Wednesday, November 30, 2011

மினுக்கும் அழகை பெற...

"டயட்" என்கிற பெயரில் உணவைக் குறைத்துக் கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொண்டால் போதுமா? இதனால் சருமத்தில் உள்ள சத்துக்கள் குறைந்து, பொலிவிழந்து, சருமம் வறண்டு காணப்பட்டால் வெளிப் புற தேகத்துக்கு என்னதான் "மேக்-அப்" செய்தாலும் பயனில்லை. 
இன்றைக்கு சந்தையில் அழகுக்காகப் பொருட்கள் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. இருக்கும் அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு அனைத்தையும் வாங்கி, முகத்தில் அப்பி, உடலில் பூசி பின்பு அவதிப்படுபவர்கள்தான் அநேகம் பேர். 

முதலில் நம் சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வறண்ட சருமமா, எண்ணெய் வழியும் சருமமா என்பதை ஒரு கைதேர்ந்த அழகுக்கலை நிபுணரிடம் கேட்டறிந்து கொண்டு அழகு பராமரிப்பை மேற்கொண்டால், அழகு என்றென்றும் நம் பக்கம்தான். மேலும் நம் உணவில் சமச்சீரான சத்துக்களடங்கிய டயட் இடம் பெறவேண்டும். ஒருசிலர், வாளிப்பான தேகமும், மினு மினுப்பான சருமமும் கொண்டு செழிப்பாகக் காட்சியளிப்பார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் சமச்சீரான உணவுப் பழக்கமே. 
இப்படிப்பட்ட அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள, தொடர்ந்து பராமரிப்பும் தேவை. வாரம் ஒருமுறை சருமத்தில் சேரும் அழுக்கை உடல் முழுவதும் "ஸ்க்ரப்" செய்து நீக்கி, முகம், கை, கால்களுக்கு மசாஜ் எடுத்துக் கொண்டால் சருமச் சுருக்கங்களை நீக்கலாம். வறண்ட தேகம் உடையவர்கள், பதினைந்து நாட்களுக்கொருமுறை ஏதாவது "ப்ரூட் பேக்" எடுத்துக்கொண்டு "பேஷியல்" செய்துகொள்வது அவசியம். இதனால் சருமத்தில் இழந்த தண்ணீர்ச் சத்துக்கள் மீண்டும் பெறப்படுகின்றன. 

தற்பொழுது வேலை பார்ப்பவர்களின் சூழ்நிலையும் 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறைகளில்தான் அமைகிறது. இதனால் உடல் மேலும் வறண்டு போய் விடும். இதற்கென்றே "நேச்சுரல்ஸ் க்ளோ பேஷியல் ஸ்பெஷல் பேக்" அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வியர்வையே ஏற்படாமல், நீர்ச்சத்து இழந்து காணப்படும் சருமத்துக்குப் புத்துணர்ச்சியும், பொலிவும் உடனடியாகக் கிடைக்கிறது. 

கூலிங் ஐ மஸாஜ்: 

இரவு, பகல் பாராமல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இச்சிகிச்சை ஒரு வரப்பிரசாதம். கண்களுக்கு உண்டாகும் அதிகக் களைப்பு, சூடு இவையெல்லாம் அடியோடு நீங்கிவிடும். இதற்கென்றே உருவாக்கப்பட்ட "ஜெல் மாஸ்"கை ப்ரீசரில் வைத்து எடுத்து கண்களைச் சுற்றி அணிவித்து சிகிச்சை தரப்படுகிறது. 

மைக்ரோ டெர்மா சிகிச்சை: 

இது முக்கியமாக, சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. வெயிலில் அதிகம் சுற்றி, வேலை பார்த்து சருமம் கறுத்துக் காணப்படுபவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இச்சிகிச்சையை மேற்கொண்டால் இழந்த அழகை மீண்டும் பெறலாம். 

ஐ ஸோன் ட்ரீட்மெண்ட்: 

சிலருக்குக் கண்ணுக்கு அடியில் கருவளையம் தோன்றி, சருமம் பொலி விழந்து மங்கலாகக் காணப்படும். இச்சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள கரு வளையம், சுருக்கங்கள் நாளடைவில் மறையும்.

No comments:

Post a Comment