயே மருந்து கடைகளில் கிடைக்கும் களிம்பு இது.
விந்துவை அழிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம். கூடவே, ஜவ்வு போன்ற ஒரு தடைக் கருவியும் (டயாப்ராகம்) பயன்படுத்த வேண்டும். உடலுறவுக்குப் பின் எட்டு முதல் 12 மணி நேரம் வரை இதை அகற்றக் கூடாது; ஆனால், 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.
பெண்கள், "காப்பர் டி'யும் பொருத்தி கொள்ளலாம். மூன்று, ஐந்து, 10 ஆண்டுகள் வரை பயன்பாடு கொண்ட, "காப்பர் டி'க்கள் கிடைக்கின்றன. மகப்பேறு மருத்துவர் மூலம் இதைப் பொருத்திக் கொள்ளலாம். வெளிநாட்டு தயாரிப்புகளும் கிடைக்கின்றன. "காப்பர் டி' கருவியை, அரசும் இலவசமாக வினியோகிக்கிறது. பெண்களுக்கு உடலில் புரோஜெஸ்டரோன் அளவை அதிகரிக்கும் வகையிலான ஊசிகளும் உள்ளன. அவற்றை 12 வாரத்திற்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டுக் கொள்வோர் உடல் எடை அதிகரிக்கும். மாதவிடாய் சரியாக ஏற்படாது. விட்டு விட்டு ரத்தப்போக்கு இருக்கும். இதனால், சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும் காலம் எதுவென கண்டறிய முடியாத நிலை ஏற்படும். கருத்தடைக்கு வாய்வழி மாத்திரைகளும் உள்ளன. இவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டரோன் அடங்கியவை இவை. பல நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்கின்றன. அரசு, "மாலா டி' என்ற பெயரில், இலவசமாக இந்த மருந்தை வினியோகிக்கிறது. தொடர்ந்து 21 நாட்கள் இதை சாப்பிட வேண்டும். பின், ஏழு நாள் இடைவெளி விட்டு, மீண்டும் சாப்பிட வேண்டும். சில நேரங்களில், இடைவெளி காலத்திலும் சில மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அவை, மாதவிடாயை சீர்படுத்தி, கருத்தடை ஏற்படுத்துகின்றன. இவற்றை சாப்பிட்டால், புற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்படாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், புரோஜெஸ்டரோன் மட்டும் அடங்கிய மாத்திரைகளை சாப்பிடலாம். இந்த மாத்திரையை, இடைவெளி இல்லாமல் சாப்பிடலாம். சமீபத்தில், ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டரோன் அடங்கிய வளையம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பெண்கள், பிறப்புறுப்பில் அணிந்து கொள்ள வேண்டும். மூன்று வாரங்களுக்கு இதை அணிந்த பின், ஒரு வார இடைவெளியில் புதிதாக இன்னொன்றை அணிய வேண்டும்.
இதை பெண்களே அணிந்து கொள்ளும் வகையில், எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாத்திரை சாப்பிடவில்லை என்ற கவலையில் உள்ளவர்கள், மாத்திரையை தவிர்த்து, இந்த முறையை கையாளலாம்.
ஆண்கள், ஆணுறைகளைப் பயன்படுத்தலாம். உடலுறவின் முழு நேரமும் இதைப் பயன்படுத்த வேண்டும். கூடவே, விந்துக்கொல்லி களிம்புகளையும் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பற்ற மற்றும் பலருடனான உடலுறவு, பாலியல் ரீதியான நோய்களை உருவாக்கும். இதனால் ஏற்படும் ஹெப்பாடைட்டிஸ் பி வைரஸ் மற்றும் எச்.ஐ.வி., தொற்று ஆகியவை, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
ஆணுறை மட்டுமே இதுபோன்ற நோய்களை தவிர்க்க உதவும். பாதுகாப்பற்ற உடலுறவு, கருத்தரிக்கும் நிலையை ஏற்படுத்தும். அடுத்த மாதவிடாய் எதிர்நோக்கி காத்திருக்கையில், இது, "டென்ஷனை' ஏற்படுத்தும்.
இதை தவிர்க்க, உடலுறவுக்கு பிந்தைய, "மார்னிங் ஆப்டர்' மாத்திரைகளை பயன்படுத்தலாம். மருத்துவச் சீட்டு இல்லாமல் இதை வாங்கக் கூடாது என்றாலும், பெரும்பாலான மருந்து கடைகளில் இது கிடைக்கிறது. உடலுறவு முடிந்த உடனேயே, இந்த மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். 72 மணி நேரத்திற்குள் சாப்பிட்டால், 80 சதவீத பாதுகாப்பு கிடைக்கும். இந்த மருந்து, புரோஜெஸ்டரோன் மட்டுமோ அல்லது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டரோன் ஆகியவை இரண்டுமோ, அதிகளவு கொண்டதாக இருக்கும். தினமும் சாப்பிடும் மாத்திரைகளை விட, இது வீரியம் நிறைந்தது. இதை தவிர, 12 மணி நேர இடைவெளியில் சாப்பிடக் கூடிய மாத்திரைகளும் உள்ளன.
கரு உருவாகிவிட்டால், இந்த மாத்திரைகள் பயன் தராது. கருக்கலைப்புக்கென உள்ள மாத்திரைகளை சாப்பிட வேண்டி இருக்கும். அவையும், கடைசி மாதவிடாய் நாளிலிருந்து 49 நாட்கள் வரை மட்டுமே பயன்படும். மேலே கூறப்பட்ட அனைத்துமே, மிகவும் அரிதாக பயன்படுத்தக் கூடியவையே. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல. தொடர்ந்து பயன்படுத்தினால், ஆரோக்கியம் கெட்டு விடும்.

ரகசியம் இப்போது தெரிகிறதல்லவா?


காலையில் எழும்போது தேநீருக்கு பதில் தேனும், சுடுநீரும், காலை உணவாக பாலில் ஊறிய அவல், காரட் மற்றும் துளசி, மதிய உணவாக இஞ்சி சூப்புடன், ஆவியில் வெந்த பச்சை காய்கறிகளுடன் சுட்ட சப்பாத்தி மற்றும் பருப்புக்கூட்டு, மாலையில் பாகற்காய் சூப் அல்லது எலுமிச்சை சர்பத், இரவில் முளைவிட்ட தானியங்களுடன் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, மாதுளை, அன்னாசி, திராட்சை பழக்கலவைகள் என, ஒருநாள் உணவில் இடையிடையே போதுமான அளவு, தண்ணீருடன் கூடிய இயற்கையான வாழ்க்கை எல்லோருக்கும் பிடிக்கக் கூடியது தான். ஆனால், பலவகையான பணி, மாறுபட்ட பழக்க வழக்கம், இயற்கை உணவு கிடைப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் வேகவைத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளின் ஆதிக்கம், நம் வாழ்க்கை சூழலை மாற்றியமைத்து விட்டது. இதனால், பல உணவுகள் தன் இயற்கை குணத்தை இழந்து விடுகின்றன. ஆனால், எளிதில் கிடைக்கக்கூடிய சில பழங்களில் கூட ஏராளமான இயற்கை ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. "சிட்ரஸ் மேக்சிமா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட, "ரூட்டேசியே' குடும்பத்தைச் சார்ந்த சுளைகள் உள்ள, பம்ப்ளிமாஸ் பழம் மட்டுமின்றி அனைத்து பாகங்களும் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளன.
பழச்சுளைகள் இதயத்தை வலுப்படுத்தி உடல் வீக்கத்தை குறைக்கும். இலைகள் நரம்பு மண்டலம் மற்றும் ரத்தக்குழாய் களை பாதுகாக்கும். வேர் மற்றும் பட்டைகளிலுள்ள கவமாரின்கள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பல வகையான ஒட்டுண்ணி கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடையன. பம்ப்ளிமாஸ் பழங்களை கழுவி, சாறெடுத்து, எட்டு பங்கு நீருடன் கலந்து, தேவையெனில் சர்க்கரை சேர்த்து குடித்துவர, உடல் குளிர்ச்சியடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கால் வீக்கம் வற்றும். எலுமிச்சம் பழத்தை ஜூஸ், ஊறுகாய், சாதம் செய்து சாப்பிடுவதை போல் பம்ப்ளிமாஸ் பழத்தையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பருமனும் குறையும்.
மதி, சென்னை: எனக்கு அடிக்கடி, வலது கை மற்றும் வலது காலில் உணர்ச்சி இல்லாதது போன்ற உணர்வு உள்ளது. இவ்வாறு இருப்பதால், வாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா என்று பயமாக உள்ளது. இதற்கு என்ன செய்வது?
கழுத்து மற்றும் இடுப்பு முள்ளெலும்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் ஏதேனும் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளின் செயல்பாடு குன்றலாம். அதுபோல அதிக கொழுப்புச்சத்து, அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைவு போன்ற காரணங்களால், மூளை செல்களுக்கு உயிர்காற்று பற்றாக்குறை ஏற்பட்டு இவ்வாறு தோன்றலாம். அமுக்கிரா சூரணம்-1 கிராம் தினமும் இரண்டு வேளை உணவுக்கு பின், பாலுடன் கலந்து சாப்பிடலாம். அத்துடன் எட்டி தைலம் அல்லது விஷமுஷ்டி தைலத்தை மரத்துப்போன பகுதி களில் தடவி, தேய்த்து வரலாம். கொழுப்பு மற்றும் வாயுவை அதிகரிக்கும் உணவுகளை யும், உப்பையும் உணவில் குறைத்துக் கொள்வது நல்லது.

அல்சரை தடுக்க உதவும் "மஞ்சள்'
ஆஸ்பிரின், இன்டோமெத்தசின் போன்ற வேதிப்பொருட்கள் வலி நீக்குவதற்காக தரப்படுகின்றன. குறிப்பாக ரத்த உறைவை தடுக்க ஆஸ்பிரினும், மிகைப்பட்ட யூரிக் அமிலத்தினால் தோன்றிய வலியை குறைக்க இன்டோமெத்தசினினும், நோயாளிகளால் நீண்ட காலம் எடுத்து கொள்ளப்படுகின்றன.இதனால் வயிற்றுப்புண்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க அல்சர் நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் தரப்படுகின்றன. இருந்தபோதிலும் பெரும்பாலானோருக்கு இரைப்பையில் புண்கள் தோன்றி, வலியும், ரத்தக்கசிவும் உண்டாகின்றன. ஆகையால் மேற்கண்ட மருந்தை உட்கொள்பவர்கள், உணவில் அதிகளவு மஞ்சள் சேர்த்து கொண்டால், அல்சர் வராமல் காத்து கொள்ளலாம் என, விஞ்ஞானிகள் தற்போதைய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். உணவுப் பாதையிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சின் மற்றும் உமிழ்நீர், பைகார்பனேட் போன்றவற்றின் சமன்பாட்டை சரி செய்து, இரைப்பையின் சளிச்சவ்வு படலத்தை பாதுகாக்கும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, வயிற்றில் அமில சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. மஞ்சளை பாரம்பரியமாக நமது உணவிலும், திருவிழாக்களிலும், வீட்டு விசேஷங்களிலும் நமது முன்னோர் பயன்படுத்தி வந்ததன் ரகசியம் இப்போது தெரிகிறதல்லவா?

இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்! *தென் ஆப்ரிக்கா அசத்தல்

டர்பன் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து திணறியது. வேகத்தில் மிரட்டிய தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் உள்ள கிங்ஸ்மிட் மைதானத்தில் நேற்று துவங்கியது. மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ரெய்னா நீக்கம்:
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காம்பிர், ரெய்னா, உனத்கட் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் முரளி விஜய், புஜாரா, ஜாகிர் கான் வாய்ப்பு பெற்றனர். தென் ஆப்ரிக்க அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

நிதான துவக்கம்:
இந்திய அணிக்கு சேவக், முரளி விஜய் ஜோடி துவக்கம் அளித்தது. மார்கல், டிசோட்சபே வீசிய ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்த சேவக் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இவர், 25 ரன்களுக்கு ஸ்டைன் வேகத்தில் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் முரளி விஜயும் (19) ஸ்டைன் பந்தில் வீழ்ந்தார்.
அனுபவம் ஏமாற்றம்:
பின் அனுபவ சச்சின், டிராவிட் ஜோடியும் ஏமாற்றியது. டிசோட்சபே வேகத்தில் சச்சின் (13) அவுட்டானார். அடுத்து வந்த லட்சுமணுடன் இணைந்த டிராவிட் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர், 25 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டைன் பந்தில் நடையை கட்டினார்.
லட்சுமண் பரிதாபம்:
ஓரளவுக்கு பொறுப்பாக ஆடிய லட்சுமண், ஸ்டைன் பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து அசத்தினார். இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஸ்டைன் பந்துவீச்சில் டிசோட்சபேயின் சூப்பர் "கேட்ச்சில்' லட்சுமண் (38) சிக்கினார்.
வெளிச்சமின்மை:
இளம் வீரர் புஜாரா (19) வாய்ப்பை வீணாக்கினார். இந்திய அணி 56 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் தோனி (20), ஹர்பஜன் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆம்லா "50'
நேற்று, தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா, தனது 50வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதன்மூலம் 50 டெஸ்டில் விளையாடிய 16வது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிசையில் காலிஸ் (144), பவுச்சர் (138) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா
சேவக் (கே)காலிஸ் (ப)ஸ்டைன் 25(32)
முரளிவிஜய் (கே)பவுச்சர் (ப)ஸ்டைன் 19(42)
டிராவிட் (கே)பவுச்சர் (ப)ஸ்டைன் 25(68)
சச்சின் (கே)காலிஸ் (ப)டிசோட்சபே 13(22)
லட்சுமண் (கே)டிசோட்சபே (ப)ஸ்டைன் 38(73)
புஜாரா (கே)பவுச்சர் (ப)டிசோட்சபே 19(45)
தோனி -அவுட் இல்லை- 20(31)
ஹர்பஜன் -அவுட் இல்லை- 15(25)
உதிரிகள் 9
மொத்தம் (56 ஓவரில், 6 விக்.,) 183
விக்கெட் வீழ்ச்சி: 1-43(சேவக்), 2-48(முரளிவிஜய்), 3-79(சச்சின்), 4-117(டிராவிட்), 5-130(லட்சுமண்), 6-156(புஜாரா)
பந்துவீச்சு: ஸ்டைன் 14-3-36-4, மார்கல் 15-2-60-0, டிசோட்சபே 11-3-40-2, காலிஸ் 8-2-18-0, ஹாரிஸ் 8-1-26-0.

கிரிக்கெட்டின் எதிர்காலம்...பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது


உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பரிமாணம்

கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற்றொன்று வீழ்ச்சி அடைய துவங்குகிறது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொய்வை எதிர் கொண் டுள்ளன.


காயம்காரணம்

கிரிக் கெட் என் றாலே டெஸ்ட் போட்டிகள் என்ற காலம் தற் போது மலையேறி விட்டது. வீரர்களின் உண்மையான திறமையை வெளிக் கொணரும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உண்டு. ஓவர்வரையறை இல்லாததால், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் திறமையை நிரூபிக்க அதிக காலம் எடுத்துக் கொள்வர். இதன் மூலம் பெரும்பாலான வீரர்கள் அடிக்கடி காயத்துக்கு உள்ளாயினர். அதற்குப் பின் வந்த ஒரு நாள் போட்டிகளில், 50 ஓவர்கள் என்ற வரையறை இருந்தது.தற்போது "டுவென்டி-20' போட்டிகளில் 20 ஓவர்மட்டுமே என்பதால், பவுலர்கள் தலா 4 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, இவ்வகைப் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள்காயத்திலிருந்து தப்ப முடிகிறது.

பணம் முக்கியம்

இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே பங்கேற்க விரும்புகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றார். இதற்கு முக்கிய காரணம் காயம் தான். காயம் தொடர்பான பிரச்னை ஒரு புறம் இருக்க, மற்றொரு முக்கிய காரணம் பணம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் பெறும் சம்பளம் சுமார் 2 லட்சம் ரூபாய். ஒரு நாள் போட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய். ஆனால் இந்தியன் பரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளிட்ட "டுவென்டி-20' போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களையும் புறக்கணித்து விட்டு, இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் விரும்புகின்றனர். கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் பெற்றார்.

நன்மை உண்டு

ஐ.பி.எல்., என்ற ஒரு அமைப்பு துவங்கியதற்கே, டெஸ்ட் போட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இங்கிலாந்து பிரிமியர் லீக் (இ.பி.எல்.,), அமெரிக்கன் பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) அமைப்புகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் கூடுதலாக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம்

பணம் மற்றும் காயத்தின் அடிப்படையில் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதே கருத்தை சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனும் தெரிவித்துள்ளார். வீரர்களின் மனநிலை மற்றுமின்றி ரசிகர்களின் மனநிலையும் மாறத் துவங்கி உள்ளது. டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தற்போது விரும்புவதில்லை. ஒரு போட்டியின் முடிவுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. 3 மணி நேரத்தில் முடிவு கிடைக்கும் டுவென்டி-20' போட்டிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே நிலைத்து இருக்கும். பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்.

மக்களை ஏமாற்றவேண்டாம்!

காங்.,கையும் மாட்டி விடுவாரோ, "ஸ்பெக்ட்ரம்' ராஜா?எம்.கோதண்டம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராக தயார்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இக்குழுவின் தலைவராக, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தான் உள்ளார். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று திரண்டு, "பார்லிமென்ட் கூட்டுக்குழு தான், ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க வேண்டும்' என, பிடிவாதமாக போராடி, சபையையே முடக்கி விட்டன.தலைமை தணிக்கையாளர் அறிக்கையை பரிசீலிப்பது தான், பொதுக் கணக்குக் குழுவின் வேலை. இக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் தர தயாராக உள்ள பிரதமரால், பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் ஆஜராவதில் என்ன சிக்கல்? மாவட்ட கோர்ட்டில், கூண்டில் ஏறி சாட்சி சொல்ல தயார் என்றால், ஐகோர்ட்டில் சாட்சி சொல்ல தவிர்ப்பது ஏன்?"ஊழலை ஒழித்தே தீர வேண்டும்' என, டில்லி புராரி காங்கிரஸ் மாநாட்டில், சோனியா கர்ஜித்துள்ளார். கோர்ட் கண்டித்துள்ள ஊழல் அமைச்சர்கள், கேபினட்டில் இருக்கின்றனரே! சுப்ரீம் கோர்ட், 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்த மகாராஷ்டிர விலாஸ்ராவ் தேஷ்முக், மத்திய தொழில் அமைச்சராக நீடிக்கிறாரே!இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில், வீரபத்ர சிங் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர், மத்திய உருக்கு அமைச்சராக பவனி வருகிறார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் திணறுகிறார். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விழிக்கிறார்.கூட்டணி நிர்பந்தம் காரணமாக, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது, சி.பி.ஐ., தாமதமாக பாய்ந்துள்ளது. ரொம்ப நெருக்கினால், ஆரியர் சூழ்ச்சி, இலங்கைத் தமிழர் என, "டிராக்' மாறுவார் கருணாநிதி. பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் ஆஜராக, ஸ்பெக்ட்ரம் கூட்டாளிகள் ஏன் தயங்குகின்றனர்? காங்கிரசையும், ராஜா மாட்டி விடுவார் என பயப்படுகின்றனரா?



மக்கள் விரோத போக்கு! ஜி.எஸ்.ராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, நடுத்தர மக்களை நசுக்கி வருவதைப் பார்த்துக் கொண்டு, அமைதியாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோதப் போக்கால், நடுத்தர மக்கள், நாதியற்ற நிலை யை அடைந்துள்ளனர்.மயக்கம் அடைய வைக்கும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு, ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கும் எரிபொருட்களின் விலை, கையைக் கடித்துக் கொண்டே இருக்கும் காஸ் விலை, இதரப் பொருட்களின் விலை மக்களை பொருமச் செய்து வருகிறது. கலக்கம் அடையச் செய்யும் கல்விச் செலவுகள், அதிர வைக்கும் ஆட்டோ கட்டணம், மிரள வைக்கும் மருத்துவச் செலவுகள், வாடகை முன் பணம், வாடகைச் செலவுகள் தொடர்ந்து எகிறி வரும் வேளையில், எதிர் நீச்சல் போட முடியாமல், நடுத்தர மக்கள் துவண்டு போய் விட்டனர். காய்கறி, பழம் மற்றும் பூக்களின் விலையோ, தாறுமாறாக எகிறி உள்ளதால், அவற்றை வாங்க முடியாமல், கண்ணால் கண்டு மட்டுமே இன்புற வேண்டும் என்ற நிலை தொடர்கிறது.வருமானவரி உட்பட அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தும் நடுத்தர மக்களை, நாக்குத் தள்ளச் செய்யும் விலைவாசி உயர்வு, மேலும் மேலும் நசுக்கி வருவதால், மக்கள் விரக்தியின் உச்சக்கட்டத்தில் உள்ளனர்.லஞ்சம் மற்றும் ஊழலின் மூலம், கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டும் அரசியல்வாதிகளுக்கு, விலைவாசி உயர்வைப் பற்றி கவலையே இல்லை.பைகளில் பணத்தைக் கொண்டு, மளிகைப் பொ ருட்களை மூட்டைகளில் வாங்கும் நிலை மாறி, மூட்டைகளில் பணத்தைக் கொண்டு சென்று, பைகளில் சாமான்கள் வாங்க வேண்டிய நிலைதான் தற்போது உள்ளது.


எப்படி, இப்படி பேசுகிறார்? வ.ப.நாராயணன், மடிப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "இன்னும் பத்து ஆண்டுகளுக்கு, பா.ஜ., ஆட்சிக்கு வராது' என ஆரூடம் கூறியிருக்கிறார், மத்திய அமைச்சர் சிதம்பரம். இப்போதே காங்கிரஸ் ஆட்டம் காண்பதை அவர் அறியவில்லையா அல்லது ஒரு தேறுதலுக்காகச் சொல்லிக் கொள்கிறாரா?ஒருபுறம், ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போன்ற மெகா ஊழல்களில் சிக்கித் தவிக்கிறது காங்கிரஸ். மறுபுறம், கடுமையான விலைவாசி உயர்வால், மத்திய அரசுக்கு, பொதுமக்களிடம் கெட்ட பெயர் உண்டாகி விட்டது. மத்திய அரசு மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.அதே சமயம், குஜராத்திலும், பீகாரிலும், காங்கிரசை அடியோடு சாய்த்து, ஆழமாக கால் ஊன்றிவிட்டது பா.ஜ., கர்நாடகத்தை தவிர, வேறு எந்த மாநிலத்திலும் பா.ஜ.,வுக்கு பாதிப்பில்லை. கட்காரி தலைமையில் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.கடந்த ஏழரை ஆண்டுகளாக மத்திய அரசு, சாதாரண மக்களுக்கு, பெரியதாக எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக, பயங்கரவாதமும், விலைவாசி உயர்வும் தான் மளமளவென பெருகி வருகின்றன. மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையை, மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.நிலைமை இவ்வாறிருக்க, சிதம்பரம் எந்த நம்பிக்கையில் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை.


மக்களை ஏமாற்றவேண்டாம்! ஆர்.சூரியநாராயணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: விஸ்வரூபம் எடுத்து வரும், "2ஜி' ஊழல் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா உதிர்த்த முத்துக்கள் இவை..."ஊழலுக்கு எதிராக போர் தொடக்க வேண்டும். ஊழலும், பேராசையும் நாட்டில் அதிகரிப்பது பெரும் அபாயங்கள். ஊழல் பற்றி போதனை செய்ய பா.ஜ.,வுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஊழலுக்கு உடந்தையாக பிரதமர் இருப்பதாக, பா.ஜ., கூறுவது கீழ்த்தரமானது. இதை ஏற்க முடியாது. பிரதமரின் நேர்மையையும், நாணயத்தையும் சந்தேகிப்பது வெட்கக் கேடானது...'பார்லிமென்ட் 23 நாட்கள் செயல்படாமல் இருந்தபோது, மவுனமாக இருந்த பிரதமர், ஜெர்மனியிலிருந்து இந்தியா திரும்பும் போது, விமானத்தில் செய்தியாளர்களிடம், "பார்லிமென்ட் 23 நாட்கள் முடக்கப்பட்டது சரியல்ல. ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி ஆகுமோ என்று கவலைப்படுகிறேன்' எனக் கூறியுள்ளார். மேலும், பொதுக் கணக்குக் குழுவின் முன் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க தயாராக உள்ள பிரதமர், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு தயங்குவது ஏன்? யாரை காப்பாற்ற? எதை மறைக்க? இதை, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பிரதமருக்கு இருக்கிறது.பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்தால், முழு அளவில் விசாரணை செய்ய முடியும். ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார், யார்? அதிகார துஷ்பிரயோகம் உள்ளதா என்பது தெரியும். எந்த உயர் பதவியில் இருப்பவரையும், சம்மன் செய்து விசாரிக்கலாம். லாபம் அடைந்தவர்கள் வெளிநாட்டில் இருந்தால், அவர்களையும் விசாரிக்கலாம். அவசியமானால், வெளிநாட்டுக்கும் சிறு குழுவை அனுப்பி விசாரிக்கலாம். ஆகையால், மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல், எதிர்க்கட்சிகளின் ஒரு மனதான பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க வேண்டும்.

மின் தடை எதிரொலி: அம்மி, ஆட்டுக்கல் விற்பனை அதிகரிப்பு

இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர். அதனால், சமீப காலமாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்கள் விற்பனைக்கு வந்ததால், பெண்கள் பல தலை முறையாக மசாலா, மாவு அரைக்க பயன்படுத்திய கல் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்றவற்றை புறக்கணித்தனர். நகர் புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பு, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற கல் சாதனங்களை வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மின் சாதங்களைப் பயன்படுத்தினர். கிராமத்தில் கூட கல் சாதனங்கள் பயன்பாடு குறைந்தது. அதனால், கல்லில் அம்மி, உரல் தயாரித்த தொழிலாளர் குடும்பத்தினர் பெரிதும் பாதித்தனர். இந்நிலையில், தமிழத்தில் கிராமம் முதல் நகரம் வரை தினமும் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மின் தடை நேரத்தில் சமையல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அப்போது மிக்சி, கிரைண்டர் போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த முடியாது என்பதால், மின் சாதனங்களுக்கு மாற்றாக தற்போது விற்பனைக்கு வந்துள்ள மினி கல் உரல்களை பெண்கள் உபயோகிக்க துவங்கியுள்ளனர். இரு ஆண்டாக மினி உரல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.



இது குறித்து மேட்டூரில் முகாமிட்டுள்ள கரூரை சேர்ந்த உரல், அம்மிக்கல் விற்பனையாளர்கள் கூறியதாவது: கிராமங்களில் மட்டுமே பெரிய அளவிலான உரல், அம்மி விற்பனையாகிறது. நகர் புறங்களில் விற்பனை குறைந்து விட்டால் தொழிலில் வருமானம் குறைந்து விட்டது. ஆனால், மின் தடை காரணமாக தற்போது எங்கள் தொழிலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. நகர் புறங்களில் அடுக்குமாடி கட்டடங்களில் வசிப்பவர்களும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும் பெரிதாக உள்ள அம்மி, ஆட்டுக்கல்லை வீட்டில் வைக்க முடியாது. எனவே, அவர்கள் உபயோகப்படுத்தும் அளவில் சிறிய அளவிலான உரலை உருவாக்கி விற்பனை செய்தோம். இந்த உரல்களுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மின் தடை நேரத்தில் இஞ்சி, பூண்டு, வத்தல் போன்ற மசாலா பொருட்களை இடித்து இன்ஸ்டண்ட் சாம்பார், ரசம் போன்றவை தயார் செய்வதற்காக மினி உரலை பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். ஒரு உரல் 150 முதல் 250 ரூபாய் வரை விற்கிறோம். மின் தடை காரணமாக அழிந்து வந்த, எங்கள் தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. நகர் புறங்களில் நாள் ஒன்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட மினி உரல்கள் விற்பனையாகி விடுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து பெண் சாதனை

புதுச்சேரி வில்லியனூரில் வசிப்பவர் ராணி (38). இவர், குளோபல் உலக சாதனைக்காக, தண்ணீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சாதனை செய்யும் நிகழ்ச்சியை @மற்கொண்டார். வில்லியனூர் அருகேயுள்ள பத்துக்கண்ணு சம்பூர்ணா"போகோ லேண்ட்' நீச்சல் குளத்தில், இந்த நிகழ்ச்சியை முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.காலை 10 மணிக்கு தண்ணீரில் நடக்க ஆரம்பித்த ராணி, மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சியை முடித்தார். தலை மட்டும் தண்ணீருக்கு வெளியில் தெரிந்தவாறு, கால்கள் தரையில் படாத வகையிலும் நீச்சல் அடிக்காமலும் நடந்ததை பலர் வியப்புடன் பார்த்தனர்.


இது குறித்து ராணி கூறுகையில் "நீச்சல் தெரியாத பலர் தண்ணீரில் மூழ்கி இறந்து விடுகின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீரில் மூன்று மணி நேரம் நடப்பதற்காக, கடந்த மூன்று தினங்களாக பயிற்சி பெற்றேன். இந்த பயிற்சி எனக்கு வெற்றியை தேடித் தந்தது. சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த விஷயத்திலும் வெற்றி பெற முடியும்' என்றார்.

ஐஸ்வர்யா ராய் சம்பளம் ரூ.10 கோடி

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் வாங்கப் போகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் பாபி புஷ்கர்ணா பேஜ் 3 என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றவர். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கும் பாபி, புதிதாக தயாரிக்கவுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராயை நாயகியாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இதற்காக ஐஸ்வர்யாவுக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வழங்க முன்வந்திருக்கிறாராம். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘2008ம் ஆண்டு ஜோதா அக்பர் படம் வெளியானது. அந்த படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் படம் எதுவும் வெளியாகவில்லை. எனது அடுத்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயின் சம்மதத்தை கேட்டிருக்கிறேன். இதற்காக அவருக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் பேசியிருக்கிறேன். அவர் எனக்கு இன்னமும் கால்ஷீட் தரவில்லை. அவரது கால்ஷீட் கிடைக்காவிட்டால் அந்த படத்தையே எடுக்க மாட்‌டேன், என்றார்.

ஐஸ்வர்யா ராய்க்கு கா‌சநோய்?!



பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு காசநோய் என்று வெளியான செய்தியை அவரது மாமனார் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயக்கும் - அமிதாப் பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை இல்லை. 37 வயதிலும் 20 வயது ‌இளம்பெண்ணைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை இல்லாதது குறித்து மும்பை பத்திரிகையொன்றில் செய்தி வெளியானது. அதில், ஐஸ்வர்யாவுக்கு டியூபர்குளோஸிஸ் (டி.பி.) எனப்படும் காச நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்தான் தாய்மைப் பேறு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும் அந்த செய்தி கூறியது.


இச்செய்திக்கு ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்தியை பார்த்து நான் கடும் கோபமடைந்துள்ளேன். அதில் உள்ள ஒரு வரி கூட உண்மையானதில்லை. அத்தனையும் பொய். நான் எனது குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா ராய் பற்றி யாரேனும் அவதூறாக பேசினால் எனது இறுதி மூச்சு வரை அதை எதிர்த்து நான் போராடுவேன். எனது வீட்டில் உள்ள ஆண்களைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள். என்னைப் பற்றிப் பேசுங்கள், எனது மகனைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் எனது வீட்டுப் பெண்கள் பற்றி யாராவது தவறாகப் பேசினால் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன், என்று அமிதாப் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்!


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன், ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் புதிய படம் குஸாரிஷ். வருகிற 19ம்‌தேதி ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் புகை பிடிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். படத்தின் விளம்பர போஸ்டர்களிலும் ஐஸ்வர்யா ராய் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு கண்டனம் தெரிவித்து மகளிர் அமைப்புகள் போராட்ட களத்தில் குதித்துள்ளன. சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் அந்த அமைப்புகள், இதுபோன்ற காட்சி திரைப்படத்தில் வருவதன் மூலம் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளன.


இதுபற்றி நடிகை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ள பேட்டியில், அந்தக் காட்சியை நான் எடுக்கவில்லை. எனவே அதை நீக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. காட்சி நீக்கப்படுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது. நான் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் அல்ல. படத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்தேன். உண்மையில் புகை பிடிப்பது என்பது மிகவும் கொடுமையானது. அந்தக் காட்சிக்காக புகை பிடித்தபோது இருமல் வந்து விட்டது. அந்த புகையைக் கண்ட பின்னர், இனிமேல் புகை பிடிப்பவர்கள் பக்கத்தில் கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன், என்று கூறியுள்ளார்.

உடையிழந்தார் ஐஸ்வர்யா ராய்

ென்னை வந்த முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தான் கொண்டு வந்த சூட்கேசை தொலைத்து விட்டு, மாற்று ஆடை இல்லாமல் தவித்தார். சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் டில்லியில் இருந்து சென்னை வந்தார் ஐஸ்வர்யா ராய். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், தனது சூட்கேசை தொலைத்து விட்டார். அவர் ‌பங்கேற்க வேண்டி நிகழ்ச்சிக்கு நேரம் ஆகி விட்டதால் என்ன செய்வதென்று தவித்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அணிவதற்காக தான் கொண்டு வந்த ஆடையும் காணாமல் போன சூட்கேஸில்தான் இருக்கிறது என தெரிவித்த அவர், உடனடியாக வேறு ஆடை கொண்டு வருமாறு தெரிவித்தார்.

இதையடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஐஸ்வர்யா ராய்க்கு எடுப்பாக இருக்கும் வகையிலும், மிடுக்கான தோற்றத்தை தரும் வகையிலும் உடையை தேர்வு செய்ய வேண்டும் என்ற டென்ஷனுடன் அவசரமாக டிரஸ் வாங்கப்பட்டது. ஒரு வழியாக புது டிரஸ் போட்டு கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தார் அம்மனி. ஆ... ஐஸ்வர்யா என்ன அழகுப்பா... என வழக்கம் போல் எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். பாருங்களேன் அவசரமாக வாங்கின ஆயத்த ஆடை கூட அழகான ஐஸ் போட்டுக் கொண்டதால், அட சூப்பர் டிரஸ் என்று சபாஷை பெற்றுவிட்டது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இத்தனை கலேபரமும் முடிந்த பிறகு அவர் வந்த ஏர்லைன்ஸ் நிறுவனம், ஐஸ்வர்யா ராயை தொடர்பு கொண்ட, உங்கள் லக்கேஜ் கிடைத்து விட்டது, சாரி பார் தி இன்-கன்வீனியன்ஸ் என்று கூலாக சொன்னது என்பது கூடுதல் தகவல்.

2010ம் ஆண்டின் சிறந்த மனிதனாக பேஸ்புக் நிறுவனர்

ஆங்கில இதழான டைம், ஆண்டு தோறும், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும். இந்த ஆண்டில், இந்த பத்திரிக்கை, சிறந்த மனிதராக, பேஸ்புக் நிறுவ னரான மார்க் ஸக்கர்பெர்க் கினை அறிவித்துள்ளது. இவர் உலகில் வாழும் மிக இளவயது கோடீஸவரர்களில் ஒருவர். டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்து அறிவிக்கப் பட்ட ஆண்டின் சிறந்த மனிதர்களில், 1927 ஆம் ஆண்டிற்குப் பின் அறிவிக்கப்பட்டவர்களில் மிகக் குறைந்த வயதுடையவரும் இவரே. பிரிட்டன் மகாராணி எலிசபெத் இதே போல 1952 ஆம் ஆண்டில் அறிவிக்கப் படுகையில் இளவயது டையவராகவே இருந்தார். ஆனால், ஸக்கர் பெர்க் அவரைக் காட்டிலும் வயதில் இரண்டு வாரங்கள் குறைவாகவே உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டைம் இதழ், மனித சமுதாயப் பண்பாட்டில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியவருக்கு இந்தப் பெருமையை ஆண்டு தோறும் தருகிறது.
சமுதாயத்தின் மீதான இந்த தாக்கம், நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். 2007 ஆம் ஆண்டில் ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புட்டின், 2008 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா இந்தப் பெருமையைப் பெற்றனர். நாம் அனைவரும் நம் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதில் மாற்றங் களைக் கொண்டு வந்தவர் என்று மார்க் ஸக்கர் பெர்க்கினைப் பாராட்டியுள்ளது டைம் இதழ். ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில், தன் 19 ஆவது வயதில், பேஸ்புக் இணைய திட்டத்தினை ஸக்கர் பெர்க் தொடங்கினார். இன் றைக்கு ஏறத்தாழ 55 கோடி மக்களைக் கொண்டதாக பேஸ்புக் இயங்கி வருகிறது. ஸக்கர் பெர்க் இந்த பாராட் டினைத் தன்னுடன் பணியாற்றும் சிறிய குழுவினருக்கு சமர்ப்பித்துள்ளார். இந்த குழுவின் உழைப்புதான், உலகை விரியவைத்து, பல கோடி மக் களை இணைத்துள்ளது என்றும் கூறி உள்ளார். இதில் ஒரு பகுதியாகத் தான் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸக்கர் பெர்க்கின் தயாள குணமும் இந்த பெருமையை அடைவதற்கு வழி வகுத்திருக்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூ ஜெர்ஸி பள்ளி இயக்கத்திற்கு, ஐந்து ஆண்டு காலத்தில், 10 கோடி டாலர் தருவ தாக வாக்களித்து வழங்கினார்.

2010ல் முடங்கிப் போன சேவை தளங்கள்

அவ்வப்போது இணையத்தில், சில சேவைத் தளங்கள் மிகப் பிரமாதமாக, புதிய கோணங்களில் மக்களுக்கு வசதிகளைத் தருவதற்காகத் தொடங்கப்படும். பல மக்களிடையே பிரபலமாகி வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கும். சில தளங்கள், தொடர்ந்து ஆதரவு இல்லாத நிலையில் முடங்கிப் போகும். அது போல 2010 ஆம் ஆண்டில் இயக்கத்தை நிறுத்திய சில தளங்களை இங்கு காணலாம். இந்த தளங்களில் சில அவற்றின் பெயரைக் கேட்டவுடனேயே உங்கள் மனதில் அவை என்ன மாதிரியான சேவைக்குத் தொடங்கப்பட்டன என்று தெரிய வரும். சில தளங்கள் ஆரம்பிக்கப்பட்டனவா என்ற கேள்வியை உங்கள் மனதில் தோற்றுவிக்கும். இங்கு தரப்பட்டுள்ள தளங்கள் குறித்து எண்ணிப் பாருங்கள். 1. கூகுள் வேவ் மற்றும் பஸ்: 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் வேவ் (Wave) என்று ஒரு சேவையைத் தொடங்கியது. இந்த தளம் இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் அல்லது வேர்ட் ப்ராசசர் என எந்த வகைக்கும் உள்ளாக வரவில்லை. ஆனால் இந்த வசதிகள் அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு ஸ்வீட் கொழுக்கட்டையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதனைப் பயன்படுத்தியவர்கள், இதன் செயல் தன்மை புரிபடாமல் தலையைப் பிய்த்துக் கொண்டனர். அடுத்து ஒரு ஆண்டுக்குப் பின் கூகுள் பஸ் (Buzz) என்று இன்னொரு வசதியைத் தொடங்கியது. இது ஜிமெயிலின் இணைந்த பகுதியாய் ஆக்கப்பட்டது. பின்னர் இது நீக்கப்பட்டது. கூகுள் அமைத்த வேவ் இன்னும் மூடப்படவில்லை. இதனை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி இருந்தால், இப்போதும் சென்று பழைய தகவல்களைப் பெறலாம். ஆனால் ஆதத்த் வசதி எடுக்கப்பட்டது.

2. கூல் (Cuil) இணைய தேடுதளம்: இந்த கூல் தளம் குறித்து கம்ப்யூட்டர் மலரில் பெரிதாக எழுதி இருந்தோம். இந்த தளத்தை அமைத்தவர்களும், உலகையே மாற்றும் தேடுதல் தளம் என்று இதனை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் எதனையும் மாற்றவில்லை. இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலர் இந்த தளத்தை முற்றுகை இட்டதால், அதன் சர்வர் திணறியது. அப்போது இந்த தேடுதல் தளம் தானாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவறுதலான முடிவுகளைத் தரத் தொடங்கியது. அறிமுகத்திற்கு முன்னால், இது குறித்து கூல் தளத்தை அமைத்தவர்கள் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தனர். 12,000 கோடி இணைய தளங்கள் இதனுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கூகுள் 4,000 தளங்களைத்தான் இன்டெக்ஸ் செய்து வைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் கூல் தேடுதளம், தளங்களின் பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதாக அறிவித்தது. கூடுதலாக சார்ந்த தளங்களின் பட்டியலையும் தருவதாகக் கூறியது. ஆனால் எந்த அறிவிப்பும் இன்றி ஒருநாள் கூல் தேடுதல் தளம் மூடப்பட்டது.
3. பேஸ் புக் லைட் (Facebook Lite): 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் பேஸ்புக் தளத்தின் சிறிய அளவிலான சுருக்குத் தளமாக பேஸ்புக் லைட் அறிமுகமானது. இதன் மூலம் வேகம் குறைந்து செயல்படும் இணைய இணைப்பில், வேகமாக பேஸ்புக் தளத்தைக் கையாள முடியும் என பேஸ்புக் திட்டமிட்டது. lite.facebook.com என்ற தளம் உருவாக்கப்பட்டது. இந்த தளம் சென்றவர்கள், இதில் விளம்பரங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த சேவையும் தளமும் அடுத்த சில மாதங்களிலேயே எந்தவித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது.
4. விண்டோஸ் லைவ் ஸ்பேஸ்: கூகுள் நிறுவனத்தின் வேவ் போல, மைக்ரோசாப்ட் வழங்கிய லைவ் ஸ்பேஸ் வசதியும் இன்னும் மூடப்படவில்லை. ஆனால், அடுத்த மாதம் முதல் இந்த தளத்தில் உள்ள செய்திகளைப் பார்க்கலாம்; புதியதாக எதனையும் இணைக்க முடியாது. இதற்குப் பதிலாக, மைக்ரோசாப்ட் வேர்ட் ப்ரெஸ் தளத்திற்குத் தன் பதிவாளர்களை மாற்றிக் கொள்ளச் செய்தது. மேலே காட்டப்பட்டுள்ள தளங்களைப் போல, பல இணைய சேவைத் தளங்கள் 2010 ஆம் ஆண்டில் மூடப்பட்டன. ஆனால் அவை மக்களிடம் அவ்வளவாகப் பிரபலமாகத தளங்கள் என்பதால், இங்கு குறிப்பிடப்படவில்லை.

யு-ட்யூப் பெற்ற புதிய தள முகம்

இணையத்தில் மிக அதிக அளவில் வீடியோ சேவையினை வழங்கி வரும் தள நிறுவனப் பிரிவுகளில் யு-ட்யூப் இணைய தளம், எப்போதும் முதல் இடத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இரண்டு கோடிக்கும் மேலான வீடியோக்களை தினந் தோறும் மக்களுக்குக் காட்டி வருகிறது. ஆனால் அதன் இணைய தளத்தின் முகப்புத் தோற்றம், எந்தவிதக் கூடுதல் அலங்காரமின்றி மிகச் சாதாரணமாகவே இருந்து வருகிறது. ஆனால் சென்ற வாரத்தில் இருந்து, யு-ட்யூப் இணைய தளம், பல புதிய சிறப்புகளைத் தன் முகப்பு பக்கத்தில் ஏற்றி சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சங்களை இங்கு காணலாம்.
1.இணைந்த பட்டியல் (Combined List): உங்களுடைய பதிவு, நண்பர்கள் செயல்பாடு, இவை சார்ந்த குறிப்புகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த பட்டியலாகத் தரப்படுகிறது.
2. எதனையும் மிஸ் செய்திடாமல்: சேனல் ஒன்று நான்கு வீடியோக்களை ஒரு நாளில் அப்லோட் செய்தால், இறுதியாக அப்லோட் செய்தது மட்டும் காட்டப்படாமல், அன்று அப்லோட் செய்யப்பட்டதை மட்டும் காட்டாமல், அனைத்தையும் காட்டிடும்.
3. எளிதான நீக்கம்: நீங்கள் விரும்பாத வீடியோ எதன் மீதாவது, கர்சரைக் கொண்டு சென்று, உடன் எக்ஸ் அழுத்தினால், அது உடனடியாக நீக்கப்படும்.

4. பார்த்தவற்றில் குறியீடு: ஏற்கனவே பார்த்த வீடியோக்கள் தலைப்பு, கிரே வண்ணத்தில் காட்டப்படும். இதன் மூலம் பார்த்த வீடியோக்களை நீக்க நீங்கள் தேட வேண்டியதில்லை.
5. மீண்டும் காண உதவி: நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்த வீடியோக்க<ள் மற்றும் நீங்கள் பிரியமானவை எனக் குறித்து வைத்த வீடியோக்களின் பட்டியல் இணைக்கப்படுகிறது. இதிலிருந்து நீங்கள் அடிக்கடிக் காண விரும்பும் வீடியோக்களை எளிதில் பிக் அப் செய்திடலாம்.
6. இன்பாக்ஸ் எளிது: உங்கள் இன்பாக்ஸுக்கான தொடர்புகள் (Links) முன்னாலும் நடுவிலும் வைக்கப்பட்டுள்ளன.
7. பழையன மீண்டும் கொண்டு வர: நீங்கள் வெகு காலம் முன்பு பார்த்த வீடியோக்களை முகப்பு தளத்திலிருந்தவாறே பெற்று ரசிக்க அனைத்து வசதிகளும் புதியதாகத் தரப்பட்டுள்ளன.
எப்படிச் செல்வது? இந்த புதிய கோலம் கொண்டுள்ள முகப்பு பக்கத்திற்கு எப்படிச் செல்வது? இந்த புதிய முகப்பு பக்கம் உங்கள் தனிப்பட்ட அனுபவத்திற்குச் செறிவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தளத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புதிய முகப்பு பக்கம் கிடைக்கும். அல்லது இப்போது பதிந்து செல்ல வேண்டும். யு-ட்யூப் தளம் சென்றவுடன் “Try a different homepage” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும். இது உங்களை இன்னொரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கு உங்கள் பதிவினைக் காட்டினால், புதிய முகப்பு பக்கம் தரப்பட்டு, நீங்கள் பயன்படுத்தக் கிடைக்கும். நீங்கள் லாக் இன் செய்திடாமல் இதனைக் காண வேண்டும் எனில் http://www.youtube.com/homepage_experiment என்ற முகவரிக்குச் செல்லவும். ஆனால் புதிய முகப்பு பக்கத்தின் அனைத்து அம்சங்களையும் காண முடியாது.

விண்டோஸ் 7 சிஸ்டம் வெற்றி தொடருமா ?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து ஏறத்தாழ 90% கம்ப்யூட்டர்களைக் கொண்டுள்ளது. இதன் பங்கினைக் கைக்கொள்ள வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினாலும் இயலவில்லை. குறிப்பாக, விண்டோஸ் 7 மைக்ரோசாப்ட் இடத்தை நன்கு உறுதியாக்கிவிட்டது. ஆனால், இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அடிப்படை இயக்கத்தில் வேறு முறையைப் பின்பற்றினாலும், மைக்ரோசாப்ட் இயக்கத்திற்குச் சரியான போட்டியை வரும் ஆண்டில் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், மிகப் பிரமாதமாக மக்களை அடைந்தது. 24 கோடி பதிவுகள் விற்பனையாயின. மைக்ரோ சாப்ட் நிறுவனம் வெளியிட்ட ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் விற்பனையில் மிக வேகமாக விற்பனை செய்யப்பட்ட சிஸ்டம் இதுவென இடம் பெற்றது. ஒரு நிலையில் விநாடிக்கு 7 பதிவுகள் விற்பனையாயின. கூகுள் நிறுவனத்தின் குரோம் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் சில வாரங்களுக்கு முன் சோதனை முயற்சியாக, நெட்புக் கம்ப்யூட்டர்களுடன் வெளியிடப் பட்டது. அடிப்படையில் இது விண் டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டது.
இணைய செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது. கூகுள் டாக்ஸ் போன்ற இணைய அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டது. குரோம் ஓ.எஸ். உள்ள நெட்புக் இயக்கப்பட்டவுடன், அது இணையத்துடன் இணைக்கப் படும். நெட்புக் கம்ப்யூட்டரில் எந்த அப்ளிகேஷன் புரோகிராமும் பதியத் தேவை இல்லை. கூகுள் அல்லது வேறு நிறுவனங்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தரும் அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இந்த போட்டியின் முடிவு வரும் 2011ல் தெரிந்துவிடும். சில வல்லுநர்கள், குரோம் ஓ.எஸ். நெட்புக் கம்ப்யூட்டர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருத்து தெரிவிக்கின்றனர். 2014 வரை பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடும் வளர்ச்சியும் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். பெர்சனல் கம்ப்யூட்டர்களின் எண் ணிக்கை 29.9 கோடி என்ற நிலையிலிருந்து 59 கோடியாக உயரும் என்று கணித்துள்ளனர். பெர்சனல் கம்ப் யூட்டர் பயன்பாட்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 91% பங்கெடுத்துள்ளது என்றும், இது 2014ல் 1% மட்டுமே குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேக் சிஸ்டம் 1% உயர்ந்து 5% பங்கினைக் கொள்ளலாம். லினக்ஸ் அதே 4% ல் இருக்கும்.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏற்கனவே ஒரு வகைக்குக் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்குப் பழக்கப்பட்ட மக்களை மாறச் செய்வதில் வெற்றி அடைய முடியாது என்று பலரும் கருதுகின்றனர். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க, அந்த கம்ப்யூட்டர் எப்போதும் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். மேலும், உருவாக்கப்படும் பைல்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பதியப்பட மாட்டாது. மாறாக, கிளவ்ட் கம்ப்யூட்டிங் அடிப்படையில் இணைய சர்வர்களில் பதியப்படும். இந்த மாற்றத்தினை மக்கள் ஏற்றுக் கொள்வது சிரமம் என்று கருத்து பரவலாக உள்ளது. இன்னொரு வகையிலும் விண்டோஸ் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளப்போராட வேன்டியதிருக்கும். அடுத்த போட்டியாளர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவத்தில் இல்லாமல், சாதன வடிவத்தில் இருக்கும். பெர்சனல் கம்ப்யூட்டர் இடத்தைக் கைப்பற்றும் வகையில் டேப்ளட் பிசிக்கள் பயன்பாடு பெருகும். 2014 ஆம் ஆண்டில் நிச்சயமாய் 10% பெர்சனல் கம்ப்யூட்டர்கள் டேப்ளட் பிசியால் தங்கள் இடத்தை இழக்கும். ஆனால் மைக்ரோசாப்ட் இது குறித்து கவலை தெரிவிக்கவில்லை. மக்கள் டேப்ளட் பிசிக்களை, இப்போது பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுடன் கூடுதலாகப் பயன்படுத்துவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் டேப்ளட் பிசி சந்தையிலும் தன் பங்கினைக் கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும், டேப்ளட் பிசி சந்தை, பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையுடன் ஒப்பிடுகையில் மிக மிகச் சிறியது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. வரும் ஆண்டு தான் இதற்குப் பதில் கூற வேண்டும்.

