Thursday, December 15, 2011

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?




உங்கள் பொறுமைக்கு ஒரு சோதனை. இது ஒரு செக்ஸ் வீடியோ அல்ல.



உல‌களவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு
உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன?

அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.

இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.

இதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது? ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது. மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

காரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்? மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.

இதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:

பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.

சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.



மாரடைப்பு வரும் முன் அறிகுறிகள்


மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.

இதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.


மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.

லைட்ஸ.. கேமரா.. காதல்!

காட்சி 75

பகல்/எக்ஸ்டீரியர்

மும்பை ஒபேரியா மால்

ராகவன் நீல கலரில் கற்கள் பதித்த அந்த பவுச்சை தேர்ந்தெடுத்த போது அவன் அருகில் மிக நெருக்கமாய் நின்று அவனை அங்குலம் அங்குலமாய் ரசித்துக் கொண்டு இருந்தார் தீபிகா. நீல கலர் பவுச்சை கையில் எடுத்து திருப்பித் திருப்பி பார்த்தான் ராகவன். அவனுக்குப் பிடிக்கவில்லை. திரும்பவும் அதே ஸ்டேண்டில் மாட்டி வைத்தான். அவன் திரும்பவும் அதே ஸ்டேண்டில் மாட்டி வைத்தான், யப்பா.. அவன் மாட்டி வைத்தது இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஐம்பத்தி இரண்டாவது பவுச்.

தீபிகாவுக்கு பவுச் வாங்குவது நோக்கமல்ல; தேவையும் இல்லை. அவளின் அத்தனை ஆடைகளுக்கும் விதவிதமாய் வெரைட்டியான கலரில் பவுச் வைத்திருக்கிறாள். அவளுக்குத் தேவை, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இந்த மும்பையில் அவளுடன் ஊர் சுற்ற வேண்டும்; கதை பேச வேண்டும். இவள் அழகை அவன் ரசிப்பதை புகழ்வதை உள்ளூர ரசிக்க வேண்டும், அவ்வளவுதான்.


இறுதியாக சிவப்புக் கலரில் ஒரு பவுச்சை செலக்ட் செய்தான். தீபீகா, 'ராகவ் சூப்பர்' என்றதும், விலை கூட கேட்காமல் கிரடிட் கார்டைக் கொடுத்தான். அந்த மும்பை ஒபேரியோ மால் எட்டாவது மாடியிலிருந்து எஸ்கலேட்டரில் இறங்கும் போது இடம், பொருள், ஏவல் என எதுவும் பார்க்காமல் ராகவனே எதிர்பார்க்காத நேரம் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ராகவன் சிரித்தான். இந்த சிரிப்பு ஹோட்டல் அறைக்குப் போனதும் 'உனக்கு பலமான விருந்து காத்திருக்கிறது டார்லிங்' என்பதை சொல்லும் சிரிப்பு. புரிந்து கொண்டதால் அர்த்தத்துடன் சிரித்தாள்.



-cut-



காட்சி 16

பகல்/இன்டீரியர்

ஹீரோயின் கிராமத்து வீடு



மீனாவுக்கு தலைகால் புரியவில்லை. மெட்ராஸிலிருந்து 'மாமா வருகிறார்; எப்படியாச்சும் ஒரு வாரம் ஊரில் இருப்பார்' என்ற நினைப்பே அவளுக்கு வானத்தில் மிதக்கின்ற உணர்வை தந்தது. 'காதல் ஒரு போதை' - இது கூட அவள் மாமா அடிக்கடி சொல்லும் வார்த்தை.



'மீனா மனுசனுக்கு இந்த போதை மட்டும் இல்லேன்னா இந்த உலகம், எப்படி தோன்றுச்சோ அப்படியேதான் இருந்திருக்கும். புல்லு, பூண்டு மாதிரி மனுஷனும் ஒரு செடியா மரமாத்தான் இருந்திருப்பான். காதல் தான் இந்த உலகம் வளரக் காரணம். இதையெல்லாம் நான் சொன்ன உனக்குப் புரியாது. நான் சில புக்ஸ் தர்றேன் படி! அப்பத்தான் உனக்கும் உலகம் தெரியும். இல்லாட்டி இந்த கள்ளிமந்தையமும் பழநியும் உங்க அப்பனும் தான் உலகம்னு நெனச்சிட்டிருப்ப.'

போனமுறை மாமா ஊருக்கு வந்த போது சொன்னது. இந்த முறை நிச்சயமா ஏதாச்சும் புக்ஸ் கொண்டு வந்து தருவார். மீனா மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.



'மாமா வந்ததும் எப்படியாச்சும் தங்கம் தியேட்டர்ல ஒரு படம் பார்க்கணும், நேத்து டிவில சமைச்சு காட்டின மாதிரி ஒரு மட்டன் கொழம்பு வச்சு அவர அசத்தணும். அப்புறம் மாமா சொன்னமாதிரி சேலையை நீட்டா மடிப்பு வச்சு, ஸ்டைலா கட்டணும். தலைக்கு எண்ணெய வச்சு வழிச்சு வாராம, மாமா சொன்ன மாதிரி வாரணும். கையில இத்தன கண்ணாடி வளையில மாட்டாம, மாமா சொன்ன மாதிரி ஒரே ஒரு வளையல சிம்பிளா மாட்டணும். நெத்தியில் இத்தன பெரிய சாந்து பொட்டு வைக்காம சின்னதா ஸ்டிக்கர் பொட்டு வைக்கணும். இன்னிக்கு டைப்ரைட்டிங் கிளாஸ்க்குப் பழநிக்குப் போகும் போது, இதெல்லாம் மறக்காம வாங்கிட்டு வரணும்.' அடுப்பில் வைத்த குழம்பு வற்றி அடிப்பிடித்த நாற்றம் மீனாவின் கனவைக் கலைத்தது.



-cut-



காட்சி - 76

இரவு/இன்டீரியர்

மும்பை ஹோட்டல் தாஜ்லேண்ட் எண்ட்



ஹோட்டல் தாஜ்லேண்ட் எண்ட், ரூம் நம்பர் 207-ன் சுவர்கள் வெட்கத்தில் தலை குனிய முடியாமல் நிமிர்ந்தே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. ராகவன், திபீகாவின் திருவிளையாடல்கள் வாத்ஸாயனாரின் படைப்பையும் விஞ்சி நின்றது. ராகவனின் இந்த இறுக்கமும் உருக்கமும்தான் தீபீகா அவனை உடும்புப் பிடியாக பிடித்திருக்க வைத்திருந்தது. ஒவ்வொரு முறையும் முதல் முறையாக அவளை பார்ப்பது போல்தான் இருக்கும். அவனின் ஒவ்வொரு அணுகுமுறையும். 'இது உண்மையில் ஒரு வரப்பிரசாதம். ஒன்றை வருடங்களாகி விட்டது, இந்த உறவுக்கு. ஆனால் இன்னும் ஒரு இன்ஞ் கூட அன்பு குறையாமல், ஆசை தளராமல் நடந்து கொள்கிறானே ராகவ், ரியலி ஐ யம் ஸோ லக்கி.' தீபிகா மனதால் குளிர்ந்தாள்; சிலிர்த்தாள்.

'எல்லாம்' முடிந்ததும் அவன் மார்பில் தலை வைத்து அவன் தாடையைப் பிடித்து தன் பக்கம் திருப்பி, "ராகவ் நாம எப்பவும் இப்படியே இருப்போமில்ல. உன்னோட லவ், அஃபெக்ஷன் தான் இந்த உலகத்துலயே எனக்கு பிரிஸியஸ். நான் சம்பாதிக்கிற இந்த பணம், புகழ் எல்லாம் எனக்கு எப்பவும் நிம்மதியக் கொடுத்ததில்லை. இந்த நிமிஷம் உங்க கூட இவ்ளோ அன்னியோன்யமா இருக்கேன்ல... இதுதான் எனக்கு நிம்மதி, இதுதான் எனக்கு சந்தோஷம். இது எனக்கு நிரந்தரமா வேணும் ராகவ்... ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட்."



தீபீகா பேசப் பேச, அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே "நீயில்லாத ஒரு வாழ்க்கைய என்னால கற்பனை செஞ்சு கூட பார்க்க முடியாது தீபு. நீ என் தேவதை, என் வாழ்க்கையோட வரம்," என்றான் கண்களில் தேக்கிய அன்புடன்.



