Thursday, December 15, 2011

கமல் அடிக்கடி சொல்லும் டிஜிட்டல் சினிமா என்றால் என்ன?

ஒரு திரைப்படத்தை ஃபிலிமில்(Film) எடுக்கலாம் 'டிஜிட்டலில்'(Digital) எடுக்கலாம் என்றெல்லாம் இன்று ஆலோசிக்கப்படுகிறது. டிஜிட்டல் என்பது புதிய தொழில்நுட்பம்தான், அது வளர்ச்சியைக் குறிக்கிறது என்பதும், துறையை மேம்படுத்தும் என்பதும் உண்மைத்தான். டிஜிட்டல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போவதும், வருங்காலம் டிஜிட்டலாக மாறிவிடும் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ன? அதன் வளர்ச்சிப்பாதை என்ன? இன்று நமக்குக் கிடைக்கும் தொழில்நுட்பம் என்ன? என்பதனையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஃபிலிமுக்கும் டிஜிட்டலுக்குமான ஆதார வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தக் கட்டுரை, இவ்விரண்டு தொழில்நுட்பமும் எப்படிச் செயல்படுகிறது என்பதையும், அவை பிம்பத்தை எப்படிப் பதிவுச்செய்கிறது, அவற்குகிடையேயான வித்தியாசம் என்ன என்பதை விவரிக்கிறது. 
ஃபிலிம்(Film):

ஃபிலிமென்பது, முப்பரிமாண(3D) தன்மைக்கொண்ட 'Mosaic of Silver Halide Crystals' எனப்படும் வேதிப்பொருள் துகள்களால் ஆனது. இந்தத் துகள்களின் மீது ஒளிவிழும் போது தன்னுள் வேதி மாற்றத்தைச் செய்துகொண்டு, காட்சியைப் பதிவுசெய்கின்றன. இந்தத் துகள்களின் அளவும், உருவமும் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கலவையான முறையில் பதிக்கப்படுகிறது. அதன் மூலம் ஒவ்வொரு Frame களிலும் மாறுபட்ட அளவில், உருவத்தில் உடைய துகள்கள் இருக்கின்றன, அவை பரவலாக பரவிக் கிடக்கின்றன. அதனால் ஃபிலிமின் ஒளி வாங்கும் தன்மை ஒரே மாதிரியாக இல்லாமல், மனிதக் கண்களைப்போன்று வேறுபட்ட ஒளி வித்தியாசத்தையும் வண்ண மாறுபாட்டையும் பதியச்செய்யும் வகையில் இருக்கிறது. கண்கள் பார்ப்பதைபோன்று துல்லியமாகப் பதிவுசெய்கிறது.

டிஜிட்டல்( Digital-Video)

வீடியோவில் 'Charged Coupled Device' (CCD) முறையில் ஒளியானது உள்வாங்கிப் பதியப்படுகிறது. CCD என்பது அதன்மேல் படும் ஒளியை மின்சாரமாக/ மின்காந்தமாக மாற்றுகிறது. அதன்மூலம் பெறப்படும் தகவல்களை(Datas) மின்காந்தத் துகள்களாகவோ, Digital Datas களவோ மாற்றி, ஒளி நாடாவிலோ(Tape) அல்லது 'Hard Disc' லோ சேர்க்கப்படுகிறது. இந்த CCD யானது தட்டையாக, குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். இது முப்பரிமாணத்தன்மை(3D) கொண்டது அல்ல, உயரம் மற்றும் அகலம் மட்டும் கொண்ட இருபரிமான(2D) தன்மைகொண்டது. அது மாறுவதே இல்லை, இதனால் ஒவ்வொரு pixal - ம் எப்போதும் ஒரே அளவிலான ஒளியையும், தகவலையும் பெறுகின்றது. அதனால் ஒளி மற்றும் வண்ணத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவுசெய்வதில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

ஃபிலிமின் முக்கியமான சில தகுதிகள்(Characteristics) ஒளியைப் பதிவுசெய்வதில் முக்கியத்துவம் பெறுகின்றன, அதற்கும் வீடியோவிற்குமான வித்தியாசத்தைப் பார்ப்போம்.

Grain:
ஃபிலிமில் Grains எனப்படும் துகள்கள் முப்பரிமானத்தில் இருப்பதினால், ஒளியானது தெளிவாகப் பதிவுச்செய்யப்படுகிறது. அதனால் காட்சியானது நாம் கண்களினால் பார்ப்பதுப் போன்று இயல்பாக இருக்கிறது. ஆனால் வீடியோவில் அப்படி இல்லை, அதனுடைய இருபரிமாணத்தன்மை ஒளி உள்வாங்குவதை கட்டுப்படுத்துகிறது, அதனால் பதிவுச்செய்யப்பட்ட காட்சியானது இயல்பாக இருப்பதில்லை.

Sharpness:
ஃபிலிமில் பதிவுச்செய்யப்பட்ட பிம்பத்தில் உருவங்களின் ஓரங்கள் தெளிவாக இருக்கும், அதாவது பிம்பமானது முழுமையாக, தெளிவாக பதிவுச்செய்யப்படுகிறது என்று பொருள். ஆனால் வீடியோவில் அப்படியல்ல, மங்கலான ஓரங்களையே பார்க்க முடிகிறது. இதற்கும் முப்பரிமான(3D) துகள்களும், இருபரிமான(2D) CCD யுமே காரணம்.

