நாம் வெளிநாட்டில்-வெளிஊரில் வேலை செய்பவர்களாக இருப்போம். நமது வயதான பெற்றோர்-மனைவி -நண்பர்கள் சொந்த ஊரில் இருப்பார்கள். அவர்களுடைய செல்போனுக்கு நாம் நமது இருப்பிடத்திலிருந்தே ரீ-சார்ஜ் மற்றும் டாப்அப் செய்யலாம். ஆன்லைனில் வரும் பலபல வசதிகளில் புதியதாக இதுவந்து உள்ளது. இனி ஆன்லைனில் நாம் செல்போன் மற்றும் டிஷ் டிவிகளுக்கு எப்படி ரீசார்ஜ் முதலியவைகளை எளிதாக செய்யலாம் என்பதனை காணலாம்.முதலில் இந்த தளம் செல்லஇங்கு கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய பெயர் முகவரி செல்போன் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய கம்பெனியை தேர்வு செய்யவும். நான் ஏர்டெல் கம்பெனியை தேர்வு செய்துள்ளேன்.
ரீ சார்ஜ் செய்யவிரும்பும் போன் எண்ணை கொடுத்து கோ கொடுக்கவும்.
இப்போது உங்களுக்கு ரீ-சார்ஜ் அல்லது டாப்அப் தேர்வு செய்து அதற்கான தொகையை தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் உங்களது வங்கி கண்ககு உள்ள ஏடிஏம் கார்டை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவரும் அதில் உங்கள் வங்கி ஏடிஎம் கார்டில் உள்ள எண் -பெயர் மற்றும் ரகசிய குறியீடு ஆகியவற்றை குறிப்பிடவும்.
இறுதியாக சப்மீட் செய்துவிடவும். உங்களுக்கான தொகை உங்கள் செல்போனில் வந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
|
No comments:
Post a Comment