மய்யம்

Sunday, November 20, 2011

அதற்கும் ஒரு "ஜே' போடுங்கள்: கருணாநிதி

"எலைட் ஷாப்கள், பெரிய ஷாப்பிங் மால்களில், "ஏசி' பார் வசதியுடன் திறப்பதற்கான முயற்சி நடக்கிறது' என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, இதற்கும் ஒரு "ஜே' போடுங்கள் என காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:: தேர்வாணையக் கழகத் தலைவரும், உறுப்பினர்களும் தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். தங்களுக்கு வேண்டியவர்களை இப்பதவியில் நியமிக்க வேண்டி, இவர்களை தாங்களாகவே பதவிகளிலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்கப்பட்டதாகவும், அவர்கள் அதற்கு இசைவளிக்காததால், பழி வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர். அதிகாரிகளின் இல்லங்களில் சோதனை நடத்தியுள்ளனர். அதோடு விட்டு விடாமல், அதிகாரிகளை தேர்வாணைய அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புப் போலீசார் அழைத்து வந்துள்ளனர். அவர்களது இருக்கைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களது கோப்புகளை ஆய்வு செய்து கைப்பற்றியதாகவும், அதன் பின் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயும் விசாரணை நடத்தியுள்ளனர். இதை பார்க்கும் போது, ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோமா அல்லது எமர்ஜென்சி காலத்தில் வாழ்கிறோமா என்று தெரியவில்லை.


சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று செயல்பட்டதால், சுப்ரீம் கோர்ட் வரை சென்று ஏற்படுத்திய தேவையற்ற செலவோடு, கோர்ட் தீர்ப்பு வரை காத்திருக்காமல், அவசரம் அவசரமாக 200 கோடி ரூபாய் செலவில் ஆட்சியாளர்கள், பழைய பாடத் திட்டத்தின் கீழ் அச்சடிக்க சொன்ன புத்தகங்களின் கதி என்ன?இதுவரை அப்புத்தகங்களை அச்சிட்ட உரிமையாளர்களுக்கு பணம் வழங்கவில்லை. தலைமைச் செயலக கட்டடம் ஆறு மாதமாக அப்படியே கிடக்கிறது. செம்மொழித் தமிழாய்வு நூலகத்தின் நூல்கள் எங்கே என்று தெரியவில்லை.

குளிர் சாதன வசதியுடன் கூடிய புதிய மதுக்கடைகளை, "எலைட் ஷாப்' என்ற பெயரில் துவங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அருகிலேயே "ஏசி' பார் துவங்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. புதிய மதுக்கடைகளை அரசு நடத்தும் என்றாலும், "ஏசி' பார்கள் தனியாரால் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.சிறிது நாட்களுக்கு பின், இந்த புதிய மதுக்கடைகள் பெரிய ஷாப்பிங் மால்களில், "ஏசி' பார் வசதியுடன் திறக்கப்படவுள்ளன என்றும் தெரிகிறது. அதற்கான உரிமம் பெற இப்போதே ஷாப்பிங் மால் உறுப்பினர்கள் அதற்கான முஸ்தீபுகளுடன் மேலிடத்தைச் சந்திக்கத் துவங்கி விட்டார்களாம். அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்த மக்களுக்காக ஜெயலலிதா அரசின் மற்றொரு சாதனைத் திட்டம் இது. இதற்கும் ஒரு, "ஜே' போடுங்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Posted by mayyam at 11:58 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தூங்கியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் : பீதியுடன் பயணம் செய்த பயணிகள்

ராசிபுரத்தில் இருந்து ஆத்தூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சை, அதன் டிரைவர், தூங்கிக் கொண்டு ஓட்டியதால், பல இடங்களில் பஸ் தாறுமாறாக ஓடியது. அதன் காரணமாக, பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பீதியில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


மேலும், பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட வழித்தடங்களில் பயணிகளை இறக்கியும், ஏற்றியும் சென்ற பஸ், அவ்வப்போது தாறுமாறாக ஓடத்துவங்கியது. டிரைவர் தூக்கத்தில் ஓட்டுகிறாரா, அல்லது போதையில் ஓட்டிச் செல்கிறாரா என தெரியாமல், பயணிகள் பீதியில் உறைந்தனர்.அவ்வப்போது பஸ்சை, சாலையை விட்டு கீழே இறங்குவதும், பின் நேராக ஓட்டுவதுமாக இருந்தார். அதனால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள், டிரைவரை ஆவேசமாக திட்டினர்.



ராசிபுரத்தில் இருந்து ஆத்தூருக்கு, 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (நவ., 18) இரவு 9.30 மணிக்கு, ஆத்தூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சில்( டி.என்-28, 560), 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி பயணம் செய்தனர். டிரைவர் பஸ்சை மெதுவாக ஓட்டிச் சென்றதால், பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

இதுபோல், மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பஸ் தாறுமாறாக ஓடியது.இரவு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், பஸ் டிரைவரை நம்பியே பயணம் செய்கின்றனர். இந்நிலையில், யாரைப்பற்றியும் கவலைப்படாத ஒருசில டிரைவர்கள், இஷ்டம்போல் குடித்துவிட்டும், தூங்கிக்கொண்டும் பஸ்சை இயக்குவதாலேயே, பல விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, "இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களின் டிரைவர்களை, முழு சோதனை செய்த பின்னரே பணியில் ஈடுபடுத்த, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Posted by mayyam at 10:57 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

புகைக்கும் இந்தியப் பெண்கள்

நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இது வேறு எந்த நாட்டிலுமல்ல. நம்முடைய இந்தியாவில் தான். 







Posted by mayyam at 10:47 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

என்னுடைய படத்துடன் ராணா போட்டியிட தயாரா? -கமல்

ரஜினியும் கமலஹாசனும் பழைய நினைவுகளில் மூழ்கினார்கள் என்றும், உணர்வு பூர்வமாக எண்ணங்களை பகிர்ந்து கொண்டதாகவும், ரஜினி விரைவில் புரண குணமடைய கமல் வாழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளளன.

உங்கள் படத்தை பார்க்கும் போதெல்லாம் நான் போட்டியாளனாக மாறி விடுகிறேன். என் படத்தையும் சிறப்பாக கொடுக்கவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கிறேன்.
எனது அடுத்த படத்துக்கு ராணாவைதான் போட்டியாக நினைத்துள்ளேன். குணமடைந்த திரும்பியதும் ராணா படத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் ரஜினியிடம் கமல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்திப்பு குறித்து கமல் தனது நெருக்கமான நண்பர்களிடம் ரஜினி விரைவில் குணமடைந்து திரும்பி ராணா படத்தில் நடிப்பார் என்று கூறி வருகிறார்.
Posted by mayyam at 10:08 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மிகவும் ஆபத்தான 10 விலங்கினம் : வீடியோ இணைப்பு

மனிதன் பிறக்கும் போதே இறக்கும் திகதியோடு தான் பூமியை பார்க்கிறான். சாதாரணமாக சாகி்ன்றனர், அகால மரணமாகின்றனர். இனத்தோடு அடிபட்டு சாகின்றான் ஆனால்......


விலங்குகளினால் மனிதன் இறப்பதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் பார்த்ததுண்டாக பாருங்கள். விலங்குகளில் மிகவும் அதிக பயங்கரமான 10 விலங்குகளை பற்றி வெளியிடுகிறது.



இது பார்வைக்கு மட்டுமின்றி வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.
Posted by mayyam at 9:56 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

அனைத்து வகையான கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு


சில குறிப்பிட்ட நோக்கத்துக்காக பல வகையான கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாம் குறிப்பிட்ட வகையான கோப்பினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.


நாம் எந்த வகையான கோப்பினையும் நாம் விரும்பும் வண்ணம் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு பல வடிவங்களில் கோப்புகள் நிறைய உள்ளன.

நம் கோப்புகளை பிறருக்கு தரும்போது அதனை அவர்கள் விரும்பிய வகையில் விரும்பும் வடிவத்தில் கொடுக்கலாம். அதற்காக பல வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவும், கட்டண அடிப்படையிலும் இருக்கின்றது.

அதுமட்டுமல்ல ஓன்லைனில் கூட பல வடிவங்களை மாற்றும் மென்பொருள்கள் செயல்படுகின்றன. அதில் இந்த தளம் பல வசதிகளை தன்னில் கொண்டுள்ளது.

இந்த தளத்தில் நாம் படம், வீடியோ, ஓடியோ மற்றும் ஆவணங்களையும் பல வடிவங்களில் மாற்றலாம். இந்த வசதியை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.

குறிப்பிட்ட தளத்திற்கு செல்லுங்கள். பின்னர் அதில் உள்ள BROWSE என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அதில் உங்கள் கோப்பினை தேர்வு செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை தேர்வு செய்யுங்கள்.

பின்னர் CONVERT NOW என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் கோப்பின் வடிவம் மாற்றப்படும். அதனை தரவிறக்கி கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாம் நேரடியாக பதிவிறக்க முகவரியையும் கொடுத்து கோப்பின் வடிவத்தை மாற்றலாம். இந்த தளம் மூலம் ZIP, RAR ARCHIVE, PDF, XPS, PPT போன்ற பல வகையான கோப்புகளின் வடிவத்தையும் மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதள முகவரி
Posted by mayyam at 9:55 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தொழில்நுட்பம்

இந்த பைலை திறக்க முடியவில்லை


கணணியில் திறக்க இயலாத கோப்புகளின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு

பலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலும் சில வகையான கோப்புகளை எந்த மென்பொருளில் திறப்பது என்ற சந்தேகம் வரலாம்.

காரணம் சில வகையான கோப்புகளை இனம் கண்டறிந்து திறப்பது சிரமமாக இருக்கலாம். இப்படி இருக்கும் கோப்புகளின் முழு விபரம் மற்றும் எந்த மென்பொருளில் திறக்காலம் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்ல ஒரு தளம் உள்ளது.
பலவகையான காரணத்திற்காகவும் பல வகையான கோப்புகளின் வகைகள்(File Format) உருவாக்கப்பட்டுள்ளது, இதில் நம்மிடம் இருக்கும் கோப்புகளின் File format என்ன என்பதை வைத்து அந்த Format பற்றிய முழுவிபரங்களும் நமக்கு காட்டி ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று நம் கணணியில் திறக்காத கோப்புகளின் Extension -ஐ Search என்ற கட்டத்திற்குள் கொடுத்து தேட வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் தேடிய File Format பற்றிய முழு விபரங்களும் நமக்கு காட்டப்படும், தனித்தனி வகையாக கோப்புகளின் Extension -ஐ வகைப்படுத்தி எளிதாக நமக்கு காட்டுகின்றனர்.

உதாரணமாக ஒரு வீடியோ கோப்பு திறக்கவில்லை என்றால் Video Files என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல வகையான வீடியோ Format பற்றி விரிவாக தெரிந்து கொண்டு எந்த மென்பொருளில் அந்த கோப்பு திறக்கும் என்று எளிதாக அறிந்து கொள்வதோடு அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பும் அதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.


இணையதள முகவரி
Posted by mayyam at 9:52 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தொழில்நுட்பம்

பறக்கும் கார். பறந்து பார்


இது ஒரு புதிய வகை வான் வழிப் போக்குவரத்துச் சாதனம். ஹெலிகொப்ரர் போல தான் இருக்கும் ஆனால் ஹெலிகொப்ரர் அல்ல. பைலட் இல்லாமலே இந்த Electric multi copter பறக்கக் கூடியது. Thomas Senkel என்ற பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட குறித்த electric multi copter விமானியுடன் 1 நிமிடம் 30 செக்கன்கள் வானில் அழகாக பறந்தது. இது உலகின் முதலாவது பறக்கும் காராக விளங்குகிறது. விளையாட்டுக் கார்கள் இயக்கப் பயன்படும் joystick போன்றவற்றால் கூட இதனை இயக்க முடியும்.


இது பற்றரி மூலம் மின்சாரத்தினால் தான் இயங்கும் என்பது கூடுதல் தகவல். சாதாரண ஹெலிகொப்டர்களில் பறப்பதை விட இதில் பறப்பது மிகவும் எளிமையானது. இயந்திரத்தின் எடை 80 கிலோ கிராம் மட்டுமே. இதில் 16 சுழலும் இயந்திரங்கள் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பறக்கும் காராக பயன்படுத்தப்பட உள்ளது.


Posted by mayyam at 9:49 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இவை கண்கள். இதை நம்புங்கள்


உங்களது கண்களின் மிக துல்லிய வடிவங்கள் இவை! - நம்புங்கள், நிஜமாகவே இவை இவ்வளவு வடிவானவை தான்!



Posted by mayyam at 9:47 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

அபாயம் நிறைந்த விளையாட்டு : வீடியோ இணைப்பு

மாறி வரும் இன்றைய உலகில் ரசனைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மேடை நிகழ்வாக இருந்தாலும் சரி தெருவோர நிகழ்வாக இருந்தாலும் சரி வித்தியாசமான ஒன்றை ரசிகர்களுக்க வழங்க முயற்சிகள் மேற்கொள்கின்றார்கள் அந்த வகையில்..


பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியான Britain's Got Talent ஒருவர் கலந்து ஆபத்தான ஓர் வித்தையை காட்டி எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.
47 வயதான Stevie Starr இலக்கங்கள் பொறிக்கப்பட்ட ஐந்து நாணக்குற்றிகளை ஒவ்வொன்றாக விழுங்குகின்றார். பின்னர் மிக துல்லியமாக எவ்வாறு விழுங்கினாரோ அதன் வரிசை கிரமத்தில் வெளியில் எடுத்து பிரமிக்க வைக்கிறார். அதாவது ஒரு தட்டு தட்டுகிறார். நாம் சொல்லும் இலக்க நாணயக் குற்றி வெளியே வருகின்றது. இது ஓர் ஆபத்து நிறைந்து விநோத செயலாகும்.

குறிப்பு : வாசர்களாகிய நீங்கள் யாரும் இவ்வாறு முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கின்றோம். இவ் விளையாட்டில் உயிர் பறிக்கக் கூடிய அபாயம் உள்ளது.



Posted by mayyam at 7:53 PM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மொழிகளை கற்றுக்கொள்ள ஓர் இணையதளம்


புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது.


ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து. அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.

புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய சிறந்த வழியை தான் பாலிஸ்பீக்ஸ் தளம் உண்டாக்கி தந்துள்ளது.
இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்பது போல பல்வேறு மொழி பேசுபவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிற‌து. பயனாளிகள் தாங்கள் கற்க விரும்பும் மொழி பேசுபவரோடு இணையத்தில் உரையாட துவங்கி விடலாம்.

உதாரனத்திற்கு ஜப்பானிய மொழி கற்று கொள்பவர்கள் இந்த தளம் மூலம் ஜப்பானியரோடு அரட்டை அடித்து அந்த மொழியில் உள்ள பேச்சு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள‌‌ முற்படலாம்.

இதே போலவே வேற்று மொழி பேசுபவர்களோடு வீடியோ வழியே உரையாடும் வசதியை வெர்ப்லிங் தளம் தருகிறது.

ஆனால் பாலிஸ்பீக்ஸ் வீடியோ வசதி இல்லாமல் சாட் செய்வது போலவே இணைய உரையாடலில் ஈடுபட வைக்கிறது.புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளும் நிலையில் பேசுவதை விட எழுத்து மூலம் உரையாடுவதே உகந்த‌தாக இருக்கும் என்று நினைத்து இந்த அரட்டை வசதியை தருவதாக பாலிஸ்பீகஸ் தளம் தெரிவிக்கிற‌து.

பேஸ்புக் கணக்கை கொண்டே இதில் உறுப்பினராகி வேற்று மொழி பேசுபவருடன் அரட்டையில் ஈடுபட்டு மொழியை வளர்த்து கொள்ளலாம்,நட்பையும் வளர்த்து கொள்ளலாம். ஒரு காலத்தில் சாட் என்று சொல்லப்படும் அரட்டை தளங்கள் இணையத்தில் கொடி கட்டி பறந்தன.அதன் பிறகு அரட்டை தளங்களின் செல்வாக்கு தேய்ந்து போய்விட்டன.

அதன் பிறகு சாட்ரவுலட் தளம் மீண்டும் அர‌ட்டை தளங்களுக்கு புதிய மவுசை தேடித்தந்தது. இந்த நிலையில் அரட்டையை மொழி கற்பது உள்ளிட்ட பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பாலிஸ்பீக்ஸ் போன்ற தளங்கள் ஏற்படுத்தி தருகின்ற‌ன.

இணையதள முகவரி
Posted by mayyam at 6:11 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பேஸ்புக் சேவையை தாக்கவுள்ள பிரபலமான ‘Anonymous’காணொளி

பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென ஜனவரி மாதமளவில் செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.


தற்போது பேஸ்புக் சேவையை ‘Anonymous’ என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய காணொளியானது கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி வெளியாகியிருந்தது.
எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு கசிய ஆரம்பித்துள்ளன.

‘ ஒபரேஷன் பேஸ்புக்’ என இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக் குழு அறிவித்துள்ளது.

இது வெறும் புரளியெனக் கூறியுள்ள இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் இத்தகவலை மறுத்துள்ளன.

இருந்த போதிலும் குறித்த குழுவே கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது.


பேஸ்புக் தொடர்பில் கடுமையாக சாடியுள்ள அவ்வமைப்பு ஷூக்கர் பேர்க் எமது விபரங்கள் மற்றும் தகவல்களின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

நமது தகவல்களை பேஸ்புக் அரசாங்கம் மற்றும் உளவு நிறுவங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

பொதுவாக ‘Anonymous’ குழு ஓர் இணையக் கட்டமைப்பினைத் தாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இது தொடர்பிலான அறிவிப்பினை மேற்கொள்ளும்.

இந்நிலையில் தற்போது பல நாட்களுக்கு முன்னரே அக்குழு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது

எவ்வாறாயினும் இச் செய்தியானது பேஸ்புக் பாவனையாளர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.
Posted by mayyam at 5:50 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பேஸ்புக்

மனித மூளையை ஒத்த ‘சிப்’பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை


அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி ‘சிப்’ இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இச் ‘சிப்’ ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.

சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனை உருவாக்கும் திட்டமானது 100 ஆராய்ச்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் சுமார் 6 வருடங்களாக நடைபெற்றுள்ளது.

இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி. எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளது.



Posted by mayyam at 5:48 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தொழில்நுட்பம்

அதிர்ச்சித் தகவல்களும் அம்பலமாகும் உண்மைகளும் சமூக சீர்கேடுகளும்

முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது.

ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு வீதம் அதிகரிப்பு, சூறையாடப்படும் சிறுவர் வாழ்க்கை, கயவர்களின் கையில் சிக்கித் தவிக்கும் திருமணமாகாத பெண்கள், தென்னிலங்கை மக்களின் வருகை மற்றும் வெளிநாட்டு மோகம் ஏற்படுத்தியுள்ள நாகரிகத் தாக்கம் என இதனை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்போது அடிக்கடி சூடாகப் பேசப்படும் விடயம்தான் யாழில் கலாசார சீர்கேடு. இதன் உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள நாம் அங்குசென்றபோது எமக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஆம்..! யாழ் மாவட்டத்தில் பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையான (பதின்ம வயது) பள்ளிப்பருவ இளம் பெண்கள் 211 பேர் கடந்த ஐந்து மாதங்களில் கர்ப்பமாகியுள்ளனர். இவர்களில் 90 வீதமானோர் பாடசாலைக்குச் செல்லும் மாணவியர். இதே காலப்பகுதியில் திருமணமாகாத 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அது தவிர 242 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 61 வீத அதிகரிப்பினை இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என அறிந்துகொள்ள நாம் முயற்சித்ததுடன் இது குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி சிவசங்கர் திருமகள், வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் ஆகியோருடனும் யாழ். மாநகர முதல்வர் யோ.பற்குணராசாவுடனும் கலந்துரையாடினோம்.

சிவசங்கர் திருமகள்
தாய் சேய் நல வைத்திய அதிகாரி – யாழ். மாவட்ட சுகாதாரப் பணிமனை
“யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக பாடசாலை மாணவர்களிடத்தே நன்னடத்தை பேணப்படுவதற்கான ஒழுங்குகளை செய்துவருகிறோம். ஆயினும் பாடசாலை மாணவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிலர் கர்ப்பம் தரிப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

1. மேலதிக வகுப்புகள் எனக் கூறி இளவயதுப் பெண்கள் தவறான இடங்களுக்குச் செல்லுதல் கண்காணிக்கப்படுதல்
2. அளவுக்கதிகமான சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல்
3. பிள்ளைகளின் நண்பர்களுடைய பெற்றோருடன் உறவினைப் பேணுதல்
4. ஆசிரியர் – மாணவர் உறவில் நீண்ட விரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுதல் (ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரை தன்னுடைய பிள்ளை என நினைத்தல் அவசியம்)
5. வேலையின்றித் திரியும் இளைஞர்களின் அடாவடித்தனங்களை மட்டுப்படுத்துதல்
6. லொட்ஜ் உரிமையாளர்களுக்குரிய சட்டதிட்டங்கள் வகுக்கப்படுதல்
7. பொதுக் கட்டிடங்களுக்கு அண்மித்ததாக மதுபானசாலைகள், விடுதிகள் அமைக்கப்படுவது தொடர்பான சட்டம் முன்மொழியப்படுதல்
8. பெண்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புப் பிரிவு உருவாக்கப்படுதல்
9. வாழ்க்கைத் தேர்ச்சி பாடசாலைகளில் உரிய முறையில் போதிக்கப்படுதல்
10. பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நடைமுறையிலிருந்து சமுதாயம் விடுபடுதல்

ஆகியவை அத்தியாவசியமானவையாகும். மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் மாற்றத்தை நினைக்கையில் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமே மேலிடுகிறது. கர்ப்பம் தரித்துள்ள பள்ளி மாணவர்களை பார்த்து நான் பலதடவை கண்ணீர் வடித்திருக்கிறேன். இதனால் சட்டவிரோத கருத்தரிப்புகளும் அதிகரிக்கின்றன. திருமணம் முடித்தோரும் சட்டவிரோத கருத்தரிப்புகளை செய்துகொள்கின்றனர். இதன் பின்விளைவுகள் குறித்துத் தெரியாததால் நாளடைவில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவருகிறது. எது எவ்வாறாயினும் எங்களால் (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை) இயன்றளவான செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகிறோம்“

