Thursday, March 24, 2011

கம்ப்யூட்டர் விலை உயருமா?


பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய பாகங்களுக்குக் 5% எக்சைஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வரி உயர்வினைத் தங்கள் லாபத்தில் ஈடு கட்டி, நிறுவனங்கள் இவற்றின் விலையை உயர்த்தாமலேயே இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
மைக்ரோப்ராசசர், டிவிடி ரைட்டர், சிடி ரைட்டர், பிளாப்பி டிஸ்க் ட்ரைவ், பிளாஷ் ட்ரைவ் ஆகியவற்றிற்கு முன்பு எக்சைஸ் வரி விதிக்கப்படவில்லை. தற்போது விதிக்கப்பட்ட 5% வரியினால், பெர்சனல் கம்ப்யூட்டர் விலையை உயர்த்துவதா, இல்லையா என நிறுவனங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த வரிவிதிப்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் சாதனங்களுக்கு விதிக்கப்படுவதால், இவற்றை ஏற்றுமதி செய்திடும் நிறுவனங்களுக்கும், மற்றவற்றிற்கும் இதில் போட்டி நிலவும். மேலும் இங்கு இவற்றைத் தயாரிக்க தொழில் பிரிவுகளை நிறுவத் திட்டமிடும் நிறுவனங்கள் இனி தயங்கலாம் என்று பரவலாக கருத்து நிலவுகிறது. இந்த வரி விதிப்பு குறித்த விபரங்கள் வந்த பின்னரே முழு நிலைமை தெளிவடையும். 

No comments:

Post a Comment