Thursday, December 15, 2011

நாட்டின் 10 வெட்கப்பட வேண்டியர்களின் பட்டியல்


சமிபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். அங்கே மத்திய இந்தியாவில் தண்டகாரண்யா காடுகளில் 'பச்சை வேட்டை' என்ற பெயரில் அரசாங்கம் பழங்குடினரை படுகொலைச்செய்து வருவதைக் கண்டித்து நடந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். 

நமக்கு அந்தப் படுகொலைகளப்பற்றி தெரிந்ததெல்லாம், மாவோயிஸ்டுகள் கிராமப் பகுதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கை வாழவிடாமலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமலும் அட்டகாசங்கள் செய்வதாகவும், பாதுகாப்பு படையினரையும் காவல்துறையினரையும் கொல்வதாகவும், சமிபத்தில் கூட இரயிலைக் கவிழ்த்து பலப்பேரைக் கொன்றதாக அறிந்து வைத்திருக்கிறோம்.

அந்த மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து மக்களை காப்பதற்காகத்தான் அரசாங்கம் போராடி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த ' ஆப்பரேஷன் கிரின் ஹண்ட்' நடைபெறுவதாகவும் அரசும் ஊடகங்களும் சொல்லுகின்றன. நாமலும் 'ஐய்யோ என்ன அநியாயம்' என்பதாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ காதில் கேட்டுவிட்டு கடந்துப்போய் விடுகிறோம். அங்கே என்ன நடக்கிறது என்பதை பற்றி அறிய நாம் எந்த வித பிரயாத்தனமும் படுவதில்லை. அதன் போக்கில் ஊடங்களின் கத்தலிலால் நம் காதில் விழுவததுதான் நாம் அந்த பிரச்சனையினைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதெல்லாம். அதைப்பற்றி நாம் விவாதிப்பதோ கூடுதல் தகவல் தெரிந்துக்கொள்ள முயற்சிப்பதோ இல்லை, குறைந்தது உண்மை என்ன என்று கூட அறிந்துக்கொள்ள நாம் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த கட்டுரை அதை உங்களுக்கு சொல்லுவதின் நோக்கம் கொண்டதுமில்லை. அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன். நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் என்பதும், நம்மை சுற்றி இருக்கும் உலகத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் கவலையும், ஏமாற்றமும், ஆதங்கமும், கோபமும் வருகிறது. நம் வாழ்க்கையின் பாதுகாப்பற்ற தன்மையும், கையாகாலத்தன்மையும் என்னை ஆற்றாமையில் தள்ளிவிட்டன. 

அங்கே மேற்குவங்கம்,ஜார்க்கண்ட்,ஒரிசா,சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரம் உட்பட மத்திய மாநிலங்களில் என்னதான் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்துக்கொண்டால்தான், அதன் வலியை உணரமுடியும்.

ஒரு நாட்டின் வளங்களைப்பற்றிக் குறிப்பிடும் போது, அந்த நாட்டின் கனிம வளங்களைப்பற்றி குறிப்பிடுவார்கள். கனிம வளங்களின் மதிப்பைப் பொருத்து அந்த நாட்டின் பொருளாதார மதிப்பீடுகள் மதிப்பிடப்படும். அந்த வகையில் தன் எல்லைக்குள்ளிருக்கும் கனிம வளங்களை பயன்படுத்திக் கொள்ளுவது அந்த நாட்டின் உரிமை. அதைத்தான் இந்திய அரசாங்கம் செய்ய நினைக்கிறது. அதைபோய் குற்றம் சொல்லலாமா?

