னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில், மெரீனா டவர் ஹோட்டலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. பிரஸ்பாஸ் செய்து எடுக்கப்பட்டு வீடியோ மார்க் செய்யப்பட்டுள்ளது. காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சிகள் தான் லேப்புக்கு அனுப்பட்டதா? என கேள்வி எழுகிறது.
ஆபாச வீடியோ ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.
நான் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.
சில பத்திரிகைகள், டி.வி.கள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வி. யும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.
அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சினை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்து உள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்து இருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.
முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.
பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மததாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேற்று நடிகை ரஞ்சிதா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஆட்சி மாற்றத்திற்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்ததாகவும், தற்போது உண்மையை கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
|