Wednesday, November 30, 2011

ஆண் உறுப்பை விபரீதமாக பயன்படுத்தியவர்

99 ஃபவர் Qigong என்பது சீன நாட்டில் பாரம்பரியம் பாரம்பரியமாக நீடித்து நிலைபெற்று வருகின்ற வீர சாகசங்களில் ஒன்று.

மிகவும் பாரமான பொருட்களை ஆண் உறுப்பினால் தூக்குதல் மற்றும் இழுத்தல் போன்ற சாகசங்கள் மூலம் வீரத்தை வெளிப்படுத்துவது.


நம்ப முடியவில்லையா? இவ்வீடியோவை பாருங்கள்.




Coca Cola குடிக்காதீங்க ! எச்சரிக்கை! எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட் !!

கொக்கா கோலா (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக்கூடிய ஒரு குளிர்பானம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கலவை இரகசியம். ஆனால் இந்த கொக்கா கோலா பாணத்தில் உள்ள இராசாயண பதார்த்தங்களை சோதிக்கும் நடவடிக்கை ஒன்றையே நாம் இன்று வழங்குகிறோம். 

காணொளியை கவனமாக பாருங்கள்.. 

கொகோ கோலா பாணத்தினை ஒருவர் கிளாசில் ஊற்றி அதனுள் ஒரு முட்டையை இடுகிறார். இதனை ஒரு வருடத்திற்கு அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு கோகோ கோலா பாணத்திற்குள் இட்டு வைத்திருந்த முட்டை வெளியே எடுக்கப்படுகிறது. என்ன ஒரு அதிர்ச்சி அதற்குள் இட்டு வைத்திருந்த முட்டை இறப்பர் போன்று இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த கோகோ கோலா பாணத்தில் பல இராசாயண கலவைகள் கலந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. Phosporic Acid போன்ற பல இரசாயணங்களின் கலவையே இது என கூறப்படுகிறது. இதன் மூலம் கொக்கா கோலா தினமும் பருகுவதால் நிச்சயம் எமது பற்களுக்கு ஆபத்து என்பது புலனாகிறது.


மினுக்கும் அழகை பெற...

"டயட்" என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலிவிழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான் "மேக்-அப்" செய்தாலும் பயனில்லை. 
இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப் பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. இருக்கும் அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் அப்பி, உடலில் பூசி பின்பு அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர். 

முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த அழகுக்கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால், அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினு மினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே. 
இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும் "ஸ்க்ரப்" செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள், பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது "ப்ரூட் பேக்" எடுத்துக்கொண்டு "பேஷியல்" செய்துகொள்வது அவசியம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச் சத்துக்கள் மீண்டும் பெறப்படுகின்றன. 

தற்பொழுது வேலை பார்ப்பவர்களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும். இதற்கென்றே "நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பேக்" அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப்படும் சருமத்துக்குப் புத்துணர்ச்சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக்கிறது. 

கூலிங் ஐ மஸாஜ்: 

இரவு, பகல் பாராமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட "ஜெல் மாஸ்"கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை தரப்படுகிறது. 

மைக்ரோ டெர்மா சிகிச்சை: 

இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயிலில் அதிகம் சுற்றி, வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம். 

ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்: 

சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளையம் தோன்றி, சருமம் பொலி விழந்து மங்கலாகக் காணப்படும். இச்சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடைவில் மறையும்.

வீட்டில் ஹேர் கட் செய்வது எப்படி?

தன் கையே தனக்குதவி என்பது பழமொழிதான் ஆனாலும் அது பயனுள்ள பழமொழியே. விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் முடிதிருத்த நிலையங்களும், பியூட்டி பார்லர்களும் கட்டிங், அழகுக் கலை கட்டணங்களை உயர்த்திவிடுவார்கள் என்பது உறுதி. இதனல் 'ஹேர் கட்' போன்ற சாதாரண (!) செயல்களை ஏன் நாமே செய்து கொள்ளக்கூடாது?

ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம். நாமே முடி வெட்டிக் கொள்வதால் பணத்தை மிச்சம் செய்யலாம். நன்றாக செய்ய கற்றுக் கொண்டால் ஒரு பார்லர் ஆரம்பித்து பணமும் சம்பாதிக்கலாம்!



தேவைப்படும் பொருட்கள் :-


கண்ணாடிகள் - 2


கத்தரிக்கோல் - 1


சீப்பு - 1


ஆரம்பிக்கலாமா?


முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும். தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனையே இல்லை.


எந்த அளவு வெட்டுவது?


மொட்டை அடிக்கும் எண்ணம் இல்லை என்றால் தலையில் குறைந்தது 3 அங்குலம் முடியாவது இருக்க வேண்டும்.


முதல்முறையாக வெட்டும்போது பார்லர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமாக்க வேண்டாம்.


சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஆரம்பிக்கவும்.


இரண்டு விரல்களுக்கு இடையே வெட்டப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொள்ளவும்.


விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு.


கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியது போல் முடியை வெட்டவும்.


இதே போல் இந்த காது அருகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.


ஒவ்வொரு முறை வெட்டிய பிறகும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம்.


துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவியப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.


`ஸ்டெப் கட்', `மஷ்ரூம் கட்' என்று முதல் முறையே வெட்ட முயற்சித்தால் அதன் விளைவு விபரீதமாகலாம்.


தைரியசாலிகள் முயற்சித்து பார்த்து ஒரு புது ஸ்டைலை உருவாக்கலாம்!


ஆல் தி பெஸ்ட்!


குறிப்பு:


முதல் முயற்சிக்குப் பிறகு உங்கள் கணவர் அல்லது குழந்தைகள் சற்றே மிரளலாம் என்றாலும் அடுத்தடுத்த முயற்சிகளில் அசத்திவிடலாம்.

உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா? அவசியம் இதைப் படியுங்கள்

சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும். 

இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இன்டர்நெட் கொண்டுள்ள போதும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்க இது முக்கிய காரணமாக உள்ளது.பிறருடன் பேசவும், எஸ்.எம். எஸ்., அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது இன்டர்நெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தினமும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அதன் மூலம் தங்களின் அன்பை பரிமாறி கொள்வதை வழக்கமாக கொண்டு பலர் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு வயதினரிடமும் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) எஸ். எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

பேஸ்புக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் தங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதன் மூலம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளிலுள்ள தங்களுடைய நண்பர்கள்,உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இதன் காரணமாக மொபைல் போன்களிலிருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு பலர் "குட் பை சொல்ல துவங்கிவிட்டனர். 

சமூக வலைதளங்களில் தங்களின் விபரங்களை ஒருவர் பதிவு செய்யும் போது, தகவல்களுடன் சேர்த்து தங்கள் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். வலைதளங்கள் மூலம் ஒருவருடன் நண்பர்களாக வேண்டும் என்றால், தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்; மறுமுனையில் சம்பந்தப்பட்ட நபர் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இருவரும் வலைதளத்தில் நண்பர்களாகி கொள்ளவும், தங்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடவும், உறவுகளை இணைக்கும் பாலமாகவும் உதவி வரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவியருக்கு எதிரான சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. 

சமூக வலைதளங்களில் பெண்களின் பெயர்களை டைப் செய்தால், குறிப்பிட்ட பெயருக்கு 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த முழு விபரங்கள் போட்டோக்களுடன் வெளியிடப்படுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆசாமிகள், அறிமுகமில்லாத பெண்களுக்கு தாங்களாகவே, "நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள் என தெரிவிக்கும் தகவல்களை அனுப்புகின்றனர். தங்களுக்கு தெரியாத நபர்கள் அனுப்பும் இத்தகைய வேண்டுகோளை ஏற்காமல் நிராகரிக்கும் பெண்கள் எவ்வித ஆபத்திலும் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். எனினும் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் நல்லவர்களை போல் சில நாட்கள் நடித்து அவர்களின் மொபைல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். நாளடைவில் நேரில் சந்திப்பது, பொது இடங்களுக்கு சென்று வருதல், பண பரிமாற்றம் என துவங்கி, ஏமாறும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றியும், அவர்களிடமிருந்து பணம்,நகை, "லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் சென்று விடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பலர்,போலீசில் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை. 

கோவை மாநகர சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கம்ப்யூட்டர்களில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தும்போது, அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களின் அந்தரங்க தகவல்கள் குறித்து நெருங்கிய தோழிகளுடன் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். தனி அறையில் வைத்து அவர்கள் இணையதளங்களை இயக்க அனுமதிக்க கூடாது என்றனர். 

பெற்றோர், ஆசிரியர், உடன்பிறப்புகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களின் அறிவுரை ஒருபுறமிருந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும்போது பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

ஏழாம் அறிவு படத்தின் விஞ்ஞானம் நிஜமாகும்-அதிர்ச்சி தகவல்


மனிதர்களையே அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu வைரசினைக் கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர்.

இந்த அபாயகரமான வைரஸ் H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது அதனை விடவும் கிருமித்தொற்று மிக்கதென்றும் ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது.

இதனால் இந்த ஆய்வு சர்ச்சைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் விஞ்ஞானிகளையும் இரு பிரிவாகப் பிரித்துள்ளது.

ஒரு பகுதியினர் இதன் விபரங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர இதனைச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பறவைக் காய்ச்சலின் வைரஸ் 500 பேரை மட்டுமே கொன்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் பரம்பலடையாது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட வைரஸ் எதிரிகளின் கைகளில் கிடைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் உயிரியல் போரிற்குப் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆய்வு சர்வதேசத்தினை H5N1 இனை முமுவதும் விளங்கிக்கொள்வதன் பாகமாகவே மேற்கொள்ளப்பட்டதென இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பினால் இக்குழு ஊடகத்தின் பாய்ச்சலினை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவரீதியில் நல்லதாரு முன்னேற்றம் எனினும் துணைபோகக்கூடும் என்றும் கருதப்படுகின்றது. 

இதனால் இதுபற்றிய விடயங்களை வெளியிடுவது தடுக்கப்படவேண்டுமென்றும் வெளியிடப்பட்டால் உயிரியல் தீவிரவாதத்திற்குத் துணைபோகும் காரியங்களைச் செய்பவர்களுக்கு இது உதவக்கூடுமென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

4 வயது சுட்டியின் குத்தாட்டம் : வீடியோ இணைப்பு

நடனம் என்பது பலரையும் கவர்ந்த விடயமாகும். அதுவும் சிறுவர்களின் குத்தாட்டம் என்பது இன்னும் பரபரப்பு.


அந்த வகையில் 4 வயது சிறுமி ஒருத்தி போடும் குத்தாட்டத்தை பாருங்கள் நீங்களும் எழுப்பி நின்று ஆடுவீர்கள்.


வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு இக்கொணிளி ஓர் முன்னூதாரணமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.



ஜெயலலிதா தான் என்னுடைய ரோல் மாடல்! அழகிரி மகன் அதிரடி

''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நான் முதல்வருக்கு ரொம்ப நெருக்கமானவன்... முன்னாள் முதல்வர், தலைவர் கலைஞரைச் சொல்லலை... இந்நாள் முதல்வரைத்தான் சொல்றேன்!''- சஸ்பென்ஸ் வைத்துச் சிரிக்கிறார் துரை தயாநிதி. சன் ஆஃப் அழகிரி! 

''ரொம்ப யோசிக்காதீங்க சார்... போயஸ் கார்டன்ல சி.எம். வீட்டுக்குப் பக்கத்துலதான் என் வீடும். அதைத் தான் சொன்னேன்!'' - செம பில்ட்-அப் கொடுத்துச் சிரித்தவர், தயங்கித் தயங்கிக் கேட்ட கேள்விகளுக்குக்கூட மழுப்பாமல், நழுவாமல், தடதடஎனப் பதில் அளித்தார்.

''கல்யாண வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு? அனுஷா உங்க குடும்பத்தோட செட் ஆகிட்டாங்களா?'' 

''கல்யாணத்துக்கு அப்புறம் லைஃப் இஸ் பியூட்டிஃபுல்! எனக்குத் தெரியாத சொந்தங்கள்கூட அனுஷாவுக்குத் தெரியிற அளவுக்கு அட்டாச்டு ஆகிட்டாங்க. 'துரையா இவ்வளவு அழகா குடும்பம் நடத்துறான்’னு குடும்பத்திலும் எல்லாருக்கும் ஆச்சர்யம்தான். எல்லாத்துக்கும் காரணம், அனுஷா. இதையே அவங்ககிட்ட கேட்டா, 'நான்தான் காரணம்’னு சொல்வாங்க. ரொம்ப நல்லா இருக்கோம்.

இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. சும்மா ஒரு ஃப்ரெண்ட் மூலமாத்தான் அனுஷா எனக்கு அறிமுகம். கொஞ்ச நாள் பழக்கத்துலயே அம்மா மாதிரி பிரியமா நடந்துக்கிட்டது பிடிச்சது. கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் குடும்பத்துக்கு நல்லா செட் ஆவாங்கனு தோணுச்சு. ஆனா, அதைப்பத்தி அவங்ககிட்ட எதுவுமே நான் சொல்லலை. ரெண்டு வருஷ ஃப்ரெண்ட்ஷிப்புக்குப் பிறகு, ஒரு நவம்பர் 23-ம் தேதி நான்தான் முதலில் காதலைச் சொன்னேன். ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு 'யெஸ்’ சொன்னாங்க. அது வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம். அடுத்த நவம்பர் 18-ல் கல்யாணம். எனக்கு நவம்பர் ரொம்பவே ஸ்பெஷல்!

அனுஷாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என் அம்மா - அப்பாதான். கட்சிக்காரங்க வருகை, பேச்சுவார்த்தைனு வீட்ல எப்பவும் ஒரு பரபரப்பான சூழல் இருந்துட்டே இருக்கும். அப்போ என் மூலம்தான் அம்மா எந்த விஷயத்தையும் அப்பாகிட்ட சொல்வாங்க. இப்போ அந்தப் பொறுப்பை அனுஷா எடுத்துக்கிட்டாங்க. 'இல்ல மாமா... நீங்க அப்படிப் பேசி இருக்கக் கூடாது’னு ஜஸ்ட் லைக் தட் அப்பாகிட்ட கரெக்ஷன்ஸ் சொல்றாங்க. ஆச்சர்யமா அப்பாவும், 'ஆமாம்ல... நீ சொல்றதுதாம்மா சரி’னு சொல்றார். 'என்னடா நடக்குது இங்கே’னு நான்தான் மலைச்சுப்போய் நிக்கிறேன்!''

''அரசியல், குடும்பம், சினிமா தயாரிப்புனு பரபரப்பான லைஃப் ஸ்டைல். ஆனா, மீடியாக்களிடம் இருந்து ஏன் விலகியே இருக்கீங்க?''

''ஒரு வரியில் பதில் சொல்லணும்னா... நான் எங்க அப்பா மாதிரி. அதனாலதான்! எதையும் பேசிட்டே இருக்கிறதைவிட செஞ்சு முடிச்சிரணும்னு நினைப்பேன். அதே மாதிரி பேசணும்னு நினைச்சா, யாருக்காகவும் எதுக்காகவும் பயப்பட மாட்டேன். மனசுல தோணுறதைப் பேசிட்டுப் போயிட்டே இருப்பேன். அது நம்ம மீடியா சர்க்கிளுக்கு செட் ஆகலை. அவ்வளவுதான்!'' 


''உங்க அண்ணன் உதயநிதி ஸ்டாலின், தம்பி அருள்நிதி எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க அவங்களைவெச்சு உங்க பேனர்ல படம் தயாரிப்பீங் களா?''

''நல்ல ஐடியா. ஆனா, ரெண்டு பேரும்தான் ஏற்கெனவே அவங்கவங்க பேனர்ல நடிச்சுட்டு இருக்காங்களே. இப்போதைக்கு உதயா அண்ணனின் ரெட் ஜெயன்ட்தான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் புரொடக்ஷன் கம்பெனி. நல்ல டீம், பக்கா பிளானிங்னு எல்லாத்துலயும் தெளிவா இருக்காங்க. 'மங்காத்தா’வைக்கூட சன்னுக்கு விற்றுக் கொடுத்ததில் அண்ணன் எனக்கு நிறைய உதவி பண்ணார். அவங்க ரெண்டு பேருக்கும் 'ஓ.கே’-ன்னா இப்பவே ரெண்டு பேரையும் வெச்சுப் படம் தயாரிக்க நான் ரெடி!''

''ஓ.கே. உண்மையைச் சொல்லுங்க... அ.தி.மு.க. அரசின் ஆறு மாத கால ஆட்சி எப்படி இருக்கு?''

''இதுல நான் சொல்ல என்ன இருக்கு? அதான் தமிழ்நாடே கொதிப்புல இருக்கே? சமச்சீர்க் கல்வியில் கை வைக்கத் தொடங்கி, இப்போ பால் விலை, பஸ் கட்டண உயர்வுனு வந்து நிக்குது. 'மாற்றம் வேணும்... மாற்றம் வேணும்’னு பக்கம் பக்கமா எழுதினாங்க. 'ஓ... மாற்றம் வேணும்போல இருக்கு’னு மக்களும் நம்பி ஓட்டுப் போட்டாங்க. ஆனா, இந்த அம்மாவோ சமச்சீர்க் கல்வி ரத்து, மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம், தலைமைச் செயலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம் இட மாற்றம், அமைச்சர்கள் - அதிகாரிகள் மாற்றம்னு பரபரப்பா இருக்காங்க. தி.மு.க. ஆட்சியில் சினிமாவுக்குக் கேளிக்கை வரியே கிடையாது. இப்ப நகரத்தில் 30 சதவிகிதம், மற்ற பகுதிகளில் 20 சதவிகி தம்னு வரி போட்டு வாட்டுறாங்க. இது தமிழ் சினிமாவுக்குப் பின்னடைவு இல்லையா? 'சினிமாவை ஆக்கிரமிச்சுட்டாங்க’னு அப்போ எங்களைப் பத்திப் புரளி கிளப்பினவங்க எல்லாம் இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை. இந்தக் கொடுமைகளை நடுநிலையான பத்திரிகை கள், மீடியாக்கள் எழுதத் தொடங்கி இருக்காங்க. அது மட்டும்தான் நல்ல விஷயம்!''

''ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடிச்ச விஷயம்னு ஏதாவது இருக்கா?''

''
இருக்கே... அந்தத் தைரியம் பிடிக்கும்! தைரியம் இல்லாம யாரும் அந்தப் பதவிக்கு வர முடியாது. ஆனாலும், இந்த அம்மா வுக்குத் தைரியம் கொஞ்சம் அதிகம். தன்னுடைய முடிவில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கிறதும் நல்ல விஷயம்தான். ஆனா, இந்தத் தகுதிகளை எல்லாம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத்தான் பயன்படுத்துறாங்கனு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கு!''

''அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதில் பெரிய போட்டியே நடக்குதுனு சொல்றாங் களே..?''

''ரெண்டு பேரும் சேரக் கூடாதுனு நினைக்கிறவங்கதான் 'போட்டி இருக்கு... போட்டி இருக்கு’னு எழுதிட்டு இருக்காங்க. அதை ஏன் பதவிக்கான போட்டினு சொல்றீங்க? கட்சித் தலைமையிடம் நல்ல பேர் எடுக்க, கட்சியை வளர்க்க ஆரோக்கியமாப் போட்டி போடுறாங்கனு ஏன் நினைக்க மாட்டேங் கிறீங்க? இப்பவும் சித்தப்பா டெல்லி போனா... அப்பாவை வீட்ல சந்திப்பார். அப்பாவும் சென்னை வந்தா, சித்தப்பாவோட சேர்ந்துதான் தலைவரைச் சந்திப்பார். ரெண்டு பேருமே கட்சி தொடர்பான விஷயங்களை அடிக்கடி போன்ல பேசிப்பாங்க. பரபரப்புக்காக மீடியா ஏற்படுத்தும் பிம்பம்தான் ரெண்டு பேருக்கும் இடையிலான போட்டி!'' 

''மதுரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, நாடாளுமன்றத்தில் பேச மறுப்பது, தென் தமிழ்நாட்டில் தன்னை ஆதரிக்காதவர்களைக் கட்சிக்குள் கட்டம்கட்டுவது என உங்கள் அப்பாவைப் பற்றிய செய்திகள் அனைத்தும் நெகட்டிவ் தொனியிலேயே இருப்பது ஏன்?''

