|
Thursday, March 24, 2011
இனி காப்பி பேஸ்ட் செய்வது எளிதாகும்..
விண்டோஸ் கட், காப்பி, பேஸ்ட் வழிமுறையில் கோப்புகளை இடம் மாற்றுவதைவிட வேகமாகவும் பல கூடுதல் பயன்களுடனும் சிறிய யுட்டிலிட்டி மென்பொருள்கள் கிடைக்கின்றன. சாதாரண காப்பி பேஸ்ட் செய்வது போலல்லாமல் இவற்றில் இடையில் நிறுத்தி வைத்தும், காப்பியாகும்போது ஏற்கனவே அதே கோப்பு இருந்தால் அதனை ஓவர் ரைட் அல்லது ஸ்கிப் கமாண்ட்கள் கொடுத்தும் தொடர்ந்து காப்பி செய்யமுடியும். சில கோப்புகள் காப்பியாகவில்லையென்றால் அவை எவையெவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும். இச்சிறப்பான வசதிகளுடன் அமைந்த எண்ணற்ற மென்பொருள்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சிறந்த 13 மென்பொருள்கள் மட்டும் உங்களுக்காக...
.
- பாஸ்ட் காப்பி ( FastCopy 2.08)
- எக்ஸ்ட்ரீம் காப்பி ( ExtremeCopy Pro 1.5.1)
- டெர்ரா காப்பி ( TeraCopy 2.12 )
- ரிச் காப்பி (RichCopy 4.0.217 )
- கில் காப்பி (KillCopy 2.85)
- அல்ட்ரா காப்பியர் (Ultracopier 0.2.0.15)
- ரிஜி காப்பி ( PerigeeCopy 1.2)
- காப்பி ஹேண்ட்லர் ( Copy Handler 1.32.276)
- மினி காப்பியர் ( MiniCopier 0.5)
- காப்பி விஸ் ( Copywhiz 4.0 Build 3)
- சூப்பர் காப்பியர் ( SuperCopier 2.2)
- அன்ஸ்டாப்பபிள் காப்பியர் (Roadkil’s Unstoppable Copier 5.2)
- கியூ காப்பி ( QCopy 1.0.2)
|
திருமணத்திற்குப்பின் திருமதி நடிகைகள் சின்னத்திரைக்கு படையெடுப்பு
திருமணத்திற்குப்பின் திருமதி நடிகைகள் சின்னத்திரைக்கு படையெடுப்பு - திருமணத்திற்குப்பின் நடிப்புக்கு முழுக்கு, எனது சாஃப்ட்வேர் கணவரைக் கவனிப்பதே என் வேலை. தொழிலதிபரான என் கணவருடன் பிரியாமல் இருப்பதையே அவர் விரும்புவார் என்று சகட்டு மேனிக்கு பில்டப் கொடுத்து விட்டு, "போன அன்னைக்கு இருந்துட்டு புதன் கிழமை திரும்பிட்டாளாம்" என்ற பழமொழிக்கிணங்க திருமணமாகிப்போன நடிகைகள் வேறு வழியின்றி வரிசையாக சின்னத்திரைப் பக்கம் படையெடுக்க ஆரம்பிக்கின்றனர்.Image
ராதிகா தொடங்கி சுகன்யா, தேவயானி, நளினி, சீதா, குயிலி, கீதா, குஷ்பு என வரிசை நீண்டு கொண்டே சென்றது. தற்போது சின்னத்திரைப் பக்கமும் படு கிராக்கி. சமீபத்தில் திருமணமாகிப்போன ஸ்ரீதேவிகா மற்றும் 'அம்முவாகிய நான்' பாரதிக்கும் விதி விலக்கல்ல. இவர்களிருவம் தற்போது சின்னத்திரைப் பக்கம் வருவார்கள் என கோலிவுட் கிசுகிசுக்கிறது. பொதுவாக திருமணமாகிவிட்டாலே கோடம்பாக்கம் நடிகைகளின் ஃபைலை மூடிவிடும். இது காலம் காலமாக தொன்றுதொட்டு நடந்து கொண்டுள்ளதுதானே. எப்படியோ சின்னத்திரையாவது அவர்களுக்கு வாழ்வு கொடுத்தால் சரி.

14 டிவி நிகழ்ச்சிகளைத் தடை செய்யக் கோரி புகார்கள்...
|
சினிமா... சின்னத்திரை... ஆறு வித்தியாசங்கள்!
இப்போதெல்லாம் குறைந்தபட்ச அரட்டைக்கே நம் மக்களுக்கு "பீர்" தேவைபடுவது மிகவும் வேதனையான விஷயம். நான் குடிக்கறதில்லை ஆனா நல்லா அரட்டை அடிப்பவன். இருந்தாலும் என்னைப் பார்க்க வந்தால் ஒரு டீ நிச்சயம் என்று பேச ஆரம்பிக்கிறார் பாஸ்கர் சக்தி. சமீபத்திய ரிலீஸான நான் மகான் அல்ல படத்தை வசனங்களுக்காகவும் ரசிக்க வைத்த பேனாவுக்குச் சொந்தக்காரர். அவருடைய வசனங்களைப் போலவே பேச்சிலும் யதார்த்தமான நகைச்சுவை தெறிக்கிறது.
மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள், மேகலா என்று சின்னத் திரையில் ஆரம்பித்து இன்று எம் மகன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என்று வெள்ளித்திரை வரையில் வெற்றிகரமான எழுத்தாளராக விளங்குபவர்.
சன்னமான மழைத் தூறலில் சூடான டீயுடன் ஆரம்பிக்கிறது அவருடனான அரட்டை..
`சட்டக் கல்லூரி மாணவராக இருந்த பாஸ்கர், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆனது எப்படி?
நீங்க ஆட்டோபயோகிராபி கேட்குறீங்க. அந்த அளவுக்குநான் இன்னும் வளரலை. என் சொந்த ஊர் தேனிக்குப் பக்கத்தில் இருக்கிற வடபுதுப்பட்டி கிராமம். அப்பாவுக்கு நான் வக்கீல் ஆகி வாய்தா வாங்கணும்னு ஆசை. பி.எல் சேர்ந்ததுமே எனக்கு சட்டம் ஒரு இருட்டறை ஆகிருச்சு. சுத்தமா புரியலை.சுத்தமா பிடிக்கலை. அப்பாவுக்காக பல்லை கடிச்சு படிச்சேன். படிக்கும்போதே பத்திரிக்கைத்துறை மேலே ஆர்வம் வந்திருச்சு. .அப்போ என் நண்பன் விகடனுக்காக `ட்ராவலாக்` மாதிரி தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களுக்கு பயணம் செய்து அந்த அனுபவங்களை எழுதித் தந்தான். என்கிட்ட கேமிரா இருந்ததால என்னையும்கூட அழைச்சுட்டு போனான். ஒரு சந்தர்ப்பத்தில் நானே பயணக் கட்டுரை எழுதி அனுப்பினேன். நான் எழுதியது விகடனுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. ரெகுலரா கதை, கட்டுரைகள் எழுதி அனுப்பச் சொன்னாங்க. பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பிச்சதால படிப்பு தொங்க ஆரம்பிச்சிருச்சு. ரெண்டு கை நிறைய அரியர்ஸ் சேர்ந்திருச்சு. இன்னொரு பக்கம் சுசீந்திரன், திருமுருகன்னு என்னோட மீடியா நண்பர்கள் வட்டம் பெருகிட்டே போச்சு. சரி வர்றதைப் பண்ணுவோம்ன்னு முடிவு பண்ணினேன். திருமுருகனோட `மெட்டி ஒலி` சீரியலுக்கு எழுத ஆரம்பிச்சேன். அப்படியே எழுத்து தலையெழுத்தா மாறிடுச்சு!
தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவா இருக்காங்க. தமிழ் சினிமா எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறதில்லையா?
சுஜாதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பாலகுமாரன்னு சினிமாவில் ஒரு சில எழுத்தாளர்கள்தான் தாக்குப் பிடிச்சு நின்னுருக்காங்க. ஆனால் அதிக அளவில் வரமுடியாமல் போனதற்குக் காரணம் இயக்குநர்கள். நான் குறையா சொல்லலை. யதார்த்தத்தை சொல்றேன். இப்போ படம் பண்ற புது இயக்குநர்கள் ஒரு கதையை ரெண்டு வருஷமா மனசில் ஊறப்போட்டு ரெடி பண்றாங்க. அதனால அந்தக் கதை பக்காவா டயலாக்கோடு ரெடி ஆகியிருக்கும். அதனால அவங்க கதைக்குத் தனியா எழுத்தாளன்தேவைபடுவதில்லை. என்னைக் கேட்டா இயக்குநர் நல்ல கிரியேட்டராமாறும்போது எழுத்தாளனுக்கு அங்கே வேலையே இருக்காது. வேணும்னா எழுத்தாளர்களை மொபைலில் வர்ற எக்ஸ்ட்ரா சர்வீஸ் மாதிரி தேவைக்கேற்ப பயன்படுத்திக்கலாம். ஆங்கிலத்தில் நாவல்களை தழுவி நிறையப் படம் எடுப்பாங்க. அந்தச் சூழல் தமிழில் இப்போதான் வர ஆரம்பிச்சிருக்கு. இனிமே எழுத்தாளர்களுக்குத் தேவை வரலாம்!
சின்னத் திரை வசனங்கள்... சினிமா வசனங்கள்... ஆறு வித்தியாசம் சொல்ல முடியுமா?
ஆறு இல்லை.. அறுபது வித்தியாசம் சொல்லலாம். சீரியலில் நீங்க நிறைய சுதந்திரம் எடுத்துக்கலாம். அவசரம் கிடையாது. சினிமாவில் எல்லாமே இன்ஸ்டன்ட் காஃபி மாதிரிதான். சூடா கொடுக்கணும். சுவையா இருக்கணும். கொஞ்சம் சொதப்பினாலும் டயலாக் போர் அடிச்சிரும். நம்மளோட இந்த சந்திப்பை சீரியலில் அழகா மூணு சீனில் விவரிக்கலாம். சினிமாவில் இது ஒரு ஷாட் மட்டும்தான். அதுக்கு மேலே இடம் கிடையாது.
உங்க எழுத்துக்களில் கிராமங்களை மட்டுமே பதிவு பண்றீங்க.. நகர வாழ்க்கையைப் பதிவு பண்ண விருப்பம் இல்லையா?
விருப்பம் இல்லைன்னு சொல்லக் கூடாது. அனுபவம் இல்லைன்னு சொல்லலாம். நான் பார்த்த, படிச்ச, அனுபவிச்ச விஷயங்களைத்தான் எழுதிட்டு இருக்கேன். அதைத்தான் எழுதவும் முடியும். நான் கிராமத்தில் பிறந்து, வளர்ந்ததால கிராமத்தில் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமா சொல்ல முடியுது. சென்னை வந்தது பிறகு `அவள் விகடனில்` சென்னை வாழ்க்கையை மையமா வைச்சு ஒரு நாவல் எழுதினேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. பொதுவா எனக்கு ஹுயூமர் சென்ஸ் கொஞ்சம் உண்டு. எந்த விஷயத்தையுமே மென்மையா எடுத்துக்கொள்வேன். என் கதைகள் அதையேதான் பிரதிபலிக்குது. நகரத்தைப் பத்தி சொன்னாலும்இந்த ஹியூமரும், மென்மையும் என்னை விட்டுப் போகாது..!
மக்கள் மத்தியில் வாசிப்பு அனுபவம் குறைஞ்சுகிட்டே போகுதே..இது எங்கே போய் முடியும்?
இந்த நிலைமைக்கு நம்ம கல்வி முறையும், பெற்றோர்களும்தான் காரணம்னு சொல்வேன். ஆங்கிலம் மேல இருக்கற கவர்ச்சியால தாய்மொழி தமிழை சுத்தமா புறக்கணிச்சிட்டோம். இப்போ இருக்கற வாழ்க்கை முறையில் கல்விங்கிறது பிஸினஸ்க்கான முதலீடு மாதிரி ஆகிருச்சு. அதை பணம் சம்பாதிக்கும் கருவியாகத்தான் பார்க்குறாங்க. நாங்க படிக்கும் காலத்தில் போராடிச்சா லைப்ரரி போவோம். ஆனா இப்போ ஆர்குட், ஃபேஸ்புக்ல சாட் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. இல்லைன்னா பார், பப்ன்னு கிளம்பிடுறாங்க. இப்படி பசங்க வளர்றதுக்கு பெற்றோர்கள்தான் முக்கியமானகாரணம். அவங்கதான் தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லணும். நல்ல புத்தகங்களை தேடி எடுத்துக் கொடுத்து, வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தணும். வாசிப்பு அனுபவம்தான் ஒருத்தனை நல்ல மனிதனா, கலைஞனா செதுக்கும்!

கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்” விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள்.
அவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரை அதிவேகமாக செயல்பட வைக்க முடியும். பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பிராசசர் மைக்ரோ “சிப்”பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில “சிப்”களில் 16 பாகங்கள் வரை இருக்கும்.
