Thursday, December 15, 2011

இன்று சென்னை பட விழாவில் என்ன படம் பார்க்கலாம்?

உட்லண்ட்ஸ் 

10 AM

FLYING PIG (2010/ போலந்து/ 99நி)
இயக்குனர் Anna Kazejak-Dawid

உள்ளூர் ஃபுட்பால் கிளப்பைச் சேர்ந்த நால்வரின் கதை. ஆழமான உணர்வுகள், கெளரவம், முழுமையான வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் படம் இது. புதிய ஃபுட்பால் கிளம் தொடங்கிய விரும்பிய Oskar, உள்ளூரில் சாதாரண வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டியச் சூழலுக்குத் தள்ளப்படுகிறான். தனது காதலியையே பிரித்து வைத்திடும் அளவுக்கு புதிய வேலையால் இம்சை அதிகரிக்கிறது. தனது சகோதரனின் தோழியுடன் புது உறவு மலர்கிறது; அடுத்தடுத்து ஆச்சரியங்கள்... உதயமாகிறான், ஒரு சூப்பர் ஹீரோ. 

*
12.30 PM 

THE TRUTH OF THE LIE (2011/ ஜெர்மெனி/ 98நி)
இயக்குனர் : Roland Reber

இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, ஆள் அரவமற்ற தொழிற்சாலைப் பகுதியின் கீழ்த்தளத்தில் பிணைக் கைதிகளாக வைக்கப்படுகிறார்கள். சுவற்றில் சங்கிலியால் இருவரும் கட்டப்பட்டு, உணவு மட்டும் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அருகில் ஒரு பக்கெட் மட்டும் வைக்கப்படுகிறது. அவர்களை கடத்தும் நபர், தவறுதலாக அவர்களை விடுவிக்கும் தினத்தையும் சொல்லிவிடுகிறான். அதுவே அந்த இரண்டு பெண்களுக்கும் நம்பிக்கை தருகிறது. ஆனால், இன்னொரு கோணத்தில் அவர்களுக்கு இன்னலைத் தருவதாக அமைகிறது. அந்தக் கடத்தல்காரனின் கூட்டாளி அங்கே ஆஜராகும் போது, எதிர்பாராத திருப்பம் நடக்கிறது.

*

3.00 PM

TREE OF LIFE (2011/ யு.எஸ்.ஏ./ 139 நி) 
இயக்குனர் : Terrence Malick

ஒரு நடுத்தர வயதை எட்டிய ஒருவரின் பால்ய கால நினைவுகளுடன் தொடங்குகிறது படம். டெக்ஸாசில் 1950களில் நடக்கும் கதை. ஏதுமறியா குழந்தைப் பருவத்தில் தொடங்கி, பாதையறியா பதின்ம பருவத்தைத் தாண்டும் போது, தனது தந்தை உடனான உறவில் சில சிக்கல்கள். வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் அபாரமான திரைக்கதையைக் கொண்டது. நடப்பு ஆண்டின் கேன்ஸ் பட விழாவில் Palme d'Or விருது பெற்ற இப்படம், கலைத்துவம் வாய்ந்த ஒளிப்பதிவு மற்றும் தனித்துவமான இயக்கத்தால் பாராட்டப்படுகிறது. பிராட் பிட், ஷான் பென், ஜெஸ்ஸிகா சாஸ்டைனின் நடிப்பில் உலக அளவில் கவனத்தை ஈர்த்த படைப்பு.

*

5.30 PM 

BASTARD (2011/ ஜெர்மெனி/ 125 நி)
இயக்கம் : Unger, Carsten

ஒன்பது வயது குழந்தை நிகோலஸ் சில காலமாக மாயமாகிறது. அக்குழந்தையின் பெற்றோரின் முன்னுக்குப் பின் முரணான செய்லபாடுகளை கிரிமினஸ் சைக்காலிஜிஸ்ட் Claudia Meinert உணர்கிறார். குறிப்பாக, நிகோலஸின் தாய் எதையோ மறைக்கிறாள். அதன் பின்னணியும், தொடர் நிகழ்வுகளுமே மற்றவை.


8.00 PM

MY LITTLE PRINCESS (2011/ பிரான்ஸ்/ 105 நி) 
இயக்குனர் : Eva Ionesco

10 வயது சிறுமி Violetta தனது பாட்டியுடன் சிறிய அபார்ட்மென்டில் வசிக்கிறாள். அவளது தாய் Hannah ஒரு போட்டோகிராபர். ஒருநாள் வலுக்கட்டாயாக மாடலுக்காக Violettaவை போஸ் கொடுக்க வைக்கிறாள். அந்தப் படம், 1970களில் பாரீஸை தன் பக்கம் திருப்பிவிடுகிறது. அடுத்த சில நாட்களில் நகர் முழுவதும் பிரலமாகி, ஸ்டாராக வலம் வருகிறாள், Violetta. ஆனால், அவளது குழந்தை உலகம் மாயமாகிப் போகிறது. 70களின் வாழ்க்கை முறையையும், கலைப் படைப்புகளின் எல்லையையும் மிக அற்புதமாக பிரதிபலிக்கும் படம் இது.

****

உட்லண்ட்ஸ் சிம்பொனி

10.30 AM

HELIOPOLIS (2009/ எகிப்து/ 100 நி)
இயக்குனர் : Aahmad Abdalla

கெய்ரோ அருகேயுள்ள Heliopolis என்ற பகுதி - வெவ்வேறு விதமான மசூதிகள், சர்ச்சுகள், ஹோட்டல்கள் நிறைந்த இடம். அங்கு, ஒரு குளிர் கால நாளில், இளம் வயதினர் சிலரது கதையைச் சொல்கிறது இந்தப் படம். பல பட விழாக்களில் கவனத்தை ஈர்த்த இப்படம், எகிப்தின் அழகையும் கலாசாரத்தையும் சொல்லும் மற்றொரு நல்ல முயற்சிப் படைப்பு.

*

12.45 PM 

OPEKKHA (WAITING) - (2011/ பங்களா தேஷ்/ 121 நி)
இயக்குனர்: Abu Sayeed

Rabiul and Ranju ஆகியோர் வங்கதேசத்தின் இரு வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளஞர்கள். Rabiul டாக்காவில் தங்குகிறான். பாடகனாக வலம் வருவதே அவனது விருப்பம், சந்தோஷம் எல்லாம். அவனுக்கு இருக்கும் ஒரே உறவு, கிராமத்தில் வசிக்கும் அவனுடைய பாட்டி. நினைவுகளை இழந்து வரும் அந்தப் பாட்டி, தொடர்ந்து அவனுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருப்பாள். இவ்விரு இளைஞர்களின் வாழ்க்கைதான் படம். 

*

3.15 PM

VIROTHI (2011/ தெலுங்கு/ 123 நி)
இயக்குனர் : Neelankanta

அரசியல் செய்திகளைத் திரட்டும் பத்திரிகையாளர் ஜெயதேவ், அரசியல்வாதி ஒருவரின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அந்த அரசியல்வாதி தரும் லஞ்சத்தையும் ஜெயதேவ் வாங்க மறுக்கிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, கோபி தலைமையிலான மாவோயிஸ்ட் குழுக்களால் கடத்தப்படுகிறார்கள். அதில், அரசியல்வாதி கொல்லப்படுகிறார். ஜெயதேவ் பிணைக்கைதி ஆகிறார். அடர்ந்த காட்டில் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது. அந்த பயணத்தின்போது, எது சரியான கொள்கை, எது தவறான பாதை என்பது கதை மூலம் விவாதிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் பேசப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று.

*

5.45 PM

THE SNOWS OF KILIMANJARO (2011/ பிரான்ஸ்/ 197 நி)
இயக்குனர்: Robert Guediguian

அன்பான குழந்தைகள், அரவணைப்பான பேரக் குழந்தைகள், உறுதுணையான நண்பர்களால் சூழந்தது, Michel - Marie-Claire தம்பதியரின் உலகம். ஓய்வு பெற்ற பிறகும் சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கிறார், Miche. முப்பது ஆண்டு கால போராட்டம், சமூகத்தில் கெளரவத்தையும், அமைதியான வாழ்க்கையையும் தந்துள்ளது. இவையெல்லாம் ஒரேநாளில் புரட்டிப் போடப்படுகிறது. இரண்டு ஆயுதமேந்திய முகமூடி இளைஞர்கள், இந்த தம்பதியரை கட்டிப் போட்டு, எல்லாவற்றையும் அபகரிக்கிறது. இந்தச் செயலின் பின்னணி யார் என்று தெரியவரும்போது, அவர்களுக்கு இன்னும் பேரதிர்ச்சி!!



