Sunday, December 11, 2011

ஜெயித்த 'சில்க்' ! : காத்திருக்கும் சோனியா



வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி இருக்கும் படம் THE DIRTY PICTURE. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கூறப்பட்டு வெளியாகி இருக்கும் இப்படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

THE DIRTY PICTURE படத்தில் வித்யா பாலனின் நடிப்பை இந்தி திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே புகழ்ந்து இருக்கிறார்கள். முதல் வாரத்தில் இப்படம் 50 கோடி வசூல் செய்து இருக்கிறது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தமிழ் திரையுலகில் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது. ஒரு நடிகையின் வாழ்க்கையை மையாக வைத்து இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ராஜ்கிருஷ்ணா.
சோனியா அகர்வால் திருமண விவாகரத்துக்கு பிறகு இப்படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். THE DIRTY PICTURE படத்தின் வெற்றியால், படத்தின் வேலைகளை முடித்து விரைவில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றி வருகிறார்கள். சோனியா இப்படம் வெளிவருவதில் மிகுந்த ஆவலாக இருக்கிறாராம்.

No comments:

Post a Comment