வழக்கறிஞர் பொன்.பூலோகசிங்கம்

“இன்று யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற வழக்குகள் எங்களுக்கு யாழ்ப்பாண சமூகத்தினுடைய தற்போதையை நிலையை வெளிச்சமிட்டுக்காட்டுவதாக இருக்கின்றது. நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப் போல நாங்கள் வெளிப்படையாகக் காண்கின்ற யாழ்ப்பாணத்து கட்டமைப்பு பெருமளவில் இன்று சீர்குலைந்துவிட்டது. அதற்கு ஆதாரமாக யாழ்ப்பாண குடாநாட்டில் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற குற்றவியல் வழக்குகள் பெரும்பாலும் சீர்குலைந்துபோயிருக்கின்ற யாழ் சமூகத்தின் கட்டமைப்பின் மறுபக்கத்தை எங்களுக்கு காட்டுகின்றன. வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் மத்தியில் நீண்டகாலமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், வாழ்வியல் அம்சங்சங்கள், வாழ்க்கையின் தேவைப்பாடுகள், இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் வித்தியாசமான தடத்தில் செல்வதாகப் பார்க்கிறேன். யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளும் பாலியல் ரீதியிலான வழக்குகளுமே முன்னிலை வகிக்கின்றன.

பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் எமக்கு அனுகூலமான விடயம் அல்ல. ஏனைய மாவட்டங்களை விட பாலியல் பிரச்சினைகளில் யாழ் மாவட்டம் குறைவான புள்ளிவிபரங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து வருகின்றமையை நாம் சிந்திக்க வேண்டும். மிகச்சிறந்த கலாசாரப் பண்பாடுடைய தமிழ்ச் சமூகம் எனப்போற்றப்படும் எமது கலாசாரத்துக்கு இது ஆரோக்கியமாக அமையாது என்பதே எனது கருத்து”

யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோ. பற்குணராசா

“பரப்பரப்பாக பேசப்படும் விடயமாக கலாசார சீரழிவு காணப்படுகின்றது என்பதை இணையத்தளங்களினூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடகால போரின் பின்னர் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் இன்று சரி பிழைக்கு அப்பால் வேலைவாய்ப்பின்மையினூடாக பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் இந்நிலைக்கு இது முக்கியமான காரணம். போர்க்காலச் சூழல் முழுமையான கல்வியை வழங்கத் தவறியது. இளைஞர்களின் நிலை கட்டுங்கடங்காத வகையில் உள்ளது. இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கி சரியான முறையில் வழிநடத்துவதன் மூலம் நல்ல வகையில் திசை திருப்பலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டு விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடாமல் கூட்டு முயற்சியில் பொறுப்புணர்வுடன் இவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

யாழில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள் மூடிமறைக்கப்படுகின்றனவா?

ஏன் மூடி மறைக்க வேண்டும்? இதனை நீங்கள் வெளிப்படையாகக் கண்டுகொண்டிருக்கிறீர்கள். இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நடைபெறுவதில்லை. கொழும்பில் இதனை விட சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏன் உலகளாவிய ரீதியில் இப்பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது. ஆனால் யாழில் ஒரு சிறு விடயம் ஏற்படுகின்ற போது அதனை விசுவரூபமாக பிரசாரப்படுத்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

இங்கு உள்ள லொட்ஜ்களில் பாடசாலை மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அது எந்த வகையில் உண்மை? இந்த லொட்ஜ்கள் மாநகர சபை அனுமதியுடன்தான் நடத்தப்படுகின்றனவா? எனக் கேட்டபோது…

லொட்ஜ்கள் உண்மையிலேயே எமது அனுமதியின்றித் தான் நடத்தப்படுகின்றன. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் வீடுகளே இன்று லொட்ஜ்களாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றை உண்மையான சட்ட வரைவுக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்றால் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். அதே நேரதத்தில் அந்த லொட்ஜ்கள் விடுதிகளாக்கப்படுவதற்குரிய அனுமதியை சுற்றுலாத்துறையினர் வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு செயற்படுத்தப்படவில்லை. அவ்வாறான சட்டதிட்டங்களை நாம் செயற்படுத்தும்போது வேலைவாய்ப்பு குறித்து லொட்ஜ் நடத்துநர்கள் கவலை கொள்கிறார்கள். ஆயினும் உரிய வகையில் அவற்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்

மற்றும் ஒருசில மாணவர்கள் லொட்ஜ்களுக்கு சென்று வருவதால் ஒட்டுமொத்த பாடசாலையின் நன்மதிப்பும் கெடுகிறது. ஒருசிலர் விடும் தவறால் ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் கலாசாரமும் சீர்கெடுகிறது எனக் கூற முடியாது. இதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.

தமிழ்ச் சமூகத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகளால் திட்டமிட்டுப்; பரப்பப்படும் விடயம் தான் இந்த சமுதாயச் சீர்கேடு குறித்த வதந்தி என சமுதாயத்தின் ஒரு தரப்பு கூறுகிறது. யாழில் மட்டுந்தான் பாலியல் பிரச்சினைகள் நடக்கின்றனவா? எனக் கேட்கிறது மற்றுமொரு தரப்பு. இது மூடி மறைக்கப்படுமானால் நமக்குத் தெரியாமல் வளர்க்கப்பட்டுவிடும். ஆதலால் உண்மையை வெளிப்படையாகக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறது இன்னொரு தரப்பு.

இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வின்மையுமே அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இந்த இழி நிலைக்குக் காரணம் என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது.

தென்னிலங்கையர்களின் வருகையோடு விபச்சாரத்தை தொழிலாக செய்யும் பாலியல் தொழிலாளர்களின் வருகை யாழில் அதிகரித்துள்ளமையை நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் பாதுகாப்பான உறவினை மேற்கொள்கிறார்களா என்பதே இங்கு கேள்விக்குறியாகும். அதனை விட யுவதிகளும் பாடசாலை மாணவர்களும் இந்த வட்டத்துக்குள் உள்வாங்கப்படுவது கவலைக்குரியதே. இவர்கள் மூன்றாவது சக்தியினூடாக பலவந்தமாக இதற்கு ஆளாக்கப்படுகிறார்களா அல்லது தாமாகவே விரும்பி ஈடுபடுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள யாழிலுள்ள சகோதர மொழி பேசும் லொட்ஜ் உரிமையாளருடன் உரையாடினோம்.

“யாழ்ப்பாண நகரத்தில் இரவு ஏழு மணியானால் போதும் எனது கைத்தொலைபேசி அலறிக்கொண்டுதான் இருக்கும். அண்ணா ரூம் இருக்கிறதா? வரலாமா? என்று அடிக்கடி கேட்பார்கள். பாடசாலை மாணவர்கள் வருகிறார்கள். நான் இல்லை என்று சொல்லவில்லை. பல சந்தர்ப்பங்களில் நான் அவர்களை ஏசி அனுப்பியிருக்கிறேன். மிக இளவயதுப் பெண்கள் இங்கு வந்து தாமாகவே முன்வந்து தமது அடையாள அட்டையைக் கொடுத்து பதிவுசெய்யச் சொல்வதும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் இளைஞர்கள் இங்கு சிங்களப் பெண்களை அழைத்து வருவார்கள். பணம் படைத்த பலர் அறையின் வாடகையை விட மேலதிகமாக கொடுப்பதும் உண்டு” என்றார் அவர்.

இவ்வாறு நாம் உரையாடிய லொட்ஜ்கள் பலவற்றின் உரிமையாளர்களும் இதேபோன்ற பதிலையே எமக்கு அளித்தனர்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக இணையத்தளங்கள், இணைய அரட்டை, சமூக வலையமைப்புகள் உட்பட ஏனைய இணைய வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் தவறான கட்டமைப்புக்குள் தாமாகவே உள்வாங்கப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய சிந்தனையோட்டம் மாறுபடுகின்றது. அதன் பின்விளைவாக பாலியல் ரீதியிpலான இயல்பான தூண்டுதலுக்கு உள்ளாகி குற்றம் புரிகின்றனர். இதற்கு உதாரணமாக தாவடிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற சம்பவத்தினைக் குறிப்பிடலாம்.

தமது சொந்த கிராமத்திலிருந்து சுமார் 32 கிலோ மீற்றர் தூரம் வந்த 16 வயதான யுவதிகள் இருவர் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களுடன் பாலியல் உறவுகொண்டுள்ளனர். இவ்விடயம் பெற்றோரினூடாக வழக்கு விசாரணைக்கென நீதிமன்றுக்கு வந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலின் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 16 வயது அல்லது அதற்குக் கீழ்ப்பட்ட பெண்களுடன் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் ரீதியிலாக தொடர்புகொண்டால் சட்டப்படி குற்றமாகும். ஆதலால் அந்த இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. எனினும் இதன் பின்புலத்தில் நவீன தொடர்பாடல் முறைகளே காரணமாக அமைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். இவ்வாறு அடிக்கடி பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணமே உள்ளன.

அத்துடன் யுத்தத்தின் பின்னர் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட பாழடைந்த வீடுகளை இளைஞர்கள் தமது சட்டவிரோத தேவைகளுக்கென பயன்படுத்திக்கொள்கின்றனர். இவ்வாறான இளைஞர்களால் அப்பாவி யுவதிகள் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டியமை அவசியமாகும். 2010 ஆம் ஆண்டு திருமணமாகாத கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 98 ஆக இருந்துள்ளது. இவ்வருடம்; ஐந்து மாதங்களில் மாத்திரம் 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அதேபோன்று 2010 இல் சிறுவர் துஷ்பிரயோகங்கள் 175 ஆக பதிவாகியுள்ளது. இவ்வாண்டு ஐந்து மாதங்களில் இது 242 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலை தொடருமானால் மிகப்பெரிய சமூகச் சீர்கேட்டினை எதிர்நோக்க வேண்டிய அபாயம் உள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. அகன்று பரந்து விரிந்த அழகான மரம்போல் நமது சமுதாயம் காட்சியளித்தாலும் இவ்வாறான சமூகச் சீர்கேடுகள் எங்கோ ஒரு மூலையில் எமது ஆணிவேரை அரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பது நிதர்சனம்.

நடைமுறையைக் கவனமாக நோக்குகையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூக அக்கறையாளர்கள், அரச தரப்பினர் உட்பட அனைவருமே பேதங்களின்றி இவ்விடயத்தில் ஒருமித்த மனதுடன் கைகோர்ப்பதே இன்றைய தேவையாக உள்ளது.

யாழிலிருந்து எம்.ப்ரியந்தி
படங்கள்: ஜே.எஸ்.கே(நன்றி -வீரகேசரி )
Posted by mayyam at 5:46 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

நீர் குமிழ்களில் ஒரு மாஐாயாலம் : வீடியோ இணைப்பு

மந்திர தந்திர வித்தைகள் என்றால் எமக்கு சொல்லவா வேண்டும் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும் ஓர் கலை மாஐாயாலம்.


நாம் சிறுவர்களாக இருக்கும் போது சவர்கார நுரையில் நீர் குமிழிகள் விட்டு விளையாடி இருப்போம். ஆனால் இங்கு ஒருத்தர் சவர்கார நுரையினை வைத்து பல வித்தைகள் காட்டுகின்றார் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு நீர் குமிழுக்குள் பல குமிழ்கள் என நீளுகின்றது இவரின் மந்திர ஐாலம் நீங்கள் பாருங்கள் ரசியுங்கள்.




Posted by mayyam at 5:37 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மனவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுமியைசங்கிலியால் கட்டி வைத்திருந்த பெற்றோர்

அமிர்தசரசில், மனவளர்ச்சி குன்றிய, மாற்று திறனாளியான ஒன்பது வயது சிறுமியை, அவரது பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி, துர்நாற்றம் வீசும் இருட்டறையில் அடைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.பஞ்சாப், அமிர்தசரசை சேர்ந்த பெண் குல்வந்த் கவுர். ஏழையான இவரது, ஒன்பது வயது மகள் சிம்ரஞ்சித் கவுர். மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளியான இச்சிறுமியை, குல்வந்த் கவுரும், அவரின் குடும்பத்தினரும், சங்கிலியில் கட்டி இருட்டறையில் அடைத்து வைத்துள்ளனர். துர்நாற்றம் வீசும் அறையில், கடந்த 3 ஆண்டுகளாக சிறுமி அடைக்கப்பட்டிருந்தது, தற்போது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, தாய் குல்வந்த் கவுர் கூறுகையில், "சிம்ரஞ்சித் கவுர், ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது, இன்னதென்று தெரியாத மர்மமான நோய் அவளை தாக்கியது. அதிலிருந்து அவள், தன்னைத் தானே தாக்கிக் கொள்ளுவது மற்றும் மற்றவர்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டாள். இதனால், அவளை கட்டாயமாக சங்கிலியில் கட்டி வைக்கும் நிலை ஏற்பட்டது. ஆதரவற்றவர்களான எங்களுக்கு, வேறு வழி தெரியவில்லை. ஏழ்மை நிலையில் உள்ளதால், எங்களால் மருத்துவ சிகிச்சை செய்ய முடியவில்லை. சிம்ரஞ்சித் கவுரின் பாட்டி நரீந்தர்கவுர் தான், அவளுக்கு உணவு ஊட்டி, அவளது தேவைகளை கவனித்து கொள்கிறார்.

என்றாவது ஒரு நாள், அவள் குணமடைய வேண்டும் என, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்'என்றார்.இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள், சிம்ரஞ்சித் கவுரின் நிலை தெரிந்தாலும், அதுகுறித்து பேசாமல் மவுனமாகவே இருந்துள்ளனர். அடுத்த வீட்டில் வசிக்கும் அமந்தீப் சிங் கூறுகையில், "கடவுளின் திருவுளம் இவ்வாறு இருக்கும் போது, அதற்கு இடையூறாக நாங்கள் இருக்கக் கூடாது' என இருந்தோம் என்றார்.
Posted by mayyam at 5:30 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

டேப்ளட் பிசி - இனி வாழ்வின் ஓர் அங்கம்


கம்ப்யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதனால் லேப்டாப் இடத்தில் டேப்ளட் பிசிக்களை விரும்புகிறீர்கள் என்று பலரைக் கேட்டதில், கீழ்க்காணும் சிறப்பியல்பு களை அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்றனர்.




1. மின்சக்தி பயன்பாடு: இதனைப் பொறுத்தவரை, டேப்ளட் பிசியின் அருகில் கூட லேப்டாப் வர முடியாது. டேப்ளட் பிசியை ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒரு முழு நாள் கூட பயன்படுத்தலாம். லேப்டாப் அப்படி இல்லை. அதிக பட்சம் மூன்று மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது.
2. வைரஸ்: ஒரு டேப்ளட் பிசி எந்த வைரஸ் தாக்குதலையும் கொண்ட தில்லை. மால்வேர் எதுவும் அதனைப் பாதித்ததில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில், குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில், வைரஸ் மற்றும் பிற மால்வேர் நுழைவது எளிதாகிறது.

3. எடுத்துச் செல்ல எளிது: சட்டை அல்லது கோட் பாக்கெட், பாதுகாப்பாக சட்டைக்குள்ளாக என ஒரு டேப்ளட் பிசியினை வைத்துக் கொண்டு செல்ல லாம். எனவே ஏர்போர்ட், ஹோட்டல் விடுதி, டாக்ஸி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள் என எங்கும் எளிதாக டேப்ளட் பிசியைக் கொண்டு செல்ல முடியும். எடையும் குறைவு. மற்றவர் அறியாமல் ஓரிடத்தில், ஒரு டாக்சியில், மாடிப் படிகளின் கீழாக என எந்த ஒரு தனி இடத்தில் வைத்துப் பயன்படுத்த டேப்ளட் பிசிதான் சிறந்தது. ஏன், குளியலறையில் கூட வைத்து எளிதாக இயக்கலாம்.
 

4. விலை: டேப்ளட் பிசியின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அனைத்து மக்களும் வாங்கிப் பயன்படுத்த வேண்டுமாயின், இதன் விலை குறைவாக இருந்தால் தான் முடியும் என்பதனை டேப்ளட் பிசி யினைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவே, லேப்டாப்பின் விலையில் மூன்றில் ஒரு பங்கில், அல்லது நான்கில் ஒரு பங்கில் நல்ல டேப்ளட் பிசி ஒன்றை வாங்க முடியும். 

5. ஆன்லைன் நெட்வொர்க் தொடர்பு: கொஞ்சம் கூடுதலாகப் பணம் செலுத்தி, ஒரு டேப்ளட் பிசிக்கு 4ஜி அல்லது 3ஜி தொடர்பினைப் பெற முடியும். நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி இணைப்பு உள்ள இடம் எங்குள்ளது என்று தேடி அலைய வேண்டியதில்லை. கிளவ்ட் கம்ப்யூட்டிங் போன்ற பணிகளுக்கான நெட்வொர்க் வழங்குவதற்காக, மேல் நாடுகளில் பல நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் டேப்ளட் பிசிக்களில், குறிப்பிட்ட நெட்வொர்க் இணைப்பினை ஏற்படுத்தியே தருகின்றனர். அல்லது டேப்ளட் பிசிக்களுக்கான நெட்வொர்க் இணைப்பு கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.

6. ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன்கள் ரெடி: டேப்ளட் பிசிக்களுக்கென பல்லாயிரக் கணக்கான அப்ளிகேஷன்கள் இப்போதே கிடைக்கின்றன. பெரும்பாலான பயனுள்ள அப்ளிகேஷன்கள் இலவச மாகவே தரப்படுகின்றன. மேலும் இவற்றை ஓர் இணைய இணைப்பிலேயே டேப்ளட் பிசியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பயன்படுத்தியபின் அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம்.

7. எளிமையான இன்டர்பேஸ்: டேப்ளட் பிசிக்களும், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களும் மிக எளிமையான இன்டர்பேஸ் கொண்டு இயங்குவதால், சிக்கல்கள் எதுவுமின்றி அவற்றை இயக்க முடிகிறது.


8.புளுடூத் இணைப்பு: ஹெட்போன், ஹெட்செட், கீ போர்ட் என டேப்ளட் பிசி தொடர்புக்கென எதனை எடுத்தாலும், அவை புளுடூத் பயன்பாட்டில் இயங்கு பவையாகக் கிடைக்கின்றன. இதனால், குழப்பமான இணைப்புகளுடன் நாம் போராட வேண்டியதில்லை. 

9. உடனடி இயக்கம்: எந்த நேரத்திலும் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேப்ளட் பிசியை, மீண்டும் இயக் கத்திற்குக் கொண்டு வரலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் போல, டேப்ளட் பிசி அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. எனவே, போகிற போக்கில் பல செயல்பாடுகளை ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்ள முடியும். 

10. சமுதாய இணைய தள இணைப்பு: வர்த்தகம் மற்றும் அலுவலக ரீதியான பணிகளுக்கு சமுதாய இணைய தள இணைப்பு தேவையில்லையே! எனச் சிலர் எண்ணலாம். அவை வர்த்தக நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு உதவுகின்றன என்பதனை, அவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிவார் கள். அதனால் தான் இன்றைய சூழலில் பல நிறுவனங்கள், சமுதாய தளங்களில் தங்களைப் பதிந்து கொண்டு வருகின்றன. இந்த வகையில், ஒரு டேப்ளட் பிசிதான் கூடுதல் பயனுள்ளதாக இருக்க முடியும்.

லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசி என எடுத்துக் கொண்டால், நிச்சயம் டேப்ளட் பிசிதான் பின்னாளில் நிலையாக இயங்கப் போகிறது என்பது உண்மை. ஆனால் அந்த நாள் விரைவிலா அல்லது சில ஆண்டுகள் கழித்தா என்பது மக்களின் மனநிலையைப் பொறுத்து அமையும்.
Posted by mayyam at 5:07 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: தொழில்நுட்பம்

இந்த வீடியோவை பார்க்காதீர்கள். ப்ளீஸ்


மொதல்லே சொன்னேன். இப்போ என்னை என்னை பண்ண சொல்றீங்க...
Posted by mayyam at 4:58 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மீண்டும் ஒரு "பார்க்காதீர்கள்" வீடியோ

உலகத்திலேயே பல விதமான விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதற்கு வாகனச் சாரதிகள், வீதி சீரின்மை, வீதி விளக்குகள் ஒளிராமை போன்ற பல காரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். 


ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் வாகனத்தை ஓட்டும் வேகத்தைக் குறைக்கும் பட்சத்தில் எவ்வித குறைகள் ஏற்பட்டாலும் விபத்தையும், அதனால் ஏற்படும் உயிர்ச் சேதத்தையும் ஓரளவுக்கேனும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

எனவே ஏற்படுகின்ற விபத்துக்கள் அனைத்துக்கும் சாரதிகளே பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவுள்ளனர்.
Posted by mayyam at 4:51 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சொத்துக்காக தங்கையின் கழுதை அறுத்த கொடூர அண்ணன்

மங்கள் மராண்டி (38). இவரது தங்கை காஜல் (வயது 35). நேற்று முன்தினம் மாலை இவரை மராண்டி ஏமாற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நாகராஜா கோவிலுக்கு அழைத்து சென்றார். சாமி முன்பு மண்டியிட்டு வணங்குமாறு காஜலிடம் கூறினார். அவரும் அவ்வாறு செய்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காஜலின் கழுத்தில் வெட்டி தலையை துண்டாக்கினார்.

பின்னர் உடலின் பிறபாகங்களையும் வெட்டி தனித்தனியே எடுத்து, சாமி முன்பு வைத்தார். அவரே கோவிலில் பூஜை நடத்தினார். பின்னர் காஜலின் உடல் பாகங்களை ஆங்காங்கே வீசி எறிந்து விட்டு வீடு திரும்பினார். இந்த தகவல் மறுநாள் போலீசாருக்கு எட்டியது. உடனே போலீசார் மராண்டியை கைது செய்ய அவரது வீட்டுக்கு வந்தனர். உடனே அவர் அருகில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்துக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவரை விடாமல் பின் தொடர்ந்து சென்று எல்லையில் வைத்து கைது செய்தனர்.

மராண்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றுவிட்டேன். அன்று இரவு கனவில் வந்த பாம்பு கடவுள், இந்த பாவத்தை செய்ததற்காக உனது வீட்டில் உள்ள ஒருவரை நரபலி கொடுக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று சொன்னது, மேலும் அப்படி செய்தால் உனக்கு மன அமைதியும், நிறைய சொத்துக்களும் கிடைக்கும் என்று கூறியது.

மன அமைதி மற்றும் சொத்துக்காகவே எனது தங்கையை நரபலி கொடுத்தேன். இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்தார். கடந்த மாதம் இதே மாவட்டத்தில் 2 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Posted by mayyam at 3:40 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மக்கள் பணத்தில் கைவைக்கும் அரசு! சட்டங்கள் மாற்றம் பெறுகின்றன!

ஒருவர் சுகவீனமாக இருக்கும் போது வேலைக்ககுச் செல்லாமல் இருக்கும்போது இவ்வளவு நாளும் முதல் மூன்று நாட்களுக்கும் Securité Socialஅவர்களுக்கான காப்புறுதிப் பணத்தை (Remboursement) வழங்குவதில்லை. நான்காவது நாளிலிருந்தே அவர்களுக்கான காப்புறுதிப்பணம் வழங்கப்படும். இனிமேல் நான்காவது நாளும் வழங்கப்படாது ஐந்தாவது நாளிலிருந்தே அவர்கள் மருத்துவக் காப்புறுதிப்பணம் வழங்கப்படத் தொடங்கும் என அறிவித்துள்ளார்.

Bordeaux வில் நடைபெற்ற ஜனாதிபதி உரையில் RSA (RMI) வில் இருப்பவர்களும் கட்டாயமாக கிழமைக்கு 7 மணித்தியாலங்கள் வேலை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக அவர்களுக்கு ஒரு கௌரவத்தை வழங்குவதற்காகவே என்றும் கூறியுள்ளார். அவர்கள் வேலை செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களைத் தவிர்ப்தற்காகவே இந்நத் திட்டம் வகுக்கப்பட்டதாகவும், அவர்கள் பெரும் உதவிப் பணத்திற்குரிய வேலையை அவர்கள் அரசாங்கத்திற்குச் செய்து தரும் வேலையின் சம்பளமாகவே அவர்கள் பெறுவதால் அவர்களும் மற்றவர்கள் போல் தமது கடமையைச் செய்து தமது உரிமையைப் பெறுகிறார்கள் என்றும் கூறினார்.
இதன் மூலம் அரசுக்கு 200 மில்லியன் யூரோக்களைச் சேமிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.. இது தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கேயாகும். அரச நிறுவனங்களில் வேலை செய்வோர்க்கு முதல் நாளிலிருந்தே அவர்கள் காப்புறுதிப் பணம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அவர்களுக்கு இரண்டாவது நாளிலிருந்தே காப்புறுதிப்பணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய நாடுகளின் கடன் சுமைகளைக் களைவதற்காகத் தம் மீது அப்படியான அழுத்தங்கள் பிரயோகிக்ப்படுவதை பிரான்ஸ் மக்கள் விரும்பவில்லை. இப்படியான தீர்மானங்கள் சமூக உதவிகளைப் பாதிக்கும் போது அதற்குரிய பணத்தை அரசு தமது சம்பளங்களிலிருந்து வெட்டிக்கொள்ளும் பொழுது இந்த அரசு மக்ளின் ஆதரவை வலுவாக இழக்கப்போகின்றது.



Posted by mayyam at 3:07 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ஒரு தமிழனின் உள்ள குமுறுல்

பொதுவாக இன்றைய கால கட்டத்தில் தமிழ் சமூகத்திற்கு வெளிநாடு செல்வது என்பதே பெரும் கனவாகவும் அதுவே முக்கியமானதொன்றாகவும் உள்ளது.


வெளிநாடு ஒன்றில் கால் எடுத்து வைக்கும் வரை எத்தனை விதமான துன்பங்கள், கொடுமைகள் நிறைந்து இருக்கின்றது. புலம்பெயர் நாடு ஒன்றில் வாழும் இளைஞர் ஒருவர் தனது மனைவியின் வரவை எண்ணி மொட்ட தலையாய் போன சோகத்தை பாருங்கள்.
"இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை" என்பது எம் தமிழ் சமூகத்திற்கு மிகவும் பொருத்தும் என்பதே இக் காணொளியின் வெளிப்பாடு.

வெளிநாட்டு கனவுடன் வாழும் தமிழ் இளைஞர்களுக்கு சிந்திக்க வைக்கவே பாரிஸ்தமிழ் இக்கொணியை வாசகர்களாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றது.



Posted by mayyam at 2:30 AM 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ►  2012 (50)
    • ►  April (4)
      • ►  Apr 12 (2)
      • ►  Apr 10 (2)
    • ►  March (7)
      • ►  Mar 13 (2)
      • ►  Mar 06 (1)
      • ►  Mar 05 (4)
    • ►  February (34)
      • ►  Feb 09 (11)
      • ►  Feb 08 (3)
      • ►  Feb 07 (3)
      • ►  Feb 06 (2)
      • ►  Feb 03 (2)
      • ►  Feb 01 (13)
    • ►  January (5)
      • ►  Jan 31 (5)
  • ▼  2011 (2555)
    • ►  December (798)
      • ►  Dec 24 (23)
      • ►  Dec 23 (17)
      • ►  Dec 22 (23)
      • ►  Dec 21 (74)
      • ►  Dec 20 (22)
      • ►  Dec 19 (24)
      • ►  Dec 18 (21)
      • ►  Dec 17 (16)
      • ►  Dec 16 (45)
      • ►  Dec 15 (41)
      • ►  Dec 14 (42)
      • ►  Dec 13 (57)
      • ►  Dec 12 (32)
      • ►  Dec 11 (27)
      • ►  Dec 10 (26)
      • ►  Dec 09 (58)
      • ►  Dec 08 (26)
      • ►  Dec 07 (52)
      • ►  Dec 06 (44)
      • ►  Dec 05 (27)
      • ►  Dec 04 (24)
      • ►  Dec 03 (17)
      • ►  Dec 02 (37)
      • ►  Dec 01 (23)
    • ▼  November (395)
      • ►  Nov 30 (11)
      • ►  Nov 29 (18)
      • ►  Nov 28 (4)
      • ►  Nov 27 (17)
      • ►  Nov 26 (24)
      • ►  Nov 25 (30)
      • ►  Nov 24 (32)
      • ►  Nov 23 (51)
      • ►  Nov 22 (26)
      • ►  Nov 21 (12)
      • ▼  Nov 20 (22)
        • அதற்கும் ஒரு "ஜே' போடுங்கள்: கருணாநிதி
        • தூங்கியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் : பீதியுடன் பயணம் ...
        • புகைக்கும் இந்தியப் பெண்கள்
        • என்னுடைய படத்துடன் ராணா போட்டியிட தயாரா? -கமல்
        • மிகவும் ஆபத்தான 10 விலங்கினம் : வீடியோ இணைப்பு
        • அனைத்து வகையான கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு
        • இந்த பைலை திறக்க முடியவில்லை
        • பறக்கும் கார். பறந்து பார்
        • இவை கண்கள். இதை நம்புங்கள்
        • அபாயம் நிறைந்த விளையாட்டு : வீடியோ இணைப்பு
        • மொழிகளை கற்றுக்கொள்ள ஓர் இணையதளம்
        • பேஸ்புக் சேவையை தாக்கவுள்ள பிரபலமான ‘Anonymous’காணொளி
        • மனித மூளையை ஒத்த ‘சிப்’பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை
        • அதிர்ச்சித் தகவல்களும் அம்பலமாகும் உண்மைகளும் சமூக...
        • நீர் குமிழ்களில் ஒரு மாஐாயாலம் : வீடியோ இணைப்பு
        • மனவளர்ச்சி குன்றிய 9 வயது சிறுமியைசங்கிலியால் கட்ட...
        • டேப்ளட் பிசி - இனி வாழ்வின் ஓர் அங்கம்
        • இந்த வீடியோவை பார்க்காதீர்கள். ப்ளீஸ்
        • மீண்டும் ஒரு "பார்க்காதீர்கள்" வீடியோ
        • சொத்துக்காக தங்கையின் கழுதை அறுத்த கொடூர அண்ணன்
        • மக்கள் பணத்தில் கைவைக்கும் அரசு! சட்டங்கள் மாற்றம்...
        • ஒரு தமிழனின் உள்ள குமுறுல்
      • ►  Nov 19 (20)
      • ►  Nov 18 (26)
      • ►  Nov 17 (14)
      • ►  Nov 16 (26)
      • ►  Nov 15 (23)
      • ►  Nov 14 (18)
      • ►  Nov 13 (1)
      • ►  Nov 12 (3)
      • ►  Nov 11 (3)
      • ►  Nov 10 (3)
      • ►  Nov 09 (2)
      • ►  Nov 08 (1)
      • ►  Nov 07 (2)
      • ►  Nov 05 (1)
      • ►  Nov 04 (3)
      • ►  Nov 03 (1)
      • ►  Nov 01 (1)
    • ►  October (4)
      • ►  Oct 27 (1)
      • ►  Oct 26 (1)
      • ►  Oct 24 (1)
      • ►  Oct 21 (1)
    • ►  August (1)
      • ►  Aug 13 (1)
    • ►  July (147)
      • ►  Jul 13 (7)
      • ►  Jul 12 (9)
      • ►  Jul 11 (4)
      • ►  Jul 10 (9)
      • ►  Jul 09 (44)
      • ►  Jul 08 (1)
      • ►  Jul 07 (10)
      • ►  Jul 06 (25)
      • ►  Jul 05 (24)
      • ►  Jul 04 (7)
      • ►  Jul 02 (7)
    • ►  June (155)
      • ►  Jun 29 (1)
      • ►  Jun 28 (2)
      • ►  Jun 27 (5)
      • ►  Jun 26 (30)
      • ►  Jun 25 (1)
      • ►  Jun 23 (4)
      • ►  Jun 22 (5)
      • ►  Jun 21 (22)
      • ►  Jun 20 (7)
      • ►  Jun 19 (2)
      • ►  Jun 18 (2)
      • ►  Jun 17 (11)
      • ►  Jun 16 (2)
      • ►  Jun 15 (1)
      • ►  Jun 14 (2)
      • ►  Jun 13 (7)
      • ►  Jun 12 (8)
      • ►  Jun 11 (6)
      • ►  Jun 10 (8)
      • ►  Jun 09 (6)
      • ►  Jun 08 (6)
      • ►  Jun 07 (6)
      • ►  Jun 06 (9)
      • ►  Jun 05 (1)
      • ►  Jun 04 (1)
    • ►  May (136)
      • ►  May 26 (1)
      • ►  May 24 (1)
      • ►  May 23 (3)
      • ►  May 22 (1)
      • ►  May 20 (3)
      • ►  May 19 (12)
      • ►  May 18 (2)
      • ►  May 17 (3)
      • ►  May 16 (2)
      • ►  May 15 (3)
      • ►  May 14 (9)
      • ►  May 11 (17)
      • ►  May 10 (3)
      • ►  May 09 (3)
      • ►  May 08 (10)
      • ►  May 07 (11)
      • ►  May 06 (3)
      • ►  May 05 (4)
      • ►  May 04 (6)
      • ►  May 03 (4)
      • ►  May 02 (2)
      • ►  May 01 (33)
    • ►  April (412)
      • ►  Apr 30 (2)
      • ►  Apr 29 (28)
      • ►  Apr 27 (5)
      • ►  Apr 26 (12)
      • ►  Apr 25 (1)
      • ►  Apr 24 (48)
      • ►  Apr 23 (39)
      • ►  Apr 21 (4)
      • ►  Apr 20 (2)
      • ►  Apr 19 (15)
      • ►  Apr 18 (8)
      • ►  Apr 17 (9)
      • ►  Apr 16 (10)
      • ►  Apr 15 (24)
      • ►  Apr 13 (1)
      • ►  Apr 12 (19)
      • ►  Apr 11 (2)
      • ►  Apr 10 (15)
      • ►  Apr 09 (30)
      • ►  Apr 08 (80)
      • ►  Apr 07 (21)
      • ►  Apr 05 (16)
      • ►  Apr 04 (11)
      • ►  Apr 03 (10)
    • ►  March (288)
      • ►  Mar 30 (4)
      • ►  Mar 29 (5)
      • ►  Mar 28 (11)
      • ►  Mar 27 (52)
      • ►  Mar 26 (23)
      • ►  Mar 25 (1)
      • ►  Mar 24 (51)
      • ►  Mar 23 (4)
      • ►  Mar 19 (11)
      • ►  Mar 14 (7)
      • ►  Mar 10 (6)
      • ►  Mar 09 (2)
      • ►  Mar 08 (52)
      • ►  Mar 06 (7)
      • ►  Mar 05 (12)
      • ►  Mar 04 (8)
      • ►  Mar 03 (20)
      • ►  Mar 02 (11)
      • ►  Mar 01 (1)
    • ►  February (96)
      • ►  Feb 28 (20)
      • ►  Feb 21 (3)
      • ►  Feb 14 (12)
      • ►  Feb 13 (6)
      • ►  Feb 10 (35)
      • ►  Feb 03 (2)
      • ►  Feb 01 (18)
    • ►  January (123)
      • ►  Jan 31 (1)
      • ►  Jan 28 (6)
      • ►  Jan 25 (1)
      • ►  Jan 15 (10)
      • ►  Jan 14 (4)
      • ►  Jan 13 (18)
      • ►  Jan 12 (15)
      • ►  Jan 11 (13)
      • ►  Jan 09 (10)
      • ►  Jan 08 (9)
      • ►  Jan 07 (8)
      • ►  Jan 06 (7)
      • ►  Jan 05 (6)
      • ►  Jan 04 (7)
      • ►  Jan 03 (4)
      • ►  Jan 02 (1)
      • ►  Jan 01 (3)
  • ►  2010 (391)
    • ►  December (384)
      • ►  Dec 31 (23)
      • ►  Dec 30 (7)
      • ►  Dec 29 (10)
      • ►  Dec 28 (15)
      • ►  Dec 27 (37)
      • ►  Dec 26 (15)
      • ►  Dec 23 (9)
      • ►  Dec 22 (17)
      • ►  Dec 21 (43)
      • ►  Dec 20 (19)
      • ►  Dec 19 (19)
      • ►  Dec 18 (1)
      • ►  Dec 17 (28)
      • ►  Dec 16 (13)
      • ►  Dec 15 (20)
      • ►  Dec 14 (37)
      • ►  Dec 13 (23)
      • ►  Dec 12 (4)
      • ►  Dec 06 (5)
      • ►  Dec 05 (5)
      • ►  Dec 04 (11)
      • ►  Dec 03 (18)
      • ►  Dec 02 (3)
      • ►  Dec 01 (2)
    • ►  November (7)
      • ►  Nov 28 (6)
      • ►  Nov 27 (1)
Watch Tamil Tv Channels 

Free

Feedjit

About Me

mayyam
View my complete profile
Awesome Inc. theme. Powered by Blogger.