இத்தகவல் WINDOWS 7 OPERATING SYSTEM பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் .
எல்லா கணினிகளிலுமே GRAPHICS சம்மந்தமான PROGRAMகளை இயக்கம்போது கணினி சிரமப்படுவதை உணரலாம். உதாரணத்திற்கு PHOTOSHOP,AFTER EFFECTS போன்றவற்றை குறிப்பிடலாம் .
அது போன்ற சிரமமான நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க WINDOWS 7 ல் ஒரு வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது .
இந்த வசதியை பயன்படுத்த CONTROL PANEL சென்று POWER OPTIONS என்பதை கிளிக் செய்யவேண்டும் .இப்போது திறக்கும் WINDOW வில் SHOW ADDITIONAL PLANS ல் உள்ள அம்பு குறியில் கிளிக் செய்யவேண்டும் .
இப்போது HIGH PERFORMANCE என்பதை தேவு செய்து விட்டு வெளியேறவும் .இனி நீங்கள் கடினமான PROGRAM களை இயக்கும்போது முன்பை விட கணினி வேகமாக செயல்படுவதை உணரலாம் .
இதற்காக உங்கள் கணினி வழக்கத்தை விட சற்று அதிகமாக மின்சாரத்தை செலவு செய்யும் .சாதாரண PROGRAM களை இயக்குகையில் மேற்கூறிய மாற்றங்களை செய்யவேண்டிய அவசியம் இல்லை .
இன்னும் விளக்கமாக அறிய விரும்புபவர்கள் கீழுள்ள வீடியோவை பார்த்து பயனடையலாம் .
|
No comments:
Post a Comment