''கட்சியில் தனக்கு எவ்வளவு நெருக் குதல் வந்தாலும் தன்னை நம்பி வரும் நல்லவர்களைக் கடைசிவரை கை விடாமல் துணையாக இருப்பது, மதுரை மக்களுடன் அந்நியோன்யமாக இருப்பது, யாரும் தப்பா நினைச்சுக்குவாங்களோனு நினைக்காம மனசுல பட்டதைப் பளிச்னு சொல்றதுனு எங்க அப்பா ஒரு ரியல் ஹீரோ சார். அவர் எம்.பி., அமைச்சர் ஆனதெல்லாம் கட்சியும் தொண்டர்களும் ஃபோர்ஸ் பண்ணி நடந்த விஷயங்கள். ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கார். ஆனா, நெகட்டிவ் செய்திகளைவெச்சு சென்சேஷன் செய்யும் ஆங்கில மீடியாக்கள், எங்கள் குடும்பத்தைப் பத்தி புரளி கிளப்புறதுல அதீத ஆர்வம் காட்டுறாங்க... அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!''

''நீங்கள் கனிமொழி அத்தையின் செல்லமா?''

''ரொம்பவே செல்லம்! ரொம்ப மென்மையான இயல்புகொண்ட அவங்க இத்தனை நாள் ஜெயில்ல கஷ்டப்பட்டதை இப்போ நினைச்சா லும் மனசுக்குக் கஷ்டமா இருக்கு. ஜெயில்ல நான் போய் அவங்களைப் பார்த்தப்பகூட, 'அனுஷாவுக்குக் கால்ல அடிபட்டுருச்சாம்ல. உன்னை நம்பி வந்த பொண்ணு. பத்திரமாப் பார்த்துக்க’னு சொன்னாங்க. அப்பா மேலயும் என் மேலயும் கனி அத்தைக்கு எப்பவுமே தனிப் பிரியம். மதுரைக்கு வந்தா, எங்க வீட்லதான் தங்குவாங்க. அம்மாவுக்கும் அவங்க பயங்கர க்ளோஸ். அவங்களுக்கு ஜாமீன் கிடைச்சது ரொம்பவே சந்தோஷம். அத்தையைச் சீக்கிரமே பார்க்கணும்!'' 

''கலைஞர் தாத்தா என்ன சொல்றார்?''

''தாத்தாவைச் சந்தித்தால் முக்கால்வாசி நேரம் அரசியல்தான் பேசுவேன். சினிமாபத்தியும் நிறையப் பேசுவோம். 'என்னப்பா, அந்தப் படம் எப்படி இருக்கு, இந்தப் படம் எப்படிப் போகுது, உதயா படம் நல்ல கலெக்ஷன்னு கேள்விப்பட்டேன்’னு நிறையப் பேசு வார். அரைகுறைத் தகவல்களோட ஏதாவது தப்பா சொல்லிட்டா, 'இல்லையே... அந்தப் படம் சுமார்னு எழுதி இருக்காங்க’னு ஷார்ப்பா கண்டுபிடிச்சுடுவார். ஒரு நாளைக்கு 20 பேப்பர் படிச்சா எந்த விஷயம்தான் அவருக்குத் தெரியாம இருக்கும்?''

'' 'மதுரையை மீட்டெடுப்போம்’னு சொல்லி, தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கு ஜெயலலிதா அரசு. இதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?''

''தேர்தலுக்கு முன்னாடி ஜெயலலிதா மதுரைக்கு பிரசாரத்துக்கு வந்தப்போ என்ன காரணமோ தெரியலை, கலெக்டர் அனுமதி தரலைனு நினைக்கிறேன். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் இது. சம்பந்தமே இல்லாம கட்சிக்காரங்களை அரெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. மதுரையில் இப்ப தி.மு.க-க்காரர்கள் பாதிப் பேர் ஜெயில்லதான் இருக்காங்க. அரசு கேபிள் டி.வி. வந்த பிறகு, ராயல் கேபிள் விஷன் ஒளிபரப்பை மதுரையில் நிறுத்திட்டோம். ஏன்னா, இருக்கும் மிச்சம் மீதி கட்சிக்காரங்களையும் அதைக் காரணம் காட்டி, அரெஸ்ட் பண்ணிடுவாங்களோனுதான்.

