Thursday, December 15, 2011

பேரூந்தில் பெண்களின் மார்பைக் குறிவைக்கும் பிச்சைக்காரர்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பேரூந்துகளிலேயே ஆரம்பமாகிறதாக பிரபல பாடசாலை இளம் ஆசிரியர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பெண்கள் பேரூந்தில் பயணம் செய்ய தயக்கமாக இருப்பதாக பேரூந்தில் தினமும் பயணிக்கும் இந்த ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


அந்த இளம் ஆசிரியரின் அனுமதியுடன் நாம் அவரிடம் உரையாடினோம். முதலில் அந்த ஆசிரியர் தயங்கினார் பின்னர் தனது புகைப்படங்களையோ அல்லது குரல் ஒலிநாடவையோ பதிவு செய்ய வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் எம்மோடு உரையாடினார். தினமும் பாடசாலைக்காகப் பேரூந்தில் பயணிப்பேன். அதன்போது சில இளைஞர்கள் பேரூந்தில் ஏறுவர்கள் பேரூந்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே தங்களது சில்மிசங்களை ஆரம்பித்து விடுவார்கள்.
அவர்கள் பெண்களின் மார்பகங்களைக் குறிவைத்து தங்கள் மேல் விழுவார்கள். ஆனால் அது தற்செயலாக நடந்தது போல் தோன்றும். சொறி சொல்லுவார்கள். பின்னர் குறித்த பெண்ணுடன் உரையாடிக் கொண்டு வருவார்கள். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் அனுமதியின்றி அவரின் தொடை, மார்பு மற்றும் ஏனைய பிரதேசங்கள் எல்லாம் தங்களின் வக்கிரக் குணத்தை வெளிப்படுத்துவதாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த இளம் பெண் ஆசிரியர் தனக்கு இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவை சொல்வதற்கு முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். பெண்கள் நிம்மதியாக பேரூந்தில் பயணிக்க முடியவில்லை “இவங்கள் திருந்தாத ஜென்மங்கள்” என்றார். பேரூந்து நிலையத்தில் பேரூந்துக்காக காத்திருக்கும் சந்தர்ப்பத்தில் மட்டுமன்றி பேரூந்துகளிலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுதவாதனாலேயே பேரூந்தில் பயணம் செய்ய அச்சமாக இருப்பதாக அப்பெண் கூறுகின்றனர்.

பேரூந்தில் அதிக பயணிகள் காணப்படும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் சில ஆண்கள் பெண்களின் மேல் சாய்வது, காலால் தட்டுவது, என சேஷ்டை விடுவதாக நாவற்குழியில் இருந்து தினமும் யாழப்பாணம் வந்துசெல்லும் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். தள்ளி நிற்கும் படி கூறினால் தனியே ஒரு வாகனத்தை பிடிச்சு வரலாமே, பஸ் எண்டால் நெரிபட்டுத்தான் போகோனும் என ஆணவத்துடன் பதிலளிப்பதாகவும் அவர் கூறினர்.

ஒருசில ஆண்களின் இவ்வாறான செயற்பாடுகளால் எல்ல ஆண்களுக்கும் அவப் பெயரை உருவாக்குகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன் பேரூந்தில் பிச்சை கேட்டு வரும் பிச்சைக்காரர்கள் கூட பெண்களிடம் சேஷ்டை விடுகின்றனர் என்று தெரிவித்த வேறு சில பயணிகள், பேரூந்தில் ஏறி பிச்சை எடுப்பதை போக்குவரத்து சபை தடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அத்துடன், பேரூந்தில் பயணம் செய்யும் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவோருக்கு 5 வருட சிறைத் தண்டனையை வழங்க தற்போது சட்டத்தில் இடமுள்ளமை என்று சட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறார் இந்த இளம் ஆசிரியர்.

No comments:

Post a Comment