Monday, December 27, 2010

யு-ட்யூப் பெற்ற புதிய தள முகம்

இணையத்தில் மிக அதிக அளவில் வீடியோ சேவையினை வழங்கி வரும் தள நிறுவனப் பிரிவுகளில் யு-ட்யூப் இணைய தளம், எப்போதும் முதல் இடத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இரண்டு கோடிக்கும் மேலான வீடியோக்களை தினந் தோறும் மக்களுக்குக் காட்டி வருகிறது. ஆனால் அதன் இணைய தளத்தின் முகப்புத் தோற்றம், எந்தவிதக் கூடுதல் அலங்காரமின்றி மிகச் சாதாரணமாகவே இருந்து வருகிறது. ஆனால் சென்ற வாரத்தில் இருந்து, யு-ட்யூப் இணைய தளம், பல புதிய சிறப்புகளைத் தன் முகப்பு பக்கத்தில் ஏற்றி சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சங்களை இங்கு காணலாம்.
1.இணைந்த பட்டியல் (Combined List): உங்களுடைய பதிவு, நண்பர்கள் செயல்பாடு, இவை சார்ந்த குறிப்புகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த பட்டியலாகத் தரப்படுகிறது.
2. எதனையும் மிஸ் செய்திடாமல்: சேனல் ஒன்று நான்கு வீடியோக்களை ஒரு நாளில் அப்லோட் செய்தால், இறுதியாக அப்லோட் செய்தது மட்டும் காட்டப்படாமல், அன்று அப்லோட் செய்யப்பட்டதை மட்டும் காட்டாமல், அனைத்தையும் காட்டிடும்.
3. எளிதான நீக்கம்: நீங்கள் விரும்பாத வீடியோ எதன் மீதாவது, கர்சரைக் கொண்டு சென்று, உடன் எக்ஸ் அழுத்தினால், அது உடனடியாக நீக்கப்படும்.

4. பார்த்தவற்றில் குறியீடு: ஏற்கனவே பார்த்த வீடியோக்கள் தலைப்பு, கிரே வண்ணத்தில் காட்டப்படும். இதன் மூலம் பார்த்த வீடியோக்களை நீக்க நீங்கள் தேட வேண்டியதில்லை.
5. மீண்டும் காண உதவி: நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்த வீடியோக்க<ள் மற்றும் நீங்கள் பிரியமானவை எனக் குறித்து வைத்த வீடியோக்களின் பட்டியல் இணைக்கப்படுகிறது. இதிலிருந்து நீங்கள் அடிக்கடிக் காண விரும்பும் வீடியோக்களை எளிதில் பிக் அப் செய்திடலாம்.
6. இன்பாக்ஸ் எளிது: உங்கள் இன்பாக்ஸுக்கான தொடர்புகள் (Links) முன்னாலும் நடுவிலும் வைக்கப்பட்டுள்ளன.
7. பழையன மீண்டும் கொண்டு வர: நீங்கள் வெகு காலம் முன்பு பார்த்த வீடியோக்களை முகப்பு தளத்திலிருந்தவாறே பெற்று ரசிக்க அனைத்து வசதிகளும் புதியதாகத் தரப்பட்டுள்ளன.
எப்படிச் செல்வது? இந்த புதிய கோலம் கொண்டுள்ள முகப்பு பக்கத்திற்கு எப்படிச் செல்வது? இந்த புதிய முகப்பு பக்கம் உங்கள் தனிப்பட்ட அனுபவத்திற்குச் செறிவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தளத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புதிய முகப்பு பக்கம் கிடைக்கும். அல்லது இப்போது பதிந்து செல்ல வேண்டும். யு-ட்யூப் தளம் சென்றவுடன் “Try a different homepage” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும். இது உங்களை இன்னொரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கு உங்கள் பதிவினைக் காட்டினால், புதிய முகப்பு பக்கம் தரப்பட்டு, நீங்கள் பயன்படுத்தக் கிடைக்கும். நீங்கள் லாக் இன் செய்திடாமல் இதனைக் காண வேண்டும் எனில் http://www.youtube.com/homepage_experiment என்ற முகவரிக்குச் செல்லவும். ஆனால் புதிய முகப்பு பக்கத்தின் அனைத்து அம்சங்களையும் காண முடியாது.

No comments:

Post a Comment