Monday, December 13, 2010

பிளாஷ் - ஷாக்வேவ் : வேறுபாடுகள்


எழுதியவர் : KarthiK 02 July 2009
இன்டர்நெட்டில் எங்களுக்கு மகிழ்ச்சியான பொழுது போக்கு தருவதில் இரண்டு விஷயங்கள் பங்கு பெறுகின்றன. ஒன்று பிளாஷ்; இன்னொன்று ஷாக் வேவ். ஆனால் இரண்டும் ஒரே செயலைத்தானே செய்கின்றன. ஆனால் இவை இரண்டுக்குமிடையே சில வேறுபாடுகள் உள்ளன .அவை குறித்து இங்கு பார்ப்போமா!

சில நேரத்தில் நாம் இன்டர்நெட்டில் தேடுகையில் ஒரு சில இடங்களில் லிங்க் கொடுக்கப்பட்டு இதில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் பிளாஷ் அல்லது ஷாக் வேவ் இல்லை; உடனடியாக இன்ஸ்டால் செய்தால்தான் இதனை இயக்க முடியும். உங்கள் வசதி எப்படி? என்று ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால் இங்கே கிளிக் செய்க என இன்னொரு லிங்க் இருக்கும். இதில் கிளிக் செய்தால் பிளாஷ் அல்லது ஷாக்வேவ் கிடைக்கும். பின் இன்டர்நெட் தளத்தில் இருந்த அந்த ஆடியோ மற்றும் வீடியோ புரோகிராம் இயங்கத் தொடங்கும்.


இறக்கிப் பதியப்பட்ட பிளாஷ் அல்லது ஷாக்வேவ் உங்களுடைய கம்ப்யூட்டரிலேயே தங்கும். அடுத்த முறை அடுத்த தளத்தில் இவை இயக்கக் கூடிய புரோகிராம்கள் கிடைக்கையில் தானாக இயங்கி அவற்றை இயக்கிக் காட்டும்.

முதலில் இரண்டுக்கும் பொதுவான சில விஷயங்களைப் பார்ப்போம்.

*பிளாஷ் மற்றும் ஷாக்வேவ் இரண்டும் மேக்ரோ மீடியா நிறுவனம் தயாரித்து வழங்கும் இரு தொழில் நுட்பங்கள்.

*அவை வெப் பிரவுசர்களுக்கான ப்ளக் இன் எனப்படும் துணை புரோகிராம்கள்.

*வெப் பிரவுசர்களில் ஆக்டிவ் எக்ஸ் என்னும் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

*கிராபிக்ஸ், வீடியோ மற்றும் அனிமேஷன்ஸ் போன்ற மல்ட்டிமீடியா ஆப் ஜெக்ட் களை இணையப் பக்கங்களில் இணைத்துக் கொள்ள இவை உதவுகின்றன. இருப்பினும் இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் சில வேறுபாடுகளைக் காணலாம்.

மேக்ரோமீடியா பிளாஷ் (Macromedia Flash)

1. மேக்ரோமீடியா பிளாஷ் உலக அளவில் அதிகமாகப் பரவி உள்ளது. ஏனென்றால் பெரும்பாலான இணைய தளங்கள் அதனை முன்னரே பதிவு செய்திருப்பதனை எதிர்பார்க்கின்றன. வெப் டிசைனர்கள் டெக்ஸ்ட், கிராபிக்ஸ், ஆடியோ மற்றும் வீடியோவினை இணைய தளங்களில் இணைக்க உதவிடுகிறது. குறிப்பாக பயன்படுத்துபவரிடம் கருத்து அல்லது டேட்டா பரிமாறும் தளங்களில் பிளாஷ் பெரிதும் உதவுகிறது. அடுத்த படியாக கேம்ஸ் இயக்கத்தில் இது முக்கியமான செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

2. பிளாஷ், ஷாக்வேவ் டவுண்லோட் ஆவதைக் காட்டிலும் குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.

3. இணையம் பயன்படுத்துபவர்களுடனான கருத்து மற்றும் டேட்டா பரிமாற்றத்தில் இன்டர்நெட் டெவலப்பர்கள் இன்டர்நெட் பக்கங்களில் டெக்ஸ்ட், வீடியோ, ஆடியோ மற்றும் கிராபிக்ஸ் அனிமேஷன்களைப் பதிக்க பிளாஷ் அதிகமாக உதவிடுகிறது.

