Sunday, December 11, 2011

ஹீரோயின் ஷூட்டிங்கில் நடந்த ஆச்சரியம்.


மதூர் பண்டார்கர் தனது ஹீரோயின் படத்தின் ஷூட்டிங்கை அர்ஜுன் ராம்பால், க‌ரீனா கபூரை வைத்து தொடங்கிவிட்டார். ஐஸ்வர்யாராய் அடம்பிடித்தது போல் அவரை கதாநாயகியாக்கியிருந்தால் இந்நேரம் மதூர் தாலாட்டுதான் பாடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

சென்ற 26ஆம் தேதி ஹீரோயின் ஷூட்டிங்கில் ராம்பால் தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் காட்சியை எடுத்தனர். ஆச்ச‌ரியமாக அதேநாள்தான் ராம்பாலின் பிறந்தநாள். மதூர் இது தெ‌ரியாமலே இந்தக் காட்சியை வைத்துள்ளார்.

தர்மேந்திரா வளர்ந்து வரும் காலத்தில் அவரது பிறந்தநாளுக்கு நடிகை மீனா குமா‌ரி கேக் வெட்டினார். அதை இந்தக் காட்சி பிரதிபலிப்பதாக கிசுகிசுக்கிறார்கள். மீனா குமா‌ரியின் பாத்திரத்தில் க‌ரீனா கபூரும் குறிப்பிட்ட காட்சியில் ராம்பாலுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment