Friday, April 15, 2011

பெண்களைப் பார்க்கும் ஆண்களின் மோக பார்வை ?



பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை முற்றிலும் நீங்கவில்லை. பெண்களின் உடல் உறுப்புகளை செக்ஸ் அப்பீலுக்காக மட்டுமே பார்க்கும் பார்வைகளே இங்கு அதிகம்.

அதிலும் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்கள் மத்தியில் பெரும் மோகமே உண்டு. செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாக மார்பகங்கள் பார்க்கப்பட்டாலும் கூட தாய்மையின் சின்னமாக அதை மதிப்பவர்கள், சிலரே.


மார்பகங்கள் செக்ஸுக்கா, குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கா என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இரண்டுக்கும் என்பதுதான் இதுவரை கிடைத்து வரும் பதிலாக உள்ளது.

ஆனால், குழந்தைப் பிறப்பின்போதுதான் பெண்களின் மார்பகங்கள் கெளரவமாக பார்க்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மைதான். பிற நேரங்களில் அதை செக்ஸ் விளையாட்டில் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.

ஒரு பெண்ணுக்கு எப்படி கால்கள், கைகள், கண்கள் இருக்கிறதோ அதுபோலத்தான் மார்பகங்களும். ஆனால் மார்புகளை மட்டும் வித்தியாசமாக கையாளுவது காலம்காலமாக இருந்து வருகிறது. பெண்களைப் பார்க்கும் ஆண்களின் பார்வை மார்பகங்களின் மீதுதான் முதலில் படுகிறது. இது இயல்புதான்.

சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் கூட மார்பகங்களை கவர்ச்சிப் பொருளாக காட்டி காட்டியே அதன் உண்மையான அவசியத்தை மாசுபடுத்தி வைத்துள்ளனர். பெண்களின் மார்புகளைக் காட்டி எடுக்கப்படும் காட்சிகள் இல்லாத சினிமாக்களே இல்லை எனலாம்.

அதற்காக செக்ஸில் மார்புகளுக்கு வேலையே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டும் மார்பகங்கள் இல்லை. அதையும் தாண்டி புனிதமான வேலையை அவை செய்கின்றன.



பெண்கள்  உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மார்பகங்கள். பெண்களுக்கு எழில் தருவதாக மட்டுமல்லாமல் மிகவும் சென்சிட்டிவான ஒரு உடல் பாகமாகவும் அது திகழ்வதால் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.

மார்பகப் பராமரிப்பி்ல் பெண்கள் கவனம் செலுத்தாவிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

பிரா அணிவது முதல் மார்பகங்களின் அளவு, அதில் தென்படும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து பெண்கள் தொடர்ந்து கவனத்துடன் இருந்து வர வேண்டியது அவசியம்.

தங்களது மார்பக அளவுக்கேற்ற பிராக்களை அணிவது மிகவும் முக்கியம். அதிலும் கர்ப்ப காலத்தின்போதும், மாதவிடாயின்போதும் பெண்களின் மார்பகங்கள் பல மாற்றங்களை சந்திக்கும். அப்போது அதற்கேற்ற வகையில் உள்ளாடைகளை அணிய வேண்டும்.

சிலருக்கு இரவு நேரங்களில் பிராக்கள் அணிய வேண்டுமா என்ற சந்தேகம் வரலாம். பெரியஅளவிலான மார்பகங்களை உடையவர்கள் இரவிலும் கண்டிப்பாக பிராக்களை அணிவது அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அப்போதுதான் சீக்கிரமே மார்புகள் தளர்ந்து போவதை தடுக்க முடியும் என்பது அவர்களது அறிவுரை.

கர்ப்ப காலத்தில் மார்புகள் பெருக்கும். எனவே அதற்கேற்ற பிராவை அணிவது அவசியம். மேலும் இறுக்கமான பிராக்களை அணிவதையும் தவிர்க்க வேண்டும். 

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், பாலூட்டுவதற்கு முன்பும், முடிந்த பின்னரும், சுடுநீரில் மென்மையான துணியை நனைத்து அதைக் கொண்டு மார்புக் காம்புப் பகுதிகளை துடைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கும், தாய்மார்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

சிலருக்கு மார்பகங்களின் அளவில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். எனது வயதுப் பெண்களுக்குப் பெரிதாக உள்ளது. எனக்கு அவ்வாறு இல்லையே என்று வருந்தலாம். அதற்காக செயற்கையான முறையில் மார்பகங்களைப் பெருக்கிக் கொள்ள முயலுவதில் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வது நல்லது. அப்படிச் செய்யப் போய் உடல்நலக் கேடுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து விட நேரிடும்.

அதற்குப் பதில் மார்பழகை எடுப்பாக்கிக் காட்டும், உடலுக்கு ஆபத்தை விளைவிக்காத சிறப்பு பிராக்களை அணியலாம். அதுபோன்ற அபாயமில்லாத வழிகளை நாடலாம்.

மார்பக புற்றுநோய் இப்போது படு சாதாரணமாக காணப்படுகிறது. இதை நாமே வீட்டில் கண்டுணர முடியும். முழு நீள கண்ணாடி முன்பு நின்று கொண்டு இரு கைகளையும் மேலே உயர்த்தித் தூக்கிக் கொண்டு இரு மார்பகங்களும் சரியான அளவில் உள்ளதா என்பதைப் பார்க்கலாம். மேலும் மார்பின் மையப் பகுதியை சுற்றுவது போல கையால் அழுத்திப் பார்க்கலாம். வலி இல்லாமல் கனமான கட்டி போல தென்பட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும். மேமொகிராம் மூலம் அது என்ன என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துக் கூறுவார்கள்.

சில பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொள்ளும் அல்லது நீர் கட்டிக் கொள்ளும். பாலூட்டுவதை நிறுத்தும்போதும் இதுபோல ஏற்படும். எனவே அதை வைத்துக் கொண்டு மார்பகப் புற்றுநோயோ என்று பயந்து விடக் கூடாது. 

மார்பக புற்று நோய் வந்தால் அதை அகற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், மார்பகத்தை அகற்றாமலேயே கேன்சரை சரி செய்யும் வழிகள் இப்போது வந்து விட்டன.

இப்படி மார்பகங்கள் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாக இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டியதும், பாதுகாப்பதும், கவனமுடன் இருப்பதும் மிக மிக அவசியமாகும். மாறாக அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கூட பாராமல், முக்கிய உடல் உறுப்பாக கருதி விழிப்புடன் இருப்பது நல்லது.

No comments:

Post a Comment