அந்த காலங்களில் ஒவ்வொரு வீட்டின் வெளியிலும் திண்ணை கட்டி வைத்திருப்பார்கள். அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் விளையாடிகொண்டு இருக்க பெரியவர்கள் தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்வார்கள். நவீன விஞஞான வளர்ச்சியில் அனைத்தும் காணாமல சென்று அனைத்தையும் சின்ன திரை -டெலிவிஷன் ஆக்கிரமித்துக்கொண்டது.காலையில் ஆரம்பித்து இரவு வரை விதவிதமான சீரியல்கள்.சீரியலை பார்ப்பதற்கென்றே உறவுகளிடம் போனில் பேசுவதும் - சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் குறைந்துவருகின்றது. இனி அந்த கவலை நமக்குவேண்டாம். குறிப்பிட்ட சீரியல் நேரம் மின்சாரம் தடைபட்டாலும் சரி - திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்துகொள்வதானால் சீரியல் பார்க்காமல் விட்டாலும் சரி...இனி கவலைபடாமல் சென்று வரலாம். ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்த தளம் விளம்பரம் இன்றி வெளியிடுகின்றது.விடுபட்ட சீரியலை ஒய்வான நேரத்தில் பார்க்கஇந்த தளத்தை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் பிரபலமான தளங்கள் இருக்கும்.தேவையான சேனலை கிளிக் செய்யுங்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் ஒரு காட்சி.
விஜய்டிவியின் அன்பாலே அழகான வீடு சிரியலின் ஒரு காட்சி
அப்புறம் என்ன - இனி சீரியலை மிஸ்செய்துவிடுவோம் என்கின்ற கவலையின்றி தைரியமாக சுப நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்லலாம்.தளத்தினை பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
|
No comments:
Post a Comment