Thursday, March 24, 2011

திருமணத்திற்குப்பின் திருமதி நடிகைகள் சின்னத்திரைக்கு படையெடுப்பு

திருமணத்திற்குப்பின் திருமதி நடிகைகள் சின்னத்திரைக்கு படையெடுப்பு - திருமணத்திற்குப்பின் நடிப்புக்கு முழுக்கு, எனது சாஃப்ட்வேர் கணவரைக் கவனிப்பதே என் வேலை. தொழிலதிபரான என் கணவருடன் பிரியாமல் இருப்பதையே அவர் விரும்புவார் என்று சகட்டு மேனிக்கு பில்டப் கொடுத்து விட்டு, "போன அன்னைக்கு இருந்துட்டு புதன் கிழமை திரும்பிட்டாளாம்" என்ற பழமொழிக்கிணங்க திருமணமாகிப்போன நடிகைகள் வேறு வழியின்றி வரிசையாக சின்னத்திரைப் பக்கம் படையெடுக்க ஆரம்பிக்கின்றனர்.Image
[Image: sridevika-bharathi.jpg]
ராதிகா தொடங்கி சுகன்யா, தேவயானி, நளினி, சீதா, குயிலி, கீதா, குஷ்பு என வரிசை நீண்டு கொண்டே சென்றது. தற்போது சின்னத்திரைப் பக்கமும் படு கிராக்கி. சமீபத்தில் திருமணமாகிப்போன ஸ்ரீதேவிகா மற்றும் 'அம்முவாகிய நான்' பாரதிக்கும் விதி விலக்கல்ல. இவர்களிருவம் தற்போது சின்னத்திரைப் பக்கம் வருவார்கள் என கோலிவுட் கிசுகிசுக்கிறது. பொதுவாக திருமணமாகிவிட்டாலே கோடம்பாக்கம் நடிகைகளின் ஃபைலை மூடிவிடும். இது காலம் காலமாக தொன்றுதொட்டு நடந்து கொண்டுள்ளதுதானே. எப்படியோ சின்னத்திரையாவது அவர்களுக்கு வாழ்வு கொடுத்தால் சரி.

No comments:

Post a Comment