"ராகவ், இது நீ பண்ற படத்தோட டயலாக் இல்லியே," என்று அவள் கேட்க, அணைப்பில் மறுப்பை சொன்னான்.



-cut-



காட்சி - 17

பகல்/எக்ஸ்டீரியர்

ஹீரோயின் வீடு



மாமா ஊருக்கு வந்து விட்டு போன நினைவுகளில் திரும்பத் திரும்ப மனதுக்குள் ஓட்டிக் கொண்டிருப்பதிலேயே தன் நாட்களை கழித்தாள் மீனா.



'மீனா ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோ சாரதிராஜா சார்கிட்ட அஸிஸ்டெண்டா ஜாயின் பண்ணிட்டேன். கெடைக்கிற காசுல வாடகைக்கு ஒரு வீடு மட்டும் பார்த்துட்டு உன்ன வந்து கூப்பிட்டுப் போயிடுறேன். உங்கப்பாகிட்ட முறைப்படி பொண்ணு கேட்டா தர மாட்டார். அதெல்லாம் நடக்குற காரியமில்ல. உங்கப்பாவ பொறுத்தவரைக்கும் மாச சம்பளம் வாங்குறவன் மட்டும்தான் உசத்தி, புத்திசாலி பொழைக்கத் தெரிஞ்சவன். மத்தவனெல்லாம் கூமுட்டை. அந்தாளுகிட்ட வந்து நா பேசி வெட்டுக்குத்துல முடியறதுக்குப் பதிலா, என்ன நம்பி நீ வா, நான் ஒரு ரெண்டு படம் அஸிஸ்டெண்டா பண்ணிட்டு நிச்சயமா தனியா படம் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் நீ மகாராணியாட்டம் இருப்ப. நீ என்னை முழுசா நம்பினா என்னோட வா, உங்கப்பாவுக்குப் பயந்தா உங்க வீட்டுலய, தினமும் சோறாக்கி குழம்பு வச்சு, ஆட்டுக்குத் தீவனம் போட்டு பழநிக்கு போயி டைப்ரைட்டர 'லொட்டு லொட்டு'னு தட்டுகிட்டு காலத்த கழிச்சிடு. ஆனா ஒண்ணு, நீ இல்லாத வாழ்க்கை பொணத்துக்கு சமமான வாழ்க்க. அத மட்டும் புரிஞ்சுக்கோ'



மாமா கண்ணீர் மல்க கைகளை பிடித்துக் கொண்டு குண்டு மல்லித் தோட்டத்தில் பேசிய வார்த்தைகளை பள்ளிக் கூட பிள்ளைகள் தமிழ் செய்யுளை வாய் விட்டு கத்தி கத்திப் பிடித்து மனப்பாடம் செய்வது போல் மனதுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாள். திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளுடனேயே வாழ்ந்ததாலோ என்னவோ தீர்க்கமாக முடிவு எடுத்தாள்.



இந்த விறகு அடுப்பு வேண்டாம். ஆட்டுப் புழுக்கை கூட்டி அள்ளும் வேலை வேண்டாம். லொடலொட டைப்ரைட்டிங் வேண்டாம். என் மாமா மட்டும் போதும். பச்சை விறகை அடுப்பில் வைத்து ஊதி ஊதி அது எரியாமல் புகை மட்டும் பொங்கி எழுந்த தருணத்தில் உறுதியாக முடிவெடுத்தாள்.



-cut-



காட்சி - 78

பகல்/எக்ஸ்டீரியர்

சென்னை ஏர்போர்ட்



தீபீகா ராகவனின் இரு கைகளுக்குள் தன் கையை பொத்தி வைத்துக் கொண்டாள். "ராகவ், என்னால ஹோட்டல்ல இருக்க முடியல. தனியா ஃபிளாட் எடுத்து இருக்கேன். அப்பத்தான் நீயும் ஃபிரியா வந்து போகலாம். இல்லாட்டா மீடியாகாரன் எவன் கண்ணுலயாவது பட்டுட்டா... இந்த ஊருக்கே நாமதான் சப்பி சாப்புடுற சாக்லேட்டாயிடுவோம். உன் மேனேஜர்கிட்ட சொல்லி அண்ணாநகர் இல்லாட்டா போயஸ் கார்டன் பக்கமா ஒரு ஃபிளாட் பாக்கச் சொல்லு. ப்ளீஸ். உன்ன ஒரு நாள் கூட என்னால மிஸ் பண்ண முடியாது."



தீபீகா வார்த்தைகளை அடுக்க அடுக்க ராகவன் அதற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அவர்கள் வந்த ஃபிளைட் சென்னையை தொட்ட சில நிமிடங்களில் தனிக்குடித்தன முயற்சியின் வெற்றிக் கதவு திறந்தது.



-cut-



காட்சி - 18

பகல்/எக்ஸ்டீரியர்

ஹீரோ வீடு



வடபழனி பஸ் ஸ்டண்ட் ஐயங்கார் பேக்கரிக்குப் பின்புறம்... நான்கு வீடுகள் கொண்ட ஒண்டிக் குடித்தனத்தில் புதுப் பெண்ணுக்கு உரிய வெட்கத்தையும் மஞ்சளையும் சேர்த்து பூசிக் கொண்டிருந்தாள் மீனா.



"இது கள்ளிமந்தையம் இல்ல, சென்னை. இப்படி மஞ்சள் பூசுறத விடு" - மாமாவின் வார்த்தைகளை கட்டளையாக நினைத்தாள். மாமாவுடன் இரண்டு முறை மெரினா பீச்சுக்கு போனாள். கடலில் சின்ன குழந்தையைப் போல் விளையாடினாள். ஆனால் மாமா கடலை பார்த்து எந்த வித குதூகளம் காட்டாமல் இருந்தது மீனாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.



"ஏன் மாமா," என்ற கேள்விக்கு "அடி போடி, ஆறு வருஷமா இதே கடலைத் தான் பாக்குறேன்," என்ற பதிலில் ஒரு சலிப்பு தெரிந்தது. மூன்றாவது முறையாக மீனா மாமாவுடன் மெரீனாவுக்கு வந்த போது ஐந்து மாத கர்ப்பிணி! அவள் மாமாதான், அவளுக்கு தாயும் தந்தையுமாக இருந்து கவனித்தான். அடி பைப்பில் தண்ணி அடிக்க விடாமல், பம்ப் ஸ்டவ்வில் கிடந்து கஷ்டப்பட்டு சமைக்க விடாமல் எல்லா வேலைகளையும் செய்து வைத்து விட்டு வேலைக்குப் போனான். அவனுடைய அன்பும் கரிசனமும் அவளை இன்னும் இன்னும் அதிகமாய் காதலிக்க வைத்தது.



-cut-



காட்சி - 79

இரவு/இன்டீரியர்

ஹீரோயின் 2 ஃபிளாட்



ராகவை தீபீகா பார்த்த பார்வையில் ஆச்சர்யம் அதிர்ச்சி, ஆசை, காதல் அத்தனையும் மெத்தெனக் கொட்டிக் கிடந்தது. ஆறேழு லட்சம் விலையில் வைர நெக்லஸை அவன், அவள் கழுத்தில் மாட்டிய போது 'உலகின் நெம்பர் ஒன் காதலர்கள் நாம்தான் ராகவ்' என்று கத்த வேண்டும் போலிருந்தது தீபீகாவுக்கு. கத்த முடியாததால், அதை முத்தமாகக் கொடுத்தாள்.



"ராகவ் இந்த நிமிஷம் அப்படியே செத்துப் போயிடலாமான்னு இருக்கு. அத்தன சந்தோஷம் ராகவ்" என்று அவள் எந்த ஆல்கஹாலும் சாப்பிடாமல் உளற, "உலகத்துல எந்த பொம்பளையும் இந்த டயலாக்கை சொல்லாம இருக்க மாட்டீங்களா," என்று அவன் சொன்ன போது... தீபீகா 'அவன்' பற்றியும் ராகவ் 'அவள்' பற்றியும் ஒரு முறை ஒரு கணம் நினைத்துக் கொண்டார்கள்.