4. ஷாக் வேவ் தொழில் நுட்பத்தைக் காட்டிலும் பிளாஷ் பெற கட்டணம் குறைவாகச் செலுத்தினால் போதும்.

5. பிளாஷ் .SWF என்ற பார் மட்டில் செயல்படுகிறது. இது குஐMகஃஉ எனப்படும் ஸ்கிரிப்டிங் லெவலின் ஒரு பகுதியாகும்.

மேக்ரோமீடியா ஷாக் வேவ் (Macromedia Shockwave)

1. 20 கோடிக்கும் மேலான வெப் பயன்படுத்துபவர்கள் ஷாக் வேவ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்துள்ளனர் என மேக்ரோமீடியா நிறுவனம் கூறுகிறது. மூன்று பரிமாண விளையாட்டுக்கள், டெமோ காட்சிகள், ஆன்லைன் லேர்னிங் புரோகிராம்கள் ஆகியவை ஷாக்வேவ் தொழில் நுட்பத்தினால் சப்போர்ட் செய்யப்படுகின்றன.

2. ஷாக்வேவ் பெரும்பாலும் ஆன்லைன் கேம்ஸ் இயக்க பயன்படுகிறது. எளிதான வீடியோ கிளிப் அல்லது அனிமேஷன் இல்லாமல் புரோகிராமிங் தேவைப்படும் ஏரியாவில் ஷாக்வேவ் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

3. பிளாஷ் இயக்கத்தை தன் பார்மட்டில் இணைத்து இயக்கக் கூடிய தொழில் நுட்பத்தினை ஷாக்வேவ் கொண் டுள்ளது. ஆனால் பிளாஷ் இவ்வாறு ஷாக்வேவ் நுட் பத்தினை தன்னுடைய பார்மட்டில் கொண்டு வர முடியாது.

4. மேக்ரோ மீடியா டைரக்டர் கொண்டுதான் ஷாக் வேவ் உருவாக்க முடியும். அது அட்வான்ஸ்டு ஸ்கிரிப்டிங் மொழியின் ஒரு பகுதியாகும். ஷாக்வேவ் உருவாக்க, இயக்க அதன் தொழில் நுட்பத்தினை நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.

5. ஷாக்வேவ், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும் விலை இரு மடங்கு அதிகம்.

6. ஷாக்வேவ் .DCR ஷாக் வேவ் பார்மட்டில் இயங்குகிறது. இதனை உள் நுழைந்து பார்ப்பதோ அல்லது எடிட் செய்வதோ அவ்வளவு எளிதான செயல் அல்ல. மேலே கூறியிருப்பவை நாம் பொதுவாக அறியும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள். தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால் இன்னும் பல தெரிய வரலாம்.

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...

அன்பு நண்பர்களே ! இந்த வலைப்பூவை ஆரம்பித்து மூன்று மாதங்களாகிவிட்டன.
இந்த சிறிய காலத்தில் என்னை பாராட்டி திரு.வேலன் அவர்கள் பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளார். அவருக்கு என்னுடைய நன்றி. என் பதிவுகள் யாருக்காகவது
உபயோகப்பட்டால் அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான விஷயம்.
அவருடைய இந்தப்பதிவு பார்க்க

மேலும் என்னுடைய வலைப்பூ தொழில்நுட்ப பதிவுகளின் பட்டியலில்
12 ஆம் இடத்தை பிடித்துள்ளதாக நண்பர் சுதந்திர இலவச மென்பொருள் பட்டியலிட்டுள்ளார். அவருக்கும் எனது நன்றி. மேலும் என்னை ஊக்குவிக்கும்
நண்பர்களான தமிழ்நெஞ்சம் , வேலன், வடிவேலன், Tvs போன்றவர்களுக்கும்
எனது நன்றி. இந்த பட்டியலைப்பார்க்க



சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.


எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.




reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.
இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி
உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும். நன்றி.

உங்கள் செல்போன் ஒரிஜினலா?



இந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில்  IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.

குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும்.  நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.  

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க  IMEI எண் திரையில் வரும்.   இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என  டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல். 
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது. 


Windows 1 லிருந்து Windows 7 வரை

Software களை Install பண்ணும் default Path ஐ மாற்றுதல்...

பொதுவாக
நமது கணணியின் Windows ஆனது C drive இல் install பண்ணப்பட்டிருக்கும்.
நாம் வேறு மென்பொருட்களை install பண்ணும் போது அது default ஆக C:\Program
Files யையே தெரிவு செய்யும். இதனால் C drive இல் Free Space குறையும்
இதனால் கணணியின் வேகம் குறைவடையும் . அடிக்கடி Low disk Space எனும்
Message தோன்றும். இதில் இருந்து விடுபட நம்மில் சிலர் install பண்ணும்
போது C தவிர்ந்த வேறு drive இல் install பண்ணுவார்கள் இதற்காக ஒவ்வொரு
முறை install பண்ணும் போதும் மற்றைய drive ஐ தெரிவுசெய்து install
பண்ணுவார்கள்


இந்த
தொல்லையில் இருந்து விடுபட registry இக்குள் சென்று ஒருதரம் சிறிய மாற்றம்
செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் program install பண்ணும்
போதும் அது நாங்கள் மாற்றிய drive யையே default ஆக எடுக்கும்.
இதற்கு முதலில் Start சென்று regedit என type செய்து enter பண்ணவும்.

பிறகு பின்வரும் ஒழுங்கு முறையில் செல்லவும்
HKEY_LOCAL_MACHINE----> SOFTWARE---> Microsoft---> Windows---> CurrentVersion

CurrentVersion என்ற Folder க்குள் இருக்கும் Value களில் ProgramFilesDir என்ற value இருக்கும்
இது C:\Program Files என set செய்யப்படிருக்கும் அதில் Mouse வைத்து
right click செய்து modify என்பதை click செய்து Value data என்பதில்
உங்களுக்கு விருப்பமான drive இல் உள்ள Folder இன் path ஐ Select பண்ணிய
பின் OK செய்து வெளியேறவும்.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?



சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன்
மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை
மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை
படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம்
உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு
நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த
இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள்
மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்

மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற
Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு
செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த
மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து
படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/

Notepad ல் ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்

* முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.

ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

* பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

* பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்

ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil

* பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .

Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

FireFox: பிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க பயனுள்ள பன்மொழி நீட்சி!


                                   "யாதும் ஊரே; யாவரும் கேளீர்;"                                                                      புறநானூறு - கணியன் பூங்குன்றனார்

நம்மில் பெரும்பாலோனோர் தங்களது தாய்மொழியும் அத்துடன் ஆங்கிலம் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்துள்ளோம். ஆனால் ஒரு சில மொழிகளை மற்றவர்கள் பேசும் பொழுது நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இன்றைய இணைய உலகில் பல மொழிகளிலும் தரமான வலைப்பக்கங்கள் விரவிக் கிடக்கின்றன. நமது தாய்மொழி  அல்லது நம்மால் படிக்க தெரிந்த மொழி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நம்மால் வலைப்பக்கங்களில் படிக்க முடிகிறது. 


ஆனால் பெரும்பாலான ஆங்கிலம் தவிர்த்த வலைப்பக்கங்கள் Transliteration முறையிலேயே குறிப்பிட்ட மொழிகளில் உருவாக்கப்படுகின்றன. இப்படியாக உள்ள பல பயனுள்ள வேற்றுமொழி (மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு...) வலைப்பக்கங்களை எளிதாக படிக்க நெருப்பு நரி உலாவிக்கான ஒரு பயனுள்ள நீட்சி உங்களுக்காக.. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இந்த நீட்சி உங்களுக்கு எப்படி உதவப் போகிறது என்பதை பார்க்கலாம். உதாரணமாக உங்களுக்கு மலையாள மொழியின் வார்த்தைகளுக்கான பொருள் உங்களுக்கு தெரியும். மற்றவர்கள் அம்மொழியில் பேசும் பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் மலையாளம் படிக்க வராது என்று வைத்துக் கொள்வோம். மலையாளத்தில் உள்ள வலைப்பக்கத்தை Transliteration முறையில் தமிழில் மாற்றிக்கொண்டால் அதை எளிதாக படித்துக் கொள்ள இயலும். இதைத்தான் இந்த NHM IndicTransliterator நீட்சி செய்கிறது. 



இந்த நீட்சி தற்பொழுது Tamil, Telugu, Hindi, Kannada, Malayalam, Diacritic, Roman ஆகிய 7 மொழிகளில் சிறப்பாக வேலை செய்கிறது. இந்த நீட்சியை கீழே உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் நிறுவிக்கொள்ளும் பொழுது, வரும் பிழைச்செய்தியில் Add to FireFox பொத்தானை க்ளிக் செய்து நிறுவிய பிறகு உலாவியை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும்.


இந்த நீட்சிக்கான விளக்கத்தை மலையாள வலைபக்கத்தில் இயக்கி பார்க்கலாம் (பிற மொழிகளில் எதுவும் சரியாக தெரியாது.. ஹி.. ஹி! ) நான் இதை சோதித்துப் பார்க்க www.mangalam.com என்ற மலையாள பத்திரிக்கையின் வலைபக்கத்தை திறந்துள்ளேன்.


இந்த பக்கத்தில் ஏதாவது டெக்ஸ்டின் மீது மவுசின் வலது பட்டனை க்ளிக் செய்து, திறக்கும் Context menu வில், NHM Transliterator -> Malayalam to -> Tamil என்பதை க்ளிக் செய்யுங்கள்.



அவ்வளவுதான் இனி ஒரு சில நொடிகளில் மொழிமாற்றத்தை திரையில் காணலாம்.



இதே போன்று பிறமொழி தளங்களிலும் செய்து பயன் பெறலாம்.


சரி இந்த வழியில் நமது தமிழ் வலைப்பூக்களை பிறமொழியில் கண்டால் எப்படி இருக்கும்.. முயற்சித்துப் பாருங்கள்.

குழந்தையின் தடுப்பூசி நாளை நினைவூட்டும் வலைத்தளம்

பரபரப்பான வாழ்க்கை முறை... எந்திர மயமான உலகம். இதில் நமது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாப்பது முக்கியமானப் பணி..

18 மாதம் முடிவதற்குள் 6 தவணை தடுப்பூசி மருந்துகள் போடப்பட வேண்டும்.

இத்தளத்தில் 18 மாதத்திற்குள் உள்ள குழந்தையின் பிறந்தத் தேதியினை பதிவு செய்தால் எந்தந்த நாளில் தடூப்பூசி போடவேண்டும் என்று காட்டுகிறது.

நமக்கு நினைவூட்ட செல் பேசி எண்ணையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ பதிவு செய்தால் காலத்தே நமக்கு நினைவூட்டுகிறது.


வலைத்தளம் : வாக்சிடேட்



உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இத்தளத்தை நீங்கள் பரிந்துரைக்களாம்.

"எழுதலாமா... வேண்டாமா..."

பதிவுலகிற்கு வந்த பலரும், ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து - இந்த கேள்வியை தங்களுக்கு தானே கேட்டு கொள்கிறார்கள். சிலர் முறைப்படி சொல்லி விடை பெறுவதாக சொல்லி போகிறார்கள். சிலர் எதுவுமே சொல்லாமலே எழுதுவதை நிறுத்தி கொள்கிறார்கள். ஏன் இந்த ஆர்வத்தடை. விருப்பமின்மையா. எவ்வளக்கெவ்வளவு, பதிவு போடுவது குறித்து முதலில் ஆர்வமாய் இருந்தோமோ - அவ்வளவக்கவ்வளவு ஆர்வம் குறைந்தது ஏன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். வேலைப்பளுவினால் நேரமின்மை, சோம்பலினால் விருப்பமின்மை, நம் எழுத்தை அவ்வளவாக யாரும் வாசிப்பதில்லை என்பதனாலும் தம் எழுத்து குறித்த ஒரு திருப்தியற்ற தன்மையாலும் வருகிறது ஆர்வமின்மை... பைசாக்கு புரியோஜனமில்லை, எழுதி எழுதி என்ன கண்டோம், எதற்கு நேரத்தை விரயம் பண்ண வேண்டும் என்று தோன்றும் திடீர் ஞானோதயம் என்று பல பல காரணங்கள் உள்ளன. இதை தாண்டி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி, அதனால் எழுதும் ஆசையை விடுதல் என்றொரு காரணமும் உள்ளது.

நிச்சயம் எழுதுவதில் நமக்கு தனிப்பட்ட சந்தோஷம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பதிவுலகில், நம்மை நாமே நிர்ப்பந்தப்படுத்தி கொண்டு எழுதுகிறோமோ. அன்றாடம் பதிவு போட்டாக வேண்டும் அல்லது இத்தனை பின்னூட்டமிட வேண்டும் என்றெல்லாம் நம்மை நிர்ப்பந்தித்து கொள்வதால், நம் அன்றாட வேலைகளும், குடும்ப உறவுகளும் பாதிக்கப்படுகிறதோ. அதனால் கூட திடீரென்று பதிவுலகை வெறுக்க நேரலாம். நம் ஆசைக்கு நாமே பலியாகிவிட்டு அதனை வெறுப்பதேன்.

எழுதாத வரை வேண்டுமானால்இணையத்தளங்கள் பொழுது போக்காக இருக்கலாம். பதிவை வெளியிட துவங்கிவிட்டால், அது பொழுது போக்கை தாண்டி ஒரு வேலையாகிறது. நம்மை கஷ்டப்படுத்தி கொண்டு பதிவு போட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். சிலரின் படைப்பு நம்மை வெகுவாக கவர்கிறது. அவர் தன் படைப்பின் மூலம் நம் மனதை கொள்ளை அடிக்கிறார். தன் படைப்பினால், அறிமுகமற்றவராக இருப்பினும் நமக்கு நெருங்கிய தோழனாகிறார். திடீரென்று அவர் எழுதுவதை நிறுத்தினால், ரெண்டே ரெண்டு நாளைக்கு அவரை தேடுவோம். பிறகு மறந்து விடுவோம். இவ்வளவு தான் வலைப்பூவின் மார்க்கெட் நிலவரம் என்று சொல்லலாமா...

ஆனால் பதிவர்கள் என்கிற எல்லையை தாண்டி, குடும்ப நண்பர்களாக பதிவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது என்று உறவு வளர்கிறது. எத்தனையோ நல்ல உள்ளங்களை பதிவுலகம் சம்பாதித்து கொடுக்கிறது. எழுதாமல் போனாலும் அந்த உறவு நீடிக்கலாம். அங்கீகாரம், திறமைபடைத்த எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் சொல்ல நினைத்ததை சொல்லாமல் இருப்பது சரியா. சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி பார்த்தேன். ஒரு நாடக இயக்குனர், "ஐநூறு பேர் அமரக்கூடிய அரங்கில் பத்து இருபது பேர் நாடகம் பார்க்க வந்தால் கூட ஆர்வம் குன்றாமல் நாடகம் போடுவோம்" என்றார். ஒரு படைப்பாளிக்கு அது தான் வேண்டும். வாசிப்பாளர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் படைப்பை மாத்திரமே மனதில் கொண்டு எழுதுவதால் நமக்கும் அதீத சந்தோஷமே.

பலரின் பதிவுகளை வாசிக்கும் போது, எவ்வளவு அற்புதமாக எழுதுகிறார்கள். நாமெல்லாம் என்ன எழுதுகிறோம் என்று தோன்றும். அம்மாதிரியான எழுத்துகளை வாசிப்பது, நமக்கான பயிற்சியாகவும் எடுத்து கொள்ளலாம். தங்கள் வலைத்தளத்தில் எழுதிய பதிவுகளையே, இன்று பலர் புத்தகமாக வெளி கொண்டு வருகிறார்கள். வலைப்பதிவில் எழுதும்போது, எத்தனை பேர் இது புத்தகமாக வெளி வரும் என்று நினைத்திருப்பார்கள். வலைப்பூ தந்த ஒரு வாய்ப்பு தான் இது. எழுத்தாளர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் தானே பதிவுலகம்.

என்ன எழுதுவதென்று யோசித்து எழுத ஒன்றுமே தோன்றாததால் எழுதுவதை நிறுத்தவும் வாய்ப்புள்ளது. பதிவெழுதாமல் வெறும் பின்னூட்டம் மட்டும் இடுபவர்கள் மிக குறைவு. பதிவெழுதுவதை நிறுத்தும் கொஞ்ச நாளில் பின்னூட்டமிடுவதையும் நிறுத்தி கொள்கிறார்கள். நாம் எழுதினாலும், எழுதாவிட்டாலும் - சிறந்த படைப்பை வாசிக்க நேர்ந்தால் கருத்துரை சொல்ல தோன்ற வேண்டும். அது பதிவுலகிற்கு நன்மை பயக்கும்.

வாழ்க்கை எல்லோருக்கும் அனுபவங்களை கொடுப்பதில்லை. அடிபட்டவர்கள், காலம் கற்று கொடுத்த பாடத்தை அனுபவித்தவர்கள் தான் எழுத வேண்டுமென்றால் ஒரு சதவிதம் பேர் கூட எழுத முடியாது. நமக்கென்ன எழுத வருகிறதோ அதை எழுதலாம். நான் அப்படி தான் எழுதுகிறேன். நகைசுவையாக எழுத வராது என்பதல்ல. இப்படியே எழுதி பழகிவிட்டது. கவிதைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். ஏனோ பதிவிட மனமில்லை. இப்படியாக தொடர்கிறது அவரவர் எழுத்து பயணம்.


தற்சமயம் வலைப்பதிவில் எழுதுபவர்கள் இவரை மறந்து இருக்கக்கூடும் அல்லது தெரியாமல் இருக்கக்கூடும். அவர் அனுராதா... (http://anuratha.blogspot.com/) கேன்சருடன் நடந்த யுத்தத்தில் இறந்து, தனது வலை தள பயணத்தையும் முடித்து கொண்டார். கான்சர் வந்தது முதல் தன் உடல் மற்றும் மன மாற்ற சிந்தனைகளை பதிவாக வெளியிட்டார்கள். திடீரென்று அவர் ஞாபகம் எதனாலோ வந்தது. அதனால் அவரை பற்றி எழுதி விட்டேன். அவரது வலைத்தளம் உயிர்ப்புடன் உள்ளது.

என்றேனும் நானும் கூட பதிவுலகில் இருந்து செல்லலாம். பலவிதமான குடும்ப செலவுக்கு மத்தியில், மாதந்தோறும் இணையதள இணைப்புக்காக செலவழிக்கும் தொகை அதிகமோ என்று தோன்றும் பட்சத்தில்.

நெஞ்சிருக்கும்வரை... நினைவிருக்கும்

மனிதர்கள் எல்லோருக்குமே மறக்கவே முடியாத, மறக்கவே கூடாத நாட்கள் என்று பல கட்டாயம் இருக்கக்கூடும். அதில் அனேகமாக பிள்ளை பிராயமும், காதலுக்காக அலைந்து திரிந்த நாட்களுமே பிரதானமாக, நினைத்து, நினைத்து பார்க்க கூடியதாக இருக்கும் என்றால் மறுப்பதற்கில்லை. நேற்று துயரம் என்று கருதி, சகிக்க மாட்டாமல் வாழ்ந்த வாழ்க்கை கூட, இன்று ஒரு ஆச்சர்யம் கலந்த நிகழ்வாக, நினைவாக மனதில் இருக்கும்.
"எப்படி அவைகளை எதிர் கொண்டு கடந்து வந்தோம்" என்று.

வெற்றி, தோல்வி என்பதாக பின்னப்பட்டுள்ள வாழ்க்கையில் - வெற்றி, தோல்வி என்று எல்லாமே சுவராஸ்யம் நிறைந்ததாக தான் உள்ளது... நாம் நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும்போது. எப்போதாவது தனிமை வாய்க்கும்போது, அம்மாதிரியான நினைவுகளை புரட்டி பார்த்து, ஆசையாய் அசை போட்டு, சின்ன சின்னதாய் மகிழ்ந்து கொள்வது என் வழக்கமாக உள்ளது. பலருக்கும் இருக்கலாம்.


எனது குழந்தையை மட்டுமல்லாது, எந்த குழந்தையை பார்த்தாலும் எனது குழந்தை பருவம் எப்படி இருந்தது என்று கால இயந்திரம் ஏறி எனது குழந்தை பருவ காலத்திற்கு சென்று திரும்பி வருவேன். மகிழ்ச்சி என்றால் என்னவென்று அறிய முடியும், அத்தகைய நினைவு மீட்டல்களில். ஒரு முறை, குழந்தை பருவத்தின்போது, ஆறேழு வயது இருக்கும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சினிமாவுக்கு சென்ற போது, தொலைந்து போக இருந்தேன். எப்படியோ பெற்றோரை சேர்ந்தேன். குழந்தைகள் காணாமல் போகும் செய்திகளை வாசித்தால், அச்சம்பவம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கவே இயலாது.


