மக்களைச் சென்றடைவதில் வங்கிகளைக் காட்டிலும் அதிகமாக, மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. எனவே போன்கள் மூலம் நிதிப் பரிமாற்றம் ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்துடன், போன்களைப் பயன்படுத்தி, நாம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தும் வசதியினை ரிசர்வ் பேங்க் மொபைல் நிறுவனங்களுக்கு அளிக்கிறது. அதாவது மொபைல் போன் ஒரு மணி பர்ஸ் போலச் செயல்படும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்திடம், நாம் குறிப்பிட்ட பணத்தை நம் மொபைல் எண்ணில் டெபாசிட் செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் இதனை ஏற்கும் கடைகளில் பொருட்கள் வாங்குகையில், நம் மொபைல் போன் பர்ஸில் டெபாசிட் செய்த பணத்தைச் செலுத்தலாம். ஆனால் இதிலிருந்து பணத்தை ரொக்கமாக கடைகளில் பெற முடியாது. இதனால் நம் பணம் பத்திரமாக உள்ளது. மொபைல் போன் எண்ணை அடையாளம் காட்டி,
அதற்கான பாதுகாப்பு பாஸ்வேர்ட் கொடுத்து, கடைகளில் பணம் கட்டிவிடலாம். இந்த வசதியை மக்களுக்கு வழங்க, பார்தி ஏர்டெல் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றுள்ளது. மிகவும் எளிய அதே சமயத்தில் பாதுகாப்பான வழிகளை வடிவமைத்தவுடன், இந்த வசதி, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இது வழங்கப்படும். இந்திய நிதிச் சந்தையில் இந்த வசதி ஒரு பெரிய மாற்றத்தினை ஏற்படுத்த இருக்கிறது. டெபிட் கார்டு போல மொபைல் போன்கள் இயங்கும்.
|
No comments:
Post a Comment