இப்போது விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ள மைக்ரோ “சிப்”பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும். இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரைவிட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்ட ராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

டீலா ஆர் நோ டீலா
கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? விவாதத்தில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். முதலில் டி.வி.ஷோ வந்ததா - இல்லை கம்யுட்டர் விளையாட்டு முதலில் வந்ததா? யார் காப்பி அடித்தது என்று தெரியவில்லை..விளையாட்டை பாருங்கள்
பிரபல விளையாட்டு டீலா - நோ -டீலா...இதை நமது கம்யுட்டரில விளையாடலாம்.சற்று பெரிய விளையாட்டு இது.(580 எம்.பி.கொள்ளளவு) இதன் டோரன்ட் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கி டவுண்லோடு செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் நீ்ங்கள் ஒருவர் விளையாட போகின்றீர்களா - இரண்டு பேரா என முடிவு செய்யவும்.அதற்கு முன் விளையாட்டை பற்றி சிறு முன்னோட்டம். இந்த நிகழ்ச்சியை நீங்கள் டி.வி.யில் பார்த்திருந்தால் உங்களுக்கு விளையாட்டை பற்றி தெரிந்திருக்கும். இல்லாத பட்சத்தில் இந்த விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் சிங்கில் பிளேயரை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
26 சூட்கேஸ்களில் பெண்கள் வரிசையாக நிற்பார்கள். இதில ஏதாவது ஒரு பெட்டியை தேர்வு செய்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் 6 பெட்டிகளை தேர்வு செய்து வரிசையாக திறக்க சொல்ல வேண்டும்.குறைந்த ரூபாய்மதிப்பு உள்ள பெட்டியை தேர்வுசெய்தால் நமது பணமதிப்பு உயரும். அது அதிர்ஷ்டத்தை பொருத்ததே...இவ்வாறே அனைத்து பெட்டிகளையும் திறந்து விளையாடலாம். ஒவ்வொரு சுற்று முடிவிலும் உங்களுக்கு கொடுக்கும் பணத்தின் அளவை சொல்லுவார்கள். அதற்கு ஒற்றுக்கொண்டால் டீல் முடித்துவிடலாம். இல்லையென்றால் நோ டீல் அழுத்தி விளையாடலாம்.விளையாடி பாருங்கள் வித்தியாசமாக இருக்கும். இதிலும் இன்னும் பிற விளையாட்டுகள் உள்ளது. அதையும் விளையாடி பாருங்கள்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

டிவி சீரியல்களை தவறாமல் பார்க்க
அந்த காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வெளியிலும் திண்ணை கட்டி வைத்திருப்பார்கள். அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் விளையாடிகொண்டு இருக்க பெரியவர்கள் தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்வார்கள். நவீன விஞஞான வளர்ச்சியில் அனைத்தும் காணாமல சென்று அனைத்தையும் சின்ன திரை -டெலிவிஷன் ஆக்கிரமித்துக்கொண்டது.காலையில் ஆரம்பித்து இரவு வரை விதவிதமான சீரியல்கள்.சீரியலை பார்ப்பதற்கென்றே உறவுகளிடம் போனில் பேசுவதும் - சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் குறைந்துவருகின்றது. இனி அந்த கவலை நமக்குவேண்டாம். குறிப்பிட்ட சீரியல் நேரம் மின்சாரம் தடைபட்டாலும் சரி - திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்துகொள்வதானால் சீரியல் பார்க்காமல் விட்டாலும் சரி...இனி கவலைபடாமல் சென்று வரலாம். ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்த தளம் விளம்பரம் இன்றி வெளியிடுகின்றது.விடுபட்ட சீரியலை ஒய்வான நேரத்தில் பார்க்கஇந்த தளத்தை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் பிரபலமான தளங்கள் இருக்கும்.தேவையான சேனலை கிளிக் செய்யுங்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் ஒரு காட்சி.
விஜய்டிவியின் அன்பாலே அழகான வீடு சிரியலின் ஒரு காட்சி
அப்புறம் என்ன - இனி சீரியலை மிஸ்செய்துவிடுவோம் என்கின்ற கவலையின்றி தைரியமாக சுப நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்லலாம்.தளத்தினை பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
|
வேகமாக கோப்புகளை காப்பி செய்ய டெராகாப்பி
|
குறுக்கே யாராவது வந்தால் தானாக நின்று விடும் கார்
உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் முடிவாக ஒரு உபகரணம் ஒன்றை வொல்வோ நிறுவனத்தார் உருவாக்கியுள்ளனர். இது பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன், அவை மோதலாம் என்ற நிலை வரும் போது எச்சரிக்கை சமிக்ஞைகளை எழுப்பும்.
இது மட்டுமல்லாமல் உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் முடியும் படி இதனை தயாரித்துள்ளனர். இதனை தனது கார்களில் பொருத்தி, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன.
ராடார் மற்றும் கேமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும்.
எனினும் இவ்வுபகரணமானது இரவிலும் மோசமான காலநிலையின் போதும் இயங்காது என வொல்வோ தெரிவிக்கின்றது

ஆன்லைனில் செல்போன்மற்றும் டிஷ்டிவி ரீசார்ஜ் செய்ய
நாம் வெளிநாட்டில்-வெளிஊரில் வேலை செய்பவர்களாக இருப்போம். நமது வயதான பெற்றோர்-மனைவி -நண்பர்கள் சொந்த ஊரில் இருப்பார்கள். அவர்களுடைய செல்போனுக்கு நாம் நமது இருப்பிடத்திலிருந்தே ரீ-சார்ஜ் மற்றும் டாப்அப் செய்யலாம். ஆன்லைனில் வரும் பலபல வசதிகளில் புதியதாக இதுவந்து உள்ளது. இனி ஆன்லைனில் நாம் செல்போன் மற்றும் டிஷ் டிவிகளுக்கு எப்படி ரீசார்ஜ் முதலியவைகளை எளிதாக செய்யலாம் என்பதனை காணலாம்.முதலில் இந்த தளம் செல்லஇங்கு கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய பெயர் முகவரி செல்போன் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய கம்பெனியை தேர்வு செய்யவும். நான் ஏர்டெல் கம்பெனியை தேர்வு செய்துள்ளேன்.
ரீ சார்ஜ் செய்யவிரும்பும் போன் எண்ணை கொடுத்து கோ கொடுக்கவும்.
இப்போது உங்களுக்கு ரீ-சார்ஜ் அல்லது டாப்அப் தேர்வு செய்து அதற்கான தொகையை தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் உங்களது வங்கி கண்ககு உள்ள ஏடிஏம் கார்டை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவரும் அதில் உங்கள் வங்கி ஏடிஎம் கார்டில் உள்ள எண் -பெயர் மற்றும் ரகசிய குறியீடு ஆகியவற்றை குறிப்பிடவும்.
இறுதியாக சப்மீட் செய்துவிடவும். உங்களுக்கான தொகை உங்கள் செல்போனில் வந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
|
ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்!
வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை.
ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருது அவசியம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?
நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க… இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.
இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி…. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி… இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு.
அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் “டிரான்ஸ்ஃபேட்”னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு.
நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை. எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம்.
சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும்.
அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது.
கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.
இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள் மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும். ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.
பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் – அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
”ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும்… வேற எதுவும் வேணாம்”னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு.
அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.
சாப்பிடக்கூடிய உணவுகள்:
கீரை, முழு தானியங்கள், காய்கறிகள், அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது) ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம். தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடப்புளி உபயோகிக்கலாம்.
கோக்கம்னு சொல்லப்படற கொடப்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் கோடையில்.
கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
* கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.
* காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
* சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங்” சமாச்சாரங்கள்.
* தர்பூசணி சாப்பிடுங்கள். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள ஒரு காய்கறி உண்டு அது என்ன தெரியுமா ? வெள்ளரிக்காய் ! வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
* கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைவில் பரவும் என்பதால் எப்போதும் கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது.
* வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.
* உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவை.
* குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை.
|
ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள்.
2. முகப்பரு அதிகம் உள்ளவர்கள்.
3. மூக்கில், காதில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
4. முகத்தில் வெட்டுக்காயம் உள்ளவர்கள்.
5. தீக்காயம் முகத்தில் ஏற்பட்டவர்கள்.
இனி வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். உலர்ந்த சருமத்தினர் புருவத்திற்கு விளக்கெண்ணெய் தடவவும். உதட்டின் மேல் 'வாஸலின்' அல்லது கிளிசரின் தடவவும்.
பால், ஓட்ஸ், பாதாம் எண்ணெய் சிறு துளிகள், ஆலிவ் எண்ணெய் சிறு துளிகள் கலந்து போட்டு சில நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளலாம்
|
ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?
ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
பல பெண் களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.
இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.
சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.
பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள் , உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.
எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.

'லேட்'டானாலும் 'கிரேட்'டா...!
தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேரத்தில் நல்லவற்றுக்கு அடி கோலுவதை நாம் 'பிராக்டிகல்' வாழ்க்கையில் பார்க்கலாம்.
இது செக்ஸுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் செக்ஸ் உறவு என்பது பலவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத்தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும், அதீதமாகவும் இருக்கும். ஆனால் ஒரேயடியாக அதில் மூழ்கிப் போய் விடாமல், சற்று நிதானத்துடன் நடந்து கொண்டு, செக்ஸ் உறவை முறைப்படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழி கோலும் என்பது அவர்களின் கருத்து.
எடுத்த எடுப்பிலேயே 'டாப்' கியருக்குப் போனால் அது 'ஆக்சிடன்ட்'டில்தான் போய் முடியும். அதேசமயம், படிப்படியாக கியரை மாற்றி 'டாப்'புக்குப் போனால் 'எக்சலன்ட்' ஆக இருக்கும். திருமணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இருவரும், நல்ல புரிதலுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன்பும் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
இப்படி அவர்கள் சொல்வதற்கு முக்கிய காரணம் - எடுத்த எடுப்பிலேயே இருவரும் செக்ஸில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தினால், யாராவது ஒருவருக்கு திருப்தி ஏற்படாமல் போய் விட்டால், அது 'பார்ட்னர்' மீதான வெறுப்புணர்வை உள்ளூர வளர்த்து விடும். அது உடனடியாக வெளியே தெரியாது. ஆனால் விரைவிலேயே இருவருக்கும் செக்ஸ் வாழ்க்கையும் சரி, குடும்ப வாழ்க்கையும் சரி கசக்க ஆரம்பித்து விடும்.
எனவே இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே அன்பில் ஆழமாக வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.
அமெரிக்காவில் இதுதொடர்பாக ஒரு சர்வே நடத்தினர். அதில், செக்ஸ் உறவை தாமதப்படுத்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திருமண வாழ்க்கை (அல்லது சேர்ந்து வாழுதல்) அதிக பாசப்பிணைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்ததாம்.
