Saturday, January 8, 2011

மலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து : துபாய் காவல் துறை தலைவர் அதிரடி பேட்டி





 வளைகுடாவில் நாள் தோறும் வேலை வாய்ப்புக்காக வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் மண்ணின் மைந்தர்களான அரபு மக்கள் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுவதை தாம் ஆதரிப்பதாக துபாய் காவல் துறை தலைவர் தெரிவித்தார்.


வெளிநாட்டவர்களை கட்டுபடுத்த சட்டம் கொண்டு வரப்படவில்லையெனில் அரபு மக்கள் தங்கள் மண்ணில் சிறுபான்மையினராக வாழும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று துபை காவல்துறை தலைவர் தஹி கல்பான் கத்தார் தொலைக்கட்சியில் பிரபலமான லகும் அல் கரார் (உங்கள் முடிவு என்ன?) எனும் நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

“அதிகரித்து வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் அடையாளத்திற்கும் கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் அப்படி ஏற்படாமல் தடுக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” எனும் தலைப்பில் தன் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்ட போது வளைகுடாவில் உள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த துணிச்சலான முடிவுகளை மேற்கொள்ளாவிடில் அமெரிக்காவில் சிவப்பிந்தியர்கள் வெள்ளையர்களால் ஒடுக்கப்பட்டதை போல் அரபுகள் தங்கள் மண்ணில் ஒடுக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் போகும் அபாயம் உள்ளது என்று கூறினார்.


தஹி கல்ஹான் மேலும் கூறும் போது குறிப்பாக அரபுகள் மலபாரிகளையும் (மலையாளிகளை குறிக்க அரபுலகில் பயன்படுத்தப்படும் வார்த்தை) ஈரானிகளையும் உற்று நோக்க வேண்டும். அவர்கள் அரபு நாடுகளில் வந்து சிறு கடைகளை திறந்து காலப்போக்கில் அரபுகளை விட வசதியான மில்லியனர்களாக மாறிவிடுகிறார்கள் என்று சொன்னார். மேலும் தஹி கல்ஹான் கூறும் போது அடிப்படையில் அரபுகளுக்கு சொந்தமான இக்கடைகளை அரபுகளே நடத்தலாமே என்று கேள்வி எழுப்பியவர் ஆனால் அரபுகள் வேலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.

வளைகுடாவிற்கு வேலைக்கு வரும் ஒரு இந்திய டிரைவர் சிறிது காலத்திலேயே தன் சொந்தக்காரர் ஒருவரை வேலை இல்லையென்றாலும் வளைகுடாவிற்கு அழைத்து கொள்கிறார். பின் அவருக்காக எப்படியோ அலைந்து வேலை வாங்கி கொடுத்து விடுகிறார். அவர் இன்னொரு ஆளுக்கு என்று வரையறையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறிய தஹி கல்ஹான் அமைச்சகங்கள் ஆட்சியாளர்களுக்கு  இவ்வபாயங்களை எடுத்து கூறி வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இது போன்ற கருத்துக்கள் புதியது அல்ல என்றாலும் உயர் அரசு பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசியுள்ளது வளைகுடாவில் வாழும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!

 

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.

“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு.

நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது.

அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார்.

3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை.

மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும்.

நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது.

ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தொலைந்த நீதி தேவதை ஆஸ்திரேலியாவில்…!

இந்தியாவில் எல்லாமே ஒழுங்காகத்தான் போய்க்கொண்டு இருந்தது. 1992 டிசம்பர்-6 வரை..! அன்றுதான்… எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை… ஆயிரக்கணக்கில் ‘கரசேவகர்கள்’ என்றபெயரில் ஷைத்தான்கள்..! ஒரே நாளில் இடித்துத்தள்ளினார்கள். தரையோடு தரையாக… மண்ணோடு மண்ணாக… எதை…? ஒட்டுமொத்த இந்தியாவின் அமைதியை..!

அதன்பிறகு நாடெங்கும் எதிர்ப்பு கோஷம், கண்டன ஆர்ப்பாட்டம், அமைதி ஊர்வலம் என அடுத்தடுத்த மாதங்களில் ஜனநாயக ரீதியில் மக்கள் கொந்தளிக்க… பம்பாயிலும் அதேபோல் நடந்து கொண்டிருந்தது. பொறுக்கவில்லை சங்பரிவார சிவசேனை ஷைத்தான்களுக்கு..! அடுத்த மாதம், ஜனவரியில்… சுமார் 500 பேர் பம்பாயில் கொல்லப்பட்டார்கள். ஜனவரி… பிப்ரவரி.. மார்ச்… என கொலைகாரர்கள்-பால் தாக்கரேக்கள்- கட்சிக்கொடிகளுடன் பந்தாவாக வீதிகளில் பவனிவர… கண்டும் காணாமல் சட்டம் தூங்க (இன்றுகூட ஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கை 1998-ல் வந்த பிறகும் கூட விழிக்கவில்லை என்றால் அப்போது எப்படி அசந்து தூங்கி இருந்திருக்கும்…?) பலிகொடுத்தவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தலைதூக்க, அந்த சமயம் பார்த்து இதற்காகவே பல ஆண்டுகள் காத்திருந்த பாகிஸ்தானியருக்கும், பம்பாய் நிழலுலக கள்ளக்கடத்தல் தாதாக்களுக்கும் தங்கள் நீண்ட நாள் எண்ணங்களை ஈடேற்ற கிடைத்த அரிய பொக்கிஷமான சந்தர்ப்பமாயிற்று. (பின்னே…! கலவரத்தில் மக்களை கொன்ற ஷைத்தான்கள் எல்லாரும் பங்குச்சந்தை வர்த்தக கட்டிடத்திலா பணிபுரிந்தார்கள்?)

இவர்களுக்கு… கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், தாதாக்களின் எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் சில நடிகர்கள், சில சுங்க அதிகாரிகள், சில காவல்துறையினர்களும் உதவி செய்ய, 1993ம் ஆண்டு மார்ச் 12-ல், பம்பாயில் அடுத்தடுத்து பதினைந்து குண்டுகள் வெடித்தன. பின்னர் நூற்றுக்கணக்கானோர் (…இப்படித்தான் அனைத்து தேடுபோறிகளும் சொல்கின்றன… கணக்கெல்லாம் கிடையாதாம்…) தடாவில் கைது செய்யப்பட்டனர். (தடா: – விசாரனைக்கைதியாக எத்தனை வருஷமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஜாமீனும் கிடையாது.)


14 வருஷங்கள் நிதா……..னமாய் விசாரித்துவிட்டு, மே 27, 2007-ல், மொத்தம் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். மற்றவர்களில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர். (இவர் தான் பொடா சட்டம் வர காரணமானவர். ஏனெனில், தடாவில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் நன்றாக படம் காட்டினார்… பொடா வந்தது. ஆனால், பொடா சட்டம் தூக்கப்பட காரணம் ஜெயலலிதா என்று தெரியுமா? – பாராளுமன்ற உறுப்பினர் வைகோவை உள்ளே வைத்து பொடா என்றால் என்ன என்று கொண்டுவந்தவர்களுக்கே புரியவைத்து பின்னர் அதை தூக்கவும் வைத்தார்..!)
பம்பாய் குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டு மாதம் பிட்டு பிட்டாய் வந்த தீர்ப்பில் கடைசியில் ஜூலை 31, 2007 அன்று சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் உட்பட (இதிலும் கூட இன்று வரை படம் தான் காட்டுகிறார்), மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. சுங்க அதிகாரிகள், காவல் துறையினர் என மற்றவர்களுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், 24 பேர்கள் ஜூலை 31, 2007 அன்று -அதாவது, 14-வருடங்கள் கழித்து, குற்ற மற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். சரி… மீதம் உள்ள "நூற்றுக்கணக்கானோர்"(!?) அதற்கு கொஞ்சம் ஆண்டுகள் முன் சிறுக சிறுக விடுவிக்கப்பட்டு இருப்பார்கள் என்று(!?) நம்புகிறேன்… இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.

கோவையில் ஒரு காவலர் படுகொலையை தொடர்ந்து மூன்று பேர்(முஸ்லிம்கள்) சரணடைந்து விட்ட பின்னும், 1997 – நவம்பர் 30, டிசம்பர் 1-ல், அதனை ஒரு மதக்கலவரமாக்கி ஷைத்தான்களும் காவல்துறையினரும் கைகோர்த்து திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு பலர் காயமுற்று, முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மட்டும் சூறையாடப்பட்டு பின்னர் அவை தீயிட்டு கொளுத்தப்பட்டு… என எல்லாம் சாட்சிகளுடன் நடந்து முடிந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் சட்டம் தூங்க…(இன்றுவரை கூட ஜஸ்டிஸ் கோகுலகிருஷ்ணா கமிஷன் அறிக்கை 2000-ல் வந்த பிறகும்கூட விழிக்கவில்லை என்றால் அப்போது எப்படி அசந்து தூங்கி இருந்திருக்கும்…?)

அதனை தொடர்ந்த, 1998 பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் 17 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.​ இதில்,​​ 58 பேர் இறந்தனர்.​ 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக,​​ பாஷா,​​ மதானி உள்ளிட்ட 167 பேர் தடாவில் கைது செய்யப்பட்டு சாவகாசமாய் கடந்த 2001ம் ஆண்டுதான் குற்றப்பத்திரிக்கை நகல்கள் அனைவரிடமும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இவ்வழக்கை விசா…………ரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் 2007-ல்.. அதாவது 10-ஆண்டுகள் கழித்து பாஷா உள்ளிட்ட 44 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது.​ 64 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.​ மதானி உள்பட மீதி 59 பேர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டனர்–10 வருடங்கள் கழித்து..! இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.

இதுவரை இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட அனைத்து குண்டு வெடிப்பு வழக்குகளிலும், இரண்டே இரண்டுக்கு மட்டும்
குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்து தீர்ப்பு வந்திருக்கின்றன. மற்ற குண்டுவெடிப்புகளில் எல்லாம் முஸ்லிம்கள் நிரபராதிகள் என தொடர்ந்து விடுதலை செய்ய்பட்டுக்கொண்டே வருகின்றனர்.
அவ்விரண்டு மட்டுமல்லாது பின்னர் நடந்த அனைத்துமே //பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியாக..//–என்று மீண்டும் மீண்டும் ஊடகங்கள் உண்மைகளை திரித்துகொண்டே உள்ளன. எப்படி? இடித்தவர்களே… சரியாக இடிக்கவில்லை என்று அவர்கள் பங்குக்கு ஒருதடவை குண்டு வைக்கிறார்களாமா?
பாபர் மசூதி இடிப்புக்கும் மேற்படி இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. அவரவர் சொந்தக்காரர்களை இழந்தவர்களே மேற்படி பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதேநேரம், பழிவாங்குதல் என்ற பெயரில், ஏதுமறியா அப்பாவி மக்களை கொல்லுதல் இஸ்லாத்திற்கு எதிரானது. மொத்த மனித சமுதாயத்தையே கொலை புரிதலுக்கு சமமான மகா பெரிய பாவம். இச்செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதற்கு தக்க தண்டனை அளித்த நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கிறேன். இத்தீர்ப்பு குற்றம் செய்ய நினைக்கும் தடம்புரண்ட மனங்களுக்கு தக்க படிப்பினை. பயங்கரவாதத்துக்கு என்றென்றும் நான் எதிரி என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

அதேநேரம்… ஒரு சமுதாயத்திடம் மட்டும் நீதி நிலைநிறுத்தப்படுவதையும் வேறோர் சமுதாயத்தின் குற்றங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். (எத்தனையோ விசாரணை கமிஷன் அறிக்கைகள் கிடப்பில் கிடப்பதும், ஆதாரத்துடன் மாட்டிய காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இன்னும் தண்டிக்கபடாதிருப்பதும் என்னை இப்படி கண்டனம் தெரிவிக்க வைக்கின்றன)

Blind_Justice.svg.med.png

1993-ம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் (இத்தாக்குதலில் 11 பேர் பலியாயினர்) அப்போதே கைது செய்யப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை, அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி, கடந்தமாதம் (2010-டிசம்பரில்… அதாவது பதினேழு வருடங்கள் கழித்து…!) உச்ச நீதிமன்றம் இவர்களை நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.

