அல்குவைதா அமைப்பின் தலைவராக இருந்த பின்லேடன் இறந்ததால், அடுத்து அந்த இயக்கம் என்ன ஆகும்? யார் தலைமை ஏற்பார்? சர்வதேச பயங்கரவாதத்தின் சூழ்நிலைகள் எப்படி மாறும் என்ற கேள்விகள் எழுகின்றன. அமெரிக்க மூத்த பத்திரிகையாளரான பீட்டர் பெர்கென், கூறும்போது, "" பயங்கரவாதிகள் மீதான போர் முடிவுக்கு வந்தது'' என்றார். ஆனால் மற்ற சில வல்லுநர்கள் இதை மறுக்கின்றனர்.
2001ம் ஆண்டு இருந்ததை விட 2011ல் அல்குவைதா இயக்கம், புதிய தலைவர்கள் மற்றும் படைகளுடன் வளர்ச்சியடைந்துள்ளது. ஒசாமாவிற்கு பின் எகிப்தில் பிறந்த அய்மேன் அல் ஜவாஹிரி அல்குவைதாவிற்கு தலைவராக பொறுப்பேற்றார். இயக்கத்தின் நடவடிக்கைகளையும் முன்னின்று கவனித்தார். அரேபியாவில் செயல்பட்ட, அல்குவைதாவின் அதிகாரப்பூர்வ குழுக்கள், ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையிலும் தங்கள் பணியை மேற்கொண்டனர். " தலைவர்கள் இல்லாவிட்டாலும் அவர்களுடைய கொள்கைள் பரப்படும் என்பதையே இது காட்டுகிறது' என முன்னாள் சி.ஐ.ஏ., அதிகாரி பார்பரா சூடே கூறினார்.
அபு அல் யாசித், அபு யாக்யா அல்-லிபி, அடியா அபுத் அல்-ரகுமான் <உள்ளிட்ட சில இளம் தலைவர்கள், சில ஆண்டுகளாக இயக்கத்தை வழி நடத்துகின்றனர். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இவர்கள் தலைமையிலான படைகள் இயங்குகின்றன. இவர்களில் சிலர் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
""பின்லேடனின் இறப்பு, பன்னாட்டு பயங்கரவாத இயக்கங்களுக்கு பெரிய இழப்பு; அதற்காக அல்குவைதா இயக்கம் முடிவுக்கு வந்ததாக கருதமுடியாது'', என வாஷிங்டனைச் சேர்ந்த பன்னாட்டு பயங்கரவாத ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் தாவித் கார்டன்ஸ்டீன் தெரிவித்தார்.
பின் விளைவை ஏற்படுத்துமா பின்லேடன் மரணம்? :பின்லேடனின் மரணம் குறித்து அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர்கள் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இணையதளங்களில் மட்டும், ஒசாமா மரணம் குறித்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளனர். அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கைக்கு பின் தான், பின்லேடன் இறந்து விட்டார் என மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.
|