Tuesday, February 1, 2011

புதிய பொருள் உலோக ரப்பர்

உலோகம் மற்றும் ரப்பர் இரண்டும் கலந்த கலவையின் பயன், தற்போது பரவலாகி வருகிறது. இது மெல்லிய தோல் போன்று இருக்கிறது. எனவே இதை "ஸ்மார்ட் ஸ்கின்' என அழைக்கின்றனர். இந்த "ஸ்மார்ட் ஸ்கின்' எந்த ஒரு சூழலிலும் சிதைவுறாமல், அதே சமயத்தில் மென்மையான தாகவும் இருக்கிறது. இது எந்தவொரு அதிக வெப்ப நிலையிலும் சிதைவுறாது. இந்த உலோக ரப்பர் தீயில் கருக்கினாலும், மடக்கினாலும் எந்த பாதிப்பும் இன்றி மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டுள்ளது. செயற்கை தசைகள் தயாரிக்கவும், இந்த ஸ்மார்ட் ஸ்கின்னைப் பயன்படுத்தலாம். உலோக ரப்பர் 
பல நுண்ணிய தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப் பட்டாலும், உலோக ரப்பர் தயாரிப்பது மிகவும் கடினமான பணியாகும்.உலோக ரப்பர் தயாரிப்பில் ரோபட்டுகள் தான் ஈடுபடுகின்றன. உலோக ரப்பரின் தடிமன் ஒரு சிறு மில்லிமீட்டர் அளவிலேயே உள்ளது. இதனைச் சுருட்டலாம், மடக்கலாம், இரண்டாக மடித்து பைக்குள் வைக்கலாம்.


ஸ்டெம் செல்கள்


ஆசிரியர்: இளங்கோ
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்
பகுதி: மருத்துவம்
ISBN எண்: 
மொத்த பார்வையாளர்கள்: 161 Views
விலை:  ரூ.50



   பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104)

செல் என்றால் என்ன? மரபணு, டி.என்.ஏ., குரோமோசோம் என, செல் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கூறி, மரபணு மாற்றம் செய்யும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்நூல் விளக்குகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் விளையும் நன்மைகள், தீமைகளை விளக்கி, மன்சான்டோ நிறுவனத்தையும் "விளாசி தள்ளுகிறார் ஆசிரியர்.
மேலும், சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பு, குளோனிங் முறை, வேர் செல்கள் பற்றிய விவரங்களையும் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.
  

வெப்பம் சூழ் பூமி

ஆசிரியர்: ஆத்மா.கே.இரவி
வெளியீடு: அர்ப்பனா பாசறை
பகுதி: அறிவியல்
ISBN எண்: 
மொத்த பார்வையாளர்கள்: 24 Views
விலை:  ரூ.60 





   அர்ப்பனா பாசறை, 54/164, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 120)

இன்று உலகம் முழுவதும் பூமி வெப்பம் அடைதல் பற்றிய விழிப்புணர்வில் கவனம் செலுத்தி வருகிறது. அவசியமும், அவசரமுமான செயல்பாடுகளால் வெப்பத்தை குறைக்க மனிதன் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளான். இதை நாவல் வடிவத்தில் அழகாக விளக்குகிறார் ஆசிரியர்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

பூமியின் புதிர்கள்

ஆசிரியர்: ஆதனூர் சோழன்
வெளியீடு: சிபி பதிப்பகம்
பகுதி: அறிவியல்
ISBN எண்: 
மொத்த பார்வையாளர்கள்: 89 Views
விலை:  ரூ.100




  

சிபி பதிப்பகம், 4/92 ரயிலார் நகர், மதுரை, 625018. (பக்கம்: 112, விலை: ரூ.100)
நாம் வாழ்கின்ற பூமியின் சுற்றுச்சூழலில் பெரும் பகுதி ஆக்சிஜன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லவே இல்லையாம்! 80 சதவீதம் நைட்ரஜன் என்பதே உண்மையாம்! பூமியைப் போன்று மிதமான தட்பவெப்பமுள்ள 10 கிரகங்கள் பிரபஞ்சத்தில் கண்டறியப்பட்டுள்ளனவாம்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரம் கடல் அரிப்பு காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதியில் மூழ்கி விடுமாம்.
இத்தகைய வியப்புமிகு புதிர்கள் மட்டுமின்றி உலகில் அதிக வெப்பமான குளிர்ந்த பகுதிகள், ஆழமான ஏரிகள், கடல்கள் மற்றும் இடி மின்னல்கள் எரிமலைகள், பேரழிவினை விளைவிக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அறிவியல் ரீதியான காரணங்கள் யாவும், கறுப்பு-வெள்ளை நிகழ்படங்கள் வாயிலாக இச்சிறு நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்விக் கூடங்களில் இந்நூல் இடம் பெறுவதன் வாயிலாக, மாணவ, மணிகள், பூகோளம் பற்றிய புள்ளி விவரங்களை நுனி விரல்களில் வைத்திருப்பர். தேர்வுகள், போட்டிகளில் வெற்றி மாலையும் சூடிடுவர். 


மக்களைச் சென்றடைவதில் வங்கிகளைக் காட்டிலும் அதிகமாக, மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. எனவே போன்கள் மூலம் நிதிப் பரிமாற்றம் ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்துடன், போன்களைப் பயன்படுத்தி, நாம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தும் வசதியினை ரிசர்வ் பேங்க் மொபைல் நிறுவனங்களுக்கு அளிக்கிறது. அதாவது மொபைல் போன் ஒரு மணி பர்ஸ் போலச் செயல்படும். 


மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்திடம், நாம் குறிப்பிட்ட பணத்தை நம் மொபைல் எண்ணில் டெபாசிட் செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் இதனை ஏற்கும் கடைகளில் பொருட்கள் வாங்குகையில், நம் மொபைல் போன் பர்ஸில் டெபாசிட் செய்த பணத்தைச் செலுத்தலாம். ஆனால் இதிலிருந்து பணத்தை ரொக்கமாக கடைகளில் பெற முடியாது. இதனால் நம் பணம் பத்திரமாக உள்ளது. மொபைல் போன் எண்ணை அடையாளம் காட்டி, 
அதற்கான பாதுகாப்பு பாஸ்வேர்ட் கொடுத்து, கடைகளில் பணம் கட்டிவிடலாம். இந்த வசதியை மக்களுக்கு வழங்க, பார்தி ஏர்டெல் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றுள்ளது. மிகவும் எளிய அதே சமயத்தில் பாதுகாப்பான வழிகளை வடிவமைத்தவுடன், இந்த வசதி, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இது வழங்கப்படும். இந்திய நிதிச் சந்தையில் இந்த வசதி ஒரு பெரிய மாற்றத்தினை ஏற்படுத்த இருக்கிறது. டெபிட் கார்டு போல மொபைல் போன்கள் இயங்கும். 


மூன்று சிம் இயக்க போன்கள்

இரண்டு சிம் போன்கள் மார்க்கட்டிலும், மக்கள் மனதிலும், பயன்பாட்டிலும் நிலையாகிவிட்டதனால், அடுத்ததாக, மூன்று சிம் கொண்ட போன்களை, நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று சிம் இயக்க போன் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. அது ஒரு சி.டி.எம்.ஏ. சிம் + இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆனால் அகாய் ட்ரையோ, மூன்று ஜி.எஸ்.எம். சிம்கள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அகாய் போன்களை விற்பனை செய்திடும் 15 ஆயிரம் கடைகளில் இவை கிடைக்கும். அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,295 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் திரை 2.5 அங்குல அகலம் கொண்ட டி.எப்.டி. ஸ்கிரீனாக அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, விரும்பாத எண்களை தடை செய்திடும் வசதி, வீடியோ பிளேயர், சவுண்ட் ரெகார்டர், டார்ச் லைட், எப்.எம். ரேடியோ மற்றும் ஈக்குவலைசருடன் கூடிய ஆடியோ பிளேயர் ஆகியவை தரப்பட்டுள்ளன. A2DPஇணைந்த புளுடூத், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் வசதிகளுடன் இந்த போன் இயங்குகிறது. மெமரியை இதன் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத்த முடியும். ஸ்பீட் டயலிங், கான்பரன்ஸ் கால், வரும் அழைப்பினை இயக்கத்தில் உள்ள இன்னொரு சிம்முக்கு மாற்றும் வசதி எனக் கூடுதல் வசதிகளும் தரப்படுகின்றன. 1100 mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் 5 மணி நேரம் பேச முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கிறது. 



ஸென் எம் 111 இன்டெக்ஸ், அகாய் ஆகிய நிறுவனங்களை அடுத்து, ஸென் மொபைல்ஸ் நிறுவனமும், 3 சிம் இயக்கும் மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த மாடல் பெயர் எம் 111. இதில் பயன்படுத்தக் கூடிய மூன்று சிம்களும் ஜி.எஸ்.எம். வகையைச் சேர்ந்தவகையாக இருக்க வேண்டும். இதன் திரை 2.4 அங்குல அகலம், வீடியோ ரெகார்டிங் திறன் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஆறு பேண்ட் ஈக்குவலைசர் கொண்ட மியூசிக் பிளேயர், இ-புக் ரீடர் (2.4 அங்குல திரையில் என்ன படிக்க முடியும்?) 8 ஜிபி வரை அதிகப் படுத்தக் கூடிய மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் டபிள்யூ. ஏ.பி., சப்போர்ட் எனப் பல அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. இதில் உள்ள அம்சங்களைப் பார்க்கையில், ஒரு நிறுவனமே அகாய் மற்றும் ஸென் நிறுவனங்களுக்குத் தயாரித்துக் கொடுக் கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் ஸென் 3 சிம் மொபைல் சில்லரை விலை ரூ.3,499 எனக் குறிக்கப் பட்டுள்ளது. 



லினக்ஸ் தொகுப்பிற்கான பிரவுசர்கள்


விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றாகவோ அல்லது இணைந்தோ லினக்ஸ் பயன்படுத்தும் வாசகர்களும், லினக்ஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிடு பவர்களும், பல முறை, லினக்ஸ் சிஸ்டத்திற்கான பிரவுசர்கள் எவை? அவற்றின் திறன் என்ன? என்று கேட்டு எழுதி உள்ளனர். 
லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டுமே. லினக்ஸ் இயக்கத்தில் இயங்கக் கூடிய மற்ற பிரவுசர்கள் குறித்தும் இங்கு காணலாம்.
1. குரோம்: எந்த சந்தேகமும் இன்றி, குரோம் பிரவுசர் தான் நல்ல வேகத்தில் இயங்கக் கூடிய ஒரு பிரவுசராகும். லினக்ஸ் சிஸ்டத்தில் இயங்க குரோம் மற்றும் குரோம் பிரிமியம் (Chrome and Chromium Browser) என இரண்டு பிரவுசர்கள் கிடைக்கின்றன. குரோம் பிரவுசரின் ஓப்பன் சோர்ஸ் பிரவுசரே குரோமியம் பிரவுசராகும். இரண்டும் ஒரே மாதிரியான வசதிகளை அளிக்கின்றன.
2. பயர்பாக்ஸ்: மொஸில்லா வழங்கும் பயர்பாக்ஸ், வெகுகாலமாக லினக்ஸ் பயன்படுத்து பவரிடையே மிகவும் பிரபலமானது. மேலும், பல லினக்ஸ் தொகுப்பு களுடன், பயர்பாக்ஸ் இணைந்தே இன்ஸ்டால் செய்யப்பட்டு, மாறா நிலை (Default) பிரவுசராகக் கிடைக்கிறது. 
3.ஆப்பரா: சில வேளைகளில், லினக்ஸ் பயன்பாட்டில், மற்ற பிரவுசர்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆப்பரா முதலிடம் பெற முயற்சிக்கும். ஆனால் முதல் இடத்தை இதுவரை பெற்றதில்லை. ஆப்பரா பிரவுசரை டவுண்லோட் செய்கையில், அது எந்த வகை லினக்ஸ் சிஸ்டத்தினை, டவுண்லோட் செய்திடும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறது என்று உணர்ந்து, அதற்கேற்ற பதிப்பினை டவுண்லோட் செய்திடத் தந்திடும்.
குரோம் தவிர மற்ற பிரவுசர்களை டவுண்லோட் செய்திடுகையில், குறிப்பிட்ட பிரவுசர் பதிப்பினைச் சுட்டிக் காட்டி, இதனை டவுண்லோட் செய்திடப் போகிறீர்களா என்ற கேள்விக்குப் பதில் பெற்ற பின்னரே, அந்த பிரவுசர் தொகுப்பு இறக்கப்படும்.
இந்த பிரவுசரைப் பெற http://www.opera.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 
4.கான்குவரர் (Konqueror): கே.டி.இ. டெஸ்க்டாப் என அழைக்கப்படும் லினக்ஸ் தொகுப்பிற்கு எல்லாமே Konquerorதான். பைல் மேனேஜ ராகவும், பிரவுசராகவும் இதுவே பயன்பட்டது. பின்னர், கே.டி.இ. தயாரித்த குழுவினர், Dolphinபிரவுசரை இதில் மாறா நிலை பிரவுசராக அறிமுகப்படுத்தினர். ஆனால், Konqueror அருமையான ஒரு பிரவுசர் எனப் பல லினக்ஸ் அபிமானிகள் கூறியுள்ளனர். வேறு எந்த பிரவுசரும் தராத சில வசதிகளை இந்த பிரவுசர் தருகிறது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய இன்ஜின் செயல்பாடு உள்ளது.இந்த பிரவுசரை இன்ஸ்டால் செய்கையில் அதுKHTML பார்மட் பயன்பாட்டினை இணைத்தே இன்ஸ்டால் செய்கிறது. இந்த பிரவுசரைப் பெற http://www.konqueror.orgஎன்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 
5. லின்க்ஸ் (Lynx): வெகுகாலமாக, இந்த பிரவுசர் தான் சிறப்பான ஒரே பிரவுசராக இருந்து வந்தது. இணைய தளங்களில் டெக்ஸ்ட் மட்டுமே படிக்க தரப்பட்ட நிலையில், இந்த பிரவுசர் அனைவராலும் பிரியத்துடன் பயன்படுத்தப்பட்டது. கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் தராத சர்வருடன் நீங்கள் இணைப்பேற்படுத்தினால், இந்த பிரவுசர் உங்களுக்கு அதிகப் பலனைத்தரும். எனவே இப்போதைய ஸ்டாண்டர்ட் பிரவுசரில் கிடைக்கும் லிங்க்ஸ், இமேஜஸ், பிளாஷ் அல்லது ஜாவா அப்ளிகேஷன்கள் எதுவும் இந்த பிரவுசரில் கிடைக்காது. இந்த பிரவுசரைப் பெறhttp://lynx.browser.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 

6. எபிபனி (Epiphany): நீங்கள் நம்புகிறீர் களோ, இல்லையோ, எபிபனி பிரவுசர் தான், GNOME டெஸ்க்டாப்பின் மாறா நிலை பிரவுசராக இடம் பெற்றிருந்தது. எபிபனி பிரவுசரை மட்டுமின்றி, அதனுடன் கிடைக்கும் எக்ஸ்டன்ஷன் பேக்கேஜை யும் இணைத்து இன்ஸ்டால் செய்திட்டாலே, அதன் முழு பயனையும் அனுபவிக்க முடியும். இந்த பேக்கேஜ் இன்ஸ்டால் செய்யப்படுகையில், அனைத்து ப்ளக் இன் சாதனங்களும் இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. இந்த பிரவுசரைப் பெற http://projects.gnome.org/epiphany/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 
7. அரோரா (Arora): லினக்ஸ் தொகுப்பு மட்டுமின்றி, மேக் மற்றும் விண்டோஸ் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரவுசர். மூன்று சிஸ்டங்களிலும் பயன்படுத்திப் பார்த்த போது, மூன்றுமே திருப்தியாக, பயனளிக்கும் வகையில் இருந்தது. பலருக்கு இது போல ஒரு பிரவுசர் இருப்பதே தெரியாது. இதன் தொழில் நுட்பத் திறன் மிகவும் பாராட்டத்தக்கது. அடிக்கடி கிராஷ் ஆகும் பல பிரவுசர்களுக்கிடையில், மிக வலுவாக, சரிந்துவிடாமல் இயங்கும் நல்ல பிரவுசர் இது. இந்த பிரவுசரைச் சோதித்துப் பார்த்து, மாறிக் கொள்ள விரும்பினால், போக வேண்டிய வலைத்தள முகவரி: http://code.google.com/p/arora/
8.மிடோரி(Midori): எளிமையாகவும் வேகமாக இயங்கக் கூடியதாக ஒரு பிரவுசர் இருக்க வேண்டும் எனத்தான், அனைத்து பிரவுசர் நிறுவனங்களும் இலக்கு வைத்துள்ளன. ஆனால் பல பிரவுசர்கள் இந்த இலக்குகளை அடைவதில்லை. மிடோரி பிரவுசர் இந்த இலக்கினைச் சிறப்பாக அடைந்துள்ளது என்பது ஒரு நல்ல உண்மையாகும். இந்த பிரவுசர் கிராஷ் ஆகாமல் தொடர்ந்து செயல் படக் கூடியது. இந்த பிரவுசருக்கென ஆட் ஆன் தொகுப்பு, பிளக் இன் புரோகிராம்கள், தீம்ஸ் போன்றவை எதுவும் இல்லை. இதன் இஞ்சின் தரும் வேகமான இணையச் செயல்பாடு குறிப்பிடத்தக்க தாகும். இந்த பிரவுசரைப் பெற http://www.twotoasts.de /index.php?/ pages/midori_summary.html என்ற முகவரி யில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 
9.நெட்சர்ப் (Netsurf): சுண்டெலியைப் போலச் சிறியதாகவும், சிறுத்தையைப் போல வேகமாகவும் செயல்படும் இந்த பிரவுசர், இணையத்தில் கிடைக்கும் இலவச பிரவுசர். அதிவேகமாகச் செயல்படும் பிரவுசர்களில் இதுவும் ஒன்று. ஆனால் இன்னும் இது சோதனைத் தொகுப்பாகவே உள்ளது. பல புதிய வசதிகளை இன்னும் இது கொண்டிருக்கவில்லை. ஆனாலும், தயாரிப்பின் தொடக்கத்தில் இருந்தாலும், விளம்பரங்களைத் தடுக்க, பபர் அமைப்பு, பிரவுசர் ஹிஸ்டரி பராமரிப்பு, மெமரி தேக்கம், அச்செடுத்தல், தீம்ஸ் எனப் பல வசதிகளைத் தருகிறது. மேலே சொன்ன அனைத்து பிரவுசர்களையும் பயன்படுத்திப் பார்த்த வகையில், அவற்றின் திறன், தரும் வசதிகள், கூடுதல் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம். குரோம், கான்குவரர், பயர்பாக்ஸ், அரோரா, ஆப்பரா, லிங்க்ஸ், மிடோரி, நெட்சர்ப், எபிபனி எனக் கொள்ளலாம். ஆனாலும் சில குறிப்பிட்ட வசதிகளுக்கு, அதில் சிறப்புப் பெற்ற பிரவுசர்களே சரியானவையாக உள்ளன. 


யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர்


இன்றைய நிலையில் பாடல் ஒன்றை ரசித்துக் கேட்க வேண்டும் என்றால், யு-ட்யூப் தளத்தில் தேடிக் கேட்பதுதான் சரியான வழியாக உள்ளது. பலர், படம் பார்ப்பதைக் காட்டிலும், பாடல்களைக் கேட்டு ரசிக்க யு-ட்யூப் தளத்தினைப் பயன்படுத்துகின்றனர். புதிய பாடல்கள் மட்டுமின்றி, பழைய, மிகப் பழைய பாடல்களைக் கூட, ரசிகர்கள் அதில் போட்டு வைத்துள்ளனர். டில்லியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி (வயது 58) ஒருவர், தனக்கு ஜெயகாந்தன் எழுதிய ""தென்னங்கீற்று சோலையிலே'' என்ற பாடல் வேண்டும் எனக் கேட்டார். அதனைத் தேடி அலைகையில் அப்படி ஒரு பாடல் இருப்பதே பலருக்கு அப்போதுதான் தெரிய வந்தது. பல இசைப் பாடல் சேர்த்து வைத்திடும் பல இடங்களில் தேடி கிடைக்காமல், யு-ட்யூப் தளத்தில் தேடியபோது, அருமையான அந்த பாடல் கிடைத்தது. பி.பி. சீனிவாஸ் மற்றும் ஜானகி அவர்களின் (1960) காந்தர்வக் குரலில், பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ கிளிப் இசைத்தது. 
சரி, விஷயத்திற்கு வருவோம். இப்படி பாடலைக் கேட்க, யு-ட்யூப் தளம் சென்று பைலை இயக்கிப் பாடலைக் கேட்கும் சிரமத்தைக் கூட தேவை இல்லாமல் செய்திடும் ஆட் ஆன் மியூசிக் பிளேயர் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டு பயர்பாக்ஸ் பிரவுசரில் இருந்து கொண்டே இயக்கலாம். ஆடியோ பிளேயர் போல பல பிளே லிஸ்ட்டுகளை அமைத்து, இயக்கி , திருத்தி, இணைத்து, நீக்கி பாடல்களை ரசிக்கலாம். யு-ட்யூப் பைல்களில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம், பிளே லிஸ்ட்டில் இணைக்கும் ஆப்ஷனைப் பெறலாம். இதில் இன்னும் பல மியூசிக் கண்ட்ரோல்களும் தரப்பட்டுள்ளன. ஒரு சில கண்ட்ரோல்களை பலர் விரும்ப மாட்டார்கள் என்றாலும், சில குறிப்பிடத்தக்கவை. பிளே லிஸ்ட்டைக் கலக்கிப் பார்க்கலாம்; ஒரு பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து கேட்கும் வகையில், திருப்பி திருப்பிப் பாடவைக்கலாம்.
வீடியோவினைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். திரை ரெசல்யூசனை மாற்றலாம். திரை முழுவதும் அமைத்துக் கேட்கலாம். இந்த மியூசிக் பிளேயர் தனி விண்டோவில் பிரவுசருக்குச் சிக்கல் இன்றி காட்டப்படுகிறது. 
இதனை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள், தரவிறக்கம் செய்திட, செல்ல வேண்டிய இணைய தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/addon /10727/


அது என்ன ஹெர்ட்ஸ் ?


கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா!
ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக ஏத் என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு(ரேடியோ அலைவரிசையில்), கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் ("டிவி' பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால், அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 ஏத் என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின்வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படு வதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.

மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர் உள்ளாக அமைந்த ஒரு கடிகார துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப் படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது. 
முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய பெண்டியம் 4 கம்ப்யூட்டர் பிராசசர் 3.2 கிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டுள்ளன. (ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ்.) எனவே கணக்குப் போட்டு இந்த அதிவேக துடிப்புகளை உணர்ந்து கொள்க.
கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz) கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். தற்போது வரும் கம்ப்யூட்டர் பிராசசர் வேகம் இந்த அளவிலேயே சொல்லப் படுகிறது. 


""கவனத்திற்கு''

* GSM Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile) : இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங் களுடன் இணைத்துக் கொள்ள முடியும். அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப் படுகின்றன.

* Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப் படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரவுட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.
* Email: கம்ப்யூட்டர்களுக்கிடையே இன்டர்நெட் வழியாக டெக்ஸ்ட், படம் அல்லது வேறு வகையான டேட்டாக் களை அல்லது செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு சிஸ்டம்

சிஸ்டம் டிப்ஸ்


விரும்பும் போல்டரில் திறக்க
ஆபீஸ் புரோகிராம்களில், நீங்கள் பைல் ஒன்றைத் திறக்க தேவைப்படுகையில், File>>Open அழுத்து கிறீர்கள். அப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸின் இடது பக்கம், பைல்கள் உள்ள போல்டர்கள் சில காட்டப்படும். அதன்பின் நாம் நமக்கு வேண்டிய போல்டர் சென்று, அதனைத் திறந்து பைலைத் திறப்போம். மை டாகுமெண்ட்ஸ் இல்லாமல் வேறு ஒரு போல்டரில் பைல்களை வைத்து, அதனையே நீங்கள் எப்போதும் திறந்து பைல்களைப் பெறுகிறீர்கள் என்றால், File>>Open அழுத்துகையில் அந்த போல்டரை யே திறக்கும்படி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு முதலில், ஆபீஸ் புரோகிராம்களில் ஒன்றில், File>>Open அழுத்தி Openடயலாக் பாக்ஸ் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் விரும்பும் போல்டர் விண்டோவில் இருக்கும்படி தேர்ந்தெடுக்கவும். இந்த நிலையில், அந்த விண்டோவின் வலது மூலைக்குச் செல்லுங்கள். அங்கு “Tools” என்ற பிரிவில் கீழ் நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். கிடைக்கும் மெனுவில் “Add to my Places (or Favorites) “ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி அழுத்துகையில் அந்த போல்டரே திறக்கப்படும். இதனை வேறு ஒரு போல்டருக்கு மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது நீக்க விரும்பினால், இடது பக்க பிரிவு சென்று, அந்த போல்டர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், remove என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும். 
ஜிமெயில் வந்துள்ளதா! மணி அடிக்கும்
இணையப் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் மிகக் குறைவு. இவர்களின் வசதிக்காக வந்துள்ளது ஜிமெயில் பீபர் (Gmail Peeper) என்னும் ஆட் ஆன் தொகுப்பு. உங்களுக்கு ஜிமெயில் வந்தால், பிரவுசர் திறக்கப்படாமலேயே உங்களுக்கு மெயில் வந்துள்ளது என்று சொல்லும் இந்த புரோகிராம். பாதுகாப்பான ஆர்.எஸ்.எஸ். பீட் ஒன்றைப் பயன்படுத்தி, ஜிமெயில் சர்வரிலிருந்து உங்கள் மெயில் அக்கவுண்ட்டிற்கு, புதிய மெசேஜ் வந்துள்ளதா என்று பார்த்து, உங்களுக்கு அறிவிக்கும். இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து மிக அமைதியாக இந்தப் பணியை மேற்கொள்ளும். இது செயல்பட எடுத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் திறனும் மிகவும் கொஞ்சம் தான். இதனை இலவசமாக http://gmailpeeper.co.cc என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்புகளில் இது இயங்குகிறது. 

தானாக, அமைதியாக சிஸ்டம் ட்ரேயில் இருந்து கொண்டு இயங்குகிறது. படிக்காத மெயில்களைக் கணக்கெடுத்து எத்தனை என்று சொல்கிறது. மிக வேகமாகவும் எளிதாகவும் லாக் இன் செய்திட உதவுகிறது. மெயில் உள்ளது என்பதனை ஒலியோடு அறிவிக்கிறது. எத்தனை நிமிட இடைவெளியில் மெயில்களைச் சோதனை செய்திட வேண்டும் என்பதனை செட் செய்து கொள்ளலாம். இது ஓர் இலவச புரோகிராம். இதில் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை முடக்கும் கெடுதல் புரோகிராம்கள் (Malware, adware and spyware) எதுவும் ஒட்டி வருவதில்லை. 
நான்கு மொழிகளில் இது கிடைக்கிறது. இந்த தளத்தில், இதனை உங்கள் மொழியில் செயல்பட வைத்திட உங்களுக்கு விருப்பம் என்றால், தள நிர்வாகியைத் தொடர்பு கொள்ளச் சொல்லி அறிவிப்பு உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ப்ராபர்ட்டீஸ் அறிந்து கொள்ள
ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது பைலின் ப்ராபர்ட்டீஸ் அறிந்து கொள்ள வேண்டுமா? அதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது. அதன் ஐகானை அணுகுங்கள். ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு அதன் மீது இரு முறை கிளிக் செய்திடுங்கள். உடனே அதன் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். பின் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்பாடுகளில் ஈடுபடலாம். 


இன்டர்நெட் - ஏமாறாமல் இருக்க


இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம். இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.
1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.
2. அக்கவுண்ட் எண் தரலாமா? மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான். பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.
3. தானாக தனி நபர் தகவல் தரலாமா? ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.
4.போலி பேஸ்புக் செய்திகள்: பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி; உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான். 
5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்: இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.
6. பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடியுங்கள்: இந்த மலரில் பல முறை ஆன் லைன் வர்த்தகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை எழுதி வந்திருக்கிறோம். அவற்றை அவசியம் கடைப்பிடிக்கவும். இணையத்தில் எப்போதும் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையுடனேயே அதனை அணுகினால், நிச்சயம் நீங்கள் பலியாக மாட்டீர்கள். 

உங்க ஊர்ல மழை எப்படி ?


மேலே சொன்ன தலைப்பைப் பலர் தங்கள் தொலைபேசியில் பேசுகையில் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலை வருகையில், இது போன்ற விசாரிப்புகள் எல்லாம் இருக்கும். எதிர் முனையில் உள்ளவரும், இதே போல எதிர்கேள்வி கேட்பார். 

சில வேளைகளில், குறிப்பாக பிரயாணம் செல்ல முடிவு செய்கையில், குறுக்கே உள்ள ஊர்களில், மழை பெய்து கொண்டுள்ளதா என்று அறிய முயற்சிப்போம். அப்போது அந்த ஊர்களில் யாராவது இருந்தால் தானே, இது போல கேட்க முடியும்? இல்லையா!. 
இனிமேல் அந்த கவலையே வேண்டாம். திருச்சியிலிருந்து மதுரைக்குச் செல்லப் போகிறீர்களா! அல்லது அதையும் தாண்டி, திருநெல்வேலி செல்கிறீர்களா! அங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக் கிறதா என்று அறிய வேண்டுமா?
உடனே இணைய இணைப்பை முடுக்குங்கள்.http://isitraining.in என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் நீங்கள் மழை பொழிந்து கொண்டுள்ளதா என்று அறிய விரும்பும் ஊரின் பெயரைக் கொடுங்கள் (//isitraining.in/).உடனே சிறிது நொடிகளில், ஆம் அல்லது இல்லை என்று பெரிய அளவில் பதில் கிடைக்கும். கூடவே, அப்போது அந்த ஊரின் சீதோஷ்ண நிலை என்ன என பாரன்ஹீட் மற்றும் செல்சியஸ் அளவில் தகவலும் தரப்படும். 

சோதனை செய்து பார்க்க, ராஜபாளையம், மதுரை, நியூயார்க் என்று கொடுத்துப் பார்த்த போது எங்கும் மழை பெய்த செய்தி இல்லை. நியூயார்க்கில் சீதோஷ்ண நிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது.
ஊட்டியில் மழை இருக்குமோ என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்திட ஆங்கிலத்தில் Otacumundஎன்று கொடுத்த போது, அழகாக உதகமண்டலம் என்று பெயரிட்டு, அங்கும் மழை இல்லை எனப் பதில் கிடைத்தது.
இந்த தளம் யாஹூ வெதர் (Yahoo weather) என்னும் சேவையின் மூலம் இதனை அறிந்து தகவலைத் தருவதாக, தகவலின் கீழே தரப்படுகிறது. 
இதைப் படித்தவுடன் ஏதேனும் ஊரின் பெயரைப் போட்டுப் பார்க்க விருப்பமா? ஒன்று செய்திடலாமே! உங்கள் ஊரில் மழை பொழிகையில், அல்லது வேறு ஒரு ஊரில் மழை பெய்வதனை வேறு வழிகளில் உறுதி செய்த பின்னர், இந்த தளம் சென்று, அந்த ஊரின் பெயரை டைப் செய்து பார்த்து, இத்தளம் சொல்வது சரியா என்று பார்க்கலாமே! 


மைக்ரோசாஃப்ட் கிளவ்ட் சேவை இந்தியாவில் துவங்கியது


கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான வாடிக்கையாளர் நிர்வாகப் பணிகள் சேவையினை தருவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தனிப் பிரிவினை இந்தியாவில் தொடங்கி உள்ளது. 
கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை வேகமாகப் பரவி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சில, சக்தி வாய்ந்த சர்வர்களை நிறுவி, அதன் மூலம் பல நிறுவனங்களுக்கு கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் உற்பத்தி பொருட்கள், அவை குறித்த நுணுக்கமான தகவல்கள், விற்பனை, விற்பனைக்குப் பின் சேவை மற்றும் இவை சார்பாக வாடிக்கையாளர் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனியே சர்வர்களை அமைத்து இயக்குவது அதிக செலவினைத் தரும் வேலையாக அமையும். இவை அனைத்தையும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் பெற்றால், கவலையின்றி இந்த அனைத்து பணிகளையும் குறைந்த செலவில் பெறலாம். இந்த கட்டமைப்பினைப் பெரிய நிறுவனங்கள் சில கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் அமைத்துத் தருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் சி.ஆர்.எம். 2011 என்ற பெயரில், இந்த சேவையினை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28 முதல் வழங்க இருக்கிறது. முதலில் வரும் வாடிக்கை நிறுவனங்களுக்கு பல சலுகைகளை மைக்ரோசாப்ட் வழங்குகிறது.
பிற நிறுவனங்கள் மூலம் இந்த சேவையினைப் பெற்று வருபவர்கள், மாற்றிக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கும் பல தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. மேலும் விபரங்களுக்குhttp://www.cloudcrmforless.com என்ற இணைய தள முகவரியில் உள்ள பக்கத்தைக் காணலாம். 


என்ன வரப்போகிறது ?


தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்தியுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசியது 4ஜி அலைவரிசை தொடர்பு குறித்துத் தான். பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலைவரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணைய இணைப்பு பெற முடியும். மிகக் குறைந்த வேக இணைப்பு கூட விநாடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் இருக்கும். 

அறிமுகப்படுத்தப்பட்ட சாதனங்களில், ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் பிளே புக் டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஐ-பேட் சாதனத்தைக் காட்டிலும் 400 கிராம் குறைவான எடையில், 7 அங்குல அகலத் திரையுடன் இயங்கியது. இதே போலக் கவனத்தை ஈர்த்த இன்னொரு சாதனம் டெல் ஸ்ட்ரீக் 7 (Dell Streak 7) டேப்ளட் பிசி. டெல் நிறுவனத்தின் 4ஜி திறன் கொண்ட முதல் டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் 2.2 இயக்கத்தில் செயல்படுகிறது. இதில் உள்ள கொரில்லா கிளாஸ் டச் ஸ்கிரீன் திரை, வேறு எதனையும் பக்கத்தில் கூட ஒப்பிட விடுவதில்லை. இந்தியாவில் 2ஜி வரலாற்றினையும், 3ஜி முழுமையாக உண்டா என்று அறியாத நிலையையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், தடைகள் நீங்கி 4ஜி சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் சேவை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
2. முப்பரிமாண டிவி: பலரின் கண்கள் அதிகம் மொய்த்த அடுத்த சாதனம் முப்பரிமாண "டிவி'. இதனை கண்ணுக்கு ஸ்பெஷல் கண்ணாடி போட்டு பார்க்க வேண்டியதில்லை. சோனி நிறுவனம் இத்தகைய ஒரு "டிவி'யினைக் காட்டியது. இவற்றுடன் 27 புதிய எச்.டி.டி.வி. (HDTV) மாடல்களும் காட்டப்பட்டன. இவற்றில் 16 "டிவி'க்கள், முப்பரிமாண படத்தைக் காட்டக் கூடியன. 
ஐஸ்டேஷன் (iStation) என்னும் நிறுவனம் ஸூட் (Zood) என்னும் டேப்ளட் பிசியைக் காட்டியது. முப்பரிமாணக் காட்சியைக் காட்டும் திரை இதன் சிறப்பாகும். அது மட்டுமின்றி 2டி யிலிருந்து 3டிக்கு (2D to 3D) மாற்றும் தொழில் நுட்பத்தினையும் இது கொண்டுள்ளது. 
சில "டிவி'க்கள் நமக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியைத் தருவதாகவும் இருந்தன. தற்போது வேகமாகப் பரவி வரும் திரைகள் மூலம் டிவிக்களை மிக மிக ஸ்லிம்மாக வடிவமைப்பது எளிதாகிறது. இந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் 2.9 மிமீ மட்டுமே தடிமன் கொண்ட "டிவி' ஒன்றை அறிமுகப் படுத்தியது. இதே போன்ற வேறு பல "டிவி'க்களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சாம்சங் நிறுவனம் ப்ளாஸ்மா "டிவி' திரை கொண்ட 16 "டிவி'க்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் ரெசல்யூசன் என்ற அளவில் இருப்பது ஒரு சிறப்பாகும். 
"டிவி'க்களின் தடிமன் சிறிய அளவில் குறையும் போது, திரையின் அகலம் அதிகமாகி வருவது வழக்கமாகி வருகிறது. எல்.ஜி. மற்றும் ஷார்ப் நிறுவனங்கள் 72 அங்குல எல்.இ.டி. திரை கொண்ட "டிவி'க்களில் பல மாடல்களை அறிமுகப் படுத்தியுள்ளன. இவற்றில் பல முப்பரிமாண காட்சிகளைக் காட்டும் "டிவி'க்களாகும். 


யு-ட்யூப் அபார வளர்ச்சி

சென்ற இரண்டு ஆண்டுகளில், யு-ட்யூப் வீடியோ தளம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் யு-ட்யூப் அப்ளிகேஷன்கள் பதிந்து விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர். யு-ட்யூப் மொபைல் தளம் இப்போது மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 20 கோடி வீடியோ காட்சி பைல்கள் அப்லோட் செய்யப்படுவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 2010 ஜனவரியில் இருந்ததைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், யு-ட்யூப் தன் லைப்ரேரியில் மியூசிக் வீடியோ பைல்களைத் தொடர்ந்து இணைத்து வருகிறது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் பைல்களாகும். இது போன்ற வீடியோக்களை டவுண்லோட் செய்து பார்ப்பதற்கு, மிக மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது

கிளிப் போர்ட் பாக்ஸ் -clipboard box


கம்யூட்டரில் பணிபுரிகையில் காப்பி செய்து பேஸ்ட் செய்வோம்.ஒரு முறை காப்பி செய்தபைலை ஒரு முறைமட்டுமே பயன்படுத்த முடியும். வேறு ஒரு பைலை காப்பி செய்தால் முதலில் காப்பி செய்தது மறைந்துவிடும்.ஆனால் இந்த சாப்ட்வேரில் நாம் காப்பி செய்த பைலை தேவைபடும் சமயம் பயன்படுத்திக்கொள்ளலாம்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

Clipboard Box saves time and makes you more productive by adding clipboard functions that windows clipboard leaves out---starting with the ability to save many clips,instead of just one.
Everybody needs Clipboard Box,especially for programmer and officer.
The Windows has only one clip to let you save your data, but now Clipboard Box can save many clips that can be easily copied and pasted.

உங்களுக்கான எளிய வீடியோ விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Clipboard Box Video Tutorial   இதற்கு முன் வேர்ட்டில் கிளிப்பேர்டினை பயன்படுத்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.வீடியோவிலேயே விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதிகமாக சாப்ட்வேரை பற்றி விளக்கவில்லை.பயன்படுத்திப்பாருங்க

MP4 கட்டர் உபயோகிப்பது எப்படி?


இணையத்தில் வெளிவருகின்ற வீடியோக்களில் சில mp4 பார்மெட்டிலே வெளிவரும்.அதில் குறிப்பிட்ட காட்சியைமட்டும் தனித்துபிரித்து பார்க்க இந்த சாப்ட்வேர் உதவும்.7 எம்.பி.. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள ஓப்பன் என்பதில் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள படத்தை தேர்வு செய்யுங்கள்.Play பட்டனை அழுத்துங்கள்.குறிப்பிட்ட காட்சி வரும் வரை காத்திருக்கவும். தேவையான இடம் வந்ததும் Select Start கிளிக் செய்யவும். காட்சி முடியும் வரை காத்திருக்கவும். இப்போது Select End கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும. உங்கள் விருப்பமான இடத்தில் சேமிக்கவும். சேமித்ததை பிளே செய்தும் பார்க்கலாம். அதைப்போல ஸ்கிரீன் அளவினையும் தேவைபோல் வைத்துக்கொள்ள்வும்.பயன்படுத்த சுலபமாக இருக்கின்றது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துககளை கூறுங்கள்