Friday, April 15, 2011

வேலூர் மருத்துவமனையில் பெண் பேய் 18+



வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக ஒரு பெண் பேய் உலவி வருவதாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது! பலரின் செல்போன்களிலும் இந்த பேய் வீடியோ காட்சிகள்தான் இப்போது முதலிடம். ஐடா ஸ்கடர் என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியா வந்தபோது, சரியான மருத்துவ வசதி இல்லாமல் பலர் மடிகிறார்களே என்ற நல்லெண் ணத்தில் 1901-ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை. இங்கு அனைத்து நோய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால், உலக அளவில் பிரபலம். எனவே, உள்ளே நோயாளிகளுக்குத் தங்க இடம் இல்லாதபோது, பெரும்பாலானோர் அருகில் இருக்கும் லொட்ஜ்களில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்வார்கள்.



இந்த நிலையில்தான் இந்த பீதி! செக்யூரிட்டி ஒருவர், ''சார் இங்க ஆறு வருஷமா கான்ட்ராக்ட்ல வேலை செய்றேன். நீங்கள் கேள்விப்பட்டது சத்தியமா உண்மை. இப்பக்கூட எனக்கு கை நடுங்குது பாருங்க. ரெண்டு நாள் முன்னாடி, எங்க செக்யூரிட்டி ஒருத்தர் 'ஏ’ பிளாக்கில் டூட்டி பார்த்தார். ராத்திரி கீழே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கும்போது, யாரோ பின்னாடி தட்டின மாதிரி இருந்திருக்கு. திரும்பிப் பார்த்தா... யாருமே இல்ல. சாப்பிட்டுட்டுக் கை கழுவப் போனா... பக்கத்துல ஒரு வெள்ளை உருவம் மட்டும் நின்னுருக்கு. அவர், பயந்துபோய் 'யாரு... யாரு?’ன்னு குரல் கொடுத்து இருக்கார். அது பதில் சொல்லாம, அப்படியே மறைஞ்சிருச்சு. அதைப் பார்த்ததில் இருந்து, அவருக்குத் தொடர்ந்து ஜுரம். எவ்வளவோ மருந்து-மாத்திரைகள் கொடுத்தும், நிக்கலை. வேலைக்கும் வர முடியாமக்கிடக்கார்.'' என்றார் பயத்தோடு. 

ஒரு வார்டுபாய் நம்மிடம், ''சார், ஒரு நாள் நான் ரத்த பாட்டிலை எடுத்துட்டுப் போயிட்டு இருந்தேன். அப்போ என்னை யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தேன். யாருமே இல்லை. திடீர்னு, 'நில்லுடா’ன்னு ஒரு பெண் குரல் அதட்டலாக் கேட்க, பயந்து திரும்பினேன். ஒரு அழகான பொண்ணு, வெள்ளை டிரெஸ்ல தலையை விரிச்சுப் போட்டு நின்னது. என் பக்கத்துல வந்து, 'எனக்கு ரொம்பப் பசி! குடிக்க அந்த பாட்டில் ரத்தத்தைக் குடு’ன்னுச்சு. நான் திடுதிடுன்னு அந்த இடத்தைவிட்டு ஓடி வந்துட்டேன்...'' என்றார் இன்னும் பயம் விடுபடாதவராய். 

இந்தப் பேய் காட்சியை யாரோ வீடியோவாக எடுத்ததாக, பலரின் செல் போனிலும் உலவுகிறது. அந்த காட்சியைப் பார்த்தோம். சரியாகப் புலப்படாத வெள்ளை உருவம், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு ஊடுருவிச் செல்வது போன்று இருக்கிறது. அதை கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவரிடம் காட்டினோம். ''இது ஏதோ கிராஃபிக்ஸ் வேலை. ஆனால், அங்குள்ள ஊழியர்களும் நோயாளிகளும் பேயை நேரில் பார்த்த தாகச் சொல்வதுதான் குழப்புகிறது!'' என்றார். 

