பிரசவம் என்பது பாரம்பரியமாக ஒரு தனிப்பட்ட நிகழ்வு. பின்னர் அது கணவனுடன் மட்டும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
ஆனால் இன்றைய நவீன உலகில் பிரபலங்களின் பிரசவம் ஒரு பொது விடயமாகிவிட்டது.
பிரபல மாடல் அழகி விலோகிப்ஸ் தனது பிரசவத்தை தனது ரசிகர்கள் சுமார் 675000 பேருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
தனது டுவிட்டர் இணையத்தள சமூக வலைபின்னல் ஊடாக அவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். விலோகிப்ஸுக்கு பிரசவத்துக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளது.
ஆனால் அதற்கு முன்னரே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த நிமிடம் முதல் பிரசவம் வரை சகல அனுபவங்களையும் அவர் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அந்த நிமிடம் முதல் பிரசவம் வரை சகல அனுபவங்களையும் அவர் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இவரது பிரசவக் காட்சியைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் தயாராகியுள்ளனர். இவர் ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் முழு அளவிலான பிரசவ வலி இன்னும் ஏற்படவில்லை என்று அவரின் உதவியாளர் அறிவித்துள்ளார்.
|
No comments:
Post a Comment