Monday, December 13, 2010

பெண் தேவையில்லை ஆண்கள் மூலம் குழந்தை பெற முடியும் விஞ்ஞானிகள் தகவல்


பெண் தேவையில்லை  “ஆண்கள் மூலம் குழந்தை   பெற முடியும்”  விஞ்ஞானிகள் தகவல்
 குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றனர். ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண் துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது “ஸ்டெம்செல்” மூலம் பல அரியவகை அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. “ஸ்டெம்செல்” சிகிச்சையின் மூலம் கொடிய நோய்கள் கூட குணப்படுத்தப்பட்டு வருகின்றன. 
இந்த அதிநவீன “ஸ்டெம் செல்” தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகள் மூலம் குட்டி எலிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். டெக்சாஸ் இனப்பெருக்க விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் மனிதர்களிலும் பெண் துணையின்றி ஆண்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போன்று ஆண்கள் இல்லாமல் பெண்களே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இது ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு வசதியாக அமையும்.

No comments:

Post a Comment