வேர்ட் ப்ராசசர், விண்டோஸ் எக்ஸ்பி, இமெயில், பிரவுசர் மினி டிப்ஸ்

வாசகர்களுக்காக டிப்ஸ் எழுத பலவகையில் குறிப்புகளை எடுத்து வைப்பது உண்டு. அவற்றில் சிலவற்றை அண்மையில் படிக்க நேர்ந்தது. சின்ன சின்ன டிப்ஸ்கள் சிலவற்றை எழுதாமலேயே விட்டுவிட்ட மாதிரி தோன்றியது. பல டிப்ஸ்கள் முக்கியமாக அடிக்கடி நினைவு படுத்த வேண்டியவை என்ற குறிப்புடன் இருந்தன. அவை இதோ இங்கே. இவை வேர்ட் ப்ராசசர், விண்டோஸ் எக்ஸ்பி, இமெயில், பிரவுசர் எனப் பல வகைகளில் இருந்தன. விண்டோஸ் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டிருந்தாலும், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்கள் பயன்படுத்துவோருக்கும் இது உதவலாம். பயன்படுத்திப் பார்க்கவும்.

1. வேர்டில் தேடல்: மைக்ரோசாப்ட் வேர்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு பைல் ஒன்றைத் திறக்க எண்ணுகிறீர்கள். ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லை. உடனே வேர்ட் தொகுப்பை மினிமைஸ் செய்துவிட்டு, எக்ஸ்புளோரர் சென்று அல்லது ஸ்டார்ட் மெனு சென்று தேடல் கட்டத்தில், பைலின் பெயரை அல்லது டெக்ஸ்ட்டில் ஒரு சொல்லை டைப் செய்து தேட முயற்சிப்பீர்கள். இது தேவையில்லை. வேர்ட் தொகுப்புக்குள்ளாகவே பைல் தேடும்
வேலையை மேற்கொள்ளலாம். வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் File மெனு செல்லவும். அதில் விரியும் பட்டியலில் Open என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது பல பைல்களுடன் ஒரு பெட்டி தோன்றுகிறதா! இதன் வலது மேல் மூலைக்குச் செல்லவும். இங்கு Tools என்று இருக்கும் இடத்தில் உள்ள கீழாக உள்ள அம்புக் குறியில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதன் மேலாக Search என்று காட்டப்படுவதைப் பார்க்கலாம். அதில் கிளிக் செய்தால், தேடல் கட்டம் திறக்கப்படும். இங்கு நீங்கள் தேட வேண்டிய பைல் குறித்து டெக்ஸ்ட் அமைத்து தேடலாம்.
2. வேகத் தேடல் ஷார்ட் கட்: விண்டோஸ் (Windows) கீயை அழுத்திக் கொண்டு F கீயை அழுத்தவும். உடன் பைல் தேடும் கட்டம் கிடைக்கும்.
3. விண்டோஸ் எக்ஸ்புளோரர் பெற: விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு உ கீயை அழுத்தவும்.
4. எக்ஸ்பியில் தேட இன்னொரு வழி: உங்களுக்குத் தெரியுமா! எதனையாவது தேட வேண்டும் என்றால், ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்தால், மெனு ஒன்று எழுந்து வரும். அதில் Search என்ற தேடல் கட்டம் தர பிரிவு ஒன்று இருக்கும். அங்கு கிளிக் செய்து தேடலாம்.
5.இணைச் சொல் பெற: வேர்டில் டைப் செய்து கொண்டிருக்கையில், சொல் ஒன்றுக்கான இணையான பொருள் தரும் சொல் (synonym) தேவையா? வேர்ட் தொகுப்பை மூடி, இணையம் எல்லாம் செல்ல வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த சொல்லுக்கு இணையான பொருள் தரும் சொல் தேடுகிறீர்களோ, அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஷிப்ட் + எப் 7 (Shift +F7) அழுத்தவும். எழுந்து வரும் மெனுவில் synonym என்று இருக்கும். அதில் லெப்ட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் உள்ள சொற்களைப் பார்த்து எது உங்கள் தேடலுக்குச் சரியாக இருக்கும் எனக் காணவும். அருகே உள்ள படத்தில் word என்ற சொல்லுக்கான இணைச் சொல் தேடுகையில் கிடைக்கும் சொற்கள் அடங்கிய மெனுவினைக் காண்கிறீர்கள். இந்த தேடலில் இன்னொரு வழியும் உண்டு. வேர்ட் டாகுமெண்ட்டில் எந்த சொல்லுக்கு இணைப் பொருள் தரும் சொல் வேண்டுமோ, அதனை ரைட் கிளிக் செய்து, மெனு ஒன்று கிடைப்பதனைப் பார்க்கலாம். அதில் synonym என்ற பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்தாலும் மேலே சொன்ன கட்டம் கிடைக்கும். அல்லது சொல்லை ஹைலைட் செய்துவிட்டு F7 கீயை அழுத்தவும்.
6. ஒவ்வொரு முறையும் பிரியமான எழுத்து வகையில்: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கையில் புதிய பைல் ஒன்று திறக்கையில், ஏற்கனவே அங்கு மாறா நிலையில் உள்ள எழுத்து வகை (“default”) தான் கிடைக்கும். இதனை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். உங்களுக்கென ஒரு எழுத்துவகை சிறப்பாகத் தெரிவதாக நீங்கள் உணரலாம். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துவகையினை நீங்கள் பயன்படுத்த ஆசைப்படலாம். இவற்றை டாகுமெண்ட்டுக்கான புதிய பைல் திறக்கையிலேயே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும். புதிய டாகுமெண்ட்டுக்கான பைல் திறந்தவுடன், மெனு பார் சென்று அதில் Format என்பதில் லெப்ட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Font என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கட்டத்தில் உங்களுக்குப் பிரியமான எழுத்து வகையினைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் கீழாக இடது புறம் உள்ள Default பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், இதுதான் உங்களுக்குப் பிடித்த எழுத்து வகையா? இதனைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் டெம்ப்ளேட் எல்லாம் மாறிவிடும் என்றெல்லாம் பயமுறுத்துகிற மாதிரி செய்தி எல்லாம் தரும். கவலையே படாமல் Yes என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் வழக்கம்போல ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த எழுத்துவகைதான் ஒவ்வொரு முறை நீங்கள் வேர்ட் டாகுமெண்ட்டைத் திறக்கும் போது மாறாநிலையில் கிடைக்கும். பின் இந்த எழுத்து வகையும் சலித்துப் போய்விட்டால், அல்லது புதிய ஒரு எழுத்துவகை பிடித்துப் போய்விட்டால், மேலே சொன்னபடி சென்று புதிய எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மாறா நிலைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
7. ஹார்ட் ட்ரைவ் ஒரே கீயில்: உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பிரிவுகளை, அல்லது உள்ளே உள்ள விஷயங்களைக் காண பல படிகளில் சென்று பார்க்க வேண்டாம். ஒரே கீயில் அவற்றைக் கொண்டு வரும் மந்திரத்தை உங்கள் விரல்களில் கொள்ளலாம். ஸ்டார்ட் பட்டன் அழுத்தி வரும் கட்டங்களில் கீதண என்ற கட்டத்தைக் காணவும். இது காட்டப்படவில்லை என்றால், விண்டோஸ் கீயுடன் கீ கீயினை (Win+கீ)அழுத்தவும். இந்த கட்டத்தில் பின்புறமாக சாய்ந்து நிற்கும் பேக்ஸ்லாஷ் கோட்டினை (\) அமைத்து என்டர் தட்டவும். பேக் ஸ்பேஸ் கீக்கு கீழாக இந்த கீ இருக்கும். பைல்களைக் காட்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ காட்டப்படும். இங்கு உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் காணலாம்.
8.டெக்ஸ்ட் மாற்ற ஒரு ஷார்ட்கட் கீ: வேர்டில் உள்ள டாகுமெண்ட்டில், ஒரு முழுச் சொல்லை அல்லது டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியில் உள்ள சொற்களில் முதல் சொல்லின் முதல் எழுத்தை மட்டும் பெரிய கேபிடல் லெட்டராக மாற்ற வேண்டுமா? அல்லது அனைத்து சொற்களையும் கேபிடல் லெட்டர்களில் மாற்ற வேண்டுமா? எந்த சொல்லில் மாற்ற வேண்டுமோ, அல்லது சொற்களில் மாற்ற வேண்டுமோ, அந்த சொல்லின் முன்னால் கர்சரைக் கொண்டு செல்லவும்.
பின்னர் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு எப்3 கீயை அழுத்தவும். கர்சரை அடுத்து உள்ள சொல்லின் முதல் எழுத்து கேபிடல் எழுத்தாக மாறுவதனைக் காணலாம். அடுத்து மீண்டும் எப்3 கீயை அழுத்த அனைத்து எழுத்துக்களும் கேபிடல் எழுத்துக்களாக மாறுவதனைக் காணலாம். பல சொற்களைத் தேர்ந்தெடுக்கையில், முதல் சொல்லின் முதல் எழுத்து மட்டும் கேபிடல் எழுத்தாக மாறும். அடுத்த அழுத்தலில் அனைத்து சொற்களின் எழுத்துக்களும் கேபிடல் எழுத்துக்களாக மாறுவதனைக் காணலாம்.
9.போல்டர் விரிந்து கொடுக்க: பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர்களைத் திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது. அவ்வாறின்றி, ஒரே கீ அழுத்தலில் அனைத்து போல்டர்களும் திறக்கப்பட்டால், நமக்கு வேலை மிச்சம் தானே.
இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இடது பக்கம் உள்ள பிரிவில் உங்கள் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் நியூமெரிக் கீ பேடில் உள்ள ஆஸ்டெரிஸ்க் கீயினை (*) அழுத்தவும். அவ்வளவுதான். போல்டர்கள் மற்றும் துணை போல்டர்கள் அனைத்தும் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். உங்கள் ட்ரைவில் அதிக போல்டர்கள் இருந்தால், இதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். சற்றுப் பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும்.
10.நெட்வொர்க் இணைக்க எளிதான வழி: நெட்வொர்க்கிங் இணைப்புகளைப் பொதுவாக எளிதாகப் பெறலாம். ஆனால் விண்டோஸ் விஸ்டா வில் இது சற்று சிரமமான வேலையாகத் தரப் பட்டுள்ளது. இதனை எளிதாக்கும் சிறிய வழி ஒன்று உள்ளது. ஸ்டார்ட் மெனு அழுத்திக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில் அல்லது ரன் டயலாக் பாக்ஸில், ncpa.cpl என்று டைப் செய்து என்டர் அழுத்தவும். உங்கள் நெட்வொர்க் இணைப்பு உடனே எளிதாகக் கிடைக்கும்.

தானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த

கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் கழித்து நாம் அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு அனுபவம், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். இதற்குக் காரணம் விண்டோஸ் இயக்கத்தை நாம் தொடங்குகையில், பல புரோகிராம்கள் தானாக இயங்கத் தொடங்குகின்றன. நாம் பல சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல புரோகிராம்கள், சிஸ்டம் இயங்குகையிலேயே தொடங்கும்படி பதியப்படுகின்றன. அது மட்டுமின்றி, முதன்மை புரோகிராம் மட்டுமின்றி, ஒரு சில கூடுதல் புரோகிராம்களும் பதியப்படுகின்றன. ஒரு சில மட்டுமே, தானாக சிஸ்டம் இயக்கத்துடன் தொடங்கவா என்று கேட்டு நம் அனுமதியைப் பெறுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்திற்கு தேவையா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில் என்ன என்ன புரோகிராம்கள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒட்டிக் கொண்டு இயங்கி, ராம் நினைவகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன என்று அறிய வேண்டுமா? இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. அதன் பெயர் ஆட்டோ ரன்ஸ் (Autoruns). இதனை http://technet.microsoft.com/enus/sysinternals/bb963902 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். இவ்வாறு இயக்குகையில், நீங்கள் இது போன்ற புரோகிராம் எதனையும் இயக்கிப் பார்க்காதவராக இருந்தால், மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள். சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட தானாக இயங்கும் புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் 20 முதல் 50% வரை, கம்ப்யூட்டர் இயங்கும்போது தேவையற்றதாகத்தான் இருக்கும்.
தானாக இயங்கும் புரோகிராம்கள் பட்டியலிட்ட வுடன், நீங்களாகவே எந்த புரோகிராம்கள் நம் இயக்கத்திற்குத் தேவையில்லை என அறிந்து கொள்ளலாம். இவற்றை கண்ட்ரோல் பேனல் சென்று Add/Remove Programs வழியாக நீக்கலாம். Autoruns போலவே ஆகிய Silent Runners (http://www.silentrunners.org/) மற்றும் Hijackthis (http://free.antivirus.com/hijackthis/) புரோகிராம்களும் இவ்வகையில் நமக்கு தானாக இயங்கும் புரோகிராம்களைக் காட்டிக் கொடுக்கும். இவை எல்லாமே மிகப் பயனுள்ளவை. ஒவ்வொன்றும் சில கூடுதல் நன்மைகளையும், வேண்டாத சிலவற்றையும் தரும். புதியதாக இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துபவர்கள், எந்த எந்த புரோகிராம்கள் நமக்குப் பயனின்றி இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் கவனமாக இயங்க வேண்டும். ஆட்டோரன்ஸ் மூலம் இவற்றை நீக்கவும், நீக்கியபின்னர் சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், மீண்டும் கொண்டு வரவும் முடியும்.
இது போன்ற புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் நுழைவதனை எப்படித் தடுப்பது? நம்மால் இயலாது. ஏனென்றால், இவை உள்ளே நுழைகையில் நமக்குத் தெரிவதில்லை. இவற்றால் நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ஏனென்றால் இவை எதற்காகச் செயல்படுகின்றன என்பதனையும் நாம் அறிவதில்லை. இவை எதற்காகச் செயல்பட்டாலும், இவற்றின் இயக்கம் நம் கம்ப்யூட்டரின் திறனை மந்தப்படுத்துகின்றன என்பது உண்மை. எனவே, இது போன்ற ஆட்டோ ரன் புரோகிராம்களை பதிந்திடும் நிறுவனங்கள் தான், தாங்களாகவே முன் வந்து இவற்றின் எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டும். அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டமே, குறிப்பிட்ட குறைந்த நேரத்திற்குள், கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்க வேண்டும் என்பதனை வரையறை செய்து, அந்த நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டால், மேலும் தானாக இயங்கும் புரோகிராம்கள் பதிவு செய்வதனைத் தடுக்க வேண்டும். அல்லது பயனாளருக்கு அறிவிக்க வேண்டும். சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களுக்குள்ளாக சில கொள்கைகளை அமைத்துச் செயல்பட்டால் தான், இதனை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியும் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பதியப்பட்ட ஒரு புரோகிராமின் இயங்கு திறனை, புதிதாகப் பதியப்பட இருக்கும் ஒரு புரோகிராம் தொல்லை கொடுக்கும் எனத் தெரிய வந்தால், அது பதியப்படுவது தடுக்கப்பட வேண்டும். அல்லது அத்தகைய சோதனைக்கு, அந்த புரோகிராம் வெளியாகும் முன்பே உட்படுத்தப்பட்டு, தொல்ல கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தால், தடை செய்யப்பட வேண்டும் எனவும் கருதுகின்றனர்.