Depth of Field:
நம் காட்சியில் இருக்கும் நடிகர்களுக்கும், அவர்களின் பின்புலத்திற்குமான Focus வித்தியாசத்தை குறிப்பது, அதாவது நடிகர்களை Focus யிலும் பின்புலத்தை Out of Focus யிலும் கொண்டுவருவது, இது எதற்கு எனில், நடிகர்களை அவர்களின் சுற்றுப்புறத்திலிருந்து பிரித்து, பார்வையாளனின் கவனத்தை நடிகனின் மீது குவிப்பதற்காக. இது ஃபிலிமில் நமக்கு ஏற்றபடி சுலபமாகச் செய்யமுடியும். ஆனால் வீடியோவில் அவ்வளவாகச் செய்ய முடியாது, ஏனெனில் வீடியோவின் பிம்பம் பதியுமிடம் ஃபிலிமைவிடச் சிறியது, அதனால் நடிகன் மற்றும் சுற்றுப்புறமும் Focusல் இருக்கும். இது பார்வையாளனுக்கு சில சமயங்களில் இடையூறாக இருக்கும்.

Exposure Latitude:
'எக்ஸ்போஸர் லேட்டடியூட்' என்பது ஒரு காட்சியில், ஒளியின் அளவில் இருக்கும் வேறுபாட்டைப்பற்றிக் குறிப்பிடுவது, அதாவது நாம் பார்க்கத் தேவையான ஒளி அளவிலிருந்து, ஒரு பக்கம் படிப்படியாக் குறைந்து கொண்டேபோய் இருட்டிலும்(Shadow Area), மறுபக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போய் நாம் பார்க்க முடியாதபடி வெளிச்சமாகவும்(High Light Area) இருக்கும். 

இந்த Shadow Area க்கும் High Light Area க்குமான இடைப்பட்ட ஒளி அளவிலிருக்கும் மாறுபாட்டை 'எக்ஸ்போஸர்' அளவால் குறிக்கிறார்கள். ஒரு அளவிலிருந்து இன்னொரு அளவு என்பது அதன் முந்திய அளவிலிருந்து ஒரு மடங்கு அதிக ஒளியையோ, அல்லது ஒரு மடங்கு குறைந்த ஒளியையோ குறிப்பது.

ஒரு காட்சியின் ஒளி அளவை I, II, III, IV, V, VI, VII என்று கொண்டால், நாம் முழுமையாகப் பார்க்கத் தேவையான ஒளி அளவானது IV அதற்குக் கீழாக வரும் III, II, I என்பது படிப்படியாக ஒளியின் அளவு தன் முந்தைய அளவிலிருந்து பாதிப்பாதியாகக் குறைவதைக் குறிக்கிறது. அதே போல் V,VI,VII என்பது படிப்படியாக உயர்வதைக்குறிக்கிறது.

ஃபிலிம் என்பது 7 முதல் 11 வரையான அளவில்(Stops) மாற்றங்கள் கொண்ட காட்சியைப் பதிவுசெய்யும் என்கிறார்கள். ஆனால் வீடியோ அதிகபட்சமாக 4 அளவிலியே பதிவுச்செய்கிறது. இதனால் நாம் காட்சியில் சில பகுதிகள் பார்க்க முடியாமல் போகின்றன.

Color:

ஃபிலிம் மிக இயல்பான வண்ணங்களைப் பதிவுச்செய்கிறது. அவை தொடர்ச்சியாகவும் சீராகவும் இருக்கிறது. ஆனால் வீடியோவில் அப்படியில்லை, முழுமையான வண்ணங்கள் பதிவாவதில்லை, அதற்கு காரணம் அதிலிருக்கும் கட்டுப்பாடே ஆகும்.

Tone-Scale Neutrality and Linearity:
ஃபிலிம் சரியான Neutral Grey tone-ஐ வெள்ளையிலிருந்து, கறுப்பு வரை சரியாகத் தருகிறது.

Flesh-to-Neutral:
நம் தோலின் வண்ணத்தையும், சுற்றுப்புறத்தின் வண்ணத்தையும் சரியாக ஃபிலிம் மட்டுமே தருகிறது.

Shadow Details:
ஃபிலிம் ஒளி குறைந்த பகுதியையும் பதிவுசெய்கிறது. ஆனால் வீடியோ அப்படிச் செய்வதில்லை.




ஃபிலிமிற்கும், டிஜிட்டலிற்குமான வித்தியாசத்தையும் பாருங்கள்:






இவையெல்லாம் ஃபிலிமிற்கும், டிஜிட்டலிற்கும் பொதுவான வித்தியாசங்கள். இந்த வித்தியாசத்தின் இடைவெளியைக் குறைக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முயன்று வருகிறார்கள். பெரும்பாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுமையாக இல்லை.

இன்றைய நிலையில் 'Red One', 'D21', 'Viper' , 'Genesis', 'Vari Cam' எனப் பல வகையான டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டன, ஆனாலும் எதுவும் ஃபிலிமின் தரத்திற்கு இணையில்லை என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்து. 

Thanks Kodak

No comments:

Post a Comment