மருத்துவமனை பி.ஆ.ர்.ஓ. துரை ஜாஸ்பர் பதறுகிறார்.''இது யாரோ சி.எம்.சி. மருத்துவ மனைக்கு அவப் பெயரை உண்டாக்கச் செய்த சதி வேலை. இது 100 சதவிகிதம் கிராஃபிக்ஸ்தான். இதனால், எங்கள் மருத்துவமனைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை!'' என்கிறார் உறுதியாக. 

மருத்துவமனையின் 'ஏ’ பிளாக் செக்யூரிட்டிகளிடம் கேஷ§வலாகப் பேச்சுக் கொடுத்தபோது, ''நைட் டியூட்டியில் இருக்கும்போது சிறிது கண் அயருவோம். அப்ப எங்களை யாரோ உசுப்பி விடுவது போல் தெரியும். பதறி எழுந்து பார்த்தால், யாருமே இருக்க மாட்டார்கள். இதை, இங்குள்ள பெரும்பாலான செக்யூரிட்டிகள் உணர்ந்துள்ளோம். இது புதிய சம்பவம் அல்ல. இப்போது வேலூரில் பெரும்பாலான வர்களின் செல்போன்களில் உலவிவரும் காட்சிகளைப் பார்த்ததும் எங்களுக்கே பேய் பயம் வந்துவிட்டது. ஆனா, இதுவரை அது எங்களை யாரையுமே ஒன்றுமே செய்தது கி¬டாது!'' என்று பேய்க்கு நற்சான்றிதழ் கொடுத் தனர். 

மொத்தத்தில், சிகிச்சை பெற வந்த நோயாளிகள், நோயைப்பற்றி பேசுவதைவிட... பேயைப்பற்றி பேசுவதுதான் அதிகமாக இக்கிறது! 

தொடுதிரை Touchscreen செல்போன்கள் வேலை செய்யும் விதம்



 தொழில்நுட்பத்தின் அசுரவேகத்தால் செல்போன்களின் வீச்சு அதிவேகமாக இருக்கிறது, அதாவது இன்று வரும் ஒரு மாடலை பின்னுக்குத்தள்ள அடுத்த வாரமே அதைவிட அதிக வசதியுடன் மற்றொரு மாடல் வருவதைக்காணலாம், இப்படி தற்பொழுது பட்டன்களுக்கு மாற்றாக (Touchscreen) தொடுதிரையுடன் வெளிவரும் செல்போன்கள் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது, கொஞ்சம் செலவானாலும் நல்ல தரமான Touchscreen phone வாங்கினால் உங்கள் விரல் நுனி தேயும் வரை (தேய்ந்த பிறகும் கூட) உபயோகிக்கலாம், இதற்க்கு நீங்கள் Touchscreen இயங்கும் விதம் அல்லது அதன் வகைப்பாட்டை ஓரளவு அறிந்தாலே போதும், உங்களுக்குப் பொருத்தமான தொடுதிரை கைபேசியை கேட்டு வாங்கலாம்.


பின்வரும் விளக்கப்படம் உங்களுக்கு இதைத் தெளிவாக எடுத்துரைக்கும்:




மும்தாஜின் ஆவி தாஜ்மஹாலில் முற்றுகை




மும்தாஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் தான் இருந்தது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

மேலும், இந்த புலாரா மஹாலில் தான் மும்தாஜின் ஆவி உலவுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் புலாராவில் முகாலயப் பேரரசியான பேகம் மும்தாஜ் மரணமடைந்த போது, மும்தாஜின் நினைவாக ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று ஷாஜஹான் ஆசைப்பட்டார்.


அப்போதுதான் தாஜ்மஹால் கட்டுவது என்ற எண்ணம் ஷாஜகானின் எண்ணத்தில் உதித்தது. மேலும், தாஜ்மஹாலை புர்ஹாம்புரில் கட்டுவது என்றே திட்டமிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களால் தாஜ்மஹால் ஆக்ராவில் கட்டப்பட்டது.

அதுவரை மும்தாஜின் உடல் புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்தது. தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டதும், மும்தாஜின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டது. 

மும்தாஜின் உடல் மட்டுமே புலாரா மஹாலில் இருந்து தாஜ்மஹாலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் மும்தாஜின் ஆவி இன்னமும் புலாரா மஹாலில் தான் உலாவிக் கொண்டிருக்கிறது என்று அங்கு வாழும் மக்கள் கருதுகின்றனர்.



புலாரா மாளிகையில் இருந்து அவ்வப்போது சத்தங்களும், கத்துவது போன்றும், அலறுவது போன்றும் சத்தங்கள் வருவதாகவும், ஆனால் அந்த ஆவி இதுவரை யாரையும் துன்புறுத்தியது இல்லை என்றும் அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.

அதாவது, கடந்த 1631ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட்டார். அதனால்தான் அந்த இடத்திலேயே அவரது ஆவி இன்னமும் அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல மாடல் அழகி விலோகிப்ஸ் தனது பிரசவத்தை 675000 பேருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.


பிரசவம் என்பது பாரம்பரியமாக ஒரு தனிப்பட்ட நிகழ்வு. பின்னர் அது கணவனுடன் மட்டும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. 

ஆனால் இன்றைய நவீன உலகில் பிரபலங்களின் பிரசவம் ஒரு பொது விடயமாகிவிட்டது. 

பிரபல மாடல் அழகி விலோகிப்ஸ் தனது பிரசவத்தை தனது ரசிகர்கள் சுமார் 675000 பேருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார். 

தனது டுவிட்டர் இணையத்தள சமூக வலைபின்னல் ஊடாக அவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். விலோகிப்ஸுக்கு பிரசவத்துக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளது.


ஆனால் அதற்கு முன்னரே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அந்த நிமிடம் முதல் பிரசவம் வரை சகல அனுபவங்களையும் அவர் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.


இவரது பிரசவக் காட்சியைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் தயாராகியுள்ளனர். இவர் ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் முழு அளவிலான பிரசவ வலி இன்னும் ஏற்படவில்லை என்று அவரின் உதவியாளர் அறிவித்துள்ளார்.



ஹலோ நீங்க டீன் ஏஜா கொஞ்சம் கவனிங்க


 பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.


* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

நீங்களும் ஜெமினி கணேசன் (அதாங்க காதல் மன்னன்) ஆகலாம்



1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்.. 

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது. 

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது. 

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம். 

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க. 

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை. 

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை. 

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம். 

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட். 

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும். 

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க) 

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது. 

இவரைக் கடத்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



 

லண்டனில் பாலியல் ரீதியான கடத்தலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உள்துறை அலுவலகத்தின் மூலம் கணிசமான ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் பெண் மோல்டோவா நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பெண் மீண்டும் மால்டோவாவில் உள்ள பாலியல் கும்பலிடமே திருப்பி அனுப்பப்பட்டார். 

இதை எதிர்த்து அந்தப் பெண் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பாலியல் கடத்தல் குற்றம் புரியும் அந்தக் கும்பலிடம் தன்னைத் திருப்பி அனுப்பியதன் மூலம் லண்டன் உள்துறை அலுவலகம் தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பெண்ணுக்கு கணிசமான அளவு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பல தடவைகள் இந்தப் பெண் பொலிஸாரால் அங்கும் இங்கும் அனுப்பப்பட்டுள்ளார். 

இவரைக் கடத்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அநதப் பெண் பாலியல் ரீதியாக தரக்குறைவான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது


எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்




கணிணியில் இண்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.

Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணிணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் கணிணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணிணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். லேப்டாப்பில் வயர்லெஸ் சேவை இணைந்தே தான் வருகிறது. டெஸ்க்டாப் என்றால் வயர்லெஸ் ரூட்டர் தனியாக போட்டிருக்க வேண்டும்.

இந்த மென்பொருள் என்ன செய்கிறது ?