வலுவான திருமண பந்தம் என்பது இருவரது மணங்களும் ஒன்றாக இணைவதில்தான் உள்ளது. வெறுமனே உடல் சேர்க்கையில் இது சாத்தியப்படாது. உணர்வுப் பூர்வமாக, உள்ளப் பூர்வமாக இருவரும் முதலில் இணைய வேண்டும். நீ என்பதில் நானும் அடங்கும், நான் என்பதில் நீயும் அடங்கும் என்ற வைரமுத்துவின் வரிகளைப் போல இருவரும் ஒருவருக்குள் ஒருவர் புக வேண்டும். அதன் பிறகு உடல்களின் கூடலுக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் அது உண்மையான பந்தமாக இருக்க முடியுமே தவிர, செக்ஸ் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் எழுந்தால் அது நிச்சயம், கூடலுக்குப் பிந்தைய ஊடலுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.
சும்மாவா சொல்லி வைத்தார்கள் அந்தக் காலத்தில் - மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று. அது நிச்சயம் உண்மைதான். ஆனால் இந்த பழமொழியை பொய்யாக்க வேண்டுமானால் திட்டமிடுதலுடன் கூடிய உறவைக் கடைப்பிடிப்பது அவசியம்.

என்ன கொடுமை கமல் சார்!!
பாலிவுட்காரர்களின் திருட்டுத்தனத்துக்கு ஒரு எல்லையே இல்லை போலிருக்கிறது. அதிலும் காப்பியடித்ததைக் கூட கம்பீரமாய் ஒரிஜினல் போலவே காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனலாம்.
தமிழில் கமல்ஹாசன் திரைக்கதை அமைப்பில் நடிப்பில் மவுலி இயக்கத்தில் உருவான படம் பம்மல் கே சம்பந்தம்.
இந்தப் படம்தான் இப்போது கம்பக்ட் இஷ்க் (Kambakkht Ishq) எனும் பெயரில் இந்திப்படமாக தயாராகி வெளிவந்துள்ளது. அக்ஷய் குமார், கரீனா கபூர், தீபிகா பதுகோன், வித்யா பாலன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம் இப்போது இந்தியில் சக்கைப் போடு போடுகிறது.
அப்படியே காட்சிக்குக் காட்சி பம்மல் கே சம்பந்தம் படத்தையே காப்பியடித்து எடுத்துள்ளனர்... அல்லது ரீமேக்கியுள்ளனர்.
ஆனால் இந்தப் படம் குறித்து அக்ஷய் குமார் கூறியிருப்பதைப் பாருங்கள்:
"இதுவரை உலகில் இப்படி ஒரு படமே வந்ததில்லை. அந்த அளவு சிறப்பான படம். உலகே இந்தப் படத்தைக் கொண்டாடப் போகிறது. அப்படியெனில் இந்தியாவில் இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்று கேட்க வேண்டுமா?"
என்ன கொடுமை!!

மனைவியிடம் மனம் விட்டுப் பேசுங்கள்
திருமணமான [/align]புதிதில் மனைவி சாதாரணமாக இருமினால் கூட என்னம்மா டாக்டர் கிட்ட போகலாமா என்று கேட்கும் கணவன், சில வருடங்களுக்கு பிறகு கடும் வயிற்று வலி, தலை வலி என்று அலறினால் கூட கண்டு கொள்வதில்லை என்று பல பெண்கள் வருத்தப்படுகின்றனர்.
இப்போ எல்லாம் நீ ரொம்ப மாறிட்ட என்று சண்டையில் ஒரு வார்த்தையை விடும் கணவர்களும் அதிகம். பெண்களைப் போல ஆண்கள் அத்தனை எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள்.
ஆனால், ஆண்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பெண்களுடைய மனதில் சலிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். இப்படி எல்லாம் உங்கள் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் உங்கள் துணையை அணுகி அவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
|
ஓரினச் சேர்க்கை தீர்ப்புக்கு குஷ்பு வரவேற்பு!
18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓரினச் சேர்க்கை செக்ஸ் உறவு சட்டவிரோதமல்ல, தவறல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது ஒரு சிறப்பான தீர்ப்பு. முழு மனுடன் நான் மனமார வரவேற்கிறேன்.
தங்களது விருப்பப்படி மக்கள் வாழ இந்த தீர்ப்பு வகை செய்கிறது. சகிப்புத்தன்மை, எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை இந்த தீர்ப்பு நாட்டில் வளர்க்கும்.
நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் மாற்றங்களை எளிதில் ஏற்க மாட்டார்கள். இருந்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சென்னை மக்களும் இந்தத் தீர்ப்பை ஏற்பார்கள் என நம்புகிறேன் என்றார் அவர்.
ஏற்கனவே செக்ஸ் குறித்து கருத்து தெரிவித்து எக்கச்சக்க பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர் குஷ்பு. இந்த நிலையில் சென்னை மக்கள் மாற வேண்டும், இந்தத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என அவர் கூறியிருப்பதால் புதிதாக சர்ச்சை எழுமோ, என்னவோ தெரியவில்லை...

'சவுண்ட்' செக்ஸ்- லண்டன் பெண் கைது!
கணவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டபோது பெரும் சத்தம் எழுப்பி அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு செய்ததாக லண்டனைச் சேர்ந்த 49 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்து ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவருக்கு என்ன தண்டனை தருவது என்பது குறித்து கோர்ட் விரைவில் முடிவு செய்யவுள்ளதாம்.
சத்தம் போட்டு செக்ஸ் வைத்து சிக்குவது இப்பெண்ணுக்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை மாட்டி சிறைக்குச் சென்று வந்தவர்.
அவரது பெயர் கரோலின் கார்ட்ரைட். கடந்த ஆண்டு சத்தம் போட்டபடி செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் இவருக்கு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்ட்டது. தனது வீட்டில் மட்டுமல்ல, இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் எங்குமே இவர் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது என்று அதிரடியாக தடை போட்டு விட்டனர்.
பின்னர் அவர் ஜாமீன் பெற்று ஹாஸ்டலுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நீதிமன்றம் பிறப்பித்த மூன்று தடை உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை ஜனவரி மாதம் ஒத்துக் கொண்டார் கரோலின். இதையடுத்து எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 12 மாத செக்ஸ் தடை, 12 மாத கண்காணிப்பு என கிடுக்கிப் பிடி போட்டது கோர்ட்.
இந்த நிலையில்தான் மீண்டும் சத்த செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கரோலின்.
இதையடுத்து மீண்டும் கரோலின் கைது செய்யப்பட்டார். நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தற்போது கரோலினை ஒரு மகளிர் விடுதிக்கு அனுப்பி வைத்து விட்டார். கணவரை சந்திக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் கரோலினுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.
இதுகுறித்து கரோலின் கூறுகையில், இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. முதல் சம்பவத்திற்குப் பின்னர் நான் படுக்கை அறையில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விட்டேன். கீழ் அறையில் உள்ள சமையல் அறைப் பகுதிக்கு எனது படுக்கையை இடம் மாற்றி விட்டேன்.
அங்கு என்ன செய்தாலும் வெளியில் சத்தமே கேட்காது. மேலும் சம்பவ நாளன்று நான் வெறும் பத்து நிமிடம் மட்டுமே செக்ஸ் உறவில் ஈடுபட்டேன். முன்பெல்லாம் நான் குறைந்தது 2 மணி நேரமாவது செக்ஸ் வைத்துக் கொள்வேன். ஆனால் பிரச்சினை ஏற்பட்டதால் கட்டுக்கோப்புடன் நடந்து வருகிறேன்.
இந்த நிலையில் வெறும் பத்து நிமிட உறவால் அக்கம் பக்கத்தினருக்குத் தொல்லையாகி விட்டது என்றால் எப்படி. இது நியாயமே இல்லை என்று குமுறுகிறார் கரோலின்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகே கரோலின் வைத்துக் கொள்ளும் சத்தம் மிகுந்த செக்ஸ் செயல்பாடுகளால் பெரும் தொல்லையாக இருப்பதாக அக்கம்பக்கத்தினர் குறை கூறுகிறார்கள்.
நாட்டில் வேறு யாருமே செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லையா. ஆனால் கரோலின் மட்டும் தேவையில்லாமல் கத்துவார், சிரிப்பார், கூக்குரலிடுவார். இது மிகவும் அருவருப்பாக உள்ளது என்கிறார்கள் அவர்கள்.
தொடர் வழக்குகளால் தனது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதாக புலம்புகிறார் கரோலின்.

உடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்
மூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஸ்மோபாலிடன் பத்திரிக்கை இதுதொடர்பான கருத்துக் கணிப்பை ஒன்றை நடத்தியது. அதில் 2498 பெண்களிடம் உடல் பருமன் மற்றும் செக்ஸ் குறித்து கருத்துக் கேட்டனர்.
அப்போது மூன்றில் ஒரு பெண், தான் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பதாக கூறினார். அதேசமயம், உடல் பருமனால் பல சிக்கல்களை தான் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 73 சதவீதம் பேருக்கு 'பாடி பாரனோயா' (body paranoia) பிரச்சினை உள்ளது. அதாவது நமது உடல் பருமன் குறித்தும், உடல் அமைப்பு குறித்தும் மற்றவர்கள் கேலி பேசுவார்களோ என்ற பீதிதான் இது.
உடல் பருமனால் இந்தப் பிரச்சினைகளை இவர்கள் சந்தித்தாலும், செக்ஸ் விஷயத்தில் தாங்கள் திருப்தியுடன் இருப்பதாகவே பெரும்பாலானோர் கூறியுள்ளனர். 10 பேரில் 6 பேர் படுக்கை அறையில் தாங்கள் நன்கு செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மூன்றில் ஒரு பங்கு பேர் சிறந்த செக்ஸ் உறவை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உறவு மேம்பட்டு வருவதாக பாதிப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு சதவீதம் பேர் மட்டுமே முற்றிலும் திருப்தி இல்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான கருத்து - உடல் பருமன் உடையவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருந்தாலும் கூட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் அதை அவர்கள் அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்களின் நிறமும் அதன் குணமும்
இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே.
பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.
நம்மில் சிலர் பழங்களை சாறு எடுத்து அருந்துவார்கள். சிலர் சாறு எடுக்கப்பட்டு பாட்டில்களில் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப் பட்டிருக்கும் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள். பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.
அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும்.
மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும். பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.
சிவப்பு நிறப் பழங்கள்
கண்ணைக் கவரும் பழங்கள்தான் சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.
1. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.
2· வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
3· இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
4· மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
5· கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.
மஞ்சள் நிறப் பழங்கள்
1. எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.
2· மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.
3· பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும்.
4. வாழைப்பழம் - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும்.
கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும்.
5. ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.
பச்சை நிறப் பழங்கள்
1. பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .
2. இப்பழங்கள் காய்கறிகள ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.
3. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால்பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.
ஆரஞ்சு நிறப் பழங்கள்
1. மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும். உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன.
2. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது.
3. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
நீல நிறப் பழங்கள்
1. நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும்.
2. துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.
3. தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.
மண் நிற பழங்கள்
1. சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.
2. இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும்.
3. குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்
|
3 வேளை உணவே சிறந்த உணவு பழக்கம்!
ஒரு சில ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள், உணவை ஒரு நாளைக்கு சிறிது சிறிதாக ஆறு வேளைக்கு உண்பது அதிக கொழுப்பு சேர வழி வகுக்காது என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் ஆறு வேளை வேண்டாம்; நாளொன்றுக்கு 3 வேளை உணவே சிறந்தது என்ற புதிய ஆய்வறிக்கை ஒன்றை அமெரிக்கவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள புர்டியு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக உடல் பருமனான நபர்கள் 6 வேளை உண்பதற்குப் பதிலாக, 3 வேளை மட்டும் கலோரி குறைந்த, புரதச்சத்து நிறைந்த உணவு நல்லது என்றும், அது அவர்களுக்கு பசியை குறைத்து, திருப்திகரமான உணர்வை தரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நாம் மேற்கூறியபடி உணவை சிறிது சிறிதாக அதிக அளவு உண்பது நல்லது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆராய்ச்சியாளர்கள், 3 வேளை உணவுதான் சிறந்தது என்றும், இந்த "மினி மீல்ஸ்" பழக்கம் எவ்வித பலனையும் தராது என்று அடித்துக்கூறுகின்றனர்.
|
அடிக்கடி 'அணைப்பு'-அளவில்லா மகிழ்ச்சி!
புதிதாக கல்யாணமானவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதைப் பார்த்து பலரும் கிண்டலடிப்பது சகஜம். ஆனால் உண்மையில் புதிதாக கல்யாணம் செய்தவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டுமாம். அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கிறார்கள்.
அதை விட முக்கியமாக இதில் ஒரு விஞ்ஞான விஷயமும் புதைந்திருக்கிறது. அதாவது நியூராட்டிசம் என்ற பிரச்சினையை அடியோடு குறைக்க இந்த அடிக்கடி செக்ஸ் உதவுகிறதாம்.
நியூராட்டிசம் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், சள்புள் என்று எரிச்சல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டமென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு திருமணமும், செக்ஸும் மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு.
புதிதாக மணமாணவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் டாக்டர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது. முடிந்தவரை உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பதும் டாக்டர்கள் தரும் அட்வைஸ்.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடியை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டுகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையாம். பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர்.
இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அளவில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதே காரணம். ஒரு ஆண்டு கழித்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாகவில்லை. காரணம், வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவு வைத்துக் கொண்டதால்.
4வது ஆண்டுவாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் செக்ஸ் உறவு நரம்பியல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து என்பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எனவே புதிதாக திருமணமானவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டு, செக்ஸ் உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட டாக்டர்கள்.
இதை நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே (ஆய்வு எதுவும் செய்யாமலேயே) உணர்ந்திருக்கிறார்கள் போல. அதனால்தான் முரட்டுத்தனமாக, யார் பேச்சையும் கேட்காமல், வம்பிழுத்துக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மூக்கணாங்கயிறு போட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று கல்யாணத்தை செய்து வைத்து சாந்தப்படுத்தும் பழக்கத்தை கடைப்பிடித்துள்ளனர்.
எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடையவர்கள், டென்ஸ் ஆகும் குணமுடையவர்கள், பேசாமல் காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொண்டு செக்ஸ் வாழ்க்கையில் செட்டிலானால், எல்லாம் ஃபிக்ஸ் செய்யப்படும் சாத்தியம் உண்டு.

Subscribe to:
Posts (Atom)