1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஈரோட்டில் சேரன் எக்ஸ்பிரஸ், கேரள மாநிலம் திருச்சூரில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 72பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக குணங்குடி ஹனீஃபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் 13 வருடமாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்
மீது பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 8 பேரையும் நிரபராதி என விடுதலை செய்வதாக ….அதாவது 13 வருடங்கள் கழித்து…. நீதிபதி தீர்ப்பளித்தார்.
hanifa.gif
இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி.
இதன் பின்னர், அதாவது 1998 முதல் பல குண்டு வெடிப்புகள் இந்தியாவெங்கும் நடந்தன. முக்கியமான விஷயம் இவ்வாண்டில் இருந்துதான் பாஜக நாட்டை ஆளத்துவங்கி இருந்தது. அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களிலும் ஆட்சியைப்பிடித்தது. பொதுவாக பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெரும்பாலும் குண்டுகள் வெடிக்கும். ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் பிறகு, உடனே….. ஒரு மொக்கை பதிவுக்குக்கூட ‘ஹைய்யா… முதல் வடை(!?) எனக்கு’ என்று பதிவு பொட்ட அடுத்த நிமிஷமே வரும் படுமொக்கை பின்னூட்டம் போல….. ஒரு ஈ-மெயில் எப்போதும் பறந்து வந்துவிடும். ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பு… ‘ஏதோ அனாதைகளுக்கு ஆதரவு அளிப்பது போல பெருமையுடன்’ பொறுப்பேற்கும்.(!?)
பொறுப்பேற்றவர்களின் பெயர்களை வைத்தே… தாடி, தொப்பி எல்லாம் போட்டு அடுத்த நாள் கணிணி உதவியால் சில உருவகங்கள், "குற்றவாளிகள் புகைப்படம்" என்று கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாய் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பலநாள் காட்டப்படும். சாலைகளில் நடக்கும் அனைத்து முஸ்லிம்களையும் ‘இவர்கள் குற்றவாளிகளா’ என்று உற்று உற்று பார்ப்பவர்களை கண்டு கோபம் கொள்வதா… இப்படிப்பட்ட நாட்டில் வசிப்பதை நினைத்து உள்ளுக்குள் புழுங்கி அழுவதா… வேதனை..! ( இதை விட பெரிய கொடுமை... என்னவெனில்…" 100 கிலோ வெடிகுண்டுடன் நடமாடும் தீவிரவாதி ஆயிஷா "…! முஸ்லிம் பெண்களின் நிலைமையை நினைத்தால் இன்றும் மனம் கொதிக்கும். போகிற வருகிற முஸ்லிம் பெண்களை எல்லாம் "எங்கே.. உங்கள் முகத்தை காட்டுங்கள்" என்பார்கள் காவலர்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயிஷாவின் புகைப்படத்திலோ கண்கள் மட்டுமே இருக்கும்..!?! என்ன புத்தியோ… என்ன மூளையோ…! இது ஒரு பக்கா டார்ச்சர்தானே? பல வருஷம் கழித்து கடைசியில் கமிஷ்னரே ஒரு பேட்டியில், ‘ஆயிஷா மேட்டர் சும்மா ஜோடிச்சது’ என்ற போதுதான்… தமிழக காவல்துறை மீது எனக்கிருந்த துளி நம்பிக்கையும் மரியாதையும் காணாமல் போனது..!)
சரி.. நாம் தொடர்வோம்… அடுத்த வாரம் பரபரப்பாக சிலர் முஸ்லிம்கள் தொப்பி தாடி சகிதம் பொடாவில் கைது செய்யப்படுவார்கள். இவர்களை தொடர்ந்து… ‘தீவிரவாதிக்கு உதவினார்கள்’ என்று மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். எல்லாமே அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரைதான். பிறகு முன்னதை மறந்து இதை பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அந்த குண்டு வெடித்த பின் உடனே ஒரு ஈ-மெயில்…. அதே… அதே…ரிபீட்.
இப்படித்தான்… தென்காசி, சென்னை, கான்பூர், அஜ்மீர், மோடாசா, மாலேகான்-1, மாலேகான்-2, ஹைதராபாத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், நான்டேட், பானிபட்-சம்ஜோதா ரயில், தானே, கோவா, பெங்களூர், வாரனாசி என்று வரிசையாய் … அதே… ரிபீட்… ரிபீட்… ரிபீட்…
தகுந்த ஆதாரங்கள் இன்றி, சாட்சிகள் இன்றி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்வதையேகூட இஸ்லாம் எதிர்க்கிறது. இப்படி கைது செய்து பல்லாண்டுகள் சிறையில் அடைப்பது மனித உரிமைக்கு எதிரானது. மற்ற நாடுகளில் இது ஒரு பெரிய குற்றமாகக்கூட பார்க்கப்படுவது உண்டு. ஆனால், நம் நாட்டில் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல…!

மேற்கண்ட அனைத்து குண்டு வெடிப்புகளிலும் — சென்ற வருட செப்டம்பர் மாத வாரனாசி குண்டுவெடிப்பு தவிர — மேற்சொன்ன அதே ரிப்பீட் தான். வாரணாசியில் மட்டும் அப்படி என்ன மாற்றம்? சந்தேகம் ‘ஹிந்துத்துவா தீவிரவாதிகள்’ மீதாம்..! இந்திய வரலாற்றில் காவல்துறை இப்படி அறிவித்தது இதுதான் முதன்முறை. காரணம்:- கர்மவீரர் – அஞ்சாநெஞ்சர் – துப்பறியும் சிங்கம் – நேர்மைமிகு மறைந்த ATS தலைவர் ஹேமந்த் கார்கரே – அவர்களை இந்தியாவிற்கு அளித்த இறைவனுக்கே எல்லா புகழும்..!
hemant+karkare.jpg


கார்கரேவின் மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணையின் முடிவில் ஆதாரங்களுடனான அவரின் அதிரடி கைது நடவடிக்கைகள் மொத்த இந்தியாவிலும் பூகம்பத்தை கிளப்பியது. அதுவரை ‘இஸ்லாமிய தீவிரவாதிகள்’ என்று திரும்ப திரும்ப வாய் வலிக்கும் அளவுக்கு சொன்னவர்கள்… இப்போது ‘தீவிரவாதத்துடன் மதம் இணைக்கப்படக்கூடாது’ என்று திரும்ப திரும்ப வாய் வலிக்கும் அளவுக்கு சொல்ல ஆரம்பித்தனர்.
குண்டுகள் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை என்பது அதிர்ச்சி. ‘வெடிகுண்டு சப்ளையர்கள்’ மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் இந்திய ராணுவ உயரதிகாரிகள் என்பது பெரிய அதிர்ச்சி. அவற்றை பொது இடங்களில் வெடிக்க வைத்து அப்பாவி மக்களை கொன்றவர்கள் தீவிர சங்பரிவார ஹிந்துத்துவா துறவிகள் என்பது அதிர்ச்சியோ அதிர்ச்சி. மொத்த இந்தியாவையும் அது உலுக்கி எடுத்து புரட்டிப்போட்டது. இது, அதுவரை நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் மீள் விசாரணை நடத்த வைத்தது. மீள் விசாரணை நடந்த அனைத்தும் காவி ஷைத்தான்களிடம் தான் போய் நிற்கிறது. வகை தொகையாக மாட்டி, இவர்கள் கைது செய்யப்படும் படலம் அடிக்கடி நடந்தேறி வருகிறது.
இப்போது அனைவருக்கும் ஒரு முக்கிய கேள்வி உதித்திருக்க வேண்டும். கேள்வி வர வேண்டும் என்பதால்தான் இப்பதிவில் ஆங்காங்கே அவ்வரிகளை மட்டும் இப்படி சிகப்பு வண்ணமிட்டு தனியாக அடையாளப்படுத்தி உள்ளேன்.
"பற்பல குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைது நடவடிக்கைக்கு பின்னர், இதுவரை… அதே குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வர முடியாமல் தடாவிலும் பொடாவிலும் பல வருடங்களாய் உள்ளே கிடக்கும் முஸ்லிம்கள் நிரபராதிகள்தானே..? புதிய ஹிந்துத்துவா கைதிகள் வந்தபின் பழைய முஸ்லிம் கைதிகள் வெளியே வந்துதான் இருக்க வேண்டும். முக்கியமற்ற செய்திகள் என்பதால்… அச்செய்திகளை தினசரிகளில் தேடினால் கிடைக்குமா என்று தெரியவில்லை. தமிழகம் சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டும் எனக்குத்தெரிந்ததை நான் முன்னரே சொல்லிவிட்டேன். அதனால்தான் மேலே சொன்னேன்… ‘இதெல்லாம் செய்தி அல்ல. கைதாவது மட்டும்தான் செய்தி’ என்று..!

இப்படி…. மேற்படி குண்டுவெடிப்பு வழக்குகளில் தலைப்புச்செய்தியாய் கைது செய்யப்பட்டு பலவருஷம்… விசாரனைக்கதிகளாய் சிறையில் வைக்கப்பட்டு… பின்னாளில் ரகசியமாய்… ‘குற்றமற்றவர்’ என நீதி தேவதையால் விடுவிக்கப்பட்ட எந்த ஒரு முஸ்லிமும் இழப்பீடு கோரியதாகவோ, எந்த நஷ்டஈடும் இதுவரை தரப்பட்டதாகவோ செய்தி இல்லையே… ஏன்?
நாம் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த இதே போன்ற பிரச்சினை ஒன்றை பார்ப்போம்.
2007, ஜூன் 30: இங்கிலாந்தின், கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன் கஃபில் என்பவர் எரிவாயு சிலிண்டர் நிரப்பிய வாகனத்துடன் தன்மீதும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. 92% உடல் பாகங்கள் எரிந்த நிலையில் கஃபில் உயிருக்கு போராடியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இவர் ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் மருத்துவர் முஹம்மது ஹனீபின் உறவினர். அதுமட்டுமா? ஹனீப் முன்பொருமுறை 2006-ல் லண்டன் சென்றிருந்த போது, தான் லண்டனில் வாங்கி உபயோகித்த புது சிம் கார்டை அதன் அடுத்த இரண்டாண்டு வேலிடிட்டி மற்றும் மிச்சம் இருந்த சில பவுண்டுகளினால் தூக்கி வீச மனசில்லாமல், உறவினர் கஃபிலிடம் கொடுத்துவிட்டு ஆஸ்திரேலியா போய்விட்டார். அந்த சிம்மைத்தான் விபத்தின் போது கபில் உபயோகித்திருந்தார். (ஊருக்கு விடுமுறைக்கு சென்றால்… அது முடிந்தவுடன் ஏர்டெல், ஏர்செல், ஐடியா, டோகொமோ, பிஎஸ்என்எல் போன்ற எந்த சிம்முகளையும் யாருக்கும் தராமல் உங்களுடனேயே எடுத்து வந்து விடுங்கள்… ஜாக்கிரதை..!)
இது போதாதா? அவ்வளவுதான், இங்கிலாந்தில் நடந்த குண்டுவெடிப்பில், சந்தேகத்தின் பேரில், ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு தன் பிறந்து ஆறு நாள் ஆன குழந்தையை காண ஏழு நாள் லீவில் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தடைந்த டாக்டர் முஹம்மது ஹனீபை ஜூலை-2, அன்று கைது செய்து, ஆஸ்திரேலிய அரசு தன் விசாரணை வளையத்தில் வைத்தது. உடனே நம் ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும்..? "இந்திய முஸ்லிம்களுக்கு உலகளாவிய அளவில் பயங்கரவாத நெட்வொர்க் உள்ளது(?!)" என்று கூசாமல் பொய் புளுகின.
mohamed-haneef.jpg
அச்சமயம், ஹனீப் பதினான்கு நாட்கள் (ஜூலை-2 முதல் ஜூலை-16வரை) ஆஸ்திரேலியாவில் சிறை வாசம் அனுபவிக்க வேண்டியதாயிற்று. பின்னர் அவர் 10,000 டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், 27 ஜூலை அன்று அவர் மீது போட்ட அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் திரும்பப்பெற்றுக்கொண்டு விட்டது ஆஸ்திரேலியா. உடனே இதற்காக இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார் ஹனீப். பின்னர் இந்தியா வந்து தங்கி துபாயில் பின்னர் வேலைக்கு சேர்ந்தார்.

சென்ற ஆண்டு டிசம்பரில் இழப்பீட்டு வழக்கு தீர்ப்பும் வந்தது. படித்திருப்பீர்கள்… /// ஆஸ்திரலிய அரசால் குற்றம் சாட்டப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு துயரம் அனுபவித்த இந்திய முஸ்லிம் இளைஞர் முஹம்மது ஹனீப் என்ற மருத்துவரிடம் கடைசியாக ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அத்துடன் இந்திய நாணய மதிப்பில் நான்கரை கோடி ரூபாய் வரை இழப்பீட்டு தொகையாக வழங்க முன்வந்துள்ளது. சரியான தொகை ரகசியமாக உள்ளது. அத்துடன் மருத்துவரான ஹனீபுக்கு ஆஸ்திரேலிய அரசின் சார்பில் பணி வழங்கவும் முன்வந்துள்ளது ///…என்று..!
இது அங்கே சாத்தியம் என்றால் இதே கதைதானே இங்கும்…? சொல்லப்போனால், இங்கே அனுபவித்தவர்களின் துயரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் அனுபவித்திருப்பாரா ஹனீப்…? இதற்கே இவ்வளவு இழப்பீடு தருகிறார்கள் என்றால்… இதுவரை விசாரணை கைதிகளாகவே சிறையில் இருந்து ஆயுள்தண்டனையையே அனுபவித்து விட்டு குற்றமற்றவர் என விடுதலையான பலர் பற்றி இந்திய அரசும், நீதித்துறையும், ஊடகமும் ஏன் கண்டுங்காணாதது போல மவுனமாய் உள்ளன?

கடந்த பதினேழு ஆண்டுகளாக முஸ்லிம்கள்- எத்தனையோ இளைய தலைமுறையினர், யாரோ வைத்த குண்டுகளுக்காக இன்றும் சிறை வாசம் அனுபவித்த வேதனையே இன்னும் அவர்களை விட்டு விலகாத நிலையில்… அவர்களுக்காக இந்திய அரசின் இழப்பீட்டினையும், மன்னிப்பையும் கேட்பது யார்? எப்போது ? எப்படி?
மேற்படி அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளிலும் எப்படியும் குறைந்தது ஆயிரம் பேராவது இதுபோல பாதிக்கப்படிருப்பார்கள் அல்லவா? பலவருஷம் கழித்து வெளிவந்த எந்த ஒரு நிரபராதியும் தனக்கு நஷ்ட ஈடு கோரி ஏன் வழக்கு தொடுக்க வில்லை? தமக்கு அது நிச்சயமாக கிடைக்காது என்று 100% உணர்ந்ததால்தானா..?
ஆஸ்திரேலியா இழப்பீடு தருவதை… ‘நீதி வென்றது.’.. ‘தர்மம் ஜெயித்தது’… ஆஸ்திரேலியாவின் பெருந்தன்மை… நேர்மை… என்றெல்லாம் பெருமையாக எழுதிய-சொன்ன எல்லா ஊடகங்களும், அதே நீதியை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏன் கேட்கவில்லை? இதுபற்றி எல்லாம் இந்திய அளவில்-தமிழக அளவில் எந்த ஒரு முஸ்லிம் அமைப்புகளும் கூட இதுவரை எந்த ஒரு போராட்டமும் செய்ய வில்லையே…! விரக்தியா? இரண்டாந்தர குடிமகனுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையா? குடிமகனே இல்லாத ஹனிபே வேறொரு நாட்டில் நான்கரை கோடி ரூபாய் இழப்பீடு வாங்கும் நிலை இருக்கும்போது… சிறையில் நொந்து நூடுல்சானவர்கள் கேட்காவிட்டாலும் மற்றவர்கள் இவர்களுக்காக–இந்தியக்குடிமகன்களுக்காக கேட்கலாமே..!

நல்லவேளை… ஹனீப் ஆஸ்திரேலியாவிலேயே கைது செய்யப்பட்டார்..! அவர் மட்டும்… ஒரு பேச்சுக்கு… ஆஸ்திரேலிய போலீசின் சோம்பேறித்தனத்தால்… பெங்களூர் கிளம்பி வந்திருந்தாரேயானால்…? ஆஸ்திரேலியாவின் வேண்டுகோளுக்கிணங்க… அன்றே பெங்களூர் விமான நிலையத்தில் ஹனீப் பொடா-வில் கைதாகி… பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு… ஒருநாள் நிரபராதி என ரிலீஸ் ஆனால்… பேசாமல் வீட்டைப்பார்த்து நடையைக்கட்டி இருப்பார்..!! இழப்பீடாவது… மண்ணாங்கட்டியாவது…!!!
நஷ்ட ஈடு விஷயத்தில் நமது ‘நீதி தேவதை’ தொலைந்து போய் விட்டது போலும்…! அதனை ஆஸ்திரேலியாவில் தேடி கண்டெடுத்திருக்கிறார் டாக்டர் ஹனீப்..! வேற்று நாட்டு மனிதனுக்கே அங்கே நீதி கிடைக்கிறது. இங்கே நம் இந்திய குடிமகன்களுக்கு உரிய நீதி என்னவாயிற்று?

300px-Supreme_court_of_india.JPG
இந்திய உச்சநீதி மன்ற கணம் கோர்ட்டார் அவர்களே..!
ஆஸ்திரேலியாவில் முஹம்மது ஹனீப் கண்ட அந்த நீதி தேவதையை இந்தியாவிற்கு மீட்டு வர முயற்சி எடுப்பீர்களா? உங்களால் முடிகிற விஷயம்தானே..!

இன்னொரு அன்பு வேண்டுகோள்:-

ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி எனத்தெரிந்தால் அவரை விடுவிப்பதுடன் அதே தீர்ப்பிலேயே… அது பொய்க்குற்றச்சாட்டு என்றாகிவிடுவதால், இவருக்கு… இக்காலத்துக்குள்.. இவ்வளவு.. நஷ்ட ஈட்டுத்தொகை அரசு அல்லது குற்றம் சாட்டியவர் அளிக்க வேண்டும் என்று கூறி ஒரேயடியாய் கணக்கை பைசல் பண்ணிவிட வேண்டியதுதானே? அதற்கென எதற்கு ஒரு தனி வழக்கு? தீர்ப்புக்காக எத்தனையோ வழக்குகள் உங்கள் முன் மலைபோல தேங்கியுள்ளனவே? ஒத்தைக்கு ரெட்டையாய் இதுவேறு எதற்கு ஒவ்வோர் வழக்கிலும் தனிச்சுமை உங்களுக்கு? சிந்திப்பீர்களாக..!

தே.மு.தி.க அசைக்க முடியாத சக்தி எ‌ன நிரூபண‌ம் : விஜயகா‌ந்‌த்

 



5தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் தே.மு.தி.க ஒருஅசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளதாகவும், இந்த தேர்தலில் கட்சி தனது பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”என்றும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மத்தியலும், மாநிலத்திலும் ஆட்சி செய்கின்றவர்கள் ஒரே கூட்டணியாக உள்ளனர். ஆட்சி அவர்கள் கையில், அதிகார துஷ்பிரயோகத்திற்குப் பஞ்சமில்லை. காவல்துறை கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது. பண பலம் அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை வாக்காளர்களுக்கு உணவிலோ, உடைகளிலோ, செலவழிக்கும் பணத்திலோ குறையில்லாமல் பார்த்துக் கொள்ளத் துடித்தனர்.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி முன்பே டோக்கன் கொடுத்து பயனில்லை. தேர்தல் ஆணைய‌த்‌திடம் எடுத்துச் சொல்லியும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. படை பலம் அவர்களிடம் மாற்று கட்சிக்கு தேர்தல் வேலை செய்தாலோ, வாக்காளர்கள் வாக்களித்தாலோ அவர்களை உருட்டி மிரட்ட சிறிது கூடத்தயங்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இதைத்தான் திருமங்கலம் பார்முலா என்று கொண்டாடினர். 
 
பணம் சூறாவளியாகக்கூட அல்ல, சுனாமியாக வாக்காளர்களுக்கு மட்டுமல்ல வழிப்போக்கர்களுக்கும் சேர்த்து தாராளமயமாக்கப்பட்டது என்பது ஊர் அறிந்த உண்மை.
எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்துவிடுவோம் என்று ஆளும் வர்க்கத்தினர் ஆர்ப்பரித்தனர். இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளரையே தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டனர். இதர கட்சி நிர்வாகிகள் ஆளுவோர் பக்கம் சேர்ந்தால் எதையும் பெறலாம் என்ற நிலையை உருவாக்கினர். இவற்றைக் கண்டு மனசாட்சியுள்ள மக்களோ, தமிழ்நாட்டில் இனி தேர்தல்கள் என்றால் வெறும் சடங்குகளாகி விடுமோ என்று பயந்தனர்.
இந்த சூழ்நிலையில் ஜனநாயகத்திற்கே சவாலாக வந்த சர்வாதிகார கும்பலை எதிர்த்து தே.மு.தி.க தன்னந்தனியாக போட்டியிட்டது. 
 
கையில் காசு இல்லை. மனத்தில் மாசு இல்லை. நெஞ்சுரமும், நேர்மைத்திறமுமே தே.மு.தி.க.வின் ஆயுதங்கள், குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கின்ற ஜனநாயகத்தை ஆளும் வர்க்கம் குழிதோண்டி புதைத்து விடக்கூடாது என்பதால், தே.மு.தி.க இந்த தர்ம யுத்தத்தில் ஈடுபட்டது.
 
தே.மு.தி.க.வை அழித்துவிடுவோம் என்று ஆர்ப்பரித்தவர்கள் எண்ணத்தில் மண் விழும் வகையில் இந்த இடைத்தேர்தலில் தே.மு.தி.க கணிசமான முறையில் தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 10 சதவிகித வாக்குகளைப் போல இரண்டரை மடங்கு இந்த இடைத்தேர்தலில் வாக்குகளை தே.மு.தி.க பெற்றுள்ளது.
 
உதாரணத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பர்கூரில் 18,223 ‌லிரு‌ந்து தற்பொழுது 30,738 வாக்குகளையும், ஸ்ரீவைகுண்டத்தில் 8,347 லிருந்து 22,468 வாக்குகளையும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைப் பிடித்துள்ள ஊழல் நோயை ஒழித்துக் கட்ட தமிழ்நாட்ட மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதும், சர்வாதிகார பிடியிலிருந்து ஜனநாயகத்தை மீட்டு உயிரூட்ட முன்வந்துள்ளனர் என்பதையும், எத்தகைய பணச்சுனாமி அடித்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் நேர்மையான வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.மக்களையும், தெய்வத்தையும் நம்பி தே.மு.தி.க நிற்கின்றது என்று, நான் கூறி வருவதைப் போல தே.மு.தி.க.வை மக்களும், தெய்வமும் கைவிட வில்லை. மூன்று மாதங்களிலேயே அபரிமிதமான வளர்ச்சியை தே.மு.தி.க.விற்கு அளித்துள்ளனர். தமிழ்நாடு ஒரு நல்ல எதிர்காலத்தைப் பெற வேண்டுமென்று விரும்பும் நல்லவர்கள் பெருமைப்படத்தக்க வகையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் அறிகுறியாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. ஆபாசங்களுக்கும், அதட்டல், மிரட்டல்களுக்கும் இரையாகாமல், அல்லும், பகலும் அயராது பணியாற்றிய கட்சியினருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுக்களைக் குவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
 
கருணாநிதியின் குடும்ப சர்வாதிகாரத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்று கருதி வாக்களித்த எம்ஜிஆர். விசுவாசிகளுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இந்த நாடு நல்ல அரசியலைப் பெற வேண்டுமென்றும், இளைய தலைமுறையினருக்கு நல்லஎதிர்காலம் அமைய வேண்டுமென்றும் எண்ணி எதற்கும் இடம்கொடுக்காமல் தே.மு.தி.க.விற்கு துணிவோடும், தெளிவோடும் வாக்களித்த இளைஞர்கள், தாய்மார்கள் உள்பட அனைத்து வாக்காளர் பெருமக்களுக்கு என்றும் நான் நன்றியுள்ளவன் ஆவேன்.
 
இந்த இடைத்தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழ்நாட்டு அரசியலில் தே.மு.தி.க ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் இயக்கம் என்பதையும் நிரூபித்து காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு என்னால் இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்” எ‌ன்று ‌‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஏர்போர்ட்டில் லக்கேஜ் தவறிவிட்டதா ? ஒரே ஒரு ‘கிளிக்’ செய்தால் வீடு தேடி வரும்

ஏர்போர்ட்டில் தவறிய பொருள்


ஏர்போர்ட்டில்  லக்கேஜ் தவறிவிட்டதா ? ஒரே ஒரு ‘கிளிக்’ செய்தால் வீடு தேடி வரும்




வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்!!!

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி! தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான். (அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்) ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.

நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது. வீதியில் உலாவரும் வீடியோ கேமரா கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத­ல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும். மணமகன் இல்லத்தி­ருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன. குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு! வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும்.

ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத­ல் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர். அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். 

பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது. இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி, மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!
”(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்” என்ற (24:31)

வசனத்தை அல்லாஹ் அருளிய போது,
அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 4758 இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ர­லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.
தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே? ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போ­லித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போ­லித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. 

இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்­லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்? ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி 9 இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா? இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை.
ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: முஸ்­லிம் 3971

பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள். ரோஷம் இழந்த ஆண்கள் இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

”என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ர­லி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, ”ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ர­லி), நூல்: புகாரி 6846, 7416

ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான். இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.
திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும். போட்டோக்கள் கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது சமீபத்தில் வந்த புதிய கலாச்சாரம் என்றால் போட்டோ எடுத்தல் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது. இங்கும் மணமகளை கேமராக்காரன் முதன்முத­ல் பார்த்து தனது கேமராவைப் போலவே கண் சிமிட்டிக் கொள்கின்றான்.

வீடியோ கேஸட்டாவது பிளேயரில் போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்த போட்டோக்களோ ஆல்பங்களில் சேகரிக்கப்பட்டு அவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது. நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர­லி), நூல்: புகாரி 3322 ஆயிஷா (ர­லி) வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.

எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால் ஏற்படும் அனைத்து தீமைகளும் திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக! முஃமின்களே! நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்-குர்ஆன் 24:31)

மாணவரின் அரிய கண்டுபிடிப்பு : டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்

 மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.



உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.
இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும். டூவீலர்களால் ஏற்படும் விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்.

ஜி.பி.எஸ். (Global Positioning System)

ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன. அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள். இதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.



இணைப்பின்றி கூகுள் மேப்ஸ் : ஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம். ஜிபிஎஸ் வசதியுடன் கேம்கார்டர்: ஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.

காருக்கான பிளாக் பாக்ஸ்: தனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். ஜிபிஎஸ் ஜாம்மர்: உங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது. 

மிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்: வரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும். ஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும். 



இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

        பிரவுசர் சந்தையில் எப்படியும் தன் இடத்தை விட்டுவிடக் கூடாது என்ற முயற்சியில் அனைத்து பிரிவுகளிலும் உயர்ந்த இலக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரவுசராக, இது உள்ளது. இதன் சோதனைத் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திய அனைவரும் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமைந்த இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை இங்கு காணலாம். 


இந்த பிரவுசர் தொகுப்புடன், பிரவுசரை, பிரவுசராகத் தராமல் அதற்கும் மேலாக ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாக மைக்ரோசாப்ட் வடிவமைத் துள்ளது. இப்போது கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையோர், இணையத்திலேயே இயங்கு கின்றனர். அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் இணையத்திலேயே பெறப்பட்டு பயன்படுத்தப்படும் முழுமையான காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்நிலையில் இணையப் பக்கங்களை, ஒரு பிரவுசர் மட்டுமே தர முடியும் என்று எண்ணுவது பொருத்தமில்லை என்று மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. மேலும் ஒரு பிரவுசரில், தேவைப்படும் அப்ளிகேஷன் களையும் பதித்து வழங்க முடியும் என்ற நிலையும் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. 


       புதிய பிரவுசர் பதிப்பில், திறன் கூடிய ஹார்ட்வேர் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் செயல்பாடு உதவியுடன், பிரவுசரின் இயங்கு திறன் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இணையப் பக்கங்களின் வரையறைகள் அனைத்தும் இதில் மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. 

புதிய இன்டர்பேஸ்: இந்த பிரவுசரின் புதிய முகப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிரவுசரின் முகம் மறைக்கப்பட்டு, பார்க்கப்படும் இணையப் பக்கம் முழுமையாகத் தெரிகிறது. டைட்டில் பாரில் லோகோ மற்றும் பெயர் இல்லை. தரப்படும் இணையப் பக்கத்தைச் சுற்றி ஒரு கட்டமாகத்தான் இது தரப்பட்டுள்ளது. தேவையில்லாத அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. லோகோ, டூல்பார், மெனு, பட்டன் என எதுவும் காட்டப்படவில்லை. வலது மேல் பக்கத்தில் சர்ச் பாக்ஸ் எதுவும் காட்ட்டப்படவில்லை.கமாண்ட் பார் மற்றும் பேவரிட் பார் மறைத்து வைக்கப் பட்டுள்ளன. கீழாக ஸ்டேட்டஸ் பார் இல்லை. ரெப்ரெஷ் மற்றும் ஸ்டாப் பட்டன்கள் வண்ணத்தில் இருப்பதற்குப் பதிலாக, கிரே கலரில் உள்ளன. வலது மேல் பக்கத்தில் மூன்று பட்டன்கள் கிரே கலரில் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்குவதன் மூலம், ஹோம் பேஜ், பேவரிட்ஸ் மற்றும் டூல்ஸ் மெனுக்களைப் பெறலாம். இவற்றின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், இவை வண்ணம் பெறுகின்றன. திறக்கப்பட்டுள்ள இணையப் பக்கங்களுக்கான டேப்கள், மிகவும் சிறியதாகவும், அதே நேரத்தில் மிகவும் தெளிவாகவும் துல்லிதமாகவும் இருக்கின்றன. இவை அட்ரஸ் பாருக்கு வலது புறத்தில் அமைக்கப்படுகின்றன. முன்பு இருந்த அனைத்தும் மறைக்கப்பட்டு அல்லது சிறியதாக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், முந்தைய பிரவுசர்களில் இருந்த பட்டன்களில், இடது மேலாக கருநீல வண்ணத்தில் இருந்த பட்டன் தான் சற்று சிறிதாகக் காட்டப்படுகிறது. இன்னும் சில அம்சங்களைக் கூறுவது இங்கு நல்லது. இந்த பிரவுசரில் எச்சரிக்கை மற்றும் பிற டயலாக் பாக்ஸ்கள் கிடைப்பதே இல்லை. இவற்றிற்குப் பதிலாக, இந்த செய்திகள் எல்லாம், விண்டோவின் கீழாக உள்ள, நீள பாரில் காட்டப்படுகின்றன. இடோரா இமெயில் கிளையண்ட் பயன்படுத்துபவர்கள் இதே போல பெற்றிருப்பார்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இவை நம் வேலைக்குக் குறுக்கிடும் டயலாக் பாக்ஸ்களாகக் கிடைக்கும். இன்னொரு சிறப்பு அம்சம், தேவைப்படாத டேப்களை இழுத்து ஒரு ஓரத்தில் வைத்திடும் வசதி ஆகும். இதில் கூகுள் குரோம் பிரவுசரில் உள்ளது போல, அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பாக்ஸ் இணைக்கப்பட்டு தரப்படுகிறது. மைக்ரோசாப்ட், இதனை பிரைவேட் ஒன் பாக்ஸ் என அழைக்கிறது. 

மிக மிக என்னைக் கவர்ந்த ஒரு சிறப்பம்சம், இதன் குறித்து எடுத்துவைத்துக் கொள்ளும் ஷார்ட் கட்களாகும் (Pinned Shortcuts). இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் இணைய தளத்தினை ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போல வைத்து இயக்கலாம். இதற்கான டேப்பினை இழுத்து டாஸ்க் பாரில் போட்டு வைத்து, தேவைப்படும்போது புரோகிராம் இயக்குவது போல, கிளிக் செய்து இயக்கலாம். இது புரோகிராம் ஒன்றின் ஷார்ட் கட் போலவே அமைக்கப்படுகிறது. இதனை பேவரிட் ஐகான் என்ற பாணியில் “Favicon” என்று அழைக்கலாம். 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் தரப்பட்டிருந்த பல பாதுகாப்பு கூறுகள் இதில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அத்துடன் முக்கியமாக ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த பிரவுசர் மிக மிக வேகமாக இயங்குகிறது. இணையப் பக்கங்கள் படு வேகமாக எடுத்துத் தரப்படுகின்றன. இவற்றின் ஊடே செல்வதும் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை வேறு பிரவுசருடன் ஒப்பிட்டெல்லாம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வேகமாக உள்ளது. இரண்டு பிரவுசருக்கிடையேயான வேறுபாடெல்லாம், ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்காகத்தான் உள்ளது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 தொகுப்பில் நன்றாக இயங்குகிறது. விண்டோஸ் விஸ்டாவுடன் அதன் சர்வீஸ் பேக் 2 பதியப்பட்டிருந்தால், அதிலும் இதனைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்தவே முடியாது. அதற்கு மைக்ரோசாப்ட் பல காரணங்களைச் சொல்லி உள்ளது. 
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐப் பயன்படுத்துபவர்களிடம் பிரவுசர் குறித்த கருத்துக் களைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் தான், பதிப்பு 9 உருவாக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான கருத்துரைகள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் மிகச் சிறப்பானவை என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில வசதிகளை, மொத்தத்தில் 1.5% பேர் தான் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது போன்ற பல தகவல்கள் இந்த கணிப்புக் கருத்துரைகள் மூலம் தெரியவருகிறது. எடுத்துக்காட்டாக, பேவரிட்ஸ் பட்டியலை, தற்போது இந்த பிரவுசர் பயன்படுத்தும் 18% பேர்தான் விரும்புகிறார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நூற்றில் ஒருவர் கூட இந்த புக்மார்க் பட்டியலில் போல்டரை உருவாக்கியதில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது. (என்ன நீங்களும் உருவாக்கவில்லையா!) இதனால் பேவரிட்ஸ் பார் மற்றும் கமாண்ட் பார், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ல் மறைக்கப்பட்டுள்ளன. 

பதிப்பு 8ல் தரப்பட்டுள்ள டேப் குரூப் இதிலும் உள்ளது. ஏதேனும் ஒரு லிங்க்கில் கண்ட்ரோல்+கிளிக் செய்திடுகையிலும் அல்லது ரைட் கிளிக் செய்து புதிய டேப்பில் திறக்கையிலும், முதன்மைத் தளத்தின் டேப்பும், புதிய லிங்க்கின் டேப்பும் ஒரே வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இது இன்னும் சோதனைத் தொகுப்பு தான். மேலே கூறப்பட்ட அம்சங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்டு இறுதித் தொகுப்பில் கிடைக்கலாம். இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி : : http://windows.microsoft. com/enUS/internetexplorer/download/ie9/worldwide . இதில் 29 மொழிகளுக்கான பதிப்புகள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.