இந்த மென்பொருள் உங்களிடமுள்ள இணைய இணைப்பை வயர்லெஸ் சேவை மூலம் அதனை ஒரு வயர்லெஸ் ரூட்டராக மாற்றுகிறது. இதன் மூலம் மொபைல், பிராண்ட்பேண்ட், 3G, Wi-fi போன்ற எந்த இணைய இணைப்பையும் பகிருமாறு செய்ய முடியும். உங்கள் கணிணியை மற்ற கணிணிகள் அணுகுமாறு Wi-fi Hotspot ஐப் போல மாற்றுகிறது.



இதனால் வயர்லெஸ் சேவை உள்ள எந்தவொரு கருவிகளும் ( Mobile, PC, Laptop, Tablet pcs, Android devices ) உங்களின் இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு WPA-PSK முறையிலான கடவுச்சொல் வைத்துக் கொள்ள முடியும். பாதுகாப்பான கடவுச்சொல்லை கொடுத்தால் மட்டுமே இணைப்பைப் பெற முடியும்.

எப்படிப் பயன்படுத்துவது?

1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.
http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button

2. நிறுவியதும் உங்கள் கணிணியின் டாஸ்க் பாரில் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.

3. Wi-fi Name – உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணிணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.

4. Password – மற்ற கணிணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.

5. Internet – இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறிர்களோ அதைத் தேர்வு செய்யவும். (எ.கா) Local Area Connection, Airtel

6. Wi-Fi – இதில் உங்கள் கணிணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும். (எ.கா) Wireless Area Connection 1


7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும். இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும்.

இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை
Connected Clients இல் பார்க்க முடியும்.

இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீட்டில் , கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். மேலும் இதைக் கொண்டு வணிகரீதியாக ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் என்று தீர்மானித்து பயனர்களுக்கு இணையத்தை அனுபவிக்க வழிசெய்யலாம்.

இறுதியாக இந்த மென்பொருள் இலவசமானது. அற்புதமானது.

தரவிறக்கச்சுட்டி : Download Connectify
 

இணையம் மூலம் தினமும் இலவச சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்


                                                 
ன்று வெளிநாடுகளில் பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் கால் எனப்படும் VOIP சேவையை அறிந்திருப்பீர்கள், அதுவும் இந்தியாவிற்கு அழைப்புக்கட்டணம் அதிகமாக வசூலிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த சேவை இன்றியமயாதது,  அந்த வகையில் உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியாவின் எந்த எண்ணுக்கும் தினமும் இணையம் மூலமாக கணிப்பொறி அல்லது 3G கைபேசியின் உதவியுடன் ஆறு அழைப்புக்கள் இலவசமாக வழங்கும் tuitalker என்னும் சேவையை எப்படி பயன்படுத்துவது என்று இந்த இடுகையில் பார்ப்போம்.

1. முதலில் www.tuitalk.com சென்று ஒரு அடிப்படையான கணக்கு தொடங்கவும், இதற்க்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியே பயனர் பெயராக இருக்கும், நீங்கள் விரும்பினால் உங்கள் படிப்பு, பணி, ஆர்வமான துறைகள் என்று மேலதிக தகவல்களையும் தந்து உங்களுக்கான சரியான விளம்பரத்தை தருவதற்கு அவர்களுக்கு உதவலாம், ஆனால் இது கட்டாயமல்ல.