பேருந்து நிறுத்தங்களில் காதலர்களை பார்க்கும் போது, காலம் மண் போட்டு புதைத்து விட்ட என் காதல் நாட்களை தோண்டி எடுத்து பார்ப்பேன். நமக்கு எத்தனை வயதானாலும் என்ன, நம் காதலும், அந்த நினைவுகளும் மட்டும், இன்னும் இளமை குன்றாமல்... நினைவுகளால் நமக்கு காட்சி தந்தப்படி. காத்திருக்கும் ஒவ்வொரு காதலனை காணும் போதும், அவளுக்காக காத்திருந்ததை நினைக்காமல் இருக்க முடியாது, அவளிடம் காதலை சொல்ல முடியாமல் தவித்தது... தவிர்த்தது... கடைசி கடைசியாய் சொல்லிய போது, அவள் என் காதலை நிராகரித்தது.

ஒவ்வொரு காதல் தோல்வியை காணும் போதும், இறந்தும், இறவாத என் காதல் ஞாபக மின்னலாய் தோன்றி மறைவதை மறக்க இயலாது. சோக சுகம் என்பதை, அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் உணருகிறேன். பலநேரங்களில் ஞாபகத்திற்கு வருபவை கசப்பு கலந்த இனிப்பாக இருந்தாலும் கூட தித்திக்காமல் இருப்பதில்லை. நாம் வாழ்வில் எவ்வளவோ பணம் சம்பாதிக்கலாம். எவ்வளவு பணம் கொடுத்தாலும், இந்த நினைவுகளை வாங்க இயலாது. அது தானாக பூக்க வேண்டும். நாம் எவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தாலும், நம்மை குழந்தைகளாக்கி மகிழ வைப்பது, இம்மாதிரியான நினைவுகளே.

ஏதோ ஒரு சம்பவம் அல்லது ஒரு காட்சி, என்னை நேற்றுக்கு அழைத்து சென்று விடுகிறது. "ரெயில் பயணங்களில்" என்றொரு படம். தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள். அப்படத்தில் ஒரு காதல் தோல்வி பாடல், "அமைதிக்கு பெயர் தான் சாந்தி. அந்த அலையினில் ஏதடி சாந்தி"... மிக அற்புதமான பாடல். பாடலின் ஒவ்வொரு வரியும் சாந்தி, சாந்தி என்று முடியும். என் நண்பர் சாந்தி என்கிற ஒரு பெண்ணை காதலித்தார். அவர் ஒரு நாள் சொன்னார். "இந்த பாட்டுல மொத்தம் அறுபத்தி நான்கு முறை சாந்தி உச்சரிக்கப்படும்" என்று. எவ்வளவு ப்ரயத்தனப்பட்டு எண்ணி இருக்கிறார் பாருங்கள். இந்த பாடலை சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்தபோது, நண்பரின் ஞாபகம் வந்தது. (அந்த பாடலை SIDE BARல் நெஞ்சில் நிறைந்தவையில் இணைத்துள்ளேன்).

இன்று கஷ்டமாக தெரியும் இந்த வாழ்க்கை, ஒரு பத்து வருஷங்கள் கழித்து -மகிழ்ச்சி கலந்த மலரும் நினைவுகளாக இருக்கலாம். பத்து வருஷம் கழித்து,
பதிவுலகை விட்டு நான் போய் இருக்கும் பட்சத்தில், இந்த பதிவுலகம், இங்கே
மலர்ந்த உறவுகள் என்று சகலமும் மகிழ்ச்சி கலந்த ஞாபகங்களாய்
நினைவில் நிற்கும். நான் நாள்தோறும், என் வாழ்க்கையை படம் பிடித்து
வைக்கிறேன். நாளை அவற்றை ரசித்து பார்க்க.

பதிவை இடு பரிசை எடு


                                                              எனது வலைப்பதிவை பிரபலப்படுத்து நான் துணிந்துவிட்டேன். நீங்கள் பதிவு எல்லாம் போட வேண்டாம் கமன்ட் போட்டால் போதும். சிறந்த கமண்ட்க்கு மூன்று பரிசுகள் அறிவிக்க உள்ளேன்.


முதல்  பரிசு:(32 " samsung LCD டிவி)  ஒரு நபருக்கு


இரண்டாம் பரிசு: (LG  fridge ) இரண்டு நபருக்கு 

மூன்றாம் பரிசு: (சைக்கிள் ) 5 நபருக்கு

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது















டிஸ்கி:  பதிவ  நீங்க இங்கதான் போடணும்  ஆனால் பரிசு உங்கள் அருகாமையில் உள்ள கடைகளில் கடைக்காரர் பார்க்காத பொது எடுக்கணும்......................................................................