மதுரைக்காரங்க எது பண்ணாலும் பிரமாண்டமா பண்ணுவாங்க. அதனாலயே மதுரையில் சின்ன சம்பவமும் அதீதக் கவனம் ஈர்க்குது. அதான் பிரச்னையே! 'அண்ணே... அதைப் பண்ணிட்டோம்ணே, இதைப் பண்ணிட்டோம்ணே’னு பெருமையா சொல்லிச் சொல்லியே சாதாரண விஷயத்தைக்கூட பூதா காரம் ஆக்கிடுவாங்க. அப்பாகூட எப்பவும் 10 பேர் இருப்பாங்க. ஏதாவது ஒரு விஷயம் பேசினா, அது 100 விஷயமா வெளியே போகும். ஆனாலும் எனக்கு இந்த உலகத்திலயே பிடிச்ச இடம் மதுரைதான். ஒரு குடும்பம் மாதிரி அரவணைச்சுப் பாசம் காட்டுற கட்சிக்காரங்கதான் அதுக்குக் காரணம்!''

சுழலும் மூன்று கமெரா லென்ஸ் கொண்ட IPhone அறிமுகம்


அப்பிளின் ஐபோன் இல் Hipstamatic என்ற எண்ணியல் நிழற்பட மொன்பொருளின் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை உயர்தொழினுட்ப கைத்தொலைபேசியாக இது மாற்றியிருக்கலாம். 

ஆனால் இந்த iPhone வில்லை டயல் இன்னொரு படி முன்னேறி தொலைதூரத்தினைப் படமெடுக்கும்> அகன்ற கோணத்தில் எடுக்கும் மற்றும் மீன்கண்களின் தோற்றத்தில் எடுக்கும் வில்லைகளென மூன்றுவித வில்லைகளைக் கொண்டு காணப்படுகின்றது.

இந்த வில்லைகள் Hipstamatic மென்பொருள் கொடுக்காத விளைவுகளைத் தருகின்றன.
வில்லை டயலில் பயனாளர் தமக்கு விரும்பிய வடிவில் படங்களைத் தெரிவுசெய்யக்கூடியவாறு தெரிவுகள் வந்துநிற்கும். தெரிவுசெய்தபின்னர் உங்களது சுழலும் வில்லைகள் கொண்ட ஐபோனினால் படங்களை மாற்றி மாற்றி எடுக்கமுடியும்.

இதுவரையும் இந்த முறை இறுதியாக வந்த இரு மாதிரிகளான iPhone4 மற்றும் iPhone4S இலும் மட்டுமே வேலைசெய்கின்றன.

இவை உண்மையில் நிழற்படக் கருவிகளுடன் போட்டிபோடும் அளவிற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 





வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு

இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம்.



புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கமெராவை கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம்,

ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கமெராவில் ஏதாவது மாற்றம்(detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும்.

அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும், நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும்.

ஆபாச படநடிகைகளின் சிலிர்க வைக்கும் அனுபவங்கள்

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் ரெண்டால். நர்சாக வேலை பார்க்கிறார். இவரது பெண்கள் அலிசியா (27), அமண்டா (26), கிம்பர்லி (22). மூன்று பேரும் ஆபாச படங்களில் நடிப்பவர்கள்.

இதுபற்றி அமண்டா கூறியதாவது: பள்ளியில் படிக்கும் காலத்தில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அசத்துவேன். காமன்வெல்த் போட்டிகளில் சாதனை படைக்கும் அளவுக்கு வேகமாக தயாராகி வந்தேன். பிறகு பள்ளியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, படிப்பை நிறுத்திவிட்டேன். எதிர்பாராதவிதமாக ஆபாச பட நடிகை ஆகிவிட்டேன். பேப்ஸ்டேஷன் ஆபாச நிகழ்ச்சியில் 7 ஆண்டுகளாக நடித்து வருகிறேன்.
அதற்கு அப்புறம், அக்கா அலிசியாவும் இத்துறைக்கு வந்துவிட்டார். பிரிட்டனின் முன்னணி ஆபாச நடிகைகளில் அக்கா அலிசியாவும் ஒருத்தி. தங்கை கிம்பர்லியும் தற்போது ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறாள்.

இதில் என்ன தவறு இருக்கிறது? அம்மா தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம், என் 3 பெண்களும் ஆபாச பட நடிகைகள். வாழ்க்கை நடத்த சொந்தக் காலில் நிற்கிறார்களே, அதுவே பெருமைக்குரிய விஷயம்தான் என்று பெருமை பொங்க சொல்கிறார். இவ்வாறு அமண்டா தெரிவித்தார்.