2. tuitalker மென்பொருளை இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், கைப்பேசி என்றால் அதற்கான மென்பொருளை தரவிறக்கி உங்கள் 3G கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

 3. பிறகு உங்கள் கணக்கை இயக்கவும், கடவுச்சொல் நிறுவவும், ஒரு சுட்டி மின்னஞ்சலாக அனுப்பப்படும், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த மின்னஞ்சல் எந்த நேரத்திலும் வரலாம், சிலருக்கு மூன்று மணிநேரம் கழித்து கூட வந்துள்ளது, எனவே மின்னஞ்சல் வரவில்லையே என்று மீண்டும் மீண்டும் கணக்கு தொடங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

4. கடவுச்சொல்லை நிறுவியதும் உங்கள் பயனர் பெயர், மற்றும் நீங்கள் தந்த கடவுச்சொல் ஆகியவற்றை tuitalker மென்பொருளில் கொடுத்து உள்நுழையவும், முதலில் நுழையும்போது Remember me மற்றும் Remember my password ஆகிய இரண்டையும் தேர்வுசெய்துவிட்டு நுழைந்தால் மறுமுறை மிக இலகுவாக நுழைய வசதியாய் இருக்கும்.

5. நுழைந்ததும் அழைக்கும் நாட்டைத்தேர்வுசெய்து அழைக்கப்போகும் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணைக்கொடுத்து call என்கிற பொத்தானை அழுத்தவும், இப்பொழுது உங்களுக்கு 30 வினாடிகள் வரை ஓடும் விளம்பரம் காட்டப்படும், விளம்பரம் முடிந்ததும் தானாகவே நீங்கள் அழைத்த எண்ணிற்கு அழைப்பு செல்லும், இணைய வேகம் குறிப்பிடும்படி இருக்குமேயானால் அழைப்பும் துல்லியமாக இருக்கும்.

6. மேலும் இதில் தொலைபேசி எண்களை பதிந்துவைத்துக்கொள்ளும் contactsவசதியும்பேசிய அழைப்பு விவரங்களை பெற call History வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

7. இவ்வாறு இந்தியாவிற்கு தினமும் முறையே 2 + 2 + 2 என ஆறு அழைப்புக்களை இலவசமாக செய்யலாம், இது இந்தியாவிற்கு மட்டும்தான். இதே சிங்கப்பூருக்கு நீங்கள் அழைத்தால் முறையே 6 + 6 + 6 என தினமும் பதினெட்டு அழைப்புக்கள் செய்யலாம்.மேலும் மற்ற நாடுகளுக்கு தினமும் எத்தனை அழைப்புக்கள் செய்யலாம் என்று அறிய இங்கே சொடுக்கவும்,    

வளைகுடாவில் இருப்பவர்கள் தாயகத்தில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா ஆகிய இன்னபிற நாடுகளில் இருக்கும் தங்களது உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு இலவசமாக தொலைபேசிக்கு பேச இது ஒரு சிறந்த வசதி என்பதில் எந்த ஐயமுமில்லை, உங்களுக்கு இதை பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் மேலதிக தகவல்களுக்கு பின்னூட்டத்தில் பதிவிடவும், பயன்படுத்திவிட்டு உங்கள் கருத்தையும் மறக்காமல் பின்னூட்டமிடவும்.

ஸ்பெயினில் மாணவர்களின் நிர்வாண கொண்டாட்டம்




SALOUFEST என்பது ஸ்பெயினின் கடற்கரைகளில் பிரிட்டிஷ் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளும் ஒரு சுதந்திரமான களியாட்டக் கொண்டாட்டம்.

ஒரு வார காலம் நீடிக்கும் இந்த விழாவில் இம்முறை எட்டாயிரம் பிரிட்டிஷ் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

மது அருந்துவது, போதை தலைக்கேறிய நிலையில் ஆடைகளைக் களைந்து எறிவது, நிர்வாணமாக மற்றவர்கள் முன் நிற்பது, சாக்கடைகளில் விழுந்து கிடப்பது, என்னைக் கற்பழித்து விடு என மாணவிகள் கெஞ்சுவது, அதை மாணவர்கள் மனப்பூர்வமாக நிறைவேற்றி வைப்பது, பகிரங்கமாக உடல் உறவு கொள்வது, இப்படி அட்டகாசங்களுக்கு இங்கு பஞ்சமே இல்லை.




