Thursday, March 24, 2011

வேகமாக கோப்புகளை காப்பி செய்ய டெராகாப்பி


கணினியை பொறுத்தவரை நம் பொறுமையை சோதிக்கும் பல விஷயங்கள் நடக்கும். அதில் ஒன்று மிகப்பெரிய கோப்புகளையோ, போல்டெர்கலையோ காப்பி செய்யும் போது மிக குறைவான வேகம் மற்றும் பல இடையூறுகள்.

அதிக கோப்புகள் உள்ள பெரிய போல்டெர்களை காப்பி செய்யும் போது இடையில் ஏதாவது பிழை செய்தி தந்து விட்டு காப்பி செய்வது நின்று விடும். எந்த கோப்பு வரை காப்பி ஆனது எது காப்பி ஆகவில்லை என்ற குழப்பம் நேரிடும். மீண்டும் அந்த ஒட்டு மொத்த போல்டரயுமே காப்பி செய்ய வேண்டும். காப்பி செய்யும் போது நேரக்கூடிய மிக குறைவான வேகம் எரிச்சலை தரும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் விதம் ஒரு மென்பொருள் உள்ளது. TeraCopy - இங்கே கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் காப்பி செய்து பேஸ்ட் செய்யும் போது இந்த மென்பொருள் தானாக இயங்க ஆரம்பிக்கும்.


இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :

1. துரிதமாக காப்பி வேலையை செய்து முடிக்கும்.

2. காப்பி செய்து கொண்டிருக்கும் போது அதனை "Pause" செய்து வைத்து கொண்டு பின்பு "Resume" செய்து காப்பி வேலையை தொடரலாம்.

3. காப்பி செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு குறிப்பிட்ட கோப்பு காப்பி செய்வதில் இடையூறு ஏற்பட்டால் அந்த கோப்பை விட்டு விட்டு மற்ற கோப்புகளை காப்பி செய்யும். ஒட்டு மொத்த காப்பி வேலையையும் தடை செய்து விடாது.

4. இடையூறு ஏற்பட்ட கோப்புகளின் பட்டியலை காண்பிக்கும். அந்த கோப்புகளை நீங்கள் சரி செய்து பின்பு காப்பி செய்து கொள்ளலாம்.

உபயோகித்து பாருங்கள். இந்த மென்பொருள் தேவை இல்லை என்றால் Start --> Programs --> Teracopy --> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment