சமூக வலைப்பின்னல் உலகில், தினந்தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது பேஸ்புக்.
நமது கணக்கில் ‘டைம்லைன்’ எனும் மிகப்பெரிய மாற்றத்தினைக் கொண்டுவரப் போவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் அறிவித்திருந்தது.
‘டைம்லைன்’ வசதியின் மூலம் பாவனையாளர்கள் பேஸ்புக் கணக்கினைத் தொடங்கிய நாள் முதல் இட்ட பதிவுகள், ஸ்டேடஸ்கள், பகிர்ந்த தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும், தமது வாழ்நாளின் முக்கிய தருணங்களையும் காட்சிப்படுத்திக் காட்ட முடியும்.
பாவனையாளர்களின் பேஸ்புக் வரலாற்றினைச் சொல்லும் நமது புகைப்படங்கள், பதிவுகள், தகவல்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இதனைக் கூற முடியும்.
இதன் முதற்கட்டமாக நியூசிலாந்து பாவனையாளர்களின் பேஸ்புக் கணக்குள் தற்போது டைம்லைனுக்கேற்ப மாற்றப்பட்டுள்ளன. இம்மாதம் 6 ஆம் திகதியே இவ்வசதி நியூசிலாந்து பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இம்மாத இறுதிக்குள் அனைத்து பாவனையாளர்களுக்கும் இவ்வசதி வழங்கப்படவுள்ளது.
இவ்வசதி பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, இலங்கை, மற்றும் பாகிஸ்தானிய பாவனையாளர்களுக்கும் வெகுவிரைவில் வழங்கப்படவுள்ளது.
முன்னரை விட பாவனையாளர்களின் தகவல்களை அறிந்துகொள்வதற்காகவே இவ்வசதியினை அறிமுகப்படுத்துவதாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
பாவனையாளர்கள் தங்களது டைம் லைன் ‘புரொபைலினை’ மேலதிக தகவல்கள் பலவற்றைக் குறிப்பிடுவார்கள் எனவும் இதற்காகவே பேஸ்புக் இவ் வசதியினை வழங்கிவருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பேஸ்புக், நமது தகவல்களை நிறுவனங்களுக்கு விளம்பரங்களுக்காக விற்பதாக ஏற்கனவே அதன் மீது பல குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அசாஞ்சேவும் பேஸ்புக் அமெரிக்காவின் உளவு இயந்திரமென குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment