Thursday, March 24, 2011

குறைவான எடையில் அழகான போன்கள்



கைகளில் எளிதாக எடுத்துச் செல்லவும், கைப்பைக்குள் அடங்கும் வகையிலும் மொபைல் போன்கள் உள்ளனவா என்று விரும்பும் மக்களுக்கு ஏற்ற் வகையில், பல நிறுவனங்கள் சில மாடல் போன்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், மொபைல் சந்தையில் அண்மையில் பார்த்த எடை குறைந்த, பட்ஜெட் விலையிலான சில போன்களை இங்கு காணலாம்.
1. மைக்ரோமாக்ஸ் எக்ஸ் 266: 86.7 கிராம் எடையில் கைக்கு அடக்கமான இரண்டு சிம் இயக்க மொபைல் போன் ஒன்றை, எக்ஸ் 266 என்ற பெயரில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு இந்த மாதத் தொடக்கத்தில் கொண்டு வந்தது. இதன் பரிமாணம் 115.5 x 50.4 x 11.45 மிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 6 மணி நேரம் பேசத் திறன் தரும் 1100 எம்.ஏ.எச். பேட்டரி தரப்பட்டுள்ளது.
இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனின் திரை 2.2 அங்குலத்தில் உள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் கேமரா கொண்டுள்ளது. இதன் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், நினைவகத்தினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், யமஹா ஆம்பிளிபையர், நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத், ஷேக் சென்சார், ஆப்பரா மினி பிரவுசர், சவுண்ட் ரெகார்டர், டூயல் எல்.இ.டி. டார்ச் லைட், ஆகிய வசதிகளும் இந்த போனில் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.2,644 மட்டுமே.
2. பிளை எம்.வி. 115: பிளை நிறுவனம் வழங்கும் எம்.வி. 115 எடை குறைவானது என்று சொல்ல முடியாவிட்டாலும், கைக்கு அடக்கமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. தோற்றம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இது ஒரு பார் டைப் போன். இதன் பரிமாணம் 111.18 x 47.5 x 15.25 மிமீ. இரண்டு அலைவரிசை களில் இயங்குகிறது. 5.6 செமீ அகலத்தில் இதன் திரை தரப்பட்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் நினைவகம் 69.5 கேபி. மைக்ரோ எஸ். டி. கார்ட் மூலம், இதனை 8 ஜிபி வரை உயர்த்தலாம். கருப்பும் சிகப்பும் கலந்த வண்ணத்தில் இதன் தோற்றம் கண்களைக் கவர்கிறது. இரண்டு சிம்களை இயக்குகிறது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதி உண்டு. எம்பி3 பிளேயர் மற்றும் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,404.


No comments:

Post a Comment