அமெரிக்காவை சேர்ந்த ரயான் பான் என்பவர் இப்படி யோசித்ததோடு தன்னை போலவே பலருக்கும் இந்த ஏக்கம் இருக்கும் என உணர்ந்து கால மாற்றத்திற்கு ஈடு கொடுக்க கூடிய இணைய அலாரத்தை உருவாக்கியுள்ளார்.
இணையத்தின் மூலம் செயல்படக்கூடிய இந்த அலாரத்திற்கு சோஷியல் அலாரம் என அவர் பெயர் சூட்டியுள்ளார்.இதன் சமுக பண்பை குறிக்கும் வகையிலும் இந்த பெயர் அமைந்துள்ளது.அதாவது உங்களின் சமூக தொடர்பாகவும் இந்த அலாரம் விளங்கும்.
எல்லாமே இணையமயமாக வரும் காலத்தில் காலையில் குறித்த நேரத்தில் கண் விழிக்க எச்சரிக்கை செய்யும் அலாரமும் இணையமயமாவது தானே சரியாக இருக்கும் என்னும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அலாரத்தை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்லீப்.எஃப் எம் இணையதளத்தின் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.அப்படியே பழைய கடிகாரத்தை தூக்கி எறிந்து விடலாம்.
காரணம் உங்கள் கம்பயூட்டர் மூலமே இந்த இணைய அலாரம் செயல்பட்டு காலையில் நீங்கள் சொல்லும் நேரத்திற்கு உங்களை துயிலெழச்செய்யும்.இணைய ஒலி எழுப்புவது மட்டும் வியப்பல்ல;பழைய அப்பாவி கடிகாரம் போல அலறி திடுக்கிட்டு விழிக்க செய்வதோடு நின்று விடாமல் அன்றைய தினத்தின் வானிலை அறிக்கையை உங்களுக்கு வாசித்து காட்டும்.
ஒரு சில எதிர்காலவியல் வகையை சேர்ந்த ஹாலிவுட் படங்களில் வருவது போல கதாநாயகர்கள் காலையில் வானிலை அறிக்கை உள்ளிட்ட அன்றைய தின குறித்த முக்கிய விவரங்களை கேட்டபடி எழுவது போல இந்த வானிலை அறிக்கை வாசிப்பு தான் இணைய அலாரத்தின் தனிச்சிறப்பு.தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தகவலோடு விழிப்பது பொருத்தமானது தானே.
இந்த இணைய ஒலியை உங்கள் நண்பர்கள் அல்லது அன்பிற்குறியவர்களின் குரலாகவும் மாற்றிக்கொள்ளலாம்.வெளியூர்களில் தங்கும் போது இப்படி மனைவி அல்லது மகன் குரல் கேட்டு விழிப்பது உற்சாகம் கொள்ளச்செய்யும் தானே.
வெறும் வானிலை அறிக்கையை வாசிப்பது மட்டும் அல்ல; பிறந்த நாள் வாழ்த்து கூறுவது,விஷேச தினங்களின் போது வாழ்த்து சொல்வது போன்றவற்றையும் இந்த அலாரம் செய்ய வல்லது.அதே போல எழுந்திரு நண்பா ,இன்றைய தினம் இனிய தினமாக இருக்கும் என்று உற்சாகம் கொள்ளவும் வைக்கும்.
எதிர்காலத்தில் மேலும் புத்திசாலித்தனமாக இந்த அலாரம் மாறக்கூடும் என்கிறார் ரயான்.
அதிக மழை பெய்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்,அபோது இந்த அலாரம் கண்விழ்க்க செய்வதோடு,மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனவே இழுத்து போர்த்திக்கொண்டு இன்னும் சற்று நேரம் ஜாலியாக தூங்குங்கள் என்று சொல்வதோ அல்லது இன்றைய தினம் முக்கிய சந்திப்பு உள்ளது அதற்காக சிக்கிரம் குளித்து தாயராகுங்கள் என்றே எச்சரிக்கும் ஆற்றல் பெறும் என்கிறார் அவர்.
அதே போல அன்றைய தினம் வந்துள்ள முக்கிய இமெயிலை வாசித்து காட்டும் ஆற்றலையும் பெறச்செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
தகவல்களை கிரகித்து கொண்டு செய்லபாடும் திறன் கொண்ட ஐபி 6 போன்ற இணைய வசதி நடைமுறைக்கு வரும் போது பயனாளியின் இணைய செயல்பாடு மற்றும் நிகழ்ச்சி நிரல்களை பார்த்தே தேவையான தகவல்களை இந்த அலாரம் வழங்கும் என்கிறார் அவர்.
பெரும் சூறாவளி வீச இருப்பதையோ அல்லது பூகம்பம் உலுக்க இருப்பதையோ கூட இந்த அலாரம் சொல்லி எச்சரிக்கும் என்கிறார் அவர்.
டெனிஸி பல்கலையில் பட்டம் பெற்ற அவர் சாப்ட்வேர் பின்னணி இல்லாத நிலையிலும் காலங்காலமாக மாறமலே இருக்கும் கடிகார அலாரத்தை மாற்றி இணைய யுகத்திற்கு கொண்டு வரும் குறிக்கோளோடு தனது நண்பர்களோடு சேர்ந்து இதனை உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து இதனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இணையததில் செயல்படகூடியதோடு ஐப்பொன் போன்ற நவீன செல்போன்களிலும் செயல்படும் வசதியை அளித்துள்ளார்.
இணையதள முகவரி;http://sleep.fm/
|
No comments:
Post a Comment