Monday, December 27, 2010

இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்! *தென் ஆப்ரிக்கா அசத்தல்

டர்பன் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து திணறியது. வேகத்தில் மிரட்டிய தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் உள்ள கிங்ஸ்மிட் மைதானத்தில் நேற்று துவங்கியது. மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ரெய்னா நீக்கம்:
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காம்பிர், ரெய்னா, உனத்கட் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் முரளி விஜய், புஜாரா, ஜாகிர் கான் வாய்ப்பு பெற்றனர். தென் ஆப்ரிக்க அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

நிதான துவக்கம்:
இந்திய அணிக்கு சேவக், முரளி விஜய் ஜோடி துவக்கம் அளித்தது. மார்கல், டிசோட்சபே வீசிய ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்த சேவக் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இவர், 25 ரன்களுக்கு ஸ்டைன் வேகத்தில் வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் முரளி விஜயும் (19) ஸ்டைன் பந்தில் வீழ்ந்தார்.
அனுபவம் ஏமாற்றம்:
பின் அனுபவ சச்சின், டிராவிட் ஜோடியும் ஏமாற்றியது. டிசோட்சபே வேகத்தில் சச்சின் (13) அவுட்டானார். அடுத்து வந்த லட்சுமணுடன் இணைந்த டிராவிட் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர், 25 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டைன் பந்தில் நடையை கட்டினார்.
லட்சுமண் பரிதாபம்:
ஓரளவுக்கு பொறுப்பாக ஆடிய லட்சுமண், ஸ்டைன் பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து அசத்தினார். இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஸ்டைன் பந்துவீச்சில் டிசோட்சபேயின் சூப்பர் "கேட்ச்சில்' லட்சுமண் (38) சிக்கினார்.
வெளிச்சமின்மை:
இளம் வீரர் புஜாரா (19) வாய்ப்பை வீணாக்கினார். இந்திய அணி 56 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் தோனி (20), ஹர்பஜன் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆம்லா "50'
நேற்று, தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா, தனது 50வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதன்மூலம் 50 டெஸ்டில் விளையாடிய 16வது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிசையில் காலிஸ் (144), பவுச்சர் (138) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா
சேவக் (கே)காலிஸ் (ப)ஸ்டைன் 25(32)
முரளிவிஜய் (கே)பவுச்சர் (ப)ஸ்டைன் 19(42)
டிராவிட் (கே)பவுச்சர் (ப)ஸ்டைன் 25(68)
சச்சின் (கே)காலிஸ் (ப)டிசோட்சபே 13(22)
லட்சுமண் (கே)டிசோட்சபே (ப)ஸ்டைன் 38(73)
புஜாரா (கே)பவுச்சர் (ப)டிசோட்சபே 19(45)
தோனி -அவுட் இல்லை- 20(31)
ஹர்பஜன் -அவுட் இல்லை- 15(25)
உதிரிகள் 9
மொத்தம் (56 ஓவரில், 6 விக்.,) 183
விக்கெட் வீழ்ச்சி: 1-43(சேவக்), 2-48(முரளிவிஜய்), 3-79(சச்சின்), 4-117(டிராவிட்), 5-130(லட்சுமண்), 6-156(புஜாரா)
பந்துவீச்சு: ஸ்டைன் 14-3-36-4, மார்கல் 15-2-60-0, டிசோட்சபே 11-3-40-2, காலிஸ் 8-2-18-0, ஹாரிஸ் 8-1-26-0.

No comments:

Post a Comment