அப்படி தண்டகாரண்யா என அழைக்கப்பட்ட காடுகளில் அரிய கனிம வளங்களான 'பாக்சைட், இரும்புதாதுகள், நிலக்கரி, யுரேனியம்,டாலமைட்,வெள்ளீயம்,கிரானைட், மார்பிள்,செம்பு,வைரம்,தங்கம்,க்வார்ட்ஸைட்,கோரண்டம்,பெரில்,அலெக்சாண்டரைட்,சிலிக்கா,புளூரைட்,கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிம பொருட்கள் புதைந்துக்கிடக்கின்றன. அந்த வளங்களை தோண்டி எடுக்க நினைத்து. அதை தனியார், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்தாகிவிட்டது. அவர்கள் அங்கே தோண்டப் போகிறார்கள். அதற்கு இடையூரு செய்யலாமா?. அவர்கள் தோண்டுவதிற்கு வசதியாய் அங்கே வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் நகர்ந்து நின்று வழி கொடுக்க வேண்டும். முடிந்தால் சம்மட்டி, கடப்பாறை கொடுத்து உதவி செய்யனும், அதானே மனிதத் தன்மை. ஆனால் அங்கே இருக்கும் மக்கள் அதை எதையும் செய்யாமல், தோண்டவும் விட மாட்டேன் என்று தகராறு செய்கிறார்கள். அதை தட்டிக்கேட்டால் மாவோயிஸ்டுகளோடு சேர்ந்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்கிறார்கள். என்ன கொடுமை சார்? சரி அதற்காக சும்மா இருந்துவிட முடியுமா? நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டாமா? சொல்லுங்க. உங்களுக்கு அந்த கனவு இல்லை?. எத்தனைபேரின் கனவு அது. அப்துல் கலாம் எவ்வளவு கஷ்டப்பட்டு அதை நாடுமுழுவதும் ஏற்படுத்தினார். அதை வெறும் கனவாக போய் விட அனுமதிக்க முடியுமா? சொல்லுங்க.. அதற்காகத்தான் இந்த 'ஆப்ரேஷன் கிரின் ஹண்ட்'(பச்சை வேட்டை). 

சரிப்பா அதில் என்ன தான் செய்யப்போகிறீர்கள் என்றால். ஒன்றுமில்லை. தோண்டுவதிற்கு தடையாக இருக்கும் நபர்களையும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாவோயிஸ்டுகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்போகிறோம் அவ்வள்வுதான். என்கிறது அரசாங்கம். நமக்கும் சரி என்றாகத்தான் படுகிறது. ஆனால் நண்பர்களே அவர்கள் அப்புறப்படுத்துவது என்பதற்கு அர்த்தம் நாம் நினைப்பதைப்போலில்லாமல், அரசாங்கத்திற்கே உரிய தனிப்பட்ட அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. 

புதிதாக ஒன்றுமில்லை நண்பர்களே. வழக்கம் போலத்தான். அரசாங்கம் தன் நண்பர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறது. தம் தேர்தல் செலவுகளை கவனித்துக்கொண்டவர்களுக்கும், தன்னுடைய பொருளாதார தேவைகளை கவனித்துக் கொள்பவர்களுக்கும் பிரதி உபகரணம் செய்ய நினைக்கிறது. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுச்செல்ல முயற்சிக்கிறது, நாட்டை வல்லரசாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது. அவ்வளவுதான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? வேறென்ன.!..வழக்கம் போலத்தான், ஏழைகளை ஒழிக்கவேண்டும். நாடு பணக்கார நாடாக வேண்டுமானால் ஏழைகளே இல்லாமல் ஆக்க வேண்டும். ஏழைகளே இல்லாமல் செய்ய சுலபமான வழி ஏழைகளை அழித்துவிடுவது. நண்பர்களே இங்கே தான் நீங்கள் கவனமாக கவனிக்கவேண்டும். ஏழ்மையை அழிப்பதில்லை, ஏழையை அழிப்பது.

இது ஒன்று புதிய யுத்தி இல்லை. வழக்கமானதுதான். பல நாடுகளில் சரித்தரபூர்வமாக பின்பற்று வழிதான் அது. காலம் காலமாக நல்ல பலன் தரும் முறை. நம்பகமான முறை. உத்தரவாதம் தருவதிற்கு பல நாடுகள் இருக்கின்றன. அதைத்தான் இங்கே இந்திய அரசாங்கமும் நடைமுறைப் படுத்துகிறது. அதைப் போய் குற்றம் சொல்லலாமா?

சரி வழிமுறை இருக்கிறது. அதை எப்படி செயல்படுத்துவது. அது அந்த அந்த நாட்டின் சாமார்த்தியம். அங்கே அரசாங்கம் என்ன செய்தது. 

