தொலைபேசியில் நீலப்படம் வைத்திருந்தார் என கைதான நபர் தூக்கிட்டு தற்கொலை..!
ஹம்பாந்தோட்டை சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணி பட்டியொன்றை பயன்படுத்தி நேற்று இரவு குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமகாராம நீதவானின் உத்தரவின்படி நேற்றிரவு 7 மணியளவில் குறித்த சந்தேகநபர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இரவு 11 மணியளவில் அந்தநபர் தூக்கிட்டுக் கொண்டதாகவும் அதன்பின் சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கதிர்காமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபராவார்.
கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்ததாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
|
No comments:
Post a Comment