-cut-



காட்சி - 25

பகல்/இன்டீரியர்

அரசு மகப்பேறு மருத்துவமனை



கோஷோ ஆஸ்பத்திரியில் மீனா இரட்டைக் குழந்தைகளுடன் படுத்திருந்த போது, 'இந்த உலகத்திலேயே நான்தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி' என்று நினைத்துக் கொண்டாள். மீனாவின் காலடியில் அவள் மாமா உட்கார்ந்து கொண்டே தூங்கிக் கொண்டிருந்தான். இராப் பகலாக தனி ஆளாக நின்று பிரசவ அறைக்கும் வார்டுக்கும் அலைந்த அலைச்சல் அவனை உட்கார்ந்து கொண்டே தூங்க வைத்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்ததும் பக்கத்து வீட்டு அம்மா ஆரத்தி எடுத்துக் கொண்டே "உன் புள்ளைங்க பிறந்த நேரம், நீ எங்கயோ போகப் போற," என்று சந்தோஷமாக சொன்ன நேரம் பலித்தது..



மீனாவின் மாமா தன் லட்சியத்தின் முதல் படியைத் தொட்டாள். தன் கனவில் உருவாகி வைத்திருந்த வெற்றிகள் ஒவ்வொன்றும் அவனை தூக்கி வைத்துக் கொண்டாடின. வெற்றியின் வாசம் வடபழனி ஒண்டிக் குடித்தனத்திலிருந்து ஆர்.ஏ.புரத்துக்கு ட்ரிபிள் பெட்ரூம் ஃபிளாட்டுக்கு, சேலையிலிருந்து சுடிதாருக்கு மாறினாள். கைகளில் டேட்டூ போட்டுக் கொண்டாள். உடம்பு குறைய ஜிம் போனாள். கண்ணாடியில் பார்க்கும் போது 'ஆஹா எத்தனை ஸ்மார்ட்டா மாறிட்டோம்' என்று தனக்குத் தானே பாராட்டிக் கொண்டாள். இப்போதெல்லாம் யாரிடமும் பேசினாலும் 'ஆக்சுவலி' என்றுதான் ஆரம்பிக்கிறாள். 'யாயா, இன்ட்ரஸ்டிங், கொயட் குட், அன்பிளீவபிள்' என்ற இங்கிலீஷ் வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறாள். மனம், 'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் மீனா' என்றது. கடந்த ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு வரைதான் இந்த சந்தோஷம் நீடித்திருந்தது.



-cut-



காட்சி - 80

முப்பொழுதும்/எல்லா இடங்களிலும்

ஹீரோ வீடு



இப்போதெல்லாம் மீனாவின் அழகான கண்களில் நிலையான மென் சோகம் வன்முறையாக குடிபுகுந்து விட்டது. தமிழ் பேப்பரைத் திருப்பினால், 'இயக்குநர் ராகவன், தீபீகா காதல்'. இங்கிலீஷ் பேப்பரைத் திருப்பினால் அங்கும் அதே செய்தி! வாரப் பத்திரிகையை புரட்டினால், ராகவ் - தீபீகா க்ளோசப் போட்டோஸ். 'இது, உண்மையா பொய்யா' என்று மாமாவை கேட்க முடியாது. வீட்டுக்கு வந்தால்தானே கேட்க முடியும்.



கல்யாணமான பத்து வருஷத்துல, ஷூட்டிங் முடிஞ்சா வீடு, வீடுதான் பழியாக் கிடப்பார். இந்த ரெண்டு வருஷமா ஏற்தோ கெஸ்ட் மாதிரி ஒரு மணிநேரம் ரெண்டு மணிநேரம் அப்பப்ப வந்துட்டு போறார். "மாமா... மாமா... மாமா... என்று காதலால் கசிந்துருகி, ஊரை விட்டு, உறவை விட்டு நீயே கதி என ஓடி வந்தேன். நீயும் அத்தனை காதலோடு, அன்போடு என்னை நேசித்தாய். உன் காதல் சுமை தாங்காமல் சில சமயங்களில் பெருமூச்சு விட்டிருக்கிறேன் மாமா. என்னிடம் கொஞ்சியும் கெஞ்சியும் பேசிய அதே வார்த்தைகளை, என்னிடம் செய்த அந்த தீராத விளையாட்டுகளை அவளிடமும் தொடர்ந்து கொண்டிருக்கிறாய். நீ கொடுக்கும் பணம், நீ கொடுக்கும் வசதிகள், நீ கொடுக்கும் அந்தஸ்து என்னை, உன்னிடம் கேள்வி கேட்கும் தைரியத்தை குலைக்கிறதா மாமா!"



மீனா கொஞ்ச காலமாய் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறாள். பசியில்லை, தூக்கமில்லை, எதிலும் ஒட்டுதலில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு இதே மாமாவுடன் காதல் வந்த போதும் இதே நிலைதான். அதே மாமாவுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல் வந்ததும் இதே நிலைமைதான்.!



இந்த மாமாவுக்காகத்தானே அப்பாவுக்குத் தெரியாமல் ஆட்டுக்குட்டிகளை வித்து ஆயிரம் ஆயிரமாய் அனுப்பிருக்கிறேன். கல்யாணத்துக்கு ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி அம்மை வந்து ரொம்ப சீரியஸா இருந்தப்ப.. கள்ளிமந்தையத்துலயிருந்து பழநிக்கு நடந்தே பாதயாத்திரை போனேன். ஒருமுறை அவசரமாக பணம் வேணும்னு போன் செய்த போது கழுத்தில் இருந்த 5 பவுன் செயினில் 8 கண்ணியை மட்டும் வெட்டி, வித்து பணம் அனுப்பினேன். அதெல்லாம் உங்களுக்கு எப்படி இனி மனசுல இருக்கும் மாமா?



மாமாவை கேள்வி கேட்க முடியாது. கேட்டால் என்ன சொல்வார்? "மீனா இன்னும் நீ அந்த மிடில் கிளாஸ் மெண்டாலிட்டியிலயே இருக்க, அந்த மனச மாத்து, அதுதான் நல்லது" - இதைத் தவிர மாமாவால் வேறு எதுவும் சொல்லவும் முடியாது; செய்யவும் முடியாது. அப்பா அம்மாவிடம் போய் கம்ப்ளெயிண்ட் பண்ணவும் முடியாது. கள்ளிமந்தையமாக இருந்தால் ஊரைக் கூட்டி நியாயம் கேட்கலாம்... இங்கு யாரை கூட்டி நியாயம் கேட்பது?



'இந்த நிமிடம் கூட மாமா ஊட்டி ஷூட்டிங்கில் தீபீகாவுடன்தான் இருக்கிறார் என்னிடம் பேசிய அந்த வார்த்தைகள், என்னிடம் விளையாடிய அந்த திருவிளையாடல்கள் அவளிடமும். ஐயோ... ஐயோ கடவுளே இதிலிருந்து எனக்கு விமோசனமே இல்லையா' மீனாவின் புலம்பல்கள் அவள் மூளையை, புத்தியை, உணர்வுளை கரையானாக அரித்தன.



'என்னிடம் பேசிய அதே வார்த்தைகள், என்னிடம் விளையாடிய அதே விளையாட்டுகள்' மீனா இப்படி நினைக்க நினைக்க அவளுக்குள் இருந்த அழகான, குணமான, பண்பான மீனா உருவமிழக்க ஆரம்பித்தாள். இந்த சிந்தனையின் கொடுமையிலிருந்து இவர்கள் இருவரும் தரும் உளவியல் வன்முறையிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். எனக்கு விடுதலை வேண்டும்.. எனக்கு விடுதலை வேண்டும்' மீனா மனதுக்குள் கத்த ஆரம்பித்தாள். அதையே கத்திக் கொண்டிருந்தாள்.



no cut... continiues



காட்சி - 81

முப்பொழுதும் /எல்லா இடமும் 

ஹீரோ வீடு



"நான் உங்ககிட்ட பேசுறதுல உங்களுக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லியே மதி? டைரக்டர் சார் கூட நீங்க ரெண்டு மூணு தடவ எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க தெரியுமா? என்ன ஒரு தடவ உங்க பைக்ல ஸ்பென்ஸர் பிளாசா கூட்டிட்டு போயிருக்கீங்க தெரியுமா? உங்க டைரக்டர் சொல்லித்தான். ஆக்சுவலி, ஒரு டைம் நாம லேண்ட்மார்க் போயிருக்கோம் தெரியுமா? இட் வாஸ் கொயட் இன்ட்ரஸ்டிங் மதி..."



மீனா இப்போதெல்லாம் இடைவெளி இல்லாமல் மொபைல் போனில் பேச ஆரம்பித்திருக்கிறாள்!



தினம்தினம் ராகவ் - தீபீகா க்ளோஸப் போட்டோ ஏதோ ஒரு பத்திரிகையில் வந்து கொண்டிருக்கிறது!

பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்!

THANKS -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)‏
பெட்ரோல் விலை: 
மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.

இதில் நாமும் விதிவிலக்கல்ல..

ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!

விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்

1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்

அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.

இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!! இது மகாப் பொய்யாகும்!!

நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.

நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு,எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.

நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.

லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.

பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா? 

எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது

அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.

ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.

2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயமாகும்.

2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்

உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.

ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011

வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..

மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.

இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!

இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!

மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.

நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.

இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!

100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.

ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.

இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.

எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கூடுதலாக வரி விதிக்க காரணம்

1. தனியார் நிறுவனங்கள்

சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.

கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.

ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.

இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.

Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.

இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.

தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.

இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.

முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.



65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.

இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.

அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.

பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.

அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.

18% எங்கே 65% எங்கே ?

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்

மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.

இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான் ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்கு’பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.

இதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம் இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.

மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.

பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.

மாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்

THANKS TO தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)‏

காமத்தில் சிக்கி தவிக்கும் தமிழ் சினிமா

தமிழ் சினிமா போகும் போக்கு நல்ல கதையையும், நல்ல சினிமாக்களையும் விரும்பும், நேசிக்கும் ரசிகர்களுக்கு பெரும் அருவறுப்பையும், கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.



நாளிதழ்களில் வரும் கலர் கலர் சினிமா விளம்பரங்களைப் பார்ப்போருக்கு ஒரு வித்தியாசம் நன்றாகத் தெரியும். முக்கால்வாசி விளம்பரங்களில் ஆபாசமான, கவர்ச்சிகரமான போஸ்களுடன் கூடிய நடிகைகளைத்தான் பார்க்க முடிகிறது. அப்படி இல்லாவிட்டால் டபுள் மீனிங்குடன் கூடிய பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரத்தைக் காணலாம்.

ஏன் இப்படி…?

கெட்டியான கதைகளைக் காட்டி ரசிகர்களை இழுத்தது அந்தக் காலம். ஆனால் இப்போதோ விதம்விதமான ‘குட்டிகளின் சதை’களைக் காட்டி கலர் கலராக விளம்பரம் கொடுத்து, ஒரு மாதிரியான பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரங்களைக் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான, உண்மையிலேயே அருமையான படங்களும் வரத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கால் விரல்களையும் சேர்த்து வைத்து எண்ணினாலும் போதாது என்று கூறும் அளவுக்கு காமத்தையும், செக்ஸையும்,வன்முறையையும் வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி விட்டது.

இலக்கணப் பிழை என்று ஒரு படம். எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை என்று ரசித்தபடி அந்தப் படத்தின் ஸ்டில்லைப் பார்த்தால் படத்தின் நாயகியை படு கவர்ச்சிகரமாக போட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் அந்த நடிகை படுத்தபடியும்,சாய்ந்தபடியுமே காணப்படுகிறார்.

அதேபோல தேவலீலை என்ற படத்தின் விளம்பரமும் இப்படித்தான் கந்தரகோலமாக காமாந்திரசாயலுடன் உள்ளது. அந்தரங்கம் என்ற படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் கொடுத்தனர். துரோகம் நடந்தது என்ன என்ற படத்துக்கான விளம்பரங்கள் படு கவர்ச்சிகரமாக, பட்டவர்த்தனமான காமச்சாயலுடன் வெளியானது அதுவும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் தெருவிற்கு தெரு கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் செல்லும் வழிகள் வழிகள் தோறும் இந்த படங்களின் கவர்ச்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இளைய சமுதாயம் பாழாக்கப் படுகிறது.

இனிமே பாலியல் படங்களுக்கு வண்ண போஸ்டர் ஒட்ட கூடாது வெரும் பெயர் மட்டுமே ஒட்டப்படும் என்று சட்டம் கொண்டுவந்தால்தான் இவர்களை திருத்த முடியும் போல, ஒரு காலத்தில் கவர்ச்சி படத்திற்கு சினிமா பத்திரிக்கைகளை வாங்கியவர்களுக்கு இன்று இதுபோன்ற போஸ்டர்கள் விருந்தாய் அமைவது கொடுமை.

தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் இப்படித்தான்காமத்தையும், வன்முறையையும், கள்ளக்காதல்களையும் மையமாக கொண்டுஉருவாக்கப்படுகின்றனவாம். கேட்டால் சினிமாவில் கவர்ச்சி தவிர்க்க முடியாதது என்கிறார்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலர்.

இந்த படங்களின் பெயர்களில் கூகிளில் தேடப்படும் போது கிடைக்கப்படும் எந்த படமும் இங்கு வெளியிட தகுந்ததாக இல்லை என்பதால் படங்கள் தவிர்க்கப்படுகிறது.

சாட்டிங் ஒரு சீட்டிங் - ஓர் அலசல்

தமிழ்மணத்தின் சில பதிவுகள் படிக்க நேர்ந்தது, மனதை சில நாட்களாய் அரித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களைப் பற்றி எழுதி தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து சில வரிகள்.


பொதுவாக நான் சாட்டிங் செய்யும் நபர்கள் மிகக்குறைவு, ஏனென்றால் பதிவுலகைப் போலில்லாமல் சாட்டிங்கில் பேசும் பொழுது நடுநிலை ஜல்லி பெரும்பாலும் அடிக்க முயலாமல் நான் நினைப்பதைச் சொல்லிவிடுவேன் என்பதால் தான். 

அப்படிச் சாட்டிங் செய்யும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதும் கொஞ்சம் போல் யோசித்து தான். ஆனால் வாழ்க்கையின் எல்லா சமயங்களிலும் நாம் நினைப்பது நடந்துவிடுவதில்லை இல்லையா? என்னுடன் நண்பர்களாகயிருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் போல் என்னுடைய பர்ஸனல் வாழ்க்கை முதற்கொண்டு எதையும் மறைக்காமல் சொல்லும் பழக்கம் உண்டு, சிலசமயம் இது ரொம்ப மோசமாகி 'சுயதம்பட்டம்' என்று சொல்லும் அளவிற்கு நண்பர்கள் நினைப்பதுண்டு. ஆனால் என்னிடம் நேரில் நீங்கள் பேசினால் எதை என்னிடம் இருந்து பெறுவீர்களோ அது உங்களுக்கு சாட்டிங்கில் கிடைக்கும். ஒரு நன்கு தெரிந்த நண்பனொருவன் சொல்லும் செய்திகள் 'சுயதம்பட்டமாக' நமக்குப் படுவதில்லை குறைந்தபட்சம் எனக்கு. எனவே என்னுடன் சாட்டிங்கில் பேசுபவர்களிடம் அப்படி வெளிப்படுமாயிருக்கும்.

ஆனால் மிகச் சமீப காலமாக சாட்டிங் செய்யவே பயப்படும் நிலைக்கு ஆளானேன், நான் மிகவும் மதிக்கும் சில நபர்கள் கூட நான் அவர்களுடன் சாட் செய்த விஷயத்தை பொதுவில் வைத்து பேசியிருந்தார்கள். நிச்சயமாய் நான் யாருடனும் சாட் செய்த எதையும் பொதுவில் வைப்பதைப் பற்றி எனக்குப் பிரச்சனையில்லை தான் ஆனால் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டுவிட்டுச் செய்திருக்கலாம். பின்நவீனத்துவம் பேசுகிறோம் 'author is dead' என்று சொல்கிறோம் ஆனாலும் பர்மிஷன் கேட்கச் சொல்கிறேனே என்றால், பொதுவில் வைக்கும் பொழுது படிக்கும் அனைவரும் post modernist ஆகயிருப்பதில்லையே அதுதான் பிரச்சனை. அப்படிக் கேட்காமல் போட்ட பிறகு அந்த நபருடன் திரும்பவும் சாட்டிங்கில் பேசுவது என்பது என்னால் இயலாமல் போய்விடுகிறது. ஏனென்றால் பின்னர் நான் எது பேசினாலும் அது politically correctஆன வார்த்தைகளாகவும் சொற்றொடர்களாகவும் தான் இருக்கும், எங்கே இந்த நபர் திரும்பவும் போட்டுக் காண்பிச்சிருவாருன்னு! அது நாடகம் ஆகிவிடுவதால் அதைச் செய்வதற்கு பதில் அவருடன் உரையாடல் செய்யாமலே இருந்துவிடுதல் நலம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் அப்படி பொதுவிலும் வைக்காமல் ஒரு குழுவாக பார்த்து அனுப்பி எழுதியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது. என் கேள்வியெல்லாம் அப்படி ஒரு transcript உங்களுக்கு வருகிறதென்றால் நீங்கள், அந்த அனுமதி வாங்காமல் போடும் சாட்டிங் மெஸேஜைப் பற்றி அதை போட்டுக் கொண்டிருப்பவருக்கு கேள்வி கேட்க மாட்டீர்களா? ஏன்யா இப்படிப் போடுகிறீரே இது சரியா? எழுதியவரிடம் கேட்டீரா இப்படிப் போடப்போகிறோம் என்று? அதைப் பற்றி நாம் பேசும்/பேசப்போகும் விஷயங்கள் அவருக்கு அனுப்பி வைப்பீர்களா என்று. குறைந்தபட்சம் இப்படிச் செய்வது தவறு என்றாவது! ஆனால் இப்படிப்பட்ட விஷயத்தை நமக்கு நன்றாய்த் தெரிந்த நண்பர்களே செய்யும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது. எழுதும் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியவனை விட்டுவிடும் அளவிற்கு நமது சமுதாயம் வளர்ந்துவிட்டால் யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்காமல் இதைச் செய்யலாம். ஆனால் முட்டுச் சந்துக்குள் ஆயிரம் அரசியல் செய்யும் நமக்கு அதெல்லாம் நடக்க ரொம்ப காலம் ஆகும்.

