நம்முடைய கணினியில் குறிப்பிட்ட அளவு வன்தட்டினை பயன்படுத்தி அதை பகுதிகளாக பிரித்து பயன்படுத்தி வருவோம். இதனை தனித்தனி கோளன்களாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C:D:E:F:) என வைத்திருப்போம். இந்த வந்தட்டினுடைய பகுதிகளில் நாம் தகவல்களை சேமித்து பயன்படுத்தி வருவோம். வன்தட்டினுடைய பகுதிகளில் தகவல்கள் முழுமையாக சேமிக்கப்படும் போது, நம்முடைய வன்தட்டினுடைய சேமிப்பு பகுதி மிக குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கை செய்தி தோன்றி நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகள் உள்ள தகவல்களை டெலிட் செய்யமாறு எச்சரிக்கை தோன்றும். நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகளை காலியாகும் வரை இந்த எச்சரிக்கை செய்தி தோன்றும். இந்த செய்தியை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த எச்சரிக்கை செய்தியை தடுக்க விண்டோஸ் Registry யில் ஒருசில மாற்றங்களை செய்ய வேண்டும். Registry யில் மாற்றங்களை செய்யும் முன்னர் Registryயை பேக்அப் செய்து கொள்ள வேண்டும்.
முதலில் ரன் விண்டோவை ஒப்பன் செய்யவும். (Win key + R) பொத்தான்களை ஒருசேர அழுத்தவும். இப்போது தோன்றும் ரன் விண்டோவில் Regedit என டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.
இப்போது தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.
HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer
வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் New->DWORD (32 Bit) value எனபதை தேர்வு செய்யவும். இப்போது உருவாகும் DWORD பட்டிக்கு NoLowDiskSpaceChecks என்னும் பெயரை இடவும். NoLowDiskSpaceChecks என்னும் பட்டி மீது இரட்டை கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்னும் பாக்சில் 1 என்று உள்ளிடவும்.
அடுத்து ஒகே செய்து விடவும். பின் Registry விண்டோவை மூடிவிடவும். ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியானது தோன்றாது. மீண்டும் இதை மாற்றியமைக்க வேண்டுமெனில் Value data என்னும் இடத்தில் 0 என்று உள்ளிட்டு கொள்ளவும். இதே முறையை பின்பற்றி விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் செய்து கொள்ள முடியும்.
|
No comments:
Post a Comment