Thursday, March 24, 2011

14 டிவி நிகழ்ச்சிகளைத் தடை செய்யக் கோரி புகார்கள்...


வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத் தடை செய்யக் கோரிக்கை-

...Complaint against 14 TV Programmes....

வன்முறை, ஆபாசம், அறுவெறுப்பைத் தூண்டும் 14 டிவி தொடர்களை தடை செய்யக் கோரி மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறைக்கு புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணம் குறித்த நிகழ்ச்சியும் இதில் அடக்கம்.

பிரபல கார்ட்டூன் நிகழ்ச்சியான ஷின் சான், பிந்தாஸ் டிவியில் வெளியாகும் எமோஷனல் அத்யாச்சார், பிக் ஸ்கிரீனில் வெளியாகும் சிந்தாமணி, எம்டிவியில் வரும் ஸ்பிளிஸ்ட்ஸ்வில்லி-3, என்டிடிவியில் இடம் பெறும் செரினா வில்லியம்ஸ் தொடரில் இடம் பெறும் அவரது நிர்வாணப் படங்கள், உள்ளிட்டவை இதில் அடக்கம்.

இந்த தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள், வன்முறை, ஆபாசம், அறுவெறுப்பைத் தூண்டும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

ஜெய்ஹிந்த் டிவியில் இடம் பெறும் லைஸ் ஸ்கெட்சஸ் நிகழ்ச்சி பெண்களை மிகவும் தரக்குறைவாகவும், இழிவாகவும் சித்தரிப்பதாக புகார்கள் குவிந்துள்ளன. ஹங்கமா டிவியில் ஒளிபரப்பாகும் ஷின் சான் கார்ட்டூன் தொடரில் ஆபாசமான வசனங்கள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. தேரே லியே என்ற தொடரில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குமுறல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புகார்கள் குறித்தும், இந்த நிகழ்ச்சிகளைத் தடை செய்வது குறித்தும் அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment