கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான வாடிக்கையாளர் நிர்வாகப் பணிகள் சேவையினை தருவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தனிப் பிரிவினை இந்தியாவில் தொடங்கி உள்ளது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை வேகமாகப் பரவி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சில, சக்தி வாய்ந்த சர்வர்களை நிறுவி, அதன் மூலம் பல நிறுவனங்களுக்கு கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் உற்பத்தி பொருட்கள், அவை குறித்த நுணுக்கமான தகவல்கள், விற்பனை, விற்பனைக்குப் பின் சேவை மற்றும் இவை சார்பாக வாடிக்கையாளர் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனியே சர்வர்களை அமைத்து இயக்குவது அதிக செலவினைத் தரும் வேலையாக அமையும். இவை அனைத்தையும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் பெற்றால், கவலையின்றி இந்த அனைத்து பணிகளையும் குறைந்த செலவில் பெறலாம். இந்த கட்டமைப்பினைப் பெரிய நிறுவனங்கள் சில கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் அமைத்துத் தருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் சி.ஆர்.எம். 2011 என்ற பெயரில், இந்த சேவையினை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28 முதல் வழங்க இருக்கிறது. முதலில் வரும் வாடிக்கை நிறுவனங்களுக்கு பல சலுகைகளை மைக்ரோசாப்ட் வழங்குகிறது.
பிற நிறுவனங்கள் மூலம் இந்த சேவையினைப் பெற்று வருபவர்கள், மாற்றிக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கும் பல தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. மேலும் விபரங்களுக்குhttp://www.cloudcrmforless.com என்ற இணைய தள முகவரியில் உள்ள பக்கத்தைக் காணலாம். கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை வேகமாகப் பரவி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சில, சக்தி வாய்ந்த சர்வர்களை நிறுவி, அதன் மூலம் பல நிறுவனங்களுக்கு கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் உற்பத்தி பொருட்கள், அவை குறித்த நுணுக்கமான தகவல்கள், விற்பனை, விற்பனைக்குப் பின் சேவை மற்றும் இவை சார்பாக வாடிக்கையாளர் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனியே சர்வர்களை அமைத்து இயக்குவது அதிக செலவினைத் தரும் வேலையாக அமையும். இவை அனைத்தையும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் பெற்றால், கவலையின்றி இந்த அனைத்து பணிகளையும் குறைந்த செலவில் பெறலாம். இந்த கட்டமைப்பினைப் பெரிய நிறுவனங்கள் சில கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் அமைத்துத் தருகின்றன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ் சி.ஆர்.எம். 2011 என்ற பெயரில், இந்த சேவையினை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28 முதல் வழங்க இருக்கிறது. முதலில் வரும் வாடிக்கை நிறுவனங்களுக்கு பல சலுகைகளை மைக்ரோசாப்ட் வழங்குகிறது.
|
No comments:
Post a Comment