இங்கு யாரையும் பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை தான் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது ஆனால் குறைந்தபட்ச நாகரீகம் கருதி அதை நான் செய்யவில்லை.

பெண்கள் மேலே மையல் உண்டு. நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

Mohandoss's new status message - 

2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: ம்ஹூம் வேண்டாம்
me: ஏன்?
2:36 PM ஏன்னு கேட்டேன்?
2:45 PM உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு 
இல்லையா?
aeswari: உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye

காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja: நான் அகிலம் 
4:13 PM me: சொல்லு
raja: call me
me: சரி

“சொல்லு என்ன விஷயம்”
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்”
“ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்”
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது “சரி” தொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me: சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: அப்படியா?
aeswari: illaiyaa
me: மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம் 
- உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: வரவா?
aeswari: hmm
4.30 PM me: கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ‘ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை. 

“முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது”

எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

“கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்”
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

“அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”

எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

“இல்லை”

“அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது”

இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

“நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

“நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

“சாரி!”

“அது பரவாயில்லை சொல்லு...?”

“ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்”

“எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.”

என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது. 

“எதுக்கு?”

“உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?

சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008 மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

“என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

“ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

“எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் ‘மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”

ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

“என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. 

“என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?”

“அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.”

“ஆமாவா இல்லையா சொல்லு?”

“இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

“உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

“ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.
நான் ஸ்டேட்டஸ் மெஸேஜை மாற்றிவிட்டு காத்திருக்கிறேன்.

பெட்ரோல் விலை 65 பைசா உயர்த்தப்படும் ரூபாயின் மதிப்பு சரிந்ததால்!

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவடைந்துள்ளதையடுத்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் செலவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலை இன்றிரவு முதல் லிட்டருக்கு 65 பைசா வரை உயர்தப்படவுள்ளது.

தமிழகத்தில் வரியையும் சேர்த்து விலை உயர்வு லிட்டருக்கு 75 பைசா உயரும் என்று தெரிகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துக் கொள்ள கடந்த 2010 ஜூன் மாதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, கச்சா எண்ணெய்யின் சராசரி விலையை கணக்கில் கொண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பெரிய அளவில் உயராத நிலையிலும் பெட்ரோல் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதே காரணமாகும்.

ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டதால், கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா சரிந்துள்ளது. இதன் மூலம் ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 54.17 ஆகிவிட்டது.

இதனால், ஒரு லிட்டர் பெட்ரோலை விற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 55 முதல் 56 பைசா வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடுகட்ட விலை உயர்த்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தந்தால், இன்றிரவு முதலே விலை உயரலாம்.

விரைவில் பெட்ரோல் மீது ரூ. 2 பசுமை வரி?:

இந் நிலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதில் பெட்ரோல் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறி, அதைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், பெட்ரோல் மற்றும் கார்களின் மீது பசுமை வரி விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.2 உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீசை முளைக்காத ஆண்களுக்கு ஆண்மை குறைவாக இருக்கும் ?


மீசை என்பது ஆணுக்கு அழகு மட்டுமல்ல அடையாளமும் கூட. அழகும், அடையாளமும் ஒருபுறம் இருக்க, மீசையானது ஆண்மையை பறைசாற்றும். அதனால்தான் மீசை முளைத்த ஆண்பிள்ளை என்கின்றனர். 

மீசை முளைக்காத ஆண்களுக்கு ஆண்மை குறைவாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தான் உரிய வயதில் ஆண்களுக்கு மீசை முளைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஹார்மோன் சுரப்பு

ஆண்களுக்கு 13 முதல் 17 வயதுக்குள் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் எனப்படும் பகுதி ‘பிட்யூட்டரி’ எனப்படும் நாளமில்லா சுரப்பியை தூண்டும். அதிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் விந்துப்பையில் உள்ள அணுக்களை தூண்டி, ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோனை சுரக்கத்தூண்டும். இந்த ஹார்மோன் இயக்கம் கிட்டத்தட்ட பெண்களுக்கு ஏற்படுவது போலத்தான். பெண்களுக்கு பருவவயதில் பெண்மைக்குரிய ஹார்மோன்களான ‘ஈஸ்ட்ரோஜன்’ ‘புரோஜெஸ்ட்ரான்’ அதிகமாக சுரக்கும்.

இளமை பொலிவு கூடும்

ஆண்களுக்கு மீசை முளைக்க அடிப்படை காரணமாக இருப்பது இந்த டெஸ்ட்டோஸ்டீரான் எனப்படும் ஹார்மோன்தான். இந்த ஹார்மோனின் முதல் வேலை அக்குள், மர்ம உறுப்புகளில் முடிவளர வைப்பதாகும். அதன் பிறகு மீசை மற்றும் உடல் பகுதிகளில் ஆங்காங்கே முடியை வளரவைக்கும். இந்த ஹார்மோன்தான் ஆண்மைக்குரிய மிடுக்கை கொடுக்கும். தசைகள் இருக்கமாகி, இளமைப்பொலிவு கூடும். குரலும் மாறிவிடும். இனப்பெருக்க உறுப்பு பெரிதாவதுடன், அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு வீரியம் கொள்ளும்.


ஆண்மை குறைபாடு

டெஸ்ட்டோஸ்டீரான் பருவ வயதில் சுரக்கும்போது மீசை வளரும், சுரக்காவிட்டால் வளராது. டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்தால் மீசை வளர்வது தடைபடுவது ஒருபுறம் இருக்க, சிலருக்கு உடல்பருமன் கூடிவிடும். ஆண்மைக்குரிய மிடுக்கு, சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பார்கள். பாலியல் குணாதிசயங்கள் குறைவாக இருக்கும். பெண்களுக்கு மார்பகங்கள் வளர்வதைப்போல ஆண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகிவிடும். இந்த நோய்க்குறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.

பொதுவாக பிறவிக்கோளாறுகள், பொன்னுக்கு வீங்கி, கடுமையான நோய்கள், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், போன்ற பழக்கங்களினால் டெஸ்டோஸ்டீரான் சுரப்பது பாதிக்கப்படலாம். சிறு கட்டிகள் மூளையில் இருந்தாலும் பாதிப்பு நேரிடும். தைராய்டு கோளறுகளால் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சரியான சிகிச்சை தேவை

சரியான சிகிச்சை அளித்தால் இந்த குறைபாட்டினை போக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவரின் மனநிலை, உடல்தன்மைகள், நோய்குறிகளை ஆராய்ந்து மருந்து அளித்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கணவர்களே ஜாக்கிரதை. நீங்களும் மனைவியால் துண்டு துண்டாக வெட்டி சமைக்கப்படலாம்.


பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்தவர் அகமது அப்பாஸின் 32 வயதுடைய மனைவி ஷினாப்பீவி. அகமது அப்பாஸ் தனது மனைவி ஷினாப் பீவிக்கு தெரியாமல் வேறொருறொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு வைத்திருந்ததுடன் அவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

அதை அறிந்த ஷினாப்பீவி ஆத்திரம் அடைந்ததன் விளைவாக தனது கணவர் அகமது அப்பாசை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை மறைக்க என்ன வழி என யோசித்தார். 

கணவர் அகமது அப்பாசின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சமைத்தார். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் பொலிஸூக்கு தகவல் கொடுத்தனர். வரைந்து வந்த பொலிஸார் ஷினாப் பீவியை கைது செய்தனர். மேலும், இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் ஷாபைசல் ஆகியோரும் பிடிபட்டனர்.


மூன்று கையுடன் பரிட்சையில் பிட்டு அடிக்கும் மாணவர்!

இந்த மாணவரின் அசாத்தியத் திறமையைப் பாருங்கள். இவர் தான் இந்த வருடத்தின் மிகச் சிறந்த மூளைசாலி மாணவராக இருப்பார்.. இனி வரும் காலங்களில் பாடசாலை, கல்லூரிகளில் கொப்பி அடிப்பதில் இவர் தான் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பார்.


மூன்று கையுடன் பரீட்சை எழுதுகிறார். அதில் ஒன்று பொய்க் கை. ஒரு கையையும் ஒரு பொய்க் கையையும் மேசையின் மீது வைத்து விட்டு இன்னொரு கையால் செல்போனில் பார்த்து கொப்பியடிக்கிறார்.

எது எவ்வாறாயினும் மிகவும் திறமையாகச் சிந்தித்து பரீட்சை எழுதுகிறார் இந்த மாணவர்.

பேருந்தினுள் பெண்ணை ...இப்போ பஸ்சுக்குள்ளும் இந்த கூத்தை ஆரம்பிச்சுட்டாங்களா?


லண்டனில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்தில் பெண்ணொருவர் சக பயணி ஒருவரால் துர்வார்த்தைகளால் திட்டப்பட்டு துன்புறுத்தப் பட்டிருக்கிறார்,  29 இலக்கமுடைய பஸ் வண்டியினுள் இந்த பெண் இரு கம்பிகளையும் பிடித்தவாறு நின்றிருக்கிறார்.

இவர் சற்று குண்டாக இருந்தபடியால் ஒரு பயணி நக்கலாக பேசியதை தொடர்ந்து அந்த பெண்ணும் அவரை நோக்கி தகாத வார்த்தைகளை பிரயோகிக்க தொடங்கினார், இதனால் ஆத்திரமடைந்த பயணி அவருக்கு தெரிந்த அனைத்து ஆங்கில கெட்டவார்த்தைகளையும் அவர்மீது தெளித்திருக்கிறார், கடுப்பாகிய பெண் அவரின் கன்னத்தில் அறைய ஆரம்பமாகியது அந்த வில்லங்கம்!

அதன் பின்னர் அந்த பெண்ணை கீழே தள்ளி விழுத்தி கால்களாலும் கைகளாலும் அடித்து தன் வெறியை தீர்த்தார், யாருக்கும் தெரியாமல் பஸ்ஸினுள் இருந்த பயணியால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பொலிசாரிடம் வழங்கப்பட்டுள்ளது!


தூங்கும் போது பாட்டு கேட்க earphone காதை உறுத்துகிறதா.?உங்களுக்காக


பலருக்கு தூங்கும் போது பாட்டு கேட்ட வண்ணம் தூங்குவது ரொம்ப பிடிக்கும். இரவில் பெரிய ஒலியில் பாடல்கள் கேட்க முடியாது. காரணம் அருகில் இருப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தலாம். அதற்கான ஒரே வழி earphone ஐ பயன்படுத்துவதாகும்.

அதனை பயன்படுத்தும் போது அது காதில் உறுத்திக்கொண்டிருப்பதால் தூக்கம் கெட்டுவிடும். காதில் வலியும் ஏற்படும். இதனால் பலருக்கு இது இடையூறாக இருக்கும்.

ஆனால் இப்பொழுது கவலையை விடுங்கள். அதற்கு தீர்வாக வந்துள்ளது ஓர் தயாரிப்பு. அதை நீங்களே பாருங்கள்.



கூர்க் புகைப்படங்கள் சில...

கூர்க் புகைப்படங்கள் சில...







கூர்க் சென்றிந்த பொழுது எடுத்தவற்றில் சில புகைப்படங்கள்.

சில்க் சினிமா வந்ததுபோல்,சில்க் மொபைல்போன்களும் அறிமுகம்..!

சில்க் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது போலும். ஆம், நாம் சொல்வது மார்க்கெட்டை கலக்க சில்க் என்ற பெயரில் வந்துள்ள மொபைலை பற்றித்தான். இந்த மொபைலின் தோற்றம் பார்க்க படு செக்ஸியாக இருக்கிறது.

இந்த மொபைலை சிக்ட்(எஸ்ஐசிடி)நிறுவனம் தான் அறிமுகம் செய்திருக்கிறது. டியூவல் சிம் கார்டுகள் பொருத்தும் வசதிகொண்ட இந்த புதிய மொபைல்போன் 2.8 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது.

இந்த மொபைல்போனில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் கேமரா 20 பிரேம் வேகத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொடுக்கும்.

மேலும், ஹெட்போன் மற்றும் கூடுதல் ஸ்பீக்கர்களை இணைத்து பாடல்கள் கேட்பதற்காக 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் இருக்கிறது.

இதில், யுஎஸ்பி போர்ட் இணைப்பு வசதியும், புளூடூத் வசதியும் உள்ளது. இதன் மெமரி திறனை 32 ஜிபி வரை விரிவுப்படுத்திக்கொள்ள முடியும்.

கார் ரெக்கார்டர், ஜிபிஆர்எஸ் தொடர்பு வசதிகளும் உள்ளன. இந்த மொபைல்போன் எம்பி3,டபிள்யூஓவி,ஏஎம்ஆர் உள்ளிட்ட ஆடியோ பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும். இந்த போன் ரூ.2,700 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

தூக்கில் போட்டால் தற்கொலை செய்வேன் - பெண்ணின் தீரச்செயல் (மறுபடிவம்)


பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செங்கொடி ( வயது 27) என்பவரே இவ்வாறு தீக்குளித்து இறந்தவராவார்.

மக்கள் மன்றம் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், இன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.
இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

செங்கொடி தீக்குளிப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த விடயத்தில் தலையிட்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தையும் மகளும் ஆபாச அரட்டை : காட்டிக்கொடுத்த காமரா!(காணொளி)


இன்றைய இணைய உலகில் பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி இணையம் மூலமாகத் தான் பெரும்பாலும் காதல் பூக்கிறது. ஆனால் விதிகளுக்கு முரணாக காதல் ஈர்ப்பு இருந்தால் எப்படி இருக்கும். 

முகம் தெரியாது, பெயர் தெரியாது, ஊர் தெரியாது, நிறம் தெரியாது, இனம் தெரியாது இப்படியாகத் தான் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சட்டிங் மூலம் தங்கள் உறவை முதலில் ஆரம்பிக்கின்றனர். 

பின்னர் தான் அது நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து காதல் உருவாகின்றது. இங்கேயும் ஒரு பெண் முகம் தெரியாத ஆணோடு ஒன்லைன் சட்டிங் மூலம் உறவை ஆரம்பிக்கிறார். அடுத்த கட்டமாக வெப் கமராவை ஒன் பண்ணி பேச முயலும் போது அந்த அதிர்ச்சி அரங்கேறுகிறது. வேறொரு நாட்டிலுள்ள மகளை வித்தியாசமான கோலத்தில் பார்த்து அதிர்கிறார் தகப்பன். 

அருகில் மனைவி புரண்டு படுக்கிறார். இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால் பெண்ணோடு வீடியோவில் பேச முதல் மொட்டந் தலைக்கு விக் மாட்டுகிறார் இந்த தகப்பன். அப்பா மகளுக்கிடையிலான சங்கடத்தை பார்த்தீர்களா? இது உண்மையில் ஒரு விளம்பரப்படமாகும்.
























இன்று சென்னை பட விழாவில் என்ன படம் பார்க்கலாம்?

உட்லண்ட்ஸ் 

10 AM

FLYING PIG (2010/ போலந்து/ 99நி)
இயக்குனர் Anna Kazejak-Dawid

உள்ளூர் ஃபுட்பால் கிளப்பைச் சேர்ந்த நால்வரின் கதை. ஆழமான உணர்வுகள், கெளரவம், முழுமையான வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் படம் இது. புதிய ஃபுட்பால் கிளம் தொடங்கிய விரும்பிய Oskar, உள்ளூரில் சாதாரண வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டியச் சூழலுக்குத் தள்ளப்படுகிறான். தனது காதலியையே பிரித்து வைத்திடும் அளவுக்கு புதிய வேலையால் இம்சை அதிகரிக்கிறது. தனது சகோதரனின் தோழியுடன் புது உறவு மலர்கிறது; அடுத்தடுத்து ஆச்சரியங்கள்... உதயமாகிறான், ஒரு சூப்பர் ஹீரோ. 

*
12.30 PM 

THE TRUTH OF THE LIE (2011/ ஜெர்மெனி/ 98நி)
இயக்குனர் : Roland Reber

இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, ஆள் அரவமற்ற தொழிற்சாலைப் பகுதியின் கீழ்த்தளத்தில் பிணைக் கைதிகளாக வைக்கப்படுகிறார்கள். சுவற்றில் சங்கிலியால் இருவரும் கட்டப்பட்டு, உணவு மட்டும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அருகில் ஒரு பக்கெட் மட்டும் வைக்கப்படுகிறது. அவர்களை கடத்தும் நபர், தவறுதலாக அவர்களை விடுவிக்கும் தினத்தையும் சொல்லிவிடுகிறான். அதுவே அந்த இரண்டு பெண்களுக்கும் நம்பிக்கை தருகிறது. ஆனால், இன்னொரு கோணத்தில் அவர்களுக்கு இன்னலைத் தருவதாக அமைகிறது. அந்தக் கடத்தல்காரனின் கூட்டாளி அங்கே ஆஜராகும் போது, எதிர்பாராத திருப்பம் நடக்கிறது.

*

3.00 PM

TREE OF LIFE (2011/ யு.எஸ்.ஏ./ 139 நி) 
இயக்குனர் : Terrence Malick

ஒரு நடுத்தர வயதை எட்டிய ஒருவரின் பால்ய கால நினைவுகளுடன் தொடங்குகிறது படம். டெக்ஸாசில் 1950களில் நடக்கும் கதை. ஏதுமறியா குழந்தைப் பருவத்தில் தொடங்கி, பாதையறியா பதின்ம பருவத்தைத் தாண்டும் போது, தனது தந்தை உடனான உறவில் சில சிக்கல்கள். வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் அபாரமான திரைக்கதையைக் கொண்டது. நடப்பு ஆண்டின் கேன்ஸ் பட விழாவில் Palme d'Or விருது பெற்ற இப்படம், கலைத்துவம் வாய்ந்த ஒளிப்பதிவு மற்றும் தனித்துவமான இயக்கத்தால் பாராட்டப்படுகிறது. பிராட் பிட், ஷான் பென், ஜெஸ்ஸிகா சாஸ்டைனின் நடிப்பில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த படைப்பு.

*

5.30 PM 

BASTARD (2011/ ஜெர்மெனி/ 125 நி)
இயக்கம் : Unger, Carsten

ஒன்பது வயது குழந்தை நிகோலஸ் சில காலமாக மாயமாகிறது. அக்குழந்தையின் பெற்றோரின் முன்னுக்குப் பின் முரணான செய்லபாடுகளை கிரிமினஸ் சைக்காலிஜிஸ்ட் Claudia Meinert உணர்கிறார். குறிப்பாக, நிகோலஸின் தாய் எதையோ மறைக்கிறாள். அதன் பின்னணியும், தொடர் நிகழ்வுகளுமே மற்றவை.


8.00 PM

MY LITTLE PRINCESS (2011/ பிரான்ஸ்/ 105 நி) 
இயக்குனர் : Eva Ionesco

10 வயது சிறுமி Violetta தனது பாட்டியுடன் சிறிய அபார்ட்மென்டில் வசிக்கிறாள். அவளது தாய் Hannah ஒரு போட்டோகிராபர். ஒருநாள் வலுக்கட்டாயாக மாடலுக்காக Violettaவை போஸ் கொடுக்க வைக்கிறாள். அந்தப் படம், 1970களில் பாரீஸை தன் பக்கம் திருப்பிவிடுகிறது. அடுத்த சில நாட்களில் நகர் முழுவதும் பிரலமாகி, ஸ்டாராக வலம் வருகிறாள், Violetta. ஆனால், அவளது குழந்தை உலகம் மாயமாகிப் போகிறது. 70களின் வாழ்க்கை முறையையும், கலைப் படைப்புகளின் எல்லையையும் மிக அற்புதமாக பிரதிபலிக்கும் படம் இது.

****

உட்லண்ட்ஸ் சிம்பொனி

10.30 AM

HELIOPOLIS (2009/ எகிப்து/ 100 நி)
இயக்குனர் : Aahmad Abdalla

கெய்ரோ அருகேயுள்ள Heliopolis என்ற பகுதி - வெவ்வேறு விதமான மசூதிகள், சர்ச்சுகள், ஹோட்டல்கள் நிறைந்த இடம். அங்கு, ஒரு குளிர் கால நாளில், இளம் வயதினர் சிலரது கதையைச் சொல்கிறது இந்தப் படம். பல பட விழாக்களில் கவனத்தை ஈர்த்த இப்படம், எகிப்தின் அழகையும் கலாசாரத்தையும் சொல்லும் மற்றொரு நல்ல முயற்சிப் படைப்பு.

*

12.45 PM 

OPEKKHA (WAITING) - (2011/ பங்களா தேஷ்/ 121 நி)
இயக்குனர்: Abu Sayeed

Rabiul and Ranju ஆகியோர் வங்கதேசத்தின் இரு வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளஞர்கள். Rabiul டாக்காவில் தங்குகிறான். பாடகனாக வலம் வருவதே அவனது விருப்பம், சந்தோஷம் எல்லாம். அவனுக்கு இருக்கும் ஒரே உறவு, கிராமத்தில் வசிக்கும் அவனுடைய பாட்டி. நினைவுகளை இழந்து வரும் அந்தப் பாட்டி, தொடர்ந்து அவனுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருப்பாள். இவ்விரு இளைஞர்களின் வாழ்க்கைதான் படம். 

*

3.15 PM

VIROTHI (2011/ தெலுங்கு/ 123 நி)
இயக்குனர் : Neelankanta

அரசியல் செய்திகளைத் திரட்டும் பத்திரிகையாளர் ஜெயதேவ், அரசியல்வாதி ஒருவரின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அந்த அரசியல்வாதி தரும் லஞ்சத்தையும் ஜெயதேவ் வாங்க மறுக்கிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, கோபி தலைமையிலான மாவோயிஸ்ட் குழுக்களால் கடத்தப்படுகிறார்கள். அதில், அரசியல்வாதி கொல்லப்படுகிறார். ஜெயதேவ் பிணைக்கைதி ஆகிறார். அடர்ந்த காட்டில் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது. அந்த பயணத்தின்போது, எது சரியான கொள்கை, எது தவறான பாதை என்பது கதை மூலம் விவாதிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் பேசப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று.

*

5.45 PM

THE SNOWS OF KILIMANJARO (2011/ பிரான்ஸ்/ 197 நி)
இயக்குனர்: Robert Guediguian

அன்பான குழந்தைகள், அரவணைப்பான பேரக் குழந்தைகள், உறுதுணையான நண்பர்களால் சூழந்தது, Michel - Marie-Claire தம்பதியரின் உலகம். ஓய்வு பெற்ற பிறகும் சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கிறார், Miche. முப்பது ஆண்டு கால போராட்டம், சமூகத்தில் கெளரவத்தையும், அமைதியான வாழ்க்கையையும் தந்துள்ளது. இவையெல்லாம் ஒரேநாளில் புரட்டிப் போடப்படுகிறது. இரண்டு ஆயுதமேந்திய முகமூடி இளைஞர்கள், இந்த தம்பதியரை கட்டிப் போட்டு, எல்லாவற்றையும் அபகரிக்கிறது. இந்தச் செயலின் பின்னணி யார் என்று தெரியவரும்போது, அவர்களுக்கு இன்னும் பேரதிர்ச்சி!!



