உலக அரங்கில் கால்பந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டது கிரிக்கெட் தான்.விரைவில் கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டுக்கு ரசிகர் பட்டாளம்விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம்"டுவென்டி-20' போட்டிகள் தான். இது வளமான வளர்ச்சிஎன்றாலும், மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளன. எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பரிமாணம்
கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிமாணங்கள் இல்லை. ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் டெஸ்ட்,ஒரு நாள் மற்றும்"டுவென்டி-20' என மூன்று பரிமாணங் கள் காணப்படுகிறது. இதில் ஒன்று எழுச்சி பெற்றால், மற்றொன்று வீழ்ச்சி அடைய துவங்குகிறது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் தொய்வை எதிர் கொண் டுள்ளன.
காயம்காரணம்
கிரிக் கெட் என் றாலே டெஸ்ட் போட்டிகள் என்ற காலம் தற் போது மலையேறி விட்டது. வீரர்களின் உண்மையான திறமையை வெளிக் கொணரும் ஆற்றல் டெஸ்ட் போட்டிகளுக்கு உண்டு. ஓவர்வரையறை இல்லாததால், பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் திறமையை நிரூபிக்க அதிக காலம் எடுத்துக் கொள்வர். இதன் மூலம் பெரும்பாலான வீரர்கள் அடிக்கடி காயத்துக்கு உள்ளாயினர். அதற்குப் பின் வந்த ஒரு நாள் போட்டிகளில், 50 ஓவர்கள் என்ற வரையறை இருந்தது.தற்போது "டுவென்டி-20' போட்டிகளில் 20 ஓவர்மட்டுமே என்பதால், பவுலர்கள் தலா 4 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. தவிர, இவ்வகைப் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள்காயத்திலிருந்து தப்ப முடிகிறது.
பணம் முக்கியம்
இதன் காரணமாக பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டுமே பங்கேற்க விரும்புகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப், டெஸ்ட் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றார். இதற்கு முக்கிய காரணம் காயம் தான். காயம் தொடர்பான பிரச்னை ஒரு புறம் இருக்க, மற்றொரு முக்கிய காரணம் பணம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் பெறும் சம்பளம் சுமார் 2 லட்சம் ரூபாய். ஒரு நாள் போட்டிக்கு 1.5 லட்சம் ரூபாய். ஆனால் இந்தியன் பரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) உள்ளிட்ட "டுவென்டி-20' போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்களையும் புறக்கணித்து விட்டு, இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் விரும்புகின்றனர். கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் பெற்றார்.
நன்மை உண்டு
ஐ.பி.எல்., என்ற ஒரு அமைப்பு துவங்கியதற்கே, டெஸ்ட் போட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இங்கிலாந்து பிரிமியர் லீக் (இ.பி.எல்.,), அமெரிக்கன் பிரிமியர் லீக் (ஏ.பி.எல்.,) அமைப்புகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் கூடுதலாக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
எதிர்காலம்
பணம் மற்றும் காயத்தின் அடிப்படையில் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதே கருத்தை சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனும் தெரிவித்துள்ளார். வீரர்களின் மனநிலை மற்றுமின்றி ரசிகர்களின் மனநிலையும் மாறத் துவங்கி உள்ளது. டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தற்போது விரும்புவதில்லை. ஒரு போட்டியின் முடிவுக்கு ஐந்து நாட்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. 3 மணி நேரத்தில் முடிவு கிடைக்கும் டுவென்டி-20' போட்டிகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் "டுவென்டி-20' போட்டிகள் மட்டுமே நிலைத்து இருக்கும். பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகள் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்.
|
No comments:
Post a Comment