இந்த இடுகையில் நானுன் என்னை சார்ந்த சில நண்பர்களும் கடுமையான தலையிடிகளை எதிர்நோக்கிய சில முக்கியமான தளங்கள் பற்றி சொல்ல போகிறேன். ஒன்று இதில் அந்த தளங்களின் விதிமுறைகளை மீறினால் உங்களுக்கு தலையிடி. சில தளங்களில் இணைந்தாலே தலையிடி. எனவே வாங்கிக்கட்டுவது தப்புவது உங்கள் கைகளில் தான் உள்ளது. சிலவேளை இந்த தளங்களுடன் நீங்கள் இப்போது இணைத்தும் இருக்கலாம்.
PayPal : என்னதான் 230 மில்லியன் பேருக்கு மேல் பயன்படுத்தினாலும், ஒரு உதவாத சேவை. PayPal ஆல் எத்தனையோ பேர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். உங்கள் கணக்கில் அதிகமான பணம் இருந்தால், உங்கள் கணக்கு விசாரணை என்று சொல்லி இடைநிறுத்தி நீங்கள் குற்றவாளி இல்லாவிட்டாலும் உங்களை குற்றவாளி ஆக்கி உங்களில் கதையை முடித்து விடுவார்கள். (PayPal Trick)
GoDaddy : உலகின் முன்னணி Domain registrar. இதை இணையதளங்கள் சில “NoDaddy” என்ன சொல்வதுண்டு. என் அனுபவம் என்னவென்றால் எனது இரண்டு தளங்கள் காரணமின்றி நீக்கப்பட்டன. நான் அவர்களின் விதிமுறையை மீறவே இல்லை. ( ஏனைய சில மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள் . )
Google Adsense : இது மிகவும் நல்ல நிறுவனம். ஆனால் இவர்களின் விதிமுறையை நீங்கள் இலகுவாக மீற முடியாது. மீறினாலும் சங்குதான். எப்படியும் கண்டு பிடிப்பார்கள். நீங்கள் உங்கள் தளத்தில் உள்ள விளம்பரத்தை click செய்ய சொல்லி ஒருவரை கேட்டால், அதையும் கண்டுபிடிப்பார்கள். எப்படி என்றால் நீங்கள் கேட்ட நபர் கிளிக் செய்ய அனுப்பிய நபர் உங்கள் தளத்திற்கு எப்படி வந்தார், உங்கள தளத்திற்கு வர முன் எங்கு நின்றார் என பலதும் தெரியும். சொன்னால் நம்பமாட்டீர்கள், நீங்கள் எத்தனை மணிக்கு தூங்குகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் விடலாம், ஆனால் Google இற்கு தெரியும்
. Dragonara : இவர்கள் DDoS தாக்குதலை தாங்ககூடிய server களை வழங்கும் ஒரு முன்னணி நிறுவனம். என் பிலிப்பைன் நண்பர் ஒருவரின் அனுபவம். அவரது தளம் இவர்களின் DDoS தாக்குதல் கலீல் இருந்து பாதுகாக்கப்பட server இல் இயங்கி வந்தது. (மாதம் $500+ மேல் ) . ஒரு நாள் இவர்களே தமது server மீது தாக்குதலை நடாத்தி விட்டு என் தோழரை $1200 server இற்கு மாற்றும்படி கூறினார். சரி என்று மாற்றிய பின் திரும்பவும் Database ஐ இவர்களே திருடி விட்டு hack செய்யப்பட்டு விட்டது . $2000 தந்தால் மீட்டு தருவதாக கூறினார். சரி என்று கொடுத்தபோது , database திரும்ப கிடைத்தது. பின்பு நாங்கள் சந்தேகம் கொண்டு control panel, database ஐ கையாண்ட IP முகவரிகளை பரிசோதித்த போது, அங்கிருந்த IP யும் அவர்கள் எங்களுக்கு உதவி email அனுப்பிய IP யும் ஒன்றாக இருந்தது. (குறித்த நேரத்தில் )
USAGC – US Green Card : இந்த விளம்பரங்களை நீங்கள் அதிகமான தளங்களில் பார்த்திருப்பீர்கள் . இங்கு register செய்தால் உங்களுக்கு Green Card கிடைக்காது . ஆயிரகணக்கான Spam mails தான் கிடைக்கும். (More Info)
Facebook : குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும். உங்கள் புகைப்படம் ஆபாச தளங்களில் வர விருப்பமா ? உடனேயே facebook இல் upload செய்யுங்கள். யார் என்றே தெரியாதவர்களை நண்பராக சேருங்கள். ஆண்களே, Facebook இல் போலி பெண் புகைப்படங்களுடன், பல போலி முகங்கள் வலம் வருகின்றன , கவனமாக இருங்கள்.
AVS Media : இந்த தளத்தில் இருக்கும் எந்த மென்பொருளையும் பதியாதீர்கள். பதிந்தால் கதை அவளவுதான். சந்தேகம் என்றால் AVS Flv palyer ஐ பதிந்து மீண்டும் uninstall செய்து பாருங்கள்.
Smiley Central & Kazulah : நான் ஒன்றும் சொல்லமாடன் கீழுள்ள link ஐ பார்க்கவும். (Facemoods , hotSpotShiled உம் இந்த ரகத்தில் அடங்கும். )
|
No comments:
Post a Comment