லண்டனில் பாலியல் ரீதியான கடத்தலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உள்துறை அலுவலகத்தின் மூலம் கணிசமான ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பெண் மோல்டோவா நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பெண் மீண்டும் மால்டோவாவில் உள்ள பாலியல் கும்பலிடமே திருப்பி அனுப்பப்பட்டார்.
இதை எதிர்த்து அந்தப் பெண் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பாலியல் கடத்தல் குற்றம் புரியும் அந்தக் கும்பலிடம் தன்னைத் திருப்பி அனுப்பியதன் மூலம் லண்டன் உள்துறை அலுவலகம் தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பெண்ணுக்கு கணிசமான அளவு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பல தடவைகள் இந்தப் பெண் பொலிஸாரால் அங்கும் இங்கும் அனுப்பப்பட்டுள்ளார்.
இவரைக் கடத்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அநதப் பெண் பாலியல் ரீதியாக தரக்குறைவான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

|
No comments:
Post a Comment