ஸ்பெயினில் வடகிழக்குக் கரையோரப் பிரதேசமான சலோ என்ற இடத்தில் தான் இந்தத் திருவிழா நடக்கின்றது. இந்தக் கரையோரத்தை அண்டிய வீதிகளில் அரைகுறை ஆடையுடன் நிறைபோதையில் மாணவர்களின் நடமாட்டத்தையும், ஆங்காங்கே போதையில் வீதி ஓரங்களில் விழுந்து கிடப்பதையும் தாராளமாகக் காணமுடிகின்றது.



விடுமுறைகளை ஏற்பாடு செய்யும் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 2002 முதல் இந்த விழாவை தவறாமல் ஏற்பாடு செய்து வருகின்றது.



ஐந்து நாள் கொண்டாட்டமாக இடம்பெரும் இந்நிகழ்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருகின்றது.



பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் மாணவ மாணவிகளுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய, மிகச் சிறந்த பல்கலைக்கழக விளையாட்டு விழா இதுவாகும் என்று தான் இந்த நிறுவனம் அதன் இணையத்தில் தெரிவித்துள்ளது.



பெண்களுக்கு அதற்கு 200 காரணங்களா?


ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு 'இதைப்' பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு 'டீ' சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.

ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் 'பார்ட்டி'யை தராசுத் தட்டில்தான் உட்கார வைத்திருப்பார்களாம். மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன 'ஸ்கேனரில்' விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் -எனது செக்ஸ் திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது. இன்னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான், அதற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது.

இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம்ய்யா ...என்று 'பாப்பையா' ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத்திக்கிட வேண்டியதுதான்!




பெண்களைப் பார்க்கும் ஆண்களின் மோக பார்வை ?



பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை முற்றிலும் நீங்கவில்லை. பெண்களின் உடல் உறுப்புகளை செக்ஸ் அப்பீலுக்காக மட்டுமே பார்க்கும் பார்வைகளே இங்கு அதிகம்.

அதிலும் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்கள் மத்தியில் பெரும் மோகமே உண்டு. செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாக மார்பகங்கள் பார்க்கப்பட்டாலும் கூட தாய்மையின் சின்னமாக அதை மதிப்பவர்கள், சிலரே.


மார்பகங்கள் செக்ஸுக்கா, குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கா என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இரண்டுக்கும் என்பதுதான் இதுவரை கிடைத்து வரும் பதிலாக உள்ளது.

ஆனால், குழந்தைப் பிறப்பின்போதுதான் பெண்களின் மார்பகங்கள் கெளரவமாக பார்க்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மைதான். பிற நேரங்களில் அதை செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.

ஒரு பெண்ணுக்கு எப்படி கால்கள், கைகள், கண்கள் இருக்கிறதோ அதுபோலத்தான் மார்பகங்களும். ஆனால் மார்புகளை மட்டும் வித்தியாசமாக கையாளுவது காலம்காலமாக இருந்து வருகிறது. பெண்களைப் பார்க்கும் ஆண்களின் பார்வை மார்பகங்களின் மீதுதான் முதலில் படுகிறது. இது இயல்புதான்.

சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் கூட மார்பகங்களை கவர்ச்சிப் பொருளாக காட்டி காட்டியே அதன் உண்மையான அவசியத்தை மாசுபடுத்தி வைத்துள்ளனர். பெண்களின் மார்புகளைக் காட்டி எடுக்கப்படும் காட்சிகள் இல்லாத சினிமாக்களே இல்லை எனலாம்.

அதற்காக செக்ஸில் மார்புகளுக்கு வேலையே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டும் மார்பகங்கள் இல்லை. அதையும் தாண்டி புனிதமான வேலையை அவை செய்கின்றன.



பெண்கள்  உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மார்பகங்கள். பெண்களுக்கு எழில் தருவதாக மட்டுமல்லாமல் மிகவும் சென்சிட்டிவான ஒரு உடல் பாகமாகவும் அது திகழ்வதால் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.

