கொக்கா கோலா (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக்கூடிய ஒரு குளிர்பானம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கலவை இரகசியம். ஆனால் இந்த கொக்கா கோலா பாணத்தில் உள்ள இராசாயண பதார்த்தங்களை சோதிக்கும் நடவடிக்கை ஒன்றையே நாம் இன்று வழங்குகிறோம்.
காணொளியை கவனமாக பாருங்கள்..
கொகோ கோலா பாணத்தினை ஒருவர் கிளாசில் ஊற்றி அதனுள் ஒரு முட்டையை இடுகிறார். இதனை ஒரு வருடத்திற்கு அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு கோகோ கோலா பாணத்திற்குள் இட்டு வைத்திருந்த முட்டை வெளியே எடுக்கப்படுகிறது. என்ன ஒரு அதிர்ச்சி அதற்குள் இட்டு வைத்திருந்த முட்டை இறப்பர் போன்று இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த கோகோ கோலா பாணத்தில் பல இராசாயண கலவைகள் கலந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. Phosporic Acid போன்ற பல இரசாயணங்களின் கலவையே இது என கூறப்படுகிறது. இதன் மூலம் கொக்கா கோலா தினமும் பருகுவதால் நிச்சயம் எமது பற்களுக்கு ஆபத்து என்பது புலனாகிறது.
|
No comments:
Post a Comment