வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் ரொமான்ஸ் பண்ணுவார் என்று நினைத்தால், படத்தில் கொள்ளைக்காரியாக நடிக்கிறாராம் ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பூ என்று வர்ணிக்கப்படும் இவர் கடைசியாக விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தார். கிராமத்து பெண்ணாக, பாவாடை தாவணியில் வந்து அசத்திய ஹன்சிகா மோத்வானி, இப்போது சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
வேட்டை மன்னன் படத்தில் இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் தீக்ஷா சேத் மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி. இதில் தீக்ஷா தான் சிம்புவுக்கு ஜோடியாம். ஹன்சிகாவின் வேடம் முற்றிலும் வித்தியாசமானதாம். அதாகப்பட்டது அம்மணி கொள்ளைக்காரியாக நடிக்கிறார்.
இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய ரோல் கொள்ளைக்காரி வேடம். இது முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். விரைவில் நான் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
|
No comments:
Post a Comment