Monday, February 14, 2011

ரஜினியும் கமலும்


ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தொழில்முறையில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் தங்களின் கருத்து வேறுபாடுகளை என்றும் தங்களுடைய நட்பில் போட்டுக்குழப்பிக் கொள்வதில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கமலின் திரையுலகம் 50 ஐ குறிப்பிடலாம். இதில் இருவருமே பேசிய பேச்சுகள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு விஷயம்.
ஆனால் ரஜினி எப்போதுமே கமலை விட ஒருபடி உயர்வாக தன்னுடைய நட்பை வெளிப்படுத்தி வருகிறார். அது திரைப்படமாக இருக்கட்டும் பொது வாழ்க்கை ஆகட்டும் எப்போதும் கமலை விட்டுக்கொடுத்ததில்லை. ஒரு உண்மையான நல்ல நட்பிற்கு இலக்கணமாக திகழ்கிறார். திரைப்படம் என்றால் பல படங்களைக் கூறினாலும் எடுத்துக்காட்டாக சிவாஜியில் முல்த்தானி மெட்டியில் குளித்து விட்டு “கமலஹாசன் மாதிரி வரப்போகிறேன்” என்று கூறுவதும் சமீபத்திய எந்திரன் படத்தில் கமலுடைய தொலைபேசி எண்ணை ரோபோ சொல்லும் போது அது அனைவருக்கும் தெரியும் என்று கூறுவதிலும் எப்போதும் கமலை இணைத்தே வந்து இருக்கிறார்.
இவை எல்லாம் இயக்குனர் வைத்தக்காட்சி என்று ஒரு சிலர் கூறினாலும் அதை ரஜினி அனுமதிக்கவில்லை என்றால் வர வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ரஜினியின் விருப்பமில்லாமல் இன்னொரு நடிகரைப்பற்றி வசனம் வர வாய்ப்பில்லை இது ரஜினி என்றில்லை அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பொருந்தும். இதைப்போல கமலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை அப்படி எதிர்பார்ப்பதும் ஒரு அர்த்தமற்ற செயல். ஏனென்றால் ஒவ்வொருவொருவருக்கும் ஒவ்வொரு கோட்பாடுகள் இருக்கும் அதன் படி நடப்பார்கள் அதில் நாம் ரஜினி வைக்கும் போது கமல் ஏன் வைக்கக்கூடாது என்று கேட்பது நியாமான ஒன்றில்லை.
கமல் படம் என்று வெளியானாலும் ஆர்வமாக சென்று பார்த்து அதைப் பாராட்டி அது நன்றாக உள்ளதோ இல்லையோ அவருக்கு ஒரு உற்சாகமான வார்த்தையைக் கூறி அவரை பாராட்டுவார். தனக்கு நெருக்கமில்லாத அறிமுகமில்லாத இயக்குனர் படங்கள் வெளிவந்தாலே அதைப்பாராட்டுபவர் அப்படி இருக்கும் போது தன்னுடைய நெருங்கிய நண்பன் படம் வரும்போது பாராட்டாமல் இருப்பாரா! அதை இது வரை தவறவிடாமல் பாராட்டி வருகிறார். பாராட்டி வருகிறார் என்பது பொய் என்று சிலர் நினைத்தாலும் கமலுக்கு உற்சாகம் கொடுக்கிறார் என்ற வாதத்தை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் கமல் இன்று வரை ரஜினியின் எந்திரன் படத்தை பாராட்டவில்லை படம் வெளிவந்து நீண்ட நாட்களுக்குப்பிறகு அவரிடம் எடுத்த பேட்டியில் பின்வருமாறு கூறி இருக்கிறார். தமிழ்படுத்தினால் அர்த்தம் மாறலாம் என்று அப்படியே கொடுத்து இருக்கிறேன்.
Robot” is successful not because of the content, but due to the marketing strategy and of course, Rajini is a saleable star. Huge-budget films are good as long as they have solid content Link
கமல் உங்களுக்கு எப்படி இதைப்போல கூற முடிந்தது! விளம்பரத்தால் ஒரு படம் வெற்றி பெற முடியும் என்றால் அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்ட சன் பிக்சர்சின் “வேட்டைக்காரன்” “சுறா” போன்ற படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? கண்டிப்பாக படம் என்றில்லை எதற்கும் ஒரு விளம்பரம் அவசியமே ஆனால் அது மட்டும் ஒருவருக்கு வெற்றியைத் தந்து விடாது என்பது நிரூபிக்க எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும். ஒருபடத்தின் கதையும் திரைக்கதையும் சரியாக அமைந்தால் மட்டும் ஒரு படம் வெற்றி பெற முடியும்.
உங்களின் மன்மதன் அம்பு படத்திற்குக் கூட இந்தியாவில் இருந்து பலரை மலேசியா அழைத்து வந்து அங்கே இருந்து சிங்கப்பூருக்கு சொகுசு கப்பலில் அழைத்து வந்து பிரம்மாண்டமாக பாடல் வெளியீட்டு விழா நடத்தினீர்கள். தமிழகத்தில் எப்படியோ இங்கே சிங்கப்பூர் உள்ளூர் தொலைக்காட்சியில் வார இறுதியில் உங்கள் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியைத் தான் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தார்கள். இது இல்லாமல் விஜய் டிவி யில் சிறிது நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் வந்து படத்தைப் பற்றிக் கூறிக்கொண்டு இருந்தீர்கள். எந்திரன் அளவிற்கு இல்லை என்றாலும் அதற்கு போட்டியாக விளம்பரம் செய்து கொண்டு இருந்தீர்கள். இந்த அளவிற்கு விளம்பரம் செய்யப்பட்ட உங்கள் பாணியில் கூற வேண்டுமென்றால் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட உங்கள் மன்மதன் அம்பு படம் எப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் உங்கள் படத்தை வாங்கிய ஜெமினி பிலிம் நிறுவனத்தை கேட்டுப்பாருங்கள் விளக்கமாக கூறுவார்கள்.
ரஜினி ஒரு விற்பனை மதிப்புள்ள நபர் தான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அப்படி நீங்கள் நினைக்கும் ரஜினி நடித்த பாபா மற்றும் குசேலன் படம் ஏன் வெற்றி பெறவில்லை? உங்களை விட உங்கள் நண்பர் ரஜினி இதை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார் அதனால் தான் குசேலன் படத்தின் ஒரு காட்சியில் “யார் நடித்தாலும் படம் சரி இல்லை என்றால் மக்கள் படத்தை புறக்கணித்து விடுவார்கள்” என்று கூறி இருப்பார். எனவே யாராக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் இல்லை என்றால் படம் பப்படம் தான்.
ரஜினி கமலின் மன்மதன் அம்பு படத்தை விருப்பமாக கேட்டுப் படம் வெளியான நாளுக்கு ஒரு நாள் முன்பு பார்த்து அவரை உற்சாகப்படுத்தினார். கமல் ரஜினியின் அனைத்து படங்களையும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமான ஒன்று. ஒரு குசேலன் படத்தையோ பாபா படத்தையோ அல்லது பக்கா மசலாப்படமான சிவாஜி படத்தையோ பாராட்டக் கூறி எதிர்பார்க்கவில்லை ஆனால் எந்திரன் படம் அப்படி அல்ல.
கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகருக்கு எடுத்துக்காட்டாக கமலைத்தான் கூறுவார்கள் தற்போது சூர்யா போன்று ஒரு சில இளம் நடிகர்களும் வந்து விட்டாலும் இன்றும் பலரின் நினைவிற்கு வருவது கமல் தான். மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேர மேக்கப் போட்டு மிகவும் சிரத்தையாக நடிப்பார் அதைப்பற்றி பேட்டியும் கொடுத்து இருப்பார். எனக்கு இன்று வரை கமலின் மேக்கப் என்றால் நினைவிற்கு வருவது அன்பே சிவம் படம் தான் பல கோடி செலவழித்து எடுக்கப்பட்ட தசாவதாரம் படத்தின் மேக்கப்பை விட 100 மடங்கு சிறந்த ஒன்றாகும்.
Rajini with Mask ரஜினியின் பெருந்தன்மை நிச்சயம் கமலுக்கு இல்லை!ரஜினி மேக்கப் போட சிரமம் எல்லாம் எடுப்பதில்லை அதற்கு காரணம் ரஜினி தேர்ந்தெடுக்கும் கதைகள் அப்படி. இதைப்போல ரஜினியின் படத்திற்கு எந்திரன் படத்தைக் கூறலாம். பல மணிநேரம் மேக்கப் போட எடுத்துக்கொண்டார். சன் டிவி பேட்டியில் கூட “இரண்டு மணி நேரத்துல பானு மேக்கப் போட்டுடுவாங்க” என்று கூறிய போது நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. இரண்டு மணி நேரம் என்பது என்ன இரண்டு நிமிஷமா! எளிதாகக்கூற. தான் கஷ்டப்படுவதை பட்டதை என்றுமே பெருமையாக கூறிக்கொண்டதில்லை அதனால் தான் என்னவோ 7 மணி நேரம் அசையாமல் ரோபோ கதாப்பாத்திரத்திற்க்காக போட்ட மேக்கப்பைக்கூட கூறியதில்லை. மேக்கிங் ஆஃப் எந்திரன் மட்டும் சன் டிவி வெளியிடவில்லை என்றால் ரஜினி பட்ட சிரமம் எவருக்குமே தெரிந்து இருக்காது.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெண்கள் பலர் இவர் எதுக்கு எவ்வளோ கஷ்டப்படனும் என்று தான் நினைத்தார்கள். ரசிகர்கள் எல்லாம் வாயடைத்து விட்டார்கள் எவருமே ரஜினி இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்ல ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்வார்கள். இவ்வளவு சிரமப்பட்டு ரஜினி நடித்த படத்தை இந்திய அளவில் ஒரு தமிழ் படத்தை உயர்த்திய, வசூலில் இந்தியாவில் தற்போதைய நிலவரத்திற்கு முதல் இடத்தில் உள்ள ஒரு தகுதியான படத்தை குறைந்த பட்சம் கூட பாராட்டாமல் கூறியதைக் கூட ஏனோ தானோவென்று கமல் கூறியதை என்னவென்று கூறுவது!
ரஜினி ஏன் எப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறார்! அனைவராலும் புகழப்படுகிறார் என்பதற்கு காரணம் அவரின் பெருந்தன்மையும் ஒன்றாகும் கமல் தனிப்பட்ட முறையில் ஒருவேளை ரஜினியைப் பாராட்டி இருக்கலாம் ஆனால் ஒருவரை இதைப்போல விசயங்களில் அனைவர் முன்பும் பாராட்டுவதே சிறப்பாகும். நம்முடைய அலுவலகத்தில் கூட நம்மை தனியாக அழைத்துப் பாராட்டுவது எப்படி அனைவர் முன்பும் பாராட்டுவது எப்படி! இதை எல்லாம் ரஜினி என்றும் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அவரைப்போல அவரது ரசிகர்களும் இருப்பதில்லை.
நண்பேன்டா! என்ற வார்த்தைக்கு முழுத்தகுதியானவர் ரஜினி மட்டுமே! கமல் சிறந்த நடிகராக இருக்கலாம் நல்ல மனசு, நட்பு என்று வந்தால் அங்கே சந்தேகமில்லாமல் ரஜினியே அனைவரின் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்

நடிகனாக ஆகியிராவிட்டால் தாதாவாக மாறியிருப்பேன்! - ரஜி​னி



"எந்​தி​ரன்' படத்​திற்​காக எந்​தி​ர​மாய் உழைத்த ரஜினி அதன் வெற்​றி​யால் உற்​சா​க​மாகி இருக்​கி​றார்.​ நடித்​தால் மட்​டுல்ல...​ நின்​றால்,​​ நடந்​தால்,​​ பேசி​னால் கூட ஸ்டைல்​தான் என்​னும் அள​விற்கு ரசி​கர் கூட்​டத்​தின் அபி​மா​னத்​தைப் பெற்ற அவ​ருக்கு தற்​போது வயது 61.​ சென்ற டிசம்பரில்  12ம் தேதி எந்த ஆரா​வா​ர​மு​மின்றி தன்​னு​டைய பிறந்த நாளை​யும்,​​ "அறு​ப​தாம் கல்​யாண'த்தை​யும் சிறப்​பாக கொண்​டா​டி​யி​ருக்​கி​றார் ரஜினி.​ சமீ​பத்​தில் அவர் ஓர் ஆங்​கில இத​ழுக்​குப் பேட்டி அளித்​தி​ருந்​தார்.​ ரஜி​னி​யைப் போலவே விறு​வி​றுப்​பும்,​​ பர​ப​ரப்​பும் நிறைந்த அந்​தப் பேட்டி இதோ.​
​ ​ ​ ​
இப்​போ​தெல்​லாம் பத்​தி​ரி​கை​க​ளுக்கு பேட்​டி​கள் கூட கொடுக்க முடி​யாத அள​விற்கு நீங்​கள் மாறிப் போன​தன் பின்​னணி என்ன?​

நோ நோ...​ நான் மாற​வில்லை.​ அதே ரஜி​னி​தான்.​ இப்​பல்​லாம் நான் யாருக்​கும் பேட்​டி​கள் கொடுப்​ப​தில்லை.​ ஏன்னா பேப்​பர்,​​ சேனல்ஸ் அனைத்​தும் எக்ஸ்க்​ளூ​ஸிவா பேட்டி வேணும்னு கேட்​கி​றாங்க.​ ஒருத்​த​ருக்​குக் கொடுத்து இன்​னொ​ருத்​த​ருக்​குக் கொடுக்​க​லேன்னா மத்​த​வங்க தப்பா நினைப்​பாங்க.​ இதை​விட,​​ எல்​லா​ருக்​குமே நோ சொல்​லிட்டா பிரச்​சினை இல்ல பாருங்க..​ மத்​த​படி மீடியா இன்​னிக்கு ரொம்ப பவர்​ஃ​புல்​லா​யி​டுச்சி...​

"எந்​தி​ரன்' படத்​தின் வெற்றி உங்​களை ரொம்​ப​வும் ரிலாக்​ஸôக்​கி​டுச்சே....!​​

ஓ யெஸ்...​ ஒரு மாநில மொழிப் படத்​தில் முதல் முறையா இவ்​வ​ளவு பெரிய முத​லீடு செஞ்​சி​ருக்​காங்க.​ இது தமாஷ் இல்ல.​ கலா​நிதி மாறன் தைரி​யத்​துக்கு பாராட்​டுக்​கள்.​ அவர் இந்​தக் கதையை நம்​பி​னார்.​ எந்​தத் தப்​பும் நடக்​கலை.​ அது ஒரு பெரிய பொறுப்பு...​ கட​வுள் அரு​ளால எல்​லாம் நல்​ல​ப​டியா நடந்​தது.​

இந்​தப் படத்​திற்கு சம்​ப​ள​மாக ஆரம்​பத்​தில் நீங்​கள் ஒரு பைசா கூட வாங்​க​வில்லை என்று கூறப்​பட்​டதே...?​​

சம்​ப​ளத்தை அப்​பு​றமா கொடுங்​கன்னு நான்​தான் அவங்​க​கிட்ட சொன்​னேன்.​ அப்​பு​றமா வாங்​கிக்​கிட்​டேன் ​(சிரிப்பு)​.​ எனக்கு இப்போ பணம் வேணாம்னு அவங்​க​கிட்ட முதல்​லயே சொல்​லிட்​டேன்.​ எனக்​குத் தேவைன்னா நான் நிச்​ச​யம் கேட்டு வாங்​கிக்​கு​வேன்.​ அப்​படி ஒரு தேவை இல்​லாத பட்​சத்​தில் எதுக்கு ச்சும்மா...​ படத்​துக்​காக ஏற்​கெ​னவே நிறைய செலவு செய்​தி​ருக்​காங்க.​ அது​மட்​டு​மில்​லாம கலா​நிதி மாறன் என்​னோட நல்ல நண்​ப​ரும் கூட.​

நீங்​கள் நடிக்​கும் படம் தயா​ரா​கும்​போது நயா பைசா வாங்​கு​வ​தில்லை என்​றும் அப்​பு​றம் படத்​தின் லாபத்​தில் ஒரு பகு​தியை வாங்​கிக் கொள்​வ​தா​க​வும் சொல்​கி​றார்​களே?​​

உண்​மை​தான்...​

இந்​தி​யா​வில் அதிக சம்​ப​ளம் பெறும் நடி​க​ராக உங்​களை மாற்​றி​யது எது?​​

(சிரிக்​கி​றார்)​

நாங்​கள் சொல்​வது சரி​தானா?​​

மத்த நடி​கர்​கள் எவ்​வ​ளவு வாங்​கு​றாங்​கன்னு எனக்​குத் தெரி​யல!​

​(மீண்​டும் சிரிக்​கி​றார்).
​​

முன்பு ஒரு முறை,​​ "நான் நடி​க​னா​கா​மல் இருந்​தி​ருந்​தால் பணத்​துக்​கா​கக் கடத்​தல்​கா​ர​னாக மாறி​யி​ருப்​பேன்' என்​றீர்​களே...​ நினை​வி​ருக்​கி​றதா?​​

ஆமாம்...​ உண்​மை​தான்...​ நான் ஒரு ​ நடி​க​னாக ஆகி​யி​ரா​விட்​டால் "தாதா'வாக மாறி​யி​ருப்​பேன்.​ ஆனால் அந்​தக் கட்​டத்​தைக் கடந்து விட்​டேன்.​ இப்போது என்​னி​டம் தேவை​யான அளவு பணம் இருக்கு.​

"எந்​தி​ரன்' ரிலீ​ஸூக்​குப் பிறகு இம​ய​மலை சென்​று​விட்​டீர்​களே?​​

ஒவ்​வொரு படத்​தின் ரிலீ​ஸýக்​குப் பிற​கும் நான் இம​ய​ம​லைக்​குப் போவது வழக்​கம்.​ தனி​யா​கத்​தான் செல்​வேன்.​ துணைக்கு யாரை​யும் அழைத்​துச் செல்​வ​தில்லை.​

அங்கே உங்​க​ளைக் காணக் கூட்​டம் கூடி​வி​டாதா?​​

இல்லை.​ நான் ரொம்ப உள்ளே இருக்​கிற இம​ய​மலை கிரா​மங்​க​ளுக்​குப் போவேன்.​ அங்கே இருப்​பதே ஒரு தியா​னம் மாதி​ரி​தான்.​ அந்த கங்கை,​​ புனி​த​மான மலை,​​ அத​னு​டைய அழகு,​​ அங்​குள்ள கள்​ளங்​க​ப​ட​மற்ற மனி​தர்​கள் எல்​லாம் வித்​தி​யா​ச​மா​னது.​ நான் அங்கே பல முறை போயி​ருக்​கேன்.​ 1995ஆம் ஆண்டு தொடங்கி 15 வரு​டங்​க​ளாக போய்க்​கொண்​டி​ருக்​கி​றேன்.​

மகன் இல்​லையே என்று நீங்​கள் எப்​போ​தா​வது வருத்​தப்​பட்​ட​துண்டா?​​

நோ...நோ...​ கட​வுள் ஆசீர்​வா​தத்​தால நான் ரொம்ப சந்​தோ​ஷமா இருக்​கேன்.​ இன்​னிக்கு 21-ம் நூற்​றாண்​டில் இருக்​கோம்.​ ஆண்,​​ பெண் என்​ப​தெல்​லாம் ஒன்​று​மில்லை.​ இன்​னிக்கு என்​னோட ரெண்டு பேரன்​கள் யாத்ரா,​​ லிங்​கா​வைப் பாருங்க.​ ​(பேரன்​க​ளு​டன் ரஜினி இருக்​கும் ஃபி​ரேம் செய்து மாட்​டப்​பட்ட படத்​தைக் காட்​டு​கி​றார்)​

நீங்க நல்ல தாத்​தாவா?​​

யா..​ வெரி லவ்​விங்..​

மற்ற எந்த நட்​சத்​தி​ரங்​க​ளும் செய்​யா​ததை நீங்க செய்​றீங்க.​ குர்தா போடாம,​​ டை கூட அடிக்​காம,​​ இதே வழுக்​கைத் தலை​யோட வெளி​யில வர்​றீங்க.​ உங்க ரசி​கர்​கள் இதை எப்​படி எடுத்​துக்​கி​றாங்க?​​
 
ஸ்க்​ரீன்ல நான் எப்​ப​டி​யி​ருக்​கேன்​கி​ற​து​தான் அவங்​க​ளுக்கு முக்​கி​யம்.​ அதுக்​கு​தான் அவங்க பணம் செலவு பண்ணி பாக்​க​றாங்க.​ அவங்​க​ளுக்கு தங்​க​ளோட ஹீரோ பக்கா ஹீரோவா இருக்​க​ணும்.​ வெளி​யில எப்​படி இருந்​தா​லும் கவ​லைப்​பட மாட்​டாங்க.​ மக்​கள் புத்​தி​சா​லி​கள்.​ அவங்​க​ளுக்கு எல்​லாம் தெரி​யும்.​ எதுக்​குத் தேவை​யில்​லாம நம்மை நாமே சங்​க​டப்​ப​டுத்​திக்​க​ணும்?​​

நீங்க நீங்​க​ளாவே இருக்​கி​றதை அவங்க பாராட்​டு​றாங்க இல்​லையா?​​

அது இயல்​பு​தானே...​ ஆனா சினி​மா​வுல இப்​ப​டியே வந்தா அவங்க விரும்ப மாட்​டாங்க.​ நிஜத்​துல ஓ.கே.​ சினி​மா​வுல அவங்​க​ளுக்கு ஹீரோ​தான் தேவை.​

இன்​னும் உங்​களை ஆக்​டிவ்வா வைச்​சி​ருக்​கி​ற​துக்கு என்ன கார​ணம்?​​

நான் யோகா, எக்​ஸர்​சைஸ் பண்​றேன்.​ இது​தான் என் மூல​த​னம்.​ ஒரு ஆர்​டிஸ்ட்​டுக்கு இந்த மூல​த​னம் ரொம்ப முக்​கி​யம்.​ ஆனா மனசை ஃபிட்டா வச்​சிக்க நல்ல எழுத்​தா​ளர்​கள்,​​ இயக்​கு​நர்​கள் இருக்​காங்க.​

"எந்திர'னில் நீங்​கள் எல்​லாம் செய்​தீர்​கள்.​ ஒரு இளம் நாய​கி​யு​டன் காதல் காட்​சி​க​ளில் நடித்​தீர்​கள் என்​றா​லும் வய​தா​கி​றதே என்ற மன அழுத்​தத்தை உணர்​கி​றீர்​களா?​​

​(மனம் விட்டு சிரிக்​கி​றார்)​ சில நேரங்​கள்ல சண்​டைக் காட்​சி​க​ளில் நடிக்​கும்​போது,​​ டான்ஸ் பண்​ணும்​போது வய​சான ஃபீல் வரும்.​ வய​சா​கி​றது நிஜம்​தானே...?​ ஆனா டெக்​னீ​ஷி​யன்​கள்,​​ டைரக்​டர்​க​ளுக்​கும் தெரி​யும்.​ அவங்க மேனேஜ் பண்​ணி​ட​றாங்க.​ காதல் காட்​சி​கள்ல நடிக்​கும்​போது எனக்கே கொஞ்​சம் சங்​க​ட​மாத்​தான் இருக்கு.​ நடிப்​பு​தா​னேன்னு சொன்​னா​லும் கொஞ்​சம் சங்​க​டமா இருக்கு.​

"எந்​தி​ரனு'க்கு அப்​பு​றம் என்ன?​​

ஒரு அனி​மே​ஷன் படம்.​ "ஹரா'ன்னு தலைப்பு.​ ஒரு பாதி அனி​மே​ஷன்,​​ மீதி பாதி லைவ்.​ ​ "அவ​தார்' மாதிரி.​ ஆனா முழுசா ஒரு ரஜி​னி​காந்த் படம் கொடுப்​பது பற்றி இன்​னும் முடி​வெ​டுக்​கல.​

யாஷ் சோப்ரா உங்​களை "தூம் 3' படத்​தில் நடிக்​கக் கூப்​பிட்​டதா சொல்​றாங்​களே?​​

அது முழுக்க முழுக்க வதந்​தி​தான்.​ என்னை அவங்க அப்​ரோச் பண்​ணல.​ எனிவே...​ "ஹரா' முடிஞ்ச பிறகு 6 மாச​மா​வது எனக்கு இடை​வெளி தேவை.​ எனக்​குப் பொருத்​த​மான நல்ல கேரக்​டர்,​​ ரோல் கிடைச்சா...​ நல்ல தயா​ரிப்​பா​ளர்,​​ இயக்​கு​நர்​கள் அமைந்​தால்...​ நிச்​ச​யம் அடுத்த படம் பண்​ணு​வேன்.​ இல்​லேன்னா போதும்...​ இப்ப எனக்கு 61 வயசு ஆயி​டுச்சு!​''​

அமி​தாப் இப்​ப​வும் நடிக்​கி​றாரே?​​

அவர்​தான் எனக்கு முன்​னு​தா​ர​ணம்...​ ஆக்​சு​வலா திலீப்​கு​மார்​தான் எங்​க​ளுக்​கெல்​லாம் மையப் புள்ளி.​ அமித்ஜி,​​ நான்,​​ ஷாரூக்,​​ அமீ​ருக்​கெல்​லாம் திலீப்​கு​மார்​தான் இன்ஸ்​பி​ரே​ஷன்!​​

உங்​க​ளுக்கு மும்பை காற்று மீது அலா​தி​யான காதல் இருக்​கி​றது.​ அதை இப்​போது கொஞ்​சம் இழந்​து​விட்​ட​தாக உணர்​கி​றீர்​களா?​​

அமி​தாப் போன்​ற​வர்​க​ளோடு நெருக்​க​மா​கப் பழ​கிப் பேசும் வாய்ப்பு எத்​த​னைப் பேருக்​குக் கிடைக்​கும்?​ நான் ரொம்ப அதிர்ஷ்​டக்​கா​ரன்.​ நானும் அமி​தாப்​பும்,​​ "அந்தா கானூன்',​ "கிரா​ஃப்​தார்',​ "ஹம்னு' என்று மூன்று படங்​க​ளில் சேர்ந்து நடித்​தோம்.​ மூணுமே சூப்​பர் டூப்​பர் ஹிட்ஸ்!​ சில நேரங்​கள்ல மும்​பைக்கு போய் நண்​பர்​க​ளைப் பார்க்​க​ணும்னு தோணும்.​ அங்கே சுபாஷ் கய்,​​ சன்னி தியோல்,​​ ரிஷி கபூர்,​​ ஜித்​தேந்​திரா என்று எனக்கு நிறைய நண்​பர்​கள் இருக்​கி​றார்​கள்.​

ஏன் ஹிந்​திப் படங்​க​ளில் நடிப்​பதை விட்​டுட்​டீங்க?​​

அதை நானா​கத்​தான் குறைச்​சிக்​கிட்​டேன்.​ இங்கே ரெண்டு வரு​ஷத்​துக்கு ஒரு படம்​தான் பண்​றேன்.​ ரெண்டு குதி​ரைல ஒரே நேரத்​துல சவாரி பண்​றது கஷ்​டம்.​ ஹிந்​திப் படங்​க​ளில் வேலை பாக்​கு​ற​துக்​கும்,​​ தெற்​கில் பணி​யாற்​று​வ​தற்​கும் நிறைய வித்​தி​யா​சம் இருக்கு.​ அங்கே போது​மான அளவு செஞ்​சிட்​டேன்.​ ஹிந்​தி​யில கிட்​டத்​தட்ட 25-27 படங்​கள் பண்​ணிட்​டேன்.​ அங்கே 10 வரு​ஷம் வொர்க் பண்​ணி​யி​ருக்​கேன்.​ அந்த வாழ்க்​கையை அனு​ப​விச்​சேன்.​

உங்​க​ளைப் பற்​றிய மக்​க​ளின் எதிர்​பார்ப்பு அதி​க​மாக இருக்​கி​றது.​ அதற்கு என்ன செய்​யப் போகி​றீர்​கள்?​​

அவங்க எதிர்​பார்ப்பு அதி​கம்​தான்.​ படத்​துக்​குப் படம்,​​ அடுத்து வித்​தி​யா​சமா என்ன செய்​ய​லாம்​கிற பொறுப்​பு​தான் பெரிய அழுத்​தம்.​ அடுத்து என்ன பண்​றது?​ எப்​படி பெரிசா பண்​றது?​ அந்​தப் படம் வித்​தி​யா​ச​மா​க​வும் இருக்​க​ணும்.​ பொழுது போக்​கா​க​வும் இருக்​க​ணும்.​ ரொம்ப உப​தே​சம் பண்ற மாதி​ரியோ,​​ ​ ஆர்ட் ஃபி​லிம் மாதி​ரியோ இருக்​கக்​கூ​டாது.​ அவார்ட் படம் மாதிரி இருக்​கக்​கூ​டாது.​ ஆனால் நல்ல தர​மான பொழு​து​போக்​குப் படமா இருக்​க​ணும்.​ அதுக்​காக ரொம்ப சீப்பா இருக்​கக் கூடாது.​ அந்த வகை​யில் "எந்​தி​ரன்' நல்ல பொழு​து​போக்கு படம்.​ வித்​தி​யா​ச​மான பரி​மா​ணம்.​

"எந்​தி​ரன்' படத்​தில் முத​லில் ஷாருக்​கான் நடிக்​க​வி​ருந்​தார்.​ அது கைவி​டப்​பட்டு நீங்​கள் நடித்​தீர்​கள்.​ இதை எப்​படி எடுத்​துக் கொண்​டீர்​கள்?

இந்​தக் கதை முத​லில் கம​லுக்​குப் போனது.​ ப்ரீத்தி ஜிந்​தாவை ஹீரோ​யி​னாக நடிக்க வைக்க முடிவு செய்து பூஜை கூடப் போட்​டார்​கள்.​ ஆனால் கால்​ஷீட் பிரச்​சினை என்று நினைக்​கி​றேன்.​ படம் ட்ராப் ஆகி​விட்​டது.​ அப்​பு​றம் ஷாரூக்​கி​டம் போனது.​ அங்கே பட்​ஜெட் பிரச்​சி​னை​யா​கி​விட்​டது.​ அத​னால் அவர் நடிக்​க​வில்லை.​ பிற​கு​தான் நான் நடிக்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டது.​ ​

நீங்​கள் நடித்த "சிவாஜி' பட​மும் நன்​றாக ஓடி​யதே?​

ஆமாம்.​ முதல் முறையா 75 முதல் 80 கோடி வரை ஒரு மாநில மொழிப் படத்​துக்கு செல​வ​ழித்து,​​ அதில் 110 முதல் 120 கோடி வரை லாபம் பார்த்​தாங்க.​ அது ரொம்ப உற்​சா​கம் தந்​தது.​ என்​னு​டைய மார்க்​கெட்​டை​யும் விரி​வு​ப​டுத்​துச்சி.​

"எந்திரன்' படம் கமல்,​​ ஷாரூக்​கா​னி​டம் போய்​விட்டு வந்​ததே என்ற ஈகோ உங்​க​ளுக்கு இல்​லையா?​​
"ஈஹ​ஹய்ங் க்ஹ​ஹய்ங் டங் ப்ண்ந்ட்ஹ ட்ர்ற்ஹ ட்ஹண் ஓட்​ஹ​ஹய்ங் ஜ்ஹப்ங் ந்ஹ ய்ஹ​ஹம்!​'​ ​(ஒவ்​வொரு தானி​யத்​தி​லும் அதை உண்​ணப் போகி​ற​வ​ரின் பெயர் எழு​தப்​பட்​டி​ருக்​கும்)​.​ ஷங்​கரை எனக்​குத் தெரி​யும்.​ அவ​ரின் திற​மை​கள் பற்​றித் தெரி​யும்.​ அத​னால்​தான் ஒப்​புக் கொண்​டேன்.​ வேறு யாரா​வது வந்து ரூ.200 கோடி​யில படம் எடுக்​க​றதா சொல்​லி​யி​ருந்​தால் நான் தொட்​டி​ருக்​கக் கூட மாட்​டேன்.​ ஷங்​கர் சரியா செய்​வாரு.​ நல்ல படம் தரு​வார்னு எனக்​குத் தெரி​யும்.​ ஹாலி​வுட்​டில் இருந்து வந்து கேட்​டி​ருந்தா கூட நான் ஒத்​துக்​கிட்​டி​ருக்க மாட்​டேன்.​ "சிவாஜி'யில சேர்ந்து வேலை செஞ்​ச​துக்​கப்​பு​றம் ஷங்​கர் ஃபென்​டாஸ்​டிக் டைரக்​டர்னு தெரிஞ்​சிக்​கிட்​டேன்!​''

நீங்​கள் நடித்த "குசே​லன்' படம் சரி​யாக ஓட​வில்​லையே?​​

அது ஒரு நாலஞ்சு நாள் வேல.​ கெஸ்ட் ரோலில்​தான் நடித்​தேன்.​

ஒரு படம் சரி​யாக ஓட​வில்லை என்​றால் ரொம்​ப​வும் வருத்​தப்​ப​டு​வீர்​களா?​

நிச்​ச​ய​மாக.​ ரொம்​ப​வும் கஷ்​ட​மாக உணர்​வேன்.​ பல பேரு​டைய பணம்,​​ நம்​பிக்கை.​ அது தோற்​றால் என்னை ரொம்​பவே பாதிக்​கும்.​ அதுல எனக்​கும் பொறுப்​பி​ருப்​பதா உணர்​வேன்.​ மக்​கள்,​​ ரசி​கர்​கள் எல்​லோ​ரும் இந்த ரஜினி மீது வைக்​கும் நம்​பிக்கை தோற்​கும்​போது ரொம்​பவே பாதிக்​கும்.​

சில ரகசியங்கள் - விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா




விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயக்கத் தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு சில ரகசிய ட்யூனிங் டிப்ஸ் இங்கு தரப்படுகின்றன. இவை நம் இயக்க வேகத்தினை அதிகப்படுத்துவதுடன்நம் செயல்பாட்டிலும் சுவராஸ்யத்தை தரும். நேரம் மிச்சம்திறன் அதிகரிப்புவிண்டோஸ் தோற்ற மேம்பாடு ஆகியவை இந்த டிப்ஸ்களின் நோக்கம். இவற்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த கேடுதலும் ஏற்படாது என்றாலும்உங்கள் முக்கியமான பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு இந்த டிப்ஸ்களை இயக்கிப் பார்க்கவும்.
இந்த டிப்ஸ்களில் கண்ட்ரோல் பேனல் குறிக்கும் குறிப்புகள்உங்கள் கம்ப்யூட்டரில் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதாக எடுத்துக் கொண்டு தரப்படுகின்றன. ஸ்டார்ட் மெனு கிளிக் செய்துகண்ட்ரோல் பேனல் சென்றுஇடது மேலாக உள்ள ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால்கிளாசிக் வியூவிற்கு மாறிக் கொள்ளலாம். 
1. 
டாஸ்க் பார் ஐட்டம் அனைத்தையும் மொத்தமாக மூட (எக்ஸ்பி): டாஸ்க்பாரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐட்டங்களையும்,போல்டர்களையும் வைத்திருக் கிறீர்களாஇவை அனைத்தையும் மொத்தமாக ஒரே கிளிக்கில் மூடலாம். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டுஒவ்வொரு ஐட்டமாகடபுள் கிளிக் செய்திடவும். பின்னர்ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்துஎழுந்து வரும் மெனுவில்குளோஸ் குரூப்  (Close Group)   என்பதில் கிளிக் செய்திடவும். 
2. 
சிஸ்டம் ரெஸ்டோர் இடத்தைப் பெற (எக்ஸ்பி):உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கைச் செய்தி வருகிறதாஎந்த ட்ரைவ் சென்றுஎப்படிப்பட்ட பைல்களை நீக்கி இடம் மீட்பது என்று குழப்பமாசிஸ்டம் ரெஸ்டோர் வசதிக்கென உள்ள இடத்தைக் குறைத்துஉங்கள் ஹார்ட் டிஸ்க் இடப் பிரச்னையைத் தற்காலிகமாக சமாளிக்கலாம். ஸ்டார்ட்கண்ட்ரோல் பேனல் சென்றுசிஸ்டம் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் ரெஸ்டோர் டேப்பில் கிளிக் செய்திடவும். அதில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்திஎவ்வளவு ஹார்ட் டிஸ்க் இடத்தை மீட்கலாம் என்று பார்க்கவும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால்சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுக்குத் தேவை இல்லையே! எனவே இந்த வசதியை மொத்தமாக மூடிவிடலாம். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த இடமும் மிச்சமாகும்.
3. 
டாஸ்க் பாரில் வெப் ஷார்ட்கட் (விஸ்டா): இணைய தளங்களை வேகமாகத் திறக்க,  டாஸ்க்பாரில் உள்ள காலி இடத்தில்ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் Toolbars  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள அட்ரஸ் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் இணைய தள முகவரியினை டைப் செய்திடவும். விண்டோஸ் இப்போது அந்த இணைய தளத்தினைஉங்கள் பிரவுசரைத் திறந்து இயக்கிக் காட்டும்.
4. 
ரீசைக்கிள் பின்னைத் தாண்ட: அழிக்கப்படும் பைல்கள் ரீசைக்கிள் பின்னில் சென்றுஅங்கு தொடர்ந்து இடத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் குறையலாம். எனவே ஒரு பைல் அறவே நீக்கப்பட வேண்டும்அது ரீசைக்கிள் பின்னுக்குச்  செல்லக் கூடாது என எண்ணினால்ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை அழுத்திஅந்த பைலை முற்றிலுமாக நீக்கவும்.
5. 
கம்ப்யூட்டரை யார் ஷட் டவுண் செய்வது? (எக்ஸ்பி): உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டரைஉங்களைத் தவிர மற்றவர்கள் ஷட் டவுண் செய்வதனைத் தடுக்கஸ்டார்ட்கண்ட்ரோல் பேனல் சென்று, Administrative Tools  செல்லவும். இங்கு  Local Policies  என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர்  Security Options  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது புறம், ‘Shutdown: allow system to be shut down without having to log on’ என்று இருக்கும் இடம் சென்று அதில் டபுள் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Disabled  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
6. 
டிஸ்க் ட்ரைவ் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த (எக்ஸ்பி): உங்களுடைய சிடி அல்லது டிவிடி ட்ரைவிற்கான ஐகானை குயிக் லாஞ்ச் பாரில் வைக்கவும். இதற்கு மை கம்ப்யூட்டர் சென்றுசிடி/டிவிடி ஐகான இழுத்து வந்து,டாஸ்க்பாரில் குயிக் லாஞ்ச் ஏரியாவில் விடவும். இதன் மூலம்சிடியில் எழுதப்படக் காத்திருக்கும் பைல்களைஇந்த குயிக்லாஞ்ச் பாரில் உள்ள ட்ரைவ் ஐகானைக் கிளிக் செய்து பார்க்கலாம். ட்ரைவ் ட்ரேயினைத் திறக்கவும் செய்திடலாம். இதே போல எந்த ஒரு பைலுக்கும்போல்டருக்கும் ஷார்ட் கட் ஐகான்களைகுயிக் லாஞ்ச் பாரில் வைத்து இயக்கலாம்.
7. 
எர்ரர் ரிப்போர்ட் நிறுத்த (எக்ஸ்பி): ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகிஅதனை வலுக்கட்டாயமாக மூடிடுகையில்விண்டோஸ் இதற்கான ரிப்போர்ட்டைத் தயார் செய்து அனுப்பவா என்ற பிழைச் செய்தியினைக் காட்டும். இந்த பிழைச் செய்தியினைக் காட்டாமல் இருக்கும்படி விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தினை அமைக்கலாம். ஸ்டார்ட்கண்ட்ரோல் பேனல்சிஸ்டம் எனச் செல்லவும். அங்கு கீழாக உள்ள எர்ரர் ரிப்போர்டிங் பட்டனில் (Error Reporting)  கிளிக் செய்திடவும். இங்கு இந்த பிழைச் செய்தி தோன்றுவதனை நிறுத்தவும்மீண்டும் இயக்கவும் செய்திடலாம். 
8.
கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் (விஸ்டா): பொதுவான சில இயக்கங்களை வேகப்படுத்தும் வகையில் விஸ்டா இயக்கம் பல ஷார்ட்கட்கீ தொகுப்புகளைக் கொண்டுள்ளது.  எடுத்துக்காட்டாகவிண்டோஸ் கீயினை அழுத்தியவாறே,ஸ்பேஸ் பார் தட்டினால்பின்னணியில் இருக்கும் ஸைட்பார்முன்னதாகக் கொண்டு வரப்படும். விண்டோஸ் கீயுடன் ‘T’ கீயை அழுத்தினால்டாஸ்க் பார் ஐட்டங்கள் ஒவ்வொன்றாகச் செல்லலாம். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள புரோகிராம்களை இயக்கவிண்டோஸ் கீயுடன்குயிக் லாஞ்ச் பாரில்திறக்கப்பட வேண்டிய புரோகிராம் எந்த இடத்தில் உள்ளதோ (1,2,3,4.. என) அந்த எண்ணை அழுத்தினால் போதும். 
9. 
கூடுதல் கடிகாரம் (விஸ்டா): பன்னாடுகளின் அப்போதைய நேரத்தினை எப்போதும் அறிந்து கொள்ள விருப்பமாநோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள கடிகாரத்தின் மீது ரைட்  கிளிக் செய்திடவும். பின்னர் Adjust Date/Time’  என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Additional Clocks  என்பதில் கிளிக் செய்திடவும். இனிஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களைக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கடிகாரத்திற்குமான நேர மண்டலத்தை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி திரையில்உங்களுக்குப் பிரியமானவர்கள் வசிக்கும் நாட்டின் கடிகாரம்அந்த நாட்டின் நேரத்தைக் காட்டியபடி இயங்கிக் கொண்டிருக்கும். 
10. 
ஹெல்த் ரிப்போர்ட் பெற (விஸ்டா): கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் பிற சாதனங்கள் குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டினைப் பெறும் வசதியினை விஸ்டா கொண்டுள்ளது. இதன் மூலம் நம் ஹார்ட்வேர் சாதனங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். ரிப்போர்ட் ஜெனரேட்டர் என்ற வசதியின் மூலம் இதனைப் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து, performance and information  என டைப் செய்துஎன்டர் தட்டவும். இங்கு இடது புறமாக உள்ள ‘Advanced tools’  என்பதில் கிளிக் செய்து, ‘Generate a system health report’  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் கழித்துஉங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் வேர் குறித்த ஹெல்த் ரிப்போர்ட் உங்களுக்கு பைலாகக் கிடைக்கும்.