8.00 PM

ELENA (2011/ ரஷ்யா/ 109நி)
இயக்குனர்: Andrey Zvyagintsev

Elenaவும் Vladimir-ம் வயதான தம்பதியர். Vladimir பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். Elena ஒரு கண்ணியமான குடும்பத்தில் வளர்ந்தவர். முதல் திருமணத்தில் பிறந்த எலினாவின் மகன் வேலையில்லாதவன். பணத்துக்கு அவ்வப்போது அவளையே நாடுபவன். விளாடிமிரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகள் ஓர் ஊதாரிப் பெண். அப்பாவிடம் இருந்து எப்போதும் விலகி இருப்பவள். மாரடைப்பால் மருத்துவமனையின் அனுமதிக்கப்படும் விளாடிமிரின் நாட்கள் எண்ணப்படுகிறது. தன்னிடம் மகள் மீண்டும் வந்து சேருகிறாள். அவளே தனது சொத்துக்கு வாரிசு என அறிவிக்கிறார். இதனை எலினாவிடமும் தெரியப்படுத்துகிறார். தனது மகனுக்கு இனி பண உதவி செய்ய முடியாத நிலையில் எலினா. அப்போது அவள் எடுக்கும் முடிவு... தனது மகனுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் காட்டவுள்ள வாழ்க்கைப் பாதையே எஞ்சியவை.

பிலிம் சேம்பர்

10 AM
ON THE SAFE SIDE

பொதுவான வேலி போடப்பட்டு, பல வீடுகள் ஒரே இடத்தில் உள் இருக்கும் 'Gated Community' என்று சொல்லப்படும் இடங்களில் வாழும் மனிதர்களைப் பற்றிய பதிவு இது. இப்பதிவில் அம்மனிதர்களின் மனநிலை, சமுதாய அந்தஸ்து பற்றிய கருத்துகள் போன்றவை அலசப்படுகின்றது. தென் ஆப்ரிக்கா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 'Gated Community'யில் வாழும் மனிதர்களின் மனநிலையை இது ஆவணப்படுத்துகிறது.

*

12.30 PM

கோ

தமிழகத்தை ஆளும் 'கோ’ (அரசன்) யார் என்பதை ஒரு பத்திரிகை புகைப்படக்காரர் தீர்மானித்தால்... என்ன ஆகும் என்பதே 'கோ’!



*


3 PM

முரண்

எங்கும் எதிலும் த்ரில் விரும் பும் பணக்கார இளைஞன், கிடைத்த வாழ்க்கையை வாழும் இயல்பான நடுத்தர வயதுக்காரர் - இருவரின் 'முரண்’பட்ட ஒரு பயணம்... ஒரு புள்ளியில் இணைந்தால்?


*


6.30 PM
QUESTION IN DETAILS

முன்பின் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கின்றனர். எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் நகர்கிறது அவர்களது ' டேட்டிங்'. அதன் முடிவு.. ?

*

8.30 PM
SO CLOSER SO FAR

தன் கருத்தில் தீவிரமாக இருக்கும், பிடிவாத குணமுள்ள மருத்துவருக்கு வருகிறது சோதனை. அவரது மகனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. தன் மகனுடன் பயணிக்கும் போது அவர் சந்திக்கும் மக்களும், நிகழும் சம்பவங்களும் அவரை எப்படி பக்குவப்படுத்துகின்றன என்பதை சொல்கிறது இப்படம்.

******

சத்யம் - ஸ்டூடியோ 5

10 AM
The Whistle Blower
இயக்குனர் : Larysa Kondracki

போஸ்னியாவில் போர் முடிந்த பின் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் ஆள் கடத்தலை தடுக்க போராடும் ஒரு பெண் போலீஸின் கதை இது. The Mummy, The Mummy Returns, Enemy at the Gates, The Constant Gardener போன்ற படங்களில் நடித்த Rachel Hannah Weisz இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

*

12.15 pm
RISTABBANNA

சொந்த ஊரை விட்டு அமெரிக்கா சென்று நடிகையாகிவிடுகிறாள் ரோஸினா. அவளது தாத்தா ரோஸினா பார்ப்பதற்காக கேமராவைக் கொண்டு உள்ளூரில் படக்காட்சிகளை பதிவு செய்கிறார். அந்த கேமராவை திருடிவிடுகிறான் சால்வோ. சால்வோவின் மகன் Nicolò தாத்தாவிடம் கேமராவைக் கொண்டு வந்து கொடுக்க, தாத்தா அவனை தன் படப்பிடிப்புக்கு உதவ சொல்கிறார். அதன் பிறகு, சால்வோ குடும்பத்திற்கு உதவிகளும் செய்கிறார். படப்பதிவின் இடையே தாத்தா இறந்துவிட, Nicolò தாத்தாவின் இறுதிச்சடங்கையும் பதிவு செய்கிறான்.

