பாலிவுட்காரர்களின் திருட்டுத்தனத்துக்கு ஒரு எல்லையே இல்லை போலிருக்கிறது. அதிலும் காப்பியடித்ததைக் கூட கம்பீரமாய் ஒரிஜினல் போலவே காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனலாம்.
தமிழில் கமல்ஹாசன் திரைக்கதை அமைப்பில் நடிப்பில் மவுலி இயக்கத்தில் உருவான படம் பம்மல் கே சம்பந்தம்.
இந்தப் படம்தான் இப்போது கம்பக்ட் இஷ்க் (Kambakkht Ishq) எனும் பெயரில் இந்திப்படமாக தயாராகி வெளிவந்துள்ளது. அக்ஷய் குமார், கரீனா கபூர், தீபிகா பதுகோன், வித்யா பாலன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம் இப்போது இந்தியில் சக்கைப் போடு போடுகிறது.
அப்படியே காட்சிக்குக் காட்சி பம்மல் கே சம்பந்தம் படத்தையே காப்பியடித்து எடுத்துள்ளனர்... அல்லது ரீமேக்கியுள்ளனர்.
ஆனால் இந்தப் படம் குறித்து அக்ஷய் குமார் கூறியிருப்பதைப் பாருங்கள்:
"இதுவரை உலகில் இப்படி ஒரு படமே வந்ததில்லை. அந்த அளவு சிறப்பான படம். உலகே இந்தப் படத்தைக் கொண்டாடப் போகிறது. அப்படியெனில் இந்தியாவில் இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்று கேட்க வேண்டுமா?"
என்ன கொடுமை!!

|
No comments:
Post a Comment