8.00 PM

ELENA (2011/ ரஷ்யா/ 109நி)
இயக்குனர்: Andrey Zvyagintsev

Elenaவும் Vladimir-ம் வயதான தம்பதியர். Vladimir பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். Elena ஒரு கண்ணியமான குடும்பத்தில் வளர்ந்தவர். முதல் திருமணத்தில் பிறந்த எலினாவின் மகன் வேலையில்லாதவன். பணத்துக்கு அவ்வப்போது அவளையே நாடுபவன். விளாடிமிரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகள் ஓர் ஊதாரிப் பெண். அப்பாவிடம் இருந்து எப்போதும் விலகி இருப்பவள். மாரடைப்பால் மருத்துவமனையின் அனுமதிக்கப்படும் விளாடிமிரின் நாட்கள் எண்ணப்படுகிறது. தன்னிடம் மகள் மீண்டும் வந்து சேருகிறாள். அவளே தனது சொத்துக்கு வாரிசு என அறிவிக்கிறார். இதனை எலினாவிடமும் தெரியப்படுத்துகிறார். தனது மகனுக்கு இனி பண உதவி செய்ய முடியாத நிலையில் எலினா. அப்போது அவள் எடுக்கும் முடிவு... தனது மகனுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் காட்டவுள்ள வாழ்க்கைப் பாதையே எஞ்சியவை.

பிலிம் சேம்பர்

10 AM
ON THE SAFE SIDE

பொதுவான வேலி போடப்பட்டு, பல வீடுகள் ஒரே இடத்தில் உள் இருக்கும் 'Gated Community' என்று சொல்லப்படும் இடங்களில் வாழும் மனிதர்களைப் பற்றிய பதிவு இது. இப்பதிவில் அம்மனிதர்களின் மனநிலை, சமுதாய அந்தஸ்து பற்றிய கருத்துகள் போன்றவை அலசப்படுகின்றது. தென் ஆப்ரிக்கா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 'Gated Community'யில் வாழும் மனிதர்களின் மனநிலையை இது ஆவணப்படுத்துகிறது.

*

12.30 PM

கோ

தமிழகத்தை ஆளும் 'கோ’ (அரசன்) யார் என்பதை ஒரு பத்திரிகை புகைப்படக்காரர் தீர்மானித்தால்... என்ன ஆகும் என்பதே 'கோ’!



*


3 PM

முரண்

எங்கும் எதிலும் த்ரில் விரும் பும் பணக்கார இளைஞன், கிடைத்த வாழ்க்கையை வாழும் இயல்பான நடுத்தர வயதுக்காரர் - இருவரின் 'முரண்’பட்ட ஒரு பயணம்... ஒரு புள்ளியில் இணைந்தால்?


*


6.30 PM
QUESTION IN DETAILS

முன்பின் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கின்றனர். எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் நகர்கிறது அவர்களது ' டேட்டிங்'. அதன் முடிவு.. ?

*

8.30 PM
SO CLOSER SO FAR

தன் கருத்தில் தீவிரமாக இருக்கும், பிடிவாத குணமுள்ள மருத்துவருக்கு வருகிறது சோதனை. அவரது மகனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. தன் மகனுடன் பயணிக்கும் போது அவர் சந்திக்கும் மக்களும், நிகழும் சம்பவங்களும் அவரை எப்படி பக்குவப்படுத்துகின்றன என்பதை சொல்கிறது இப்படம்.

******

சத்யம் - ஸ்டூடியோ 5

10 AM
The Whistle Blower
இயக்குனர் : Larysa Kondracki

போஸ்னியாவில் போர் முடிந்த பின் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் ஆள் கடத்தலை தடுக்க போராடும் ஒரு பெண் போலீஸின் கதை இது. The Mummy, The Mummy Returns, Enemy at the Gates, The Constant Gardener போன்ற படங்களில் நடித்த Rachel Hannah Weisz இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

*

12.15 pm
RISTABBANNA

சொந்த ஊரை விட்டு அமெரிக்கா சென்று நடிகையாகிவிடுகிறாள் ரோஸினா. அவளது தாத்தா ரோஸினா பார்ப்பதற்காக கேமராவைக் கொண்டு உள்ளூரில் படக்காட்சிகளை பதிவு செய்கிறார். அந்த கேமராவை திருடிவிடுகிறான் சால்வோ. சால்வோவின் மகன் Nicolò தாத்தாவிடம் கேமராவைக் கொண்டு வந்து கொடுக்க, தாத்தா அவனை தன் படப்பிடிப்புக்கு உதவ சொல்கிறார். அதன் பிறகு, சால்வோ குடும்பத்திற்கு உதவிகளும் செய்கிறார். படப்பதிவின் இடையே தாத்தா இறந்துவிட, Nicolò தாத்தாவின் இறுதிச்சடங்கையும் பதிவு செய்கிறான்.

அமெரிக்காவிலிருந்து வந்த ரோஸினா தாத்தாவின் சொத்துக்களை விற்றுவிட்டு போக முயல, அப்போது அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது. ரோஸினாவின் அமெரிக்க வாழ்க்கை பற்றி தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் முன்னரே தெரியும் என்பதை உணர்கிறாள். அதன் பின்னர் ரோஸினா மற்றும் Nicolò குடும்பத்தினருக்கு நடைபெறும் மனப்போராட்டத்தை சொல்கிறது இப்படம்.

*


3 PM
6,7,8 
இயக்குனர் : Mohamed Diab

எகிப்தில் மூன்று பெண்களுக்கு நடந்த உண்மை சம்பவங்களைக் கொண்டு பின்னப்பட்ட கதை. வெவ்வேறு சமூக தளங்களில் இருக்கும் மூன்று பெண்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகளையும், அவர்கள் அதனை எதிர்த்து முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் விளக்குகிறது இப்படம்.

*


5.15 PM
TOP FLOOR LEFT WING 
இயக்குனர் : Angelo Cianci

நடுத்தர வயதில் உள்ள Fran ois தவறுதலாக கடத்தப்படுகிறார். இந்த விஷயம் போலீசுக்கும் தொலைக்காட்சி நிலையத்தார்களுக்கும் தெரிந்து விடுகிறது. இதனால், எல்லாரும் இவர்கள் இருக்கும் இடத்தை முற்றுகையிடுகிறார்கள். சுடுவதற்கு தயாராக போலீஸும், விஷயத்தை பரபரப்பாக்க தொலைக்காட்சி குழுவினர் பலரும் குவிய, நிலைமை பரபரப்பாகிறது. 

Fran ois, Fran ois-ஐ கடத்தியன், கடத்தலுக்கு உடன் வந்த கடத்தல்காரனின் தந்தை ஆகிய மூவரும் தங்களைச் சுற்றியிருக்கும் கும்பலிடமிருந்து தப்பிக்க செய்யும் திட்டமும், அதன் செயல்பாடுகளும் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.

*

7.30 PM
THE MILL & THE CROSS

1564-ல் நடப்பதாக சித்தரிக்கப்படும் இப்படத்தில், ஒரு ஓவியத்தில் ( கல்வாரி மலைக்கு செல்லும் வழியில் ) உள்ள பலரில், சிலரைப் பற்றி விவரிக்கிறது.

****

INOX

12.15 PM
PURE ( year / நாடு / நீ )
இயக்குனர் : Lisa Langseth

பள்ளிப்படிப்பை முடித்திராத கேதரீனா, எந்த வேலையிலும் நிலைத்திருக்க முடிவதில்லை. தன் தாயைப் போல தானும் ஆகிவிடுவோமோ என்று மன வருத்தத்தில் இருக்கிறாள். ஒரு நாள் தற்செயலாக யூடியூப் வீடியோவில் இசைக் கலைஞர் மோசார்ட்டின் இசையைக் கேட்டு மயங்கிப் போகிறாள். அந்த இசையினால் அவளது வாழ்க்கை எப்படி மாறிப்போகிறது என்பதை சொல்கிறது இப்படம். 

தன் நண்பனை, தாயை, தோழிகளை விட்டு விலகி, ஒரு இசை அரங்கில் வேலைக்கு சேர்கிறாள். அங்கு தன்னை விட மூத்தவரான இசைக் கோர்ப்பாளருடன் தொடர்பு கொள்கிறாள். கேதரீனா வாழ்வில் தான் தேடியதை அடைந்தாளா, அவளது மனம் ஏங்குவது எதற்காக என்பதை விவரிக்கிறது PURE.

*

2.30 PM
KING OF DEVIL'S ISLAND
இயக்கம் : Marius Holst

1915-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு புதிதாக வரும் எர்லிங், அப்பள்ளியில் நடக்கும் தவறுகளை / முறைகேடுகளை தட்டிக் கேட்க, அதனால் ஏற்படும் விளைவுகளைச் சித்தரிக்கிறது.

*

4.30 PM
CONFESSION
இயக்குனர் : Tetsuya Nakashima

தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை சாமர்த்தியமாக திட்டமிட்டு பழிவாங்கும் தாயின் கதை இது.