அமெரிக்காவிலிருந்து வந்த ரோஸினா தாத்தாவின் சொத்துக்களை விற்றுவிட்டு போக முயல, அப்போது அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது. ரோஸினாவின் அமெரிக்க வாழ்க்கை பற்றி தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் முன்னரே தெரியும் என்பதை உணர்கிறாள். அதன் பின்னர் ரோஸினா மற்றும் Nicolò குடும்பத்தினருக்கு நடைபெறும் மனப்போராட்டத்தை சொல்கிறது இப்படம்.

*


3 PM
6,7,8 
இயக்குனர் : Mohamed Diab

எகிப்தில் மூன்று பெண்களுக்கு நடந்த உண்மை சம்பவங்களைக் கொண்டு பின்னப்பட்ட கதை. வெவ்வேறு சமூக தளங்களில் இருக்கும் மூன்று பெண்கள் சந்திக்கும் பாலியல் கொடுமைகளையும், அவர்கள் அதனை எதிர்த்து முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் விளக்குகிறது இப்படம்.

*


5.15 PM
TOP FLOOR LEFT WING 
இயக்குனர் : Angelo Cianci

நடுத்தர வயதில் உள்ள Fran ois தவறுதலாக கடத்தப்படுகிறார். இந்த விஷயம் போலீசுக்கும் தொலைக்காட்சி நிலையத்தார்களுக்கும் தெரிந்து விடுகிறது. இதனால், எல்லாரும் இவர்கள் இருக்கும் இடத்தை முற்றுகையிடுகிறார்கள். சுடுவதற்கு தயாராக போலீஸும், விஷயத்தை பரபரப்பாக்க தொலைக்காட்சி குழுவினர் பலரும் குவிய, நிலைமை பரபரப்பாகிறது. 

Fran ois, Fran ois-ஐ கடத்தியன், கடத்தலுக்கு உடன் வந்த கடத்தல்காரனின் தந்தை ஆகிய மூவரும் தங்களைச் சுற்றியிருக்கும் கும்பலிடமிருந்து தப்பிக்க செய்யும் திட்டமும், அதன் செயல்பாடுகளும் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.

*

7.30 PM
THE MILL & THE CROSS

1564-ல் நடப்பதாக சித்தரிக்கப்படும் இப்படத்தில், ஒரு ஓவியத்தில் ( கல்வாரி மலைக்கு செல்லும் வழியில் ) உள்ள பலரில், சிலரைப் பற்றி விவரிக்கிறது.

****

INOX

12.15 PM
PURE ( year / நாடு / நீ )
இயக்குனர் : Lisa Langseth

பள்ளிப்படிப்பை முடித்திராத கேதரீனா, எந்த வேலையிலும் நிலைத்திருக்க முடிவதில்லை. தன் தாயைப் போல தானும் ஆகிவிடுவோமோ என்று மன வருத்தத்தில் இருக்கிறாள். ஒரு நாள் தற்செயலாக யூடியூப் வீடியோவில் இசைக் கலைஞர் மோசார்ட்டின் இசையைக் கேட்டு மயங்கிப் போகிறாள். அந்த இசையினால் அவளது வாழ்க்கை எப்படி மாறிப்போகிறது என்பதை சொல்கிறது இப்படம். 

தன் நண்பனை, தாயை, தோழிகளை விட்டு விலகி, ஒரு இசை அரங்கில் வேலைக்கு சேர்கிறாள். அங்கு தன்னை விட மூத்தவரான இசைக் கோர்ப்பாளருடன் தொடர்பு கொள்கிறாள். கேதரீனா வாழ்வில் தான் தேடியதை அடைந்தாளா, அவளது மனம் ஏங்குவது எதற்காக என்பதை விவரிக்கிறது PURE.

*

2.30 PM
KING OF DEVIL'S ISLAND
இயக்கம் : Marius Holst

1915-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு புதிதாக வரும் எர்லிங், அப்பள்ளியில் நடக்கும் தவறுகளை / முறைகேடுகளை தட்டிக் கேட்க, அதனால் ஏற்படும் விளைவுகளைச் சித்தரிக்கிறது.

*

4.30 PM
CONFESSION
இயக்குனர் : Tetsuya Nakashima

தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை சாமர்த்தியமாக திட்டமிட்டு பழிவாங்கும் தாயின் கதை இது.

No comments:

Post a Comment