18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓரினச் சேர்க்கை செக்ஸ் உறவு சட்டவிரோதமல்ல, தவறல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது ஒரு சிறப்பான தீர்ப்பு. முழு மனுடன் நான் மனமார வரவேற்கிறேன்.
தங்களது விருப்பப்படி மக்கள் வாழ இந்த தீர்ப்பு வகை செய்கிறது. சகிப்புத்தன்மை, எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை இந்த தீர்ப்பு நாட்டில் வளர்க்கும்.
நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் மாற்றங்களை எளிதில் ஏற்க மாட்டார்கள். இருந்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சென்னை மக்களும் இந்தத் தீர்ப்பை ஏற்பார்கள் என நம்புகிறேன் என்றார் அவர்.
ஏற்கனவே செக்ஸ் குறித்து கருத்து தெரிவித்து எக்கச்சக்க பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர் குஷ்பு. இந்த நிலையில் சென்னை மக்கள் மாற வேண்டும், இந்தத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என அவர் கூறியிருப்பதால் புதிதாக சர்ச்சை எழுமோ, என்னவோ தெரியவில்லை...

|
No comments:
Post a Comment