 நகைச்சுவைக்காக பதிவிடப்பட்டது

FIREFOX பயன்படுத்துபவர்கள் இதுவரை அறிந்திடாத பயன்கள் மற்றும் SHORTCUT கீஸ்

http://www.pocket-lint.com/images/firefox.gif

FIREFOX பயன்படுத்தும் பலர் இந்த சேவையை அறிந்திடாமல் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். சரி இபோது ஒவ்வொன்றாக பார்ப்போம்.



☼ நமது வீட்டில் சிறுவர்கள் நமக்கு தெரியாமல் ADULT இணையத்தளங்களை பார்த்துக்கொண்டு இருப்பார்கள் நம்மை பார்த்தவுடன் மூடிவிட்டு வேறு ஒரு தளத்தை ஓபன் செய்து பார்ப்பது போல் நடிப்பார்கள் அதனை கண்டுபிடிக்க CTRL+SHIFT+T அழுத்தினால் இதற்க்கு முன் பயன்படுத்திய தளம் தானாக ஓபன் ஆகிவிடும். இது உங்களுக்கும் தேவைப்படும் தவறுதலாக ஒருத்தலத்தை மூடிவிட்டால் இதை பயன்படுத்தலாம்.


☼ ஒருவேளை ஒரே டேபிள்(TAB ) பயன்படுத்தி இருந்தால் SHIFT + SCROLL DOWN


☼ நாம் வெளியூர் சென்றிருந்தால் சென்ற நாட்கள் முழுவ்வதும் என்ன தளத்தை பயன்ப்படுத்தினார்கள் என்று பார்க்க CTRL+H அழுத்தி பிரௌசரில் பதிவாகிவுள்ள தளங்களின் முகவரியை பார்க்கலாம்.


☼ புக்மார்க் செய்ய CTRL+D


☼ FULLSCREEN பார்க்க F11


☼ நாம் இணையத்தளத்தில் படிக்கும்போது ஒவ்வொரு வரியாக படிக்க ALT+SCROLL DOWN செய்யவும்


☼ படிக்கும்போது கண்ணாடி போட்டு படிப்பவர்கள் CTRL + + அழுத்தவும்.



☼ PRINT செய்ய CTRL+P


☼ படிக்கும்போது ஒவ்வொரு PAGE ஆக படிக்க PAGE DOWN அல்லது SPACEBAR


☼ கடைசி பக்கத்தை படிக்க END அழுத்தவும்


☼ முதல் பக்கத்தை படிக்க HOME அழுத்தவும்.


☼ எடுத்த எடுப்பில் அட்ரஸ் பாருக்கு செல்ல CTRL+L


☼ லிங்குகள் நியூ TAB ல் ஓபன் ஆக லிங்க் மீது வைத்து ஸ்க்ரோல்(MIDDLE CLICK) கிளிக் செய்யவும்(இதுவரை அறிந்திடாத ஒன்று)


☼ அட்ரஸ் இன்னொரு TAB ல் ஓபன் ஆக ALT+ENTER.


☼ அடுத்த TAB க்கு போக CTRL+TAB



☼ புதிதாக TAB ஓபன் செய்ய CTRL+T


☼ ஒவ்வொரு TAB ஆக மூட CTRL+W


☼ ப்ரௌசறை(BROWSER ) CLOSE செய்ய ALT+F4 அல்லது CTRL+SHIFT+F4


ஆர்வக்கோளாரில் கடைசி டிபஸ்ஸை பயன்படுத்திடாதிர்கள் ஒட்டு போட்டு அடுத்தவங்களையும் படிக்கவைங்க.


இன்னும் பல டிப்ஸ் அடுத்த பதிவில் தொடரும்.

பிரபலங்களின் நகைச்சுவை BIO - DATA

na
















https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUxg2Zln4wJNIX8FdSDwzV9n6COvLnmMHta8dtnmIfECva_11Mete-g4PkW_66yrZzpApFxbcBPvqtUHrz6FQTCIOZEBNIA-XEFKwnTDaaVofW3ItQsgQimWuDOiZxvwY_ajRshzrlUCM/s400/ab-bhardhan-communists-bio-data-tamil-murasu.jpg


http://snapjudge.files.wordpress.com/2007/07/kumudam_president_prathibha_patil_niranjan_biodata_fun_joke_pun.jpg