மார்பகப் பராமரிப்பி்ல் பெண்கள் கவனம் செலுத்தாவிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

பிரா அணிவது முதல் மார்பகங்களின் அளவு, அதில் தென்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து பெண்கள் தொடர்ந்து கவனத்துடன் இருந்து வர வேண்டியது அவசியம்.

தங்களது மார்பக அளவுக்கேற்ற பிராக்களை அணிவது மிகவும் முக்கியம். அதிலும் கர்ப்ப காலத்தின்போதும், மாதவிடாயின்போதும் பெண்களின் மார்பகங்கள் பல மாற்றங்களை சந்திக்கும். அப்போது அதற்கேற்ற வகையில் உள்ளாடைகளை அணிய வேண்டும்.

சிலருக்கு இரவு நேரங்களில் பிராக்கள் அணிய வேண்டுமா என்ற சந்தேகம் வரலாம். பெரியஅளவிலான மார்பகங்களை உடையவர்கள் இரவிலும் கண்டிப்பாக பிராக்களை அணிவது அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அப்போதுதான் சீக்கிரமே மார்புகள் தளர்ந்து போவதை தடுக்க முடியும் என்பது அவர்களது அறிவுரை.

கர்ப்ப காலத்தில் மார்புகள் பெருக்கும். எனவே அதற்கேற்ற பிராவை அணிவது அவசியம். மேலும் இறுக்கமான பிராக்களை அணிவதையும் தவிர்க்க வேண்டும். 

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், பாலூட்டுவதற்கு முன்பும், முடிந்த பின்னரும், சுடுநீரில் மென்மையான துணியை நனைத்து அதைக் கொண்டு மார்புக் காம்புப் பகுதிகளை துடைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கும், தாய்மார்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

சிலருக்கு மார்பகங்களின் அளவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். எனது வயதுப் பெண்களுக்குப் பெரிதாக உள்ளது. எனக்கு அவ்வாறு இல்லையே என்று வருந்தலாம். அதற்காக செயற்கையான முறையில் மார்பகங்களைப் பெருக்கிக் கொள்ள முயலுவதில் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வது நல்லது. அப்படிச் செய்யப் போய் உடல்நலக் கேடுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட நேரிடும்.

அதற்குப் பதில் மார்பழகை எடுப்பாக்கிக் காட்டும், உடலுக்கு ஆபத்தை விளைவிக்காத சிறப்பு பிராக்களை அணியலாம். அதுபோன்ற அபாயமில்லாத வழிகளை நாடலாம்.

மார்பக புற்றுநோய் இப்போது படு சாதாரணமாக காணப்படுகிறது. இதை நாமே வீட்டில் கண்டுணர முடியும். முழு நீள கண்ணாடி முன்பு நின்று கொண்டு இரு கைகளையும் மேலே உயர்த்தித் தூக்கிக் கொண்டு இரு மார்பகங்களும் சரியான அளவில் உள்ளதா என்பதைப் பார்க்கலாம். மேலும் மார்பின் மையப் பகுதியை சுற்றுவது போல கையால் அழுத்திப் பார்க்கலாம். வலி இல்லாமல் கனமான கட்டி போல தென்பட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும். மேமொகிராம் மூலம் அது என்ன என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துக் கூறுவார்கள்.

சில பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொள்ளும் அல்லது நீர் கட்டிக் கொள்ளும். பாலூட்டுவதை நிறுத்தும்போதும் இதுபோல ஏற்படும். எனவே அதை வைத்துக் கொண்டு மார்பகப் புற்றுநோயோ என்று பயந்து விடக் கூடாது. 

மார்பக புற்று நோய் வந்தால் அதை அகற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சரை சரி செய்யும் வழிகள் இப்போது வந்து விட்டன.

இப்படி மார்பகங்கள் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாக இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டியதும், பாதுகாப்பதும், கவனமுடன் இருப்பதும் மிக மிக அவசியமாகும். மாறாக அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட பாராமல், முக்கிய உடல் உறுப்பாக கருதி விழிப்புடன் இருப்பது நல்லது.