|
Monday, December 27, 2010
ஐஸ்வர்யா ராய் சம்பளம் ரூ.10 கோடி
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் புதிய படமொன்றில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் வாங்கப் போகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் பாபி புஷ்கர்ணா பேஜ் 3 என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றவர். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கும் பாபி, புதிதாக தயாரிக்கவுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராயை நாயகியாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இதற்காக ஐஸ்வர்யாவுக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வழங்க முன்வந்திருக்கிறாராம். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘2008ம் ஆண்டு ஜோதா அக்பர் படம் வெளியானது. அந்த படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் படம் எதுவும் வெளியாகவில்லை. எனது அடுத்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயின் சம்மதத்தை கேட்டிருக்கிறேன். இதற்காக அவருக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் பேசியிருக்கிறேன். அவர் எனக்கு இன்னமும் கால்ஷீட் தரவில்லை. அவரது கால்ஷீட் கிடைக்காவிட்டால் அந்த படத்தையே எடுக்க மாட்டேன், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment