விரும்பும் போல்டரில் திறக்க
ஆபீஸ் புரோகிராம்களில், நீங்கள் பைல் ஒன்றைத் திறக்க தேவைப்படுகையில், File>>Open அழுத்து கிறீர்கள். அப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸின் இடது பக்கம், பைல்கள் உள்ள போல்டர்கள் சில காட்டப்படும். அதன்பின் நாம் நமக்கு வேண்டிய போல்டர் சென்று, அதனைத் திறந்து பைலைத் திறப்போம். மை டாகுமெண்ட்ஸ் இல்லாமல் வேறு ஒரு போல்டரில் பைல்களை வைத்து, அதனையே நீங்கள் எப்போதும் திறந்து பைல்களைப் பெறுகிறீர்கள் என்றால், File>>Open அழுத்துகையில் அந்த போல்டரை யே திறக்கும்படி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு முதலில், ஆபீஸ் புரோகிராம்களில் ஒன்றில், File>>Open அழுத்தி Openடயலாக் பாக்ஸ் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் விரும்பும் போல்டர் விண்டோவில் இருக்கும்படி தேர்ந்தெடுக்கவும். இந்த நிலையில், அந்த விண்டோவின் வலது மூலைக்குச் செல்லுங்கள். அங்கு “Tools” என்ற பிரிவில் கீழ் நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். கிடைக்கும் மெனுவில் “Add to my Places (or Favorites) “ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி அழுத்துகையில் அந்த போல்டரே திறக்கப்படும். இதனை வேறு ஒரு போல்டருக்கு மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது நீக்க விரும்பினால், இடது பக்க பிரிவு சென்று, அந்த போல்டர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், remove என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும்.
ஜிமெயில் வந்துள்ளதா! மணி அடிக்கும்
இணையப் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் மிகக் குறைவு. இவர்களின் வசதிக்காக வந்துள்ளது ஜிமெயில் பீபர் (Gmail Peeper) என்னும் ஆட் ஆன் தொகுப்பு. உங்களுக்கு ஜிமெயில் வந்தால், பிரவுசர் திறக்கப்படாமலேயே உங்களுக்கு மெயில் வந்துள்ளது என்று சொல்லும் இந்த புரோகிராம். பாதுகாப்பான ஆர்.எஸ்.எஸ். பீட் ஒன்றைப் பயன்படுத்தி, ஜிமெயில் சர்வரிலிருந்து உங்கள் மெயில் அக்கவுண்ட்டிற்கு, புதிய மெசேஜ் வந்துள்ளதா என்று பார்த்து, உங்களுக்கு அறிவிக்கும். இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து மிக அமைதியாக இந்தப் பணியை மேற்கொள்ளும். இது செயல்பட எடுத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் திறனும் மிகவும் கொஞ்சம் தான். இதனை இலவசமாக http://gmailpeeper.co.cc என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்புகளில் இது இயங்குகிறது.

தானாக, அமைதியாக சிஸ்டம் ட்ரேயில் இருந்து கொண்டு இயங்குகிறது. படிக்காத மெயில்களைக் கணக்கெடுத்து எத்தனை என்று சொல்கிறது. மிக வேகமாகவும் எளிதாகவும் லாக் இன் செய்திட உதவுகிறது. மெயில் உள்ளது என்பதனை ஒலியோடு அறிவிக்கிறது. எத்தனை நிமிட இடைவெளியில் மெயில்களைச் சோதனை செய்திட வேண்டும் என்பதனை செட் செய்து கொள்ளலாம். இது ஓர் இலவச புரோகிராம். இதில் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை முடக்கும் கெடுதல் புரோகிராம்கள் (Malware, adware and spyware) எதுவும் ஒட்டி வருவதில்லை.
நான்கு மொழிகளில் இது கிடைக்கிறது. இந்த தளத்தில், இதனை உங்கள் மொழியில் செயல்பட வைத்திட உங்களுக்கு விருப்பம் என்றால், தள நிர்வாகியைத் தொடர்பு கொள்ளச் சொல்லி அறிவிப்பு உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ப்ராபர்ட்டீஸ் அறிந்து கொள்ள
ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது பைலின் ப்ராபர்ட்டீஸ் அறிந்து கொள்ள வேண்டுமா? அதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது. அதன் ஐகானை அணுகுங்கள். ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு அதன் மீது இரு முறை கிளிக் செய்திடுங்கள். உடனே அதன் ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். பின் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
|
No comments:
Post a Comment