அங்கே தோண்டுவதிற்கு இடையூராக இருப்பது ஒருவரோ பத்துபேரா அல்ல. பல லட்சக்கணகானபேர்கள், இவர்களின் எண்ணிக்கை சில நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களின் எண்ணிக்கையை விட அதிகம். தோண்டுவதிற்கு அவர்கள் தடை சொல்லுவதிற்கு அவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் தோண்டுவது என்வீட்டு தோட்டத்தில் அல்ல. என் வீட்டையேதான் என்கிறார்கள். அதுவும் அதை எல்லோரும் கோரஸாகச் சொல்லுகிறார்கள். ஆம் நண்பர்களே அரசாங்கம் தோண்டப்போகிறேன் என்றுச்சொல்லுவது இவர்களின் வீடுகளைத்தான். அவர்களின் வாழ்விடங்களைத்தான். அவர்கள் உண்டு களித்து வாழ்ந்த இடங்களைத்தான் நண்பர்களே.

அவர்கள் பழங்குடினர், காடுகளையும் மலைகளையும் பரம்பரைப் பரம்பரையாக வாழ்விடங்களாக கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இயற்கையோடு இசைந்த வாழ்க்கை அவர்களுடையது. காடுகளே அவர்களின் சொத்து, அது கொடுக்கும் வளங்களே அவர்களின் வருமானம். அதுவே அவர்களின் ஆதாரம். அவர்களின் பூமி அது. 

அதைதான் இந்திய அரசாங்கம் தோண்டுவேன் என்கிறது. மக்கள் போராடிப்பார்தார்கள். யாரும் காது கொடுப்பதாக இல்லை. அவர்களுக்கு உதவ மாவோயிஸ்டுகள் வந்தார்கள். மக்களோடு இணைந்தார்கள். போராட்டம் வெடித்தது.

அரசாங்கம் என்னச் சொல்லுகிறது. நகர்ந்துப்போங்கள், உங்களுக்கு வேறு இடம் தருகிறோம். முகாம்களுக்கு வாருங்கள். நாங்கள் கவனித்துக்கொள்ளுகிறோம்(கவனித்துக்கொல்லுகிறோம்) என்றது. அப்படி எல்லாம் நாங்கள் எங்களில் வீட்டை விட்டுப்போக முடியாது என்ற மக்களை, சரி அப்படி என்றால் செத்துப்போங்கள் என்கிறது அரசாங்கம். எப்படி.. நல்ல முடிவு இல்லையா?!

அதற்கு அரசாங்கம் என்ன செய்கிறது. முதலில் 'சால்வா ஜூடும்' என்னும் ஒரு அமைப்பை நிறுவியது(2005-இல்), அது மக்களை கொத்து கொத்தாக கொன்றது. அரசாங்கமே ஏற்படுத்திய அராஜகப் படை அது. 700 கிராமங்கள் கொலுத்தப்பட்டன. கொத்து கொத்தாக மக்களை கொன்றனர். அரசாங்கம் அமைத்த முகாமிற்கு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வந்து தங்கவேண்டும் என்றனர். உண்மையில் துறத்தப்பட்டனர். பெரும் மக்கள் அண்டை மாநிலங்களுக்கும் தப்பி ஓடினர். சிலர் எதிர்த்து ஆயுதம் தூக்கினார்கள். அவர்களுக்கு மாவோயிஸ்டுகள் போராட்ட வழிமுறையும் தலைமையும் கொடுத்தார்கள்.

அப்போதுதான் அரசாங்க அலர ஆரம்பித்தது, ஐய்யய்யோ இந்த மாவோயிஸ்டுகள் அட்டூழியம் செய்கிறார்கள். நாட்டை துண்டாட துடிக்கிறார்கள், நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்றெல்லாம் அலறுகிறார்கள். அரசாங்கம் சொல்லும் குற்றச்சாட்டுகள் இவைகள் தான்.

மாவோயிஸ்டுகள் பள்ளிக் கட்டிடங்களை வெடிவைத்து தகர்க்கிறார்கள். பாதுகாப்புப் படையினரை கொல்லுகிறார்கள். இரயிலை குண்டுவைத்து தகர்க்கிறார்கள். அரசாங்கப் பணிகள் நடைப் பெறாமல் தடுக்கிறார்கள். மக்களைத் திசைத்திருப்புகிறார்கள். 


இதை எதையுமே மாவோயிஸ்டுகள் மறுப்பதில்லை நண்பர்களே. .

No comments:

Post a Comment