விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது.
பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.
இமேஜ் உருவாக்குதல்: விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும். இமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.
Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும். இதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்; சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
இதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும். இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம். இடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சிடிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.
நெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.
பேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும். பேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.
இமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும். இதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும். எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.
மீட்புப் பணி: விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும். இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும். இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நேரம் எடுக்காது. சிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும்.
பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். எனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே.
|
No comments:
Post a Comment