The junk foods in the fancy, colorful wrappers that come to school in many kids’ lunch boxes are way too tempting for our kids to resist. Do you experience after you pack your kid a healthy lunch, and many times it would come back uneaten? When you opened up the lunch box after school, do you see it all still sitting there, completely untouched?
Now it’s time for you to come up with better ideas for a healthy school lunch that would be appealing enough so the kid would eat it.
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஸ்கூலுக்குச் செல்லும்போது கொடுத்துவிடும் லஞ்ச், பாக்ஸோடு அப்படியே திரும்பி வருகிறதா? நீங்கள் கொடுத்துவிடும் உணவு நன்றாக இல்லை என்று குழந்தை சொல்கிறதா? அல்லது, குழந்தை உணவை உண்கிறது, ஆனால் உங்கள் குழந்தையை கோஷாக்கு காரணங்களுக்காக டாக்டரிட் அழைத்துச் செல்ல வேண்டிய தேவை அவ்வப்போது ஏற்படுகிறதா?
டிப்பிக்கல் அமெரிக்க ஸ்கூல் லஞ்ச் - Crackers, beans, milk, chicken and some salad.
Let’s face it. நீங்கள் கொடுத்துவிடும் லஞ்சில்தான் சிக்கல் உள்ளது.
உணவைக் கொடுத்துவிடும்போது கிரியேட்டிவ்வாக நீங்கள் செயற்பட்டால், இந்தச் சிக்கல் ஏற்படாது.
சூப்பர் மார்க்கெட்களில் விற்பனையாகும், ஜங்க் ஃபூட்களைப் பாருங்கள். அவை குழந்தைகளுக்கு பிடிக்கின்றன.
பிரான்ஸில் ஸ்கூல் உணவு (meat) - French fries, a slice of baguette, a burger patty, a slice of cake and a puff pastry.
காரணம், கவர்ச்சிகரமமாக செய்யப்பட்ட பேக்கிங், கலர்ஃபுல்லான உணவு.
ஆனால், தொடர்ச்சியாக அப்படியான உணவு குழந்தைக்கு கொடுப்பது கெடுதல் என்பது உங்களுக்கு தெரியும்.
இருந்தாலும், வேறு எந்த உணவையும் மறுக்கும் குழந்தைக்கு வேறு வழியில்லாமல், “இதையாவது உண்ணட்டும்” என்று கொடுப்பதில்தான் அவற்றின் விற்பனையில் 70 சதவீதம் உள்ளது. மிகுதி 30 சதவீதம்தான், பெற்றோர்களால் விரும்பி வாங்கிக் கொடுக்கப்படுகின்றன.
பிரான்ஸ் ஸ்கூல் உணவு (seafood) - Mussels on the top left, an artichoke, fries, baguette, cheescake and grapefruit.
அந்த உணவு மட்டும் ஏன் குழந்தைக்கு பிடித்திருக்கின்றது என்று நீங்கள் யோசித்தீர்களா? மேஜிக், அந்த உணவில் கிடையாது. அதன் பிரசன்டேஷனில் உள்ளது.
குழந்தைகளுக்கான உணவு தயாரித்து, அதை மார்க்கெட் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், உணவு தயாரிப்பைவிட அதிகம் செலவு பண்ணுவது, அவற்றின் பிரசன்டேஷனுக்கு என்பது உங்களுக்கு தெரியுமா?
Kellogg’s நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவு பாக்கட்கள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.
அவற்றின் மொத்த தயாரிப்பு விலையில் 57 சதவீதம், பிரசன்டேஷனில் செலவாகின்றது.
அமெரிக்கா, ஜங்க் ஃபூட் ஷ்டைலில் உணவு - Tater tots, chicken nuggets, cut fruits, chocolate milk and packets of sauce.
இந்த பிரசன்டேஷனில் முக்கிய செலவைப் பிடிப்பவை, ரிசர்ச் மற்றும் விளம்பரங்கள் என்பதை நிறுவனத்திக் கோஸ்ட் ஸ்ட்ராக்ஷரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உணவு தயாரிப்பு பற்றி ரிசர்ச் செய்கிறார்களே என்று புளகாங்கிதம் அடையாதீர்கள். இவர்கள் செலவு செய்து ரிசர்ச் பண்ணுவது, குழந்தைகளுக்கு போஷாக்கான உணவைக் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அல்ல.
சீனா, ஓரளவு காரமான ஸ்கூல் உணவு - Spicy pork/chicken, a piece of fish, broccoli and cauliflower, with a generous serving of rice and soup.
அந்த உணவை குழந்தைகளை கவரும் விதத்தில் எப்படி அட்ராக்ஷனாக தயாரிப்பது, மற்றும் புதிய கிரியேட்டிவ் ஐடியாக்களுக்காகவே அவர்களது ரிசர்ச் நடைபெறுகின்றது.
அப்படி செலவு செய்து தயாரிக்கப்பட்ட உணவு பாக்கட்டுகள் சூப்பர் மார்க்கெட் ஷெல்ஃப்க்கு வரும்போது, சைக்காலஜிக்கலாக உங்கள் குழந்தையை அட்ராக்ட் பண்ணுகின்றது. அந்த உணவு வேண்டும் என்று அடம் பிடிக்கிறது குழந்தை. இது ஒரு சிம்பிளான பிசினெஸ் டூல் மாத்திரமே!
கொரிய ஸ்கூல் நான் வெஜ் லஞ்ச் - fish, vegetables, spicy squid, seaweed soup and some rice.
Kellogg’s நிறுவனம் உங்கள் குழந்தைக்கான உணவுத் தயாரிப்புச் செலவில் 57 சதவீதத்தை பிரசன்டேஷனில் செலவு செய்யும்போது (பணம் கொடுப்பது நீங்கள் என்பது வேறு விஷயம்), நீங்கள் குழந்தைக்கு ஸ்கூலுக்கு கொடுத்துவிடும் உணவுத் தயாரிப்பின் பிரசன்டேஷனில் பைசா செலவு செய்வதில்லை என்றால், உங்கள் உணவு குழந்தையைக் கவர முடியாது.
குழந்தையின் லஞ்ச் பாக்ஸில் உணவு அப்படியே திரும்பவும் வீட்டுக்கு வந்து சேரும்.
அமெரிக்கா, மெக்ஸிகன் ஸ்டைல் லஞ்ச் - taco salad with cheese, mashed potatoes and what looks like a fruit salad.
Kellogg’s எப்படி தமது உணவை உங்கள் தலையில் கட்டுகிறதோ, அதே பாணியில் உங்கள் உணவை உங்கள் குழந்தையின் தலையில் கட்டும் டெக்னிக்தான், கிரியேட்டிவிட்டி அன்டு பிரசன்டேஷன்.
அனேக நாடுகளில் இப்போது ஸ்கூல் கேன்டீன்களில், அல்லது வென்டிங் மெஷின்களில் ஜங்க் ஃபூட் விற்பதை நிறுத்தி விட்டார்கள். போஷாக்கான பாலன்ஸ் ஃபூட் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் உணவைக் கொடுக்கும் விதத்தை திட்டமிட்டுக் கொடுப்பதற்கு நியூட்ரிஷன் அன்டு டயட்டிட்டிக்ஸ் நிபுணர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள்.
அவர்களது திட்டமிடலில் வழங்கப்படும் உணவுகள், குழந்தைகளைக் கவர்கின்றன.
செக் ரிப்பப்ளிக் (முன்னாள் செக்காஸ்லோவேக்கியா) ஸ்கூல் லஞ்ச் - Soup, rice with a meat stew, dessert (with a raw egg on top), juice and tea.
இதை வேறு விதமாகச் சொன்னால், கிராஃப்ட் தனது வியாபாரத்துக்கான செய்யும் அதே சைக்காலஜிகல் முறையை இவர்கள், குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்கிறார்கள்.
இங்கு நாம் கொடுத்துள்ள போட்டோக்களில், வெவ்வேறு நாடுகளில், குழந்தைகளுக்காக வழங்கப்படும் உணவுகள் பிரசன்ட் பண்ணப்பட்ட விதத்தைப் பாருங்கள். அந்தந்த நாடுகளின் உணவு வகைகளைத்தான் கொடுத்திருக்கிறார்கள், ஆனால், குழந்தைகளைக் கவரும் வகையில்.
ஞாபகத்தில் வையுங்கள், குழந்தைக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கும் உணவு, குழந்தையையும் அட்ராக்ட் பண்ண வேண்டும். உங்கள் குழந்தையை நீங்கள் கவர்வதைவிட அதிகமாக Kellogg’s கவர முடிந்தால், தவறு உங்களில்தான்!
இப்படியான கட்டுரைகள் விறுவிறுப்பு.காம் இணையத்தில் வெளியாவதை விரும்புகிறீர்களா? உங்கள் கருத்துக்களை தயவுசெய்து அறியத்தரவும். தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்க வசதியாக இருக்கும்