Tuesday, February 1, 2011

உங்க ஊர்ல மழை எப்படி ?


மேலே சொன்ன தலைப்பைப் பலர் தங்கள் தொலைபேசியில் பேசுகையில் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலை வருகையில், இது போன்ற விசாரிப்புகள் எல்லாம் இருக்கும். எதிர் முனையில் உள்ளவரும், இதே போல எதிர்கேள்வி கேட்பார். 

சில வேளைகளில், குறிப்பாக பிரயாணம் செல்ல முடிவு செய்கையில், குறுக்கே உள்ள ஊர்களில், மழை பெய்து கொண்டுள்ளதா என்று அறிய முயற்சிப்போம். அப்போது அந்த ஊர்களில் யாராவது இருந்தால் தானே, இது போல கேட்க முடியும்? இல்லையா!. 
இனிமேல் அந்த கவலையே வேண்டாம். திருச்சியிலிருந்து மதுரைக்குச் செல்லப் போகிறீர்களா! அல்லது அதையும் தாண்டி, திருநெல்வேலி செல்கிறீர்களா! அங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக் கிறதா என்று அறிய வேண்டுமா?
உடனே இணைய இணைப்பை முடுக்குங்கள்.http://isitraining.in என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் நீங்கள் மழை பொழிந்து கொண்டுள்ளதா என்று அறிய விரும்பும் ஊரின் பெயரைக் கொடுங்கள் (//isitraining.in/).உடனே சிறிது நொடிகளில், ஆம் அல்லது இல்லை என்று பெரிய அளவில் பதில் கிடைக்கும். கூடவே, அப்போது அந்த ஊரின் சீதோஷ்ண நிலை என்ன என பாரன்ஹீட் மற்றும் செல்சியஸ் அளவில் தகவலும் தரப்படும். 

சோதனை செய்து பார்க்க, ராஜபாளையம், மதுரை, நியூயார்க் என்று கொடுத்துப் பார்த்த போது எங்கும் மழை பெய்த செய்தி இல்லை. நியூயார்க்கில் சீதோஷ்ண நிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது.
ஊட்டியில் மழை இருக்குமோ என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்திட ஆங்கிலத்தில் Otacumundஎன்று கொடுத்த போது, அழகாக உதகமண்டலம் என்று பெயரிட்டு, அங்கும் மழை இல்லை எனப் பதில் கிடைத்தது.
இந்த தளம் யாஹூ வெதர் (Yahoo weather) என்னும் சேவையின் மூலம் இதனை அறிந்து தகவலைத் தருவதாக, தகவலின் கீழே தரப்படுகிறது. 
இதைப் படித்தவுடன் ஏதேனும் ஊரின் பெயரைப் போட்டுப் பார்க்க விருப்பமா? ஒன்று செய்திடலாமே! உங்கள் ஊரில் மழை பொழிகையில், அல்லது வேறு ஒரு ஊரில் மழை பெய்வதனை வேறு வழிகளில் உறுதி செய்த பின்னர், இந்த தளம் சென்று, அந்த ஊரின் பெயரை டைப் செய்து பார்த்து, இத்தளம் சொல்வது சரியா என்று பார்க